Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Saturday, April 04, 2015

இந்தியப் பிரதமர் மீனவ பிரச்சினைகளில் தலையிட வேண்டும்: ராமதாஸ், கருணாநிதி வலியுறுத்து

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலுள்ள வங்ககடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இருநாட்டு மீனவர்களுக்கும் உரிமையுண்டு என்பதை இந்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் இன்றைய தினம் இந்திய ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பில் 40 வருடங்களுக்கும் மேலாக பிரச்சினைகள் நீடித்து வருகின்றன.
கச்சதீவை இலங்கைக்கு தாரைவார்த்த பின்னரே இந்த பிரச்சினை மிகவும் தீவிரமடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியதுடன்,
இதற்கு தீர்வு காணும் வகையில் கடந்த 24ம் திகதி சென்னையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது வருடமொன்றிற்கு 83 நாட்கள் மாத்திரம் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கு அனுமதியளிக்க முடியாது என தெரிவித்து எல்லை தாண்டும் மீனவர்களை கைது செய்யுமாறு நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் கடற்படையினருக்கு உத்தரவிட்டிருந்தார். 
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக நேற்றைய தினம் 33 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினராலும், 6 இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினராலும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையிலேயே இருநாட்டு மீனவர்களுக்கும் வங்ககடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு உரிமையுண்டு என இந்திய அரசாங்கம் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வலியுறுத்த வேண்டும் எனவும், 
அவ்வாறு வலியுறுத்தும் சந்தர்ப்பத்தில் அவர்களால் மறுப்பு தெரிவிக்க முடியாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
இதேவேளை இலங்கை, இந்திய மீனவர்களுக்கு இடையில் எத்தனை தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் இந்த பிரச்சினை தொடர்கதையாகவே அமைந்துள்ளது என திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். 
இவ்வாறு தொடர்கதையாக அமைந்துள்ள மீனவ பிரச்சினைக்கு இந்திய மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து இலங்கை ஜனாதிபதியுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும், 
இந்திய மத்திய அரசு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வழிவகைகளுக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளார். 
இந்த முயற்சிகளை இந்திய அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளாமல் அசமந்த போக்கில் செயற்படுவது தமிழக மீனவர்களை மிகவும் வேதனைக்குள் தள்ளியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 
அத்துடன் இந்திய அரசாங்கம் முயற்சித்தால் ஐ.நா அமைப்பினால் உருவாக்கப்பட்ட சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டு இந்த உரிமையை நிலைநிறுத்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார். 
இவ்வாறு செய்யும் போது இருநாட்டு மீனவ பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணமுடியும் எனவும், இலங்கையை ஒரு வழிக்கு கொண்டு வரமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா கருணை காட்டாமல் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வங்ககடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட சட்டபூர்வமான உரிமையை பெற்று தர முனைய வேண்டும் என அவர் மேலும் கேட்டு கொண்டுள்ளார்.

இலங்கையர்களுடன் செங்கடலில் பயணிக்கும் இரகசிய கப்பல்கள்!

அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனம் சர்வதேச ரீதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் வெளிநாடுகளில் செயற்படும் பல்வேறு அமைப்புகளுக்கு ஆயுதங்களை விநியோகித்தமை தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
எகிப்திற்கு அருகில் செங்கடல் பகுதியில் இந்த பாதுகாப்பு நிறுவனத்திற்கு சொந்தமான களஞ்சியங்களுடன் கூடிய இரு கப்பல்கள் இருப்பதாக, இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பாதுகாப்பு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டு கப்பல்களில் ஒன்று சவூதி அரேபியாவின் ஜெட்டா (Jeddah) நகருக்கு அருகில் உள்ள கடலில் நங்கூரமிட்டுள்ளது 
ஆயுத களஞ்சியங்களை கொண்ட இந்த கப்பல்கள் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் இயங்கும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 
அத்துடன் இந்த இரண்டு கப்பல்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் அவன்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றிய 15 அதிகாரிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. 
இதேவேளை குறித்த நிறுவனம் நைஜீரியாவின் பொக்கோ ஹாராம் தீவிரவாதிகளுக்கும் ஆயுதங்களை விநியோகித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
அதேபோல் மாலைதீவு அரசாங்கத்தை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருக்கு, அவன்கார்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் நிஷ்சங்க சேனாதிபதியே கடற்படை புலனாய்வு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசகராக இருந்தார். 
இதனால், மேற்படி சதித்திட்டத்திற்கு தேவையான ஆயுதங்களை சேனாதிபதி வழங்கியிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 
இவை குறித்து பாதுகாப்பு தரப்பினர் விரிவான விசாரணைகளை நடத்தி வருவதுடன் அதனை சர்வதேச மட்டத்தில் விரிவுப்படுத்தியுள்ளனர்.

Monday, January 27, 2014

வடக்கில் சமாதானமாம் - கோத்தாபாய கூறுவதை நம்ப உலகத் தலைவர்கள் முட்டாள்கள் அல்ல: - சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்

வட மாகாண தமிழ் மக்கள் யுத்தம் முடிந்து நான்கு வரு­டங்­க­ளுக்கு பின்­னரும் இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டுக்­குள்­ளேயே வாழ்­கின்­றனர். இதனை உலகம் அறியும். எனவே, அங்கு சமா­தானம் நில­வு­வ­தாக பாது­காப்புச் செய­லாளர் கூறு­வதை நம்ப உலக நாடுகள் அதன் தலை­வர்கள் முட்­டாள்கள் அல்ல என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும், எம்.பி.யுமான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார்.
நாட்டில் சிங்­கள பெளத்த பேரி­ன­வாத சக்­தி­களை அர­சாங்­கமே தூண்டி விடு­வ­தா­கவும் அவர் தெரி­வித்தார். வெளி­நாடு சென்று தீர்வைப் பெற முடி­யாது. எமது குடும்பம் அர­சியல் வர­லாறு கொண்ட குடும்பம் என பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ தெரி­வித்­துள்ள கருத்து தொடர்­பாக தமது பக்க நிலைப்­பாட்டை தெளி­வு­ப­டுத்­து­கை­யி­லேயே சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் இது தொடர்­பாக தெளி­வு­ப­டுத்­து­கையில்,

யுத்தம் முடிந்­து­விட்­டது. ஆனால் சமா­தானம் வந்­து­விட்­ட­தாகக் கூற முடி­யாது. தமிழ், சிங்­கள மக்கள் இணைந்து ஒற்­று­மை­யாக வாழும் சூழ்­நிலை இன்­னமும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. எனவே, பாது­காப்புச் செய­லாளர் நாட்டில் சமா­தானம் நில­வு­வ­தா­கவும், அதனை சீர்­கு­லைக்க வெளி­நா­டுகள் முயற்­சிப்­ப­தா­கவும் கூறு­வது 'மந்­திரம்' ஓது­வ­தற்கு சம­மா­ன­தாகும்.

யுத்தம் முடிந்து 4 வரு­டங்கள் கழிந்த பின்­னரும் வட­ப­குதி தமிழ் மக்கள் இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டுக்­குள்­ளேயே அடக்­கி­யா­ளப்­ப­டு­கின்­றனர். இரா­ணுவ முகாம்கள் பல அகற்­றப்­பட்­டுள்­ள­தாக கூறப்­பட்­டாலும் அவ்­வா­றான நிலை அங்கு கிடை­யாது. மாறாக இரா­ணுவ முகாம்கள் விஸ்­த­ரிக்­கப்­பட்டு வருகின்­றன. அதற்­காக மக்­களின் பூர்­வீக சொந்­தக்­கா­ணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­டு­கின்­றன.

உலகில் எந்­த­வொரு நாட்டில் மக்கள் இரா­ணுவ அடக்கு முறைக்குள் ஆளப்­ப­டு­கின்­ற­னரோ, அங்கெல்லாம் போராட்­டங்கள் தொடர்ந்து கொண்­டேதான் இருக்கும். இதுதான் உலக நியதி. இதனை மாற்ற முடி­யாது. நாட்டில் சமா­தானம் இல்லை. யுத்தம் முடிந்து 4 வரு­டங்கள் கடந்­து­விட்­டன. அர­சாங்கம் சிங்­கள பெளத்த பேரி­ன­வாதச் சக்­தி­களின் சிறைக்­கை­தி­யாக சிக்­கிக்­கொண்­டி­ருப்­ப­தோடு மட்­டு­மல்­லாது சிங்­கள பெளத்த பேரி­ன­வாதச் சக்­தி­களை தூண்­டி­விட்டு இந்துக் கோவில்கள், முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள், கிறிஸ்­தவ தேவா­ல­யங்­களை உடைக்­கின்­றது.
இதன்­மூலம் தமி­ழர்­க­ளுக்கு உரி­மை­களை வழங்க மாட்டோம். மாறாக, சிங்­கள பெளத்த பேரி­ன­வாத தீவி­ர­வாத சக்­தி­களின் அடி­மை­க­ளா­கவே தமி­ழர்கள் வாழ வேண்டும். தமி­ழர்­க­ளுக்கு உரிமை என்ற பேச்­சுக்கே இட­மில்லை என்­பதே அர­சாங்­கத்தின் கொள்­கை­யாகும். அர­சாங்­கத்தின் சமா­தா­னமும், தேசிய நல்­லி­ணக்­கமும் உதட்­ட­ள­வி­லேயே உள்­ளது. தவிர நடை­முறை சாத்­தி­ய­மா­ன­தாக இல்லை.

எமது பிரச்­சி­னையை உள்­நாட்டில் தீர்க்க முடியும். வெளி­நா­டுகள் தேவை­யில்லை. எமக்கு அர­சியல் அனு­பவம் உள்­ளது போன்ற பாது­காப்புச் செய­லா­ளரின் மந்­தி­ரங்­களை சர்­வ­தேசம் செவி­ம­டுக்­காது. ஏனென்றால் நடை­மு­றையில் நாட்டில் எது­வுமே இல்லை. சர்­வ­தே­சமோ, அதன் தலை­வர்­களோ இவர்­களின் மந்­தி­ரங்­களை கேட்­கு­ம­ள­விற்கு முட்­டாள்­க­ளல்ல.

எதிர்வரும் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு மாநாட்டில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்குமென்பதை எதிர்பார்த் திருக்கின்றோம். எமது மக்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொள்வதற்கான முன்னகர்வுகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

Friday, November 01, 2013

படுகொலை செய்யப்படும் முன் இழுத்துச் செல்லப்படும் இசைப்பிரியா – சனல்-4 தொலைக்காட்சியின் புதிய ஆதாரம்

கொடூர பாலியல் வெறியாட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் சிங்களப் படைகளால் இசைப்பிரியா அவர்கள் உயிருடன் இழுத்துச் செல்லப்படும் காணொளி ஆதாரத்தை சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

பொதுநலவாய மாநாடு நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில் இக் காணொளி ஆதாரத்தை இன்று சனல்-4 தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.

இசைப்பிரியாவை தமிழீழத் தேசியத் தலைவரின் புதல்வி துவாரகா என்று கருதி சிங்களப் படையினர் இழுத்துச் செல்லும் பொழுது தான் துவாரகா இல்லை என்று அவ்விடத்தில் அழுதபடியே இசைப்பிரியா கூறும் ஒலிப்பதிவும் இக்காணொளியில் உள்ளது.
 

Tuesday, October 29, 2013

வடக்கில் பாதுகாப்பினை விஸ்த்தரிக்க வேண்டிய நிலையில் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றது - இராணுவத் தளபதி

வடக்கில் பாதுகாப்பினை விஸ்த்தரிக்க வேண்டிய நிலை காணப்படுவதாலேயே காணிகள் சுவீகரிக்கப்படுவதாக, இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். 

தென்னிலங்கயில் அதி வேக நெடுஞ்சாலைகள் நிர்மாணிக்கப்படும் போது, பொது மக்களின் காணிகள் சட்ட ரீதியாக கைகொள்ளப்பட்டதைப் போலவே வடக்கிலும் இடம்பெறுகிறது. 

வடக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகளை விஸ்த்தரிக்க வேண்டிய நிலைமை காணப்படுதால், முகாம்களையும் பெரிதாக்க வேண்டிய தேவை காணப்படுகிறது. இந்த நிலையில் சட்ட ரீதியாகவே குறித்த காணிகள் கையகப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Monday, October 14, 2013

தோல்வியை ஒப்புக் கொண்ட நிலையில், அரசாங்கம் ஏன் இன்னும் முரண்டுபிடிக்கிறது - எரிக்சொல்ஹேய்ம்

இறுதி போரின் போது, உலகின் மிகப்பெரிய அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையே தமது தோல்வியை ஒப்புக் கொண்ட நிலையில், அரசாங்கம் ஏன் இன்னும் முரண்டுபிடிக்கிறது என்று, இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹேய்ம் கேள்வி எழுப்பியுள்ளார். 

இலங்கையில் நிறைடைந்த யுத்த காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாக கட்டமைப்பு முறையாக செயற்படவில்லை என்பதை, அதன் உள்ளக அறிக்கை நிரூபித்துள்ளது. இந்த நிலையில் அதனை ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் ஒப்பு கொண்டுள்ளார். 

ஆனால் இலங்கை அரசாங்கத்தின் மீதான மனித உரிமை மீறல்கள் அனைத்தும் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் ஏன் இன்னும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து வருகின்றனர்? என்று சொல்ஹேய்ம் கேள்வி எழுப்பியுள்ளார்.  இவ்வாறு தங்களின் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதன் ஊடாக, சர்வதேச நாடுகளுக்க தாங்கள் நிரபராதிகள் என்று காட்டிவிட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

தொடர்சியான நிராகரிப்பு, இலங்கையை சர்வதேச விசாரணையை தள்ளும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். 

Monday, October 07, 2013

ஜனாதிபதி முன்னிலையில் விக்னேஸ்வரன் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்


வட மாகாணத்தின் முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சீ.வி விக்னேஸ்வரன் சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் தமிழ் மொழி மூலம் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இதற்கான நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இந்த சத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோரும், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி.விக்னேஸ்வரனின் குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அரச தரப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பிரதமர் டீ.எம்.ஜயரத்ன, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, ராஜித சேனாரத்ன, மைத்திரபால சிறிசேன, திஸ்ஸ விதாரண, ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம்.அதாவுல்லா, ஏ.எச்.எம்.அஸ்வர், டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும், பிரபா கணேசன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சத்தியப்பிரமாண வைபவம் நிறைவடைந்ததும் வடமாகாண முதலமைச்சருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மரத்தினால் செய்யப்பட்ட அழகிய பிள்ளையார் சிலை ஒன்றினை அன்புப் பரிசாக வழங்கியுள்ளார்.

Wednesday, October 02, 2013

தமிழ் முஸ்லிம் மக்களை பயமுறுத்தி இனி யாரும் இனவாத அரசியல் நடத்த முடியாது-மனோ கணேசன்!

கொழும்பில் இனவாத பயமுறுத்தலை விடுத்து இனவாத அரசியல் செய்வதை சம்பிக்க ரணவக்க நிறுத்த வேண்டும். தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான எந்த ஒரு இனவாத நடவடிக்கையையும் நாம் முற்போக்கு சிங்கள சக்திகளுடனும் சர்வதேச சமூகம் மற்றும் ஐநா சபையுடனும் சேர்ந்து முறியடிப்போம்.

ஒருபக்கம் தமிழ் முஸ்லிம் மக்களை பயமுறுத்தி மறுபுறம் சிங்கள மக்களுக்கு 13ம் திருத்தம் மாகாணசபை முறைமை அதிகார பகிர்வு கொள்கை ஆகியவை பற்றி திரித்து பேசி பொய்யான தகவல்களை தந்து தங்கள் இனவாத அரசியலை ஜாதிக ஹெல உறுமய தேசிய சுதந்திர முன்னணி தேசிய தேசப்பற்று இயக்கம் பொதுபல சேனா இராவண சேனா ஆகிய அமைப்புகளின் இனவாத கூட்டு நடத்தி வருகின்றது. இந்த கூத்துகளை நாம் நடத்தும் எமது அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் மூலமாக படிபடியாக முறியடித்து வருகின்றோம்.

எனவே பழைய இனவாத வரலாற்றை தலைநகரிலும் நாட்டில் எந்த பகுதியிலும் இனி எவரும் திரும்பவும் எழுத முடியாது. நாம் வந்த வழியில் திரும்பி மீண்டும் பயணிக்கவும் முடியாது. அதற்கு என் உயிர் போனாலும் இடந்தரமாட்டேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். 

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிங்கள மொழியில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவதுஇ

13ம் திருத்தம்

13ம் திருத்தம் தொடர்பாக சிங்கள மக்களுக்கு இந்த இனவாத கூட்டு பொய்யான தகவல்களை தந்து வருகிறது. மாகாணங்களுக்கான போலிஸ் அதிகாரம் பற்றி திரித்து பேசுகின்றார்கள். போலிஸ் மாஅதிபர் கொழும்பில் இருந்து ஒரு போலிஸ் விசாரணை குழுவை மாகாணங்களுக்கு அனுப்புவதற்கு குறிப்பிட்ட மாகாண முதலமைச்சரின் அனுமதியை பெற வேண்டும் என சம்பிக்க ரணவக்கவும் விமல் வீரவன்சவும் நாடு முழுக்க சென்று சொல்லி வருகின்றார்கள்.

இது அப்பட்டமான பொய். 13ம் திருத்தத்தின் சட்டம் ஒழுங்கு அதிகாரத்தின் 11:2:B பிரிவின் படி ஜனாதிபதி விரும்பினால் நாட்டின் எந்த ஒரு மாகாணத்தின் எந்த ஒரு பகுதிக்கும் தேசிய போலிஸ் படையணியை அனுப்பி வைக்கலாம். இதற்கு அவர் முதலமைச்சரின் அனுமதியை பெற வேண்டியது இல்லை. முதல்வருடன் கலந்துரையாட மட்டுமே சட்டம் வலியுறுத்துகிறது. அதேபோல் 12:4:B பிரிவின் படி தேசிய போலிஸ் மாதிபர் தான் விரும்பும் பட்சத்தில் முதலமைச்சருக்கு அறிவித்து விட்டு எந்த ஒரு மாகாணத்தின் எந்த ஒரு பகுதிக்கும் தேசிய போலிஸ் விசாரணை குழுவை அனுப்பி வைக்கலாம். இதற்கு முதல்வரின் அனுமதி அவசியம் இல்லை. முதல்வருடன் கலந்துரையாட மட்டுமே சட்டம் வலியுறுத்துகிறது. தேசிய அரசின் சட்ட மா அதிபரின் அனுமதி மட்டுமே தேவை.

அதாவது ஜனாதிபதியோ அல்லது போலிஸ் மாஅதிபர் இலங்ககோனோ முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு அறிவித்துவிட்டு தேசிய போலிஸ் விசாரணை குழுவையோ படையணியையோ வட மாகாணத்துக்கு எந்த வேளையிலும் அனுப்பலாம். முதலமைச்சரின் அனுமதி பெறவேண்டும் என்று13ம் திருத்த சட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை.

சட்டத்தில் இல்லாததை சொல்லி சிங்கள மக்களை பிழையாக வழி நடத்துவதை நிறுத்திவிட்டு முடியுமானால் நான் சொல்வது பிழை என்று நிரூபிக்கும்படி இந்த இனவாத கூட்டுகாரர்களுக்கு நான் சவால் விடுக்கின்றேன். 

பண்டா-டட்லி-செல்வா ஒப்பந்தங்கள்

இந்தியாவும் அமெரிக்காவும் வந்துதான் இந்த நாட்டில் அதிகாரம் பகிரும் கொள்கையை அறிமுகப்படுத்தினார்கள் என இந்த இனவாத கூட்டு சொல்கிறது. இதுவும் பொய்.

1950 களிலும் 1960 களிலும் இந்த நாட்டின் இரண்டு பிரதமர்கள் இந்த நாட்டின் தமிழர் தலைவருடன் ஒப்பந்தம் செய்தார்கள். இந்த ஒப்பந்தத்தில் வடக்கு கிழக்கில் நிர்வாக மொழியாகவும் நீதிமன்ற மொழியாகவும் தமிழ் மொழி இருக்க வேண்டும் என தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களில் பிராந்தியங்கள் உருவாக உடன்பாடு ஏற்பட்டது. வடக்கிலும் கிழக்கிலும் இருக்கும் பிராந்தியங்கள் விரும்பும்பட்சத்தில் மாகாண எல்லையையும் மீறி இணைந்துகொள்ள உடன்பாடு ஏற்பட்டது.

வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக அன்று தொட்டு வாழ்வதையும் அங்கு தமிழ் மொழி நிர்வாக மொழியாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் தமிழ் பிராந்தியங்கள் விரும்பினால் இன்றுடன் ஒன்று இணைந்து ஒரே பிராந்தியமாக செயல்படக்கூடிய தேவைபாட்டையும் பண்டா டட்லி ஆகியோர் ஏற்று கொண்டு இருந்துள்ளார்கள். அதாவது இன்றைய வடகிழக்கு இணைப்பு பற்றிய தேவைப்பாடும்
அன்று பேசப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

அந்த வேளையில் இந்தியா அரசாங்கம் இங்கே வந்து தலையிட்டு இந்த ஒப்பந்தங்களை செய்யவில்லை என்பதை சிங்கள மக்களுக்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இந்த நாட்டுக்கு அதிகாரப்பகிர்வு கொள்கையை கொண்டு வந்தது இந்தியா அல்ல. அதிகாரப்பகிர்வை பற்றி பேசியதும்இ ஒப்பந்தம் செய்ததும் பிரதமர் பண்டாரநாயக்கா என்பதை சிங்கள மக்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன். எனவே இந்த இனவாத கூட்டிற்கு இந்த விடயம் தொடர்பாக யாரையாவது திட்டி தீர்க்க வேண்டும் என்றால் அவர்கள் பிரதமர் பண்டாரநாயக்காவை தான் திட்ட வேண்டும். அதற்கு முன்னால் இன்றைய அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகர் பண்டாரநாயக்காதான் என்பதையும் இவர்கள் மனதில் கொள்ள வேண்டும். . 

எனவே இந்த நாட்டில் தமிழ் முஸ்லிம் மக்களை பயமுறுத்தி சிங்கள மக்களுக்கு பொய் கூறி அரசியல் செய்வதை இனவாதிகள் நிறுத்த வேண்டும். கொழும்பில் இனவாத பயமுறுத்தலை விடுத்து இனவாத அரசியல் செய்வதை சம்பிக்க ரணவக்க நிறுத்த வேண்டும். தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான எந்த ஒரு இனவாத நடவடிக்கையையும்இ நாம் முற்போக்கு சிங்கள சக்திகளுடனும் சர்வதேச சமூகம் மற்றும் ஐநா சபையுடனும் சேர்ந்து முறியடிப்போம் என்பதை இவர்களுக்கு நான் கூறிவைக்க விரும்புகிறேன்.

Tuesday, September 24, 2013

தேர்தல் விதிமுறைகள் அரச தரப்பினரால் மீறல் - சர்வதேச கண்காணிப்புக்குழு காட்டம்


வட மாகாண சபைத் தேர்தல் காலங்களில் நடைபெற்ற சிறீலங்கா இராணுவத்தினரது நடவடிக்கைகளுக்கு எதிராக தென் ஆசியப்பிராந்தியத்தில் இருந்து வருகை தந்த சர்வதேச தேர்தல் கண்காணிப்புக்குழு தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. தேர்தல் காலங்களில் தேர்தல் விதிமுறைகள் மற்றும் சட்ட ஒழுங்குகள் சிறீலங்கா அரச தரப்பினராலும் அரச படைகளினாலும் அதிக அளவில் மீறப்பட்டதையும் மேற்படி கண்காணிப்புக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. சிறீலங்கா தேர்தல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் இங்கு வருகை தந்திருந்தவெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களே தமது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

தேர்தல் நடைபெற்ற நாளிற்கு முன்னைய நாட்களில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பாகப் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் இராணுவத்தினரால் ஆயுத முனையில் தாக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பல வேட்பாளர்களின் வீடுகள் சிறீலங்கா இராணுவப் புளனாய்வாளர்கள் மற்றும் துணை இராணுவக் குழுக்களைச் சார்ந்தவர்கள் என பொதுமக்களால் சந்தேகிகப்படும் நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் அக்குழு குற்றம்சாட்டியது. மேலும் சிறீலங்காவின் தேசிய இராணுப்பிரிவைச் சேர்ந்த படையினர் மகிந்த ராஜபக்ஸவின் அரசியல் கட்சியின் பிரச்சார நடைவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், தேர்தலில் நேரடியாகவே ஈடுபட்டதாகவும், மகிந்த ராஸபக்ஸவின் கட்சியை சார்ந்தவர்களுக்கு ஆதரவு தேடும் முறையில் அச்சிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களை தேர்தலில் வாக்களிக்க வரும் மக்களிடம் அச்சுறுத்தும் வகையில் விநியோகித்ததாகவும் அக் கண்காணிப்புக்குழு தெரிவித்தது.

இக்கண்காணிப்புக்குழுவின் தலைவரான முன்னாள் இந்திய தேர்தல் ஆணையாளர் கோபாலசாமி தமிழ் மக்கள் நெடு நாட்களுக்குப்பின் ஜனநாயக செயல்முறையில் பங்குபற்றுவதில் ஆர்வம் காட்டியதாகவும் எனினும் அதை தடுக்கும் வகையில் பல அசம்பாவிதங்கள் அரங்கேறியதாகவும் தெரிவித்தார். மேலும் நம்பக்தன்மை வாய்ந்த உறுதியான மக்கள் மனங்களை வென்றெடுக்கக்கூடிய தேர்தல் நடைமுறைகளை அமுல்ப்படுத்த தேர்தல் ஆணையாளரிடம் அதிக அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் எனவும் கருத்து வெளியிட்டார். எனினும் வழமையன இந்திய தலைமைகளைப் போல் சிறீலங்கா நடைபெறுவது மகிந்தவின் தனிப்பட்ட ஆட்சியென்பதையும், அரசின் முக்கிய பொறுப்புக்களில் உள்ள அனைவரும் மகிந்த மீதான விசுவாசிகளே என்பதை அறியத்தவறிவிட்டார்.

அடிதடி, துப்பாக்கிச்சூடுகளுக்கு மத்தியில் நடைபெற்ற வட மாகாண சபைத்தேர்தலை மிகவும் நீதியான முறையில் நடைபெற்றது வடமாகாண சபைத்தேர்தல் என முரசறைந்தவர்தான் சிறீலங்காவின் தேர்தல் ஆணையாளர். இவர் கைகளில் எவ்வளவு அதிகாரத்தைக் கொடுத்தாளும் அது புலிப்பசிக்குப் புல்லை கொடுத்தது போன்று பிரயோசனமற்றதாகவே இருக்கும்.தேர்தல் வேட்பாளர் ஒருவர் அவரது வீட்டு வாசலில் வைத்து இராணுவத்தினரால் மிரட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்கச் சென்ற உள்ளுர் தேர்தல் கண்காணிப்பாளர் ஒருவர் மிரட்டப்படமை, அனந்தி சசிதரன் மீதான இராணுவம் மற்றும் துணை இராணுவக்குழுக்களின் அட்டுமீறல் சம்பவம், மேலும் அரச ஆதரவுடன் இடம்பெற்ற போலி 'உதயன்" பத்திரிக்கை விநியோகம் மற்றும் தொலைக்காட்சி ஊடகத்தினரின் தவறான செய்திப் பிரயோகங்கள் என்பவை தேர்தல் சட்டங்களை அடியோடு மீறும் செயல் எனவும் அவர் விபரித்தார்.

தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் சிலவற்றின் வேண்டுகோளுக்கிணங்க உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்ல போக்குவரத்து சேவைகள் அமுல்ப்படுத்தப்பட்டதாகவும் எனினும் 26மூஇடம்பெயர்ந்த மக்களே வாக்களிப்பில் பங்குபற்றியதாகவும் அவர் தெரிவித்தார். இத்தனை திருகுதாளங்களையும் அரங்கேற்றிவிட்டு த.தே.கூ வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டபின் தமது ஆட்சியில் வடக்கில் வாழும் மக்களின் ஜனநாயக நடவடிக்கைகள் மீதான நம்பிக்கைகள் உயர்வடைந்துள்ளதாக சர்வதேசத்திற்கு அறிக்கை விட்டுள்ளார் மகிந்த ராஜபக்ஸ. இதனை ஏற்றுக்கொள்கின்ற அரசியல் தலைமைகளும் சர்வதேசத்தில் இருக்கவே செய்கின்றன. தேர்தல் நடைபெறும் நேரத்தில் தமிழர்களை வீட்டுக்குள்ளேயே முடங்க வைக்கப்பார்த்ததுதான் இவரது தேர்தல் வெற்றி நோக்கிய திட்டமாக இருந்தது. அத்தனை திட்டத்தையும் தவிடுபொடியாக்கி த.தே.கூட்டமைப்பை தமிழர்கள் அமோக வெற்றி பெற வைத்திருக்கின்றார்கள்.

இதற்கான காரணம் தமிழ்த்; தேசியம் மீதான தமிழ் மக்களின் நாட்டமே தவிர த.தே.கூட்டமைப்பின் தலைமைகளின் சுய அரசியல் சிந்தனைக்காகவல்ல. இதனை அறியாது தமது சொந்த எண்ணப்பிரதிபலிப்புக்களை ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணக்கருவெனக் கருதி சிங்கக்கொடி அசைக்கும் நிகழ்வுகள் இனி இடம்பெற்றால் அது தமிழர்களின் அவநம்பிக்கைக்கான விலையாகத்தான் இருக்கும். இந்நிலமை ஒட்டுமொத்த தமிழ்த்தேசியத்தையே உருக்குலைத்துவிடும். தமிழர்களின் எண்ணங்களை முழுமையாக அறிவதுதான் தமிழ் அரசியற் தலைமைகளின் தற்காலத் தேவை.
-ஈழவன்னியன்-

ஐந்து கோடிக்கு விலை போன டக்ளஸ் தேவானந்தா!!

வட மாகாண சபைத்தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு முன்னிலை பெற்ற சிலர் பணத்தைக் கொடுத்து  அதிகார மிரட்டலின் கீழ் ஓரம் கட்டப்பட்டு ஐந்தாவது இடத்தில்  பின்னால் நின்றவரை இரண்டாவது தெரிவு உறுப்பினராக அரசாங்கத்தின் உயர் மட்டத்தினால் முன்னிலைப்படுத்தியதாக பாரிய குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சதந்திரக் கூட்டமைப்பில் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சி மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் கட்சிகள் இனைந்து போட்டியிட்டன.

இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வேட்பாளர்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்கள் யாரும் முதல் ஐந்து இடங்களுக்கள் தெரிவு செய்யப்படாத நிலமை காணப்பட்டது. இது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்க பாரிய அடியாக இருந்ததுடன் பாரிய கௌரவக் குறைவாகவும் காணப்பட்டது. இதனை ஈடு செய்யும் வகையில் சில முடிவுகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமைப் பீடம் மற்றும் யாழ் மாவட்டத்தின் அமைப்பாளர் வேண்டுதலின் பெயரில் எடுக்கப்பட்டது.

குறிப்பாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம் பெற்ற வாக்கு எண்ணும் பணியில் கட்சிகளுக்கான வாக்குகள் மற்றும் உறுப்பினர்களின் விருப்பு வாக்குகள் எண்ணும் பணிகள் அனைத்தம் மதியத்துடன் நிறைவு பெற்று விட்டது. ஆனாலும் குறிப்பிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரை தெரிவு உறுப்பினராக மாற்றும் பணிக்காக பிற்பகல் வரை விருப்ப வாக்கு விடயத்தில் கணக்கு பிழைப்பதாகக் கூறி  உயர் அதிகாரிகளினால் இழுத்தடிப்புகள் நடை பெற்றுக் நேரத்தை கடத்திக் கொண்டு இருந்த வேளையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உயர் மட்டத்தினர் குறிப்பிட்ட 2ம் 3ம் 4ம் இடங்களை பெற்றவர்களை நீக்கி ஐந்தாம் இடத்தில் உள்ளவரை முன்னுக்கு கொடுவரும் நடவடிக்கையாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பணரீதியாகவும் சற்று உருட்டல் மிரட்டலாகவும் கதைத்து உரிய மாற்றங்களை செய்துள்ளார்கள்.

இதற்கான பிரதியீடாக சுமார் ஐந்து கோடி ரூபா கைமாறியுள்ளதாகவும் குறிப்பி;ட்ட வட்டாரங்களின் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் மூலம் தெரியக் கூடியதாகவுள்ளது. ஏற்கனவெ ஐக்கிய மக்கள் சுதந்திரக கூட்டமைப்பில் வெற்றி பெற்ற உறுப்பினாகளாக ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட பொறுப்பாளர் கமல் மற்றும் தென்மராட்சி பிரதேச பொறுப்பாளர் சாள்ஸ் வடமராட்சி பொறுப்பாளர் மற்றும் தவராசா ஆகியோர் காணப்பட்டார்கள்.

இதனை தேர்தல் முடிவடைந்த அன்று பிற்பகல் வெளியான விசேட பதிப்பு   தினக்குரல் பத்திரிகை ஐக்கிய மக்;கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வெற்றி பெற்றவர்கள் கமல் மற்றும் சாள்ஸ் என வெளியிட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் ஓரம் கட்டி யாழ் மாவட்டதின் சுதந்தரிக்கட்சி அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் பணத்தினாலும் அதிகாரத்தினாலும் கொண்டுவரப்பட்டு அவர் பெற்ற வாக்குகள் பத்தாயிரத்திற்க்கு மேல் எனவும் காணக்கிடப்பட்டுள்ளது.இதே வேளை வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றார்கள் குறிப்பி;ட்ட அங்கஜன் இராமநாதனுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் நாலாயிரத்திற்க்கும் குறைவானது என்றும் தற்போது எவ்வாறு பத்தாயிரத்திற்க்கு மேற்பட்டதாக மாறியது என்று. 

இத்தகைய கைங்கரியத்தை மேற்க்கொள்வதற்க்கு இடம் கொடுத்த ஈழ மக்கள் ஜனநாயக்கக் கட்சியின் பொதுக் செயலாளரின் இத்தகைய நடவடிக்கை தமிழ் மக்களிடைய பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அவருடைய வாக்க வங்கியும் கூட தமிழ் மக்களிடம் இருந்து குறைந்து செல்கின்றமையும் குறிப்பி;டத்தக்கதாகும். கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் கூட  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் வெற்றி மூன்றாவதாக தெரிவ செய்யப்பட்ட பசுபதி சீவரத்தினம் தெரிவு செய்யப்படாது இறுதி நேரத்தில் விருப்பு வாக்குளில் மோசடிகள் செய்யப்பட்டு மு.சந்திரகுமார்  தெரிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு இருந்தன.

இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் தொலைக்காட்சியில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் இதனை நிரூபிக்கும் வகையில் மல்லாகம் ரவி என்பவரினால் சவால் விடுத்து போதிலும் இதனை எந்த சந்தர்ப்பத்திலும் யாரும் மறுக்கவிலலை. மேலும் இத்தகைய மோசடி இடம் பெற்றமையால் இம்முறை பனை அபிவிருத்தி சபையின் தலைவராக இருக்கும் பசுபதி சீவரத்தினம வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேட்பாளராக ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியனால் நிறுத்த முற்பட்ட போதிலும் இதனை அவர்  கடந்த பாராளுமன்ற தேர்தல் அனுபவத்தின் அடிப்படையில் மறுத்து உள்ளார்.

இதனை அவரே அவருடன் மிகவும் நெருக்கமாக பழகுபவர்களிடம் தெரிவித்துள்ளார். இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கையறு நிலையில் தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியாத நிலையில் அரசுடன் இனைந்து காணப்படுவதாகவும் தன்னை காப்பாற்றிக்கொள்ள தமிழ் இனத்தை இத்தகைய செயல்களுக்கு ஒத்துப்போய் விற்று வருவதாகவும் பாரியளவிலான குற்றச்சாட்டுக்கள் பொது மக்களினால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

எதுவாக இருந்தாலும் சிங்கள பேரினவதத்திற்க்கு ஒத்தூத புறப்பட்டு இன்று தனது ஆதரவாளர்களையே இழந்து தமிழ் மக்கள் மத்தியில் தலை குனிந்து வாழும் நிலமைக்கு டக்ளஸ் சென்றுள்ளார் என்பதே உண்மையாகும். ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி உறுப்பினாகளிடம் கூட இத்தகைய தில்லு முள்ளு பாரிய வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 

Friday, September 20, 2013

அனந்தி மீதான தாக்குதலை இராணுவமே மேற்கொண்டது!- கபேயின் தேசிய அமைப்பாளர் அதிர்ச்சித் தகவல்


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் மீது இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இராணுவத்தினரே உள்ளனர் என கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளான திருமதி அனந்தியின் வீட்டிற்கு விஜயம் செய்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பின்னரே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இந்த சம்பவத்தின் பின்னணியில் இராணுவத்தினரே உள்ளனர் என்பதை தாக்குதலுக்குள்ளானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.
இந்த சம்பவத்தில் ஒரு சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்தல் விடயங்களில் இராணுவத்தினர் தலையீடுகள் அதிகமான உள்ளன. இராணுவம் எந்த விதத்திலும் தேர்தல் விடயங்களில் தலையிட முடியாது.
எந்த அச்சுறுத்தல் வந்தாலும் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்றார்.

Sunday, September 15, 2013

'காணாமல் போன மகனைக் கண்டுபிடித்து தா': யாழில் ஜனாதிபதி உரையாற்றும் போது கூச்சலிட்ட பெண்ணால் பரபரப்பு


'காணாமல் போன என்ர மகனைக் கண்டு பிடித்து தாடா' என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது தாயொருவர் கூக்குரல் எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கிற்கான தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள ஜனாதிபதி நேற்று யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
இதன்போது யாழ்.துரையப்பா விளையாட்டரங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
ஜனாதிபதி உரையாற்றத் தொடங்கியதும் நிகழ்வினை பின்பகுதியில் இருந்து அவனதானித்துக் கொண்டிருந்த தாயொருவர் திடீரென்று காணாமல் போன என்ர மகனைக் கண்டு பிடித்து தா? , என்று கூச்சலிட்டார்.
இதனை சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தடுக்க முயன்றனர். ஆனால் நான் செத்தாலும் பரவாயில்லை என்னை விடுங்கடா என்று அவர் கத்தினார். ஆனாலும் பின்னர் ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி விட்டனர்.
இந்த சம்பவங்களால் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்கள் ஜனாதிபதியின் உரையினையும் கண்டு கொள்ளாமல் எழுந்திருந்தனர். ஆனால் எந்த சலனமும் இன்றி ஜனாதிபதி தனது உரையினை முடித்துக் கொண்டார்.
குறித்த தாயை, யாழ்ப்பாணத்திற்கு புத்தளத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இரும்பு வியாபாரியான அரசாங்க வேட்பாளர் ஒருவரே கஸ்ரப்பட்டு அழைத்து வந்திருந்தார் என்பதோடு அவர் நீல படையின் ரீ-சேட்டும் அணிந்திருந்தார்.

செஞ்சோலையில் கே.பியை சந்தித்தார் ஜனாதிபதி மகிந்த


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வட மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டங்களில் ஜனாதிபதி நேற்று சனிக்கிழமை கலந்துகொண்டார்.
இதன்போது, கிளிநொச்சி, இரணமடுவிலுள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.  இந்த சந்திப்பின்போது வடமாகாண தேர்தல், அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அங்கு சென்ற ஜனாதிபதி சிறுவர்களுக்கான கல்வித் தேவைகள் குறித்து கேட்டு அறிந்து கொண்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளரும் அவர்களின் ஆயுத முகவராகவும் இருந்து வந்த கே.பி போர் முடிவுக்கு வந்த பின்னர் வெளிநாடு ன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டார். தற்போது, அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் அவர், அரசசார்பற்ற நிறுவனமொன்றை நடத்தி வருகிறார்.

Saturday, September 14, 2013

தேர்தல் விதிமுறைகளை மீறியதாகக் கூறி த.தே.கூ மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கத் தயாராகும் சிங்கள அமைப்புக்கள்


வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வெளியிட்ட பல அறிக்கைகளுக்கெதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்போவதாக சிறீலங்கா தேசத்தின் பௌத்த மேலாதிக்க மற்றும் கொடும்போக்கு சிங்கள அமைப்புக்கள் கூட்டாக எச்சரித்துள்ளன. 1978ம் ஆண்டு அரசியலைமைப்பின் பிரகாரம் நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருப்பைப் பாடுகளை சீர்குழைக்கும் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பாகவே தாம் சட்டநடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக சிறீலங்காவின் கொடும்போக்கு பௌத்த சிங்கள அமைப்பான ராவணா சக்தி அமைப்பின் பொதுச் செயலாளர் சதாதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மேலும் கருத்துத் தெரிவித்த அவர் கூட்டமைப்பினரின் தேர்தல் நடவடிக்கைகள் தேசிய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்குவதுடன் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனம் 1978அரசியலைமைப்பின் பிரகாரம் குற்றத்திற்குரியது என்றும் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பல சிங்கள அமைப்புக்களின் உதவியுடன் தாம் கூட்டாக முன்னெடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

மேலும் கூட்டமைப்பினர் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்றாளும் தேர்தல் மற்றும் சட்ட ஒழுங்குகளை மீறிய குற்றத்திற்காக மாகாண கவுன்சிலர்கள் அவர்கள் சத்தியபிரமாணம் செய்யஅனுமதி வழங்கக்கூடாதெனவும் அவர் தெரிவித்தார். எனினும் 1978ம் அரசியலமைப்பின் பிரகாரம் வட மாகாண முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரனை கொழும்புக்கு வருவதைப் பற்றி கனவிலும் நிpனைக்கவேண்டாம் என்று ராவணா சக்தி அச்சுறுத்தி அறிக்கை வெளியிட்டது மட்டும் விதிவிலக்கான செயல் போலும். நீதித்துறை அரசியல்வாதிகளின் கைப்பொம்மையாக்கப்ட்டதன் விளைவாகவே ராவணா சக்தியின் இக்கருத்தை கருதமுடியும்

தமிழ்ச் சிறுமிகளை பாலியல் அடிமைகளாக்கிய ஈ.பி.டி.பி டக்ளஸ் - அம்பலப்படுத்தியது அமெரிக்கா


இலங்கையில் ஈ.பி.டி.பி என்ற இராணுவத் துணைக்குழுவினால் தமிழ்ச் சிறுவர்கள் அடிமைகளாக விற்கப்படுவதாக விக்கிலீக்ஸ் இரகசியத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் முன்னாள் சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ரோபேட் ஓ பிளாக்கினால் எழுதப்பட்ட கேபிளில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் அறிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கையில்:

ஈ.பி.டி.பி என்கிற இராணுவ துணைக்குழுவினால் குறிப்பாக ஆண் சிறுவர்கள் அடிமை வேலைகளை மேற்கொள்ளவும், பெண் சிறுமிகள் விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்தவும் இந்தியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படுகிறார்கள். இக்கடத்தல் நடவடிக்கைகளுக்கு பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள விமானநிலைய சுங்க அதிகாரிகள், குடிவரவு,குடியகழ்வு அதிகாரிகள் உதவிகளை வழங்குகிறார்கள்.

தமிழ்ச் சிறுமிகள் வலுகட்டாயத்தின் பெயரில் பாலியல் அடிமைகளாக இராணுவத்தினரின் பாலியல் தேவைகளுக்கு விற்கப்படுகின்றனர். ஒரு இரவில் மட்டும் ஐந்து தொடக்கம் பத்து வரையிலான இராணுவத்தினர் ஒரு தமிழ்ச் சிறுமி மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகின்றனர். சில சமையங்களில் இத்தகைய பாலியல் அடிமைகளுக்கு கிட்டத்தட்ட ஒரு அமெரிக்க டொலர்களை வழங்குகின்றனர் எனவும் அதேநேரம் இச்சிறுவர்களின் பெற்றோர்கள் முறைப்பாடுகளைச் செய்யமுடியாத மிகத் துர்ப்பாக்கிய நிலையில் வாழ்ந்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sunday, September 01, 2013

கச்சதீவு தொடர்பான இந்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது: கருணாநிதி


இந்திய- இலங்கைக் கடல் பகுதியில் சர்வதேச எல்லைக் கோட்டை நிர்ணயித்த போது கச்சதீவு இலங்கை வரம்புக்குள் சென்று விட்டதாக திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கச்சதீவு விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
கச்சதீவு பற்றிய வழக்கில் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் கச்சதீவு எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாமல் இருந்தது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கச்சதீவுக்கு யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்சினை இந்தியா, இலங்கை இடையே நீடித்து வந்தது. அதைத் தொடர்ந்து இந்திய-இலங்கைக் கடல் பகுதியில் சர்வதேச எல்லைக் கோட்டை நிர்ணயித்த போது கச்சத்தீவு இலங்கை வரம்புக்குள் சென்று விட்டது. அதன் பிறகு 1974ஆம் ஆண்டில் இந்தியா இலங்கை இடையே கச்சத் தீவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
1976ஆம் ஆண்டில் இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலும் கச்சதீவு இலங்கையின் பகுதியில் இருப்பதை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய எல்லைக் கோட்டுக்குள் இருந்த கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்ததாக மாயை ஏற்படுத்துவது தவறானது என்றெல்லாம் தெரிவித்திருப்பது தமிழ் மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கச்சதீவு இந்தியாவிற்குத் தான் சொந்தம் என்றும், அதனை 1974ஆம் ஆண்டு இந்திய அரசு இலங்கைக்கு ஒரு ஒப்பந்தத்தின் வாயிலாகத் தாரை வார்த்து விட்டது என்றும், அந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறாத காரணத்தால், அது செல்லாது என்றும் தமிழகத்தின் சார்பில் முதலமைச்சர் உச்சநீதி மன்றத்தில் முறையிட்டிருக்கிறார்.
கச்சதீவு பற்றி 15-4-2013 அன்று நடைபெற்ற டெசோ அமைப்பின் கூட்டத்தில், “கச்சதீவு இந்தியாவின் ஒரு பகுதியாகும். அது 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி இலங்கை அரசுக்கு இந்திய அரசால், சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் நாம் தெரிவித்த எதிர்ப்புகளையெல்லாம் மீறி விட்டுக் கொடுக்கப்பட்டது.
இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதென்றால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 368வது பிரிவின்படி நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு வைத்து சட்டம் இயற்றப்பட வேண்டும்.
கச்ச தீவைப் பொறுத்தவரை அப்படி எந்தவொரு சட்டமும் இதுவரை நிறைவேற்றப்படாததால், கச்சதீவை இலங்கைக்கு ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாது என்பதுதான் உண்மை.
எனவே 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சதீவு இந்தியாவின் ஒரு பகுதி தான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், “டெசோ” அமைப்பின் மூலம் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதென இந்தக் கூட்டம் தீர்மானிக்கின்றது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், டெசோ அமைப்பின் சார்பில் நான் இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை 10-5-2013 அன்று தாக்கல் செய்திருக்கிறேன்.
உச்ச நீதி மன்றத்தில் நான் தாக்கல் செய்த இந்த மனு, 15-7-2013 அன்று தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர், நீதிபதிகள் எப்.எம். இப்ராகிம் கலிபுல்லா, விக்ரம் ஜித் சென் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, எனது மனுவினை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிட உத்தரவிட்டனர்.
கச்சதீவைப் பொறுத்தவரை அது பாரம்பரியமான நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது என்பதை மத்திய அரசுக்கு நினைவுபடுத்த வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
கச்சதீவில் புனித அந்தோனியார் கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு வாரத் திருவிழாவிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களே அதிகம் செல்வர். இலங்கை மீனவர்களும் கலந்து கொள்வர்.
தொன்று தொட்டு தமிழக மீனவர்களும் இலங்கை மீனவர்களும் இப்பகுதியில் மீன் பிடித்து வருகின்றனர். அதன் தொடர்பான, வலைகளை உலர்த்துதல், களைப்பாறுதல் போன்றவற்றிற்கும் இத் தீவினைப் பயன்படுத்துவர். இத்தீவானது பன்னெடுங்காலமாக ராமநாதபுரம் ராஜாவின் ஆளுகையில் இருந்தது.
இலங்கையை ஆட்சி செய்த டச்சுக் கம்பெனி அந்தத் தீவை 1660இல் குத்தகைக்குப் பெற்றிருந்தது. பின்னர் 1870-73, 1875, 1880, 1889 ஆகிய ஆண்டுகளிலும் ராமநாதபுரம் அரசர் இந்தத் தீவிற்கு அருகில் உள்ள சங்குப் படுகையை குத்தகைக்கு விட்டிருந்தார் என்பதும், இலங்கை கவர்னரின் 1757-1962 நினைவு ஏடுகளில் குறிப்பிடப்பட்டிருப்பதும், 1766-ல் கண்டி அரசரால் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமும், 1845ஆம் ஆண்டில் இலங்கை லெப்டினன்ட் கவர்னர் எழுதிய கடிதமும், இத்தீவு ராமநாதபுரம் அரசரின் இத்தீவு ராமநாதபுரம் அரசரின் இத்தீவு ராமநாதபுரம் அரசரின் இத்தீவு ராமநாதபுரம் அரசரின் ஆளுகையிலும் கட்டுப்பாட்டிலும் இருந்தது என்பதற்கான ஆதாரங்களாகும்.
இந்தக் காலக் கட்டத்தில் ராமநாதபுரம் அரசர் ஆங்கிலேய அரசுக்குக் கட்டுப்பட்ட குறுநில மன்னராக இருந்தார். இந்தியா விடுதலை பெற்ற பின் இத்தீவு தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1250 சர்வே எண்ணில் கட்டுப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட ராமநாதபுரம் மாவட்ட ஆவணத் தொகுப்பேட்டிலும் (கெசட்டிலும்) இவ்விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு, தமிழக அரசு மூன்று வாரங்களில் விளக்கம் தர வேண்டுமென்று அறிக்கை அனுப்பப்பட்டுள்ள நிலையில், மேலே குறிப்பிட்டுள்ள வரலாற்றுப் பூர்வமான ஆதாரங்களையும், மேலும் தமிழக அரசிடம் இருக்கும் கூடுதல் ஆவணங்களையும் இணைத்து உச்ச நீதிமன்றத்தில் உரிய முறையில் தாக்கல் செய்வது மிக மிக அவசியமாகும்.
1974ஆம் ஆண்டு இந்திய அரசு. இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட காலக் கட்டத்திலேயே, மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று, 21-8-1974 அன்று திமுக ஆட்சியில், நான் முதலமைச்சராக இருந்த போதே தமிழகச் சட்டப் பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1974ஆம் ஆண்டு இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட போது நாடாளுமன்றத்தில் அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
23-7-1974 அன்று அந்த ஒப்பந்தத்தின் நகலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுவரண்சிங் தாக்கல் செய்த போது, தமிழகத்துக்குச் சொந்தமான கச்சதீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தி.மு.கவின் சார்பில் இரா. செழியன் நாடாளுமன்றத்தில் கூறினார்.
பார்வர்டு பிளாக் கட்சியின் உறுப்பினராக இருந்த அருமை நண்பர் மூக்கையா தேவர், “எனது இராமநாதபுரம் தொகுதிக்குள் அடங்கியுள்ள இத்தீவை இலங்கைக்கு வழங்கியது அரசியல் சட்டத்துக்கு முரணானது” என்றார்.
“இலங்கையின் நட்பை பெறுவதற்காகவே இரகசிய பேரம் நடத்தி கச்சதீவைத் தானமாக வழங்கியுள்ளது” என்று வாஜ்பாய் பேசினார். இப்படிப்பட்ட கருத்துக்களை மாநிலங்களவையில் திமுக சார்பில் எஸ்.எஸ். மாரிசாமி, சோஷலிஸ்ட் கட்சி சார்பில் ராஜ்நாராயண், முஸ்லீம் லீக் சார்பில் நண்பர் அப்துல் சமது ஆகியோர் தெரிவித்தனர்.
இதையெல்லாம் முற்றிலும் மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தற்போது தாக்கல் செய்துள்ள பிரமாணத்தில் உண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் டெல்லிக்கு வந்த இலங்கை அமைச்சர் பீரிஸ், கச்சதீவு முடிந்து போன அத்தியாயம் என்று வரம்பு கடந்து பேசியதற்கு மத்திய அரசு “பின்பாட்டு” பாடுவதைப் போல, இந்தப் பிரமாண வாக்குமூலத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
கச்சதீவு, இராமநாதபுரம் சேதுபதி அரசருக்குச் சொந்தமானது. இந்தத் தீவை வணிகர்களான ஜனாப் முகமது காதர் மரக்காயருக்கும், முத்துசாமி பிள்ளைக்கும் அரசர் சேதுபதி ஐந்தாண்டுகளுக்குக் குத்தகைக்கு வழங்கியிருந்தார். இதற்கான ஆவணம், இராமநாதபுரம், துணை பதிவாளர் அலுவலக ஆவண எண். 510/570, தேதி 2-7-1980. 1947இல் குறுநில மன்னர் ஒழிப்புச் சட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு சொந்தமானது. கச்சதீவு இந்தியாவிற்குச் சொந்தம் என்பதற்கு பல ஆவணங்கள் உள்ளன.
இந்த ஆவவணங்களையும், அடிப்படை ஆதாரங்களையும் இந்திய அரசியல் சட்ட நெறிமுறைகளையும் ஆழமாகப் பரிசீலனை செய்து உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கிடும் என்று நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், “கச்சதீவு இலங்கை வரம்புக்குள் உள்ளது” என்று மத்திய அரசு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்திருப்பது, தமிழகத்திற்குப் பேரிடர் போன்றது.
இந்தப் பிரச்சினையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்திடக் கூடியது. மத்திய அரசின் இந்த முடிவு கடும் கண்டனத்திற்குரியதாகும். எனினும், கச்சதீவுப் பிரச்சினையில் தமிழகத்தின் பக்கம் நீதியும் நேர்மையும் நிரம்ப இருப்பதால், நமது உரிமையை உச்ச நீதிமன்றம் நிலைநாட்டிடும் என்று நம்புவோம் என்று கூறியுள்ளார்.

இலங்கையின் கோர முகம் அம்பலம்! இந்தியாவின் முகமூடி கிழிப்பு: ராமதாஸ்


இலங்கையின் கோர முகத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அம்பலப்படுத்தியுள்ளதாக பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து கடந்த ஒருவாரமாக அந்நாட்டில் விசாரணை நடத்திய ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, அங்கு நிலவும் சூழல் குறித்து அதிர்ச்சி நிறைந்த உண்மைகளை கூறியுள்ளார். அதன் மூலம் இலங்கையின் கோர முகம் அம்பலமாகியுள்ளது.
இலங்கயில் போர் வேண்டுமானால் முடிவடைந்திருக்கலாம், ஆனால் அங்கு ஜனநாயகம் தொடர்ந்து நசுக்கப்படுகிறது, சட்டத்தின் ஆட்சி அழிந்து வருகிறது என்று நவநீதம் பிள்ளை கூறியுள்ளார்.
இலங்கை சர்வாதிகார ஆட்சி முறையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இலங்கையின் நிலை குறித்து என்னிடம் புகார் கூறிய மனித உரிமை ஆர்வலர்களும், பொதுமக்களும் இராணுவத்தினரால் மிரட்டப்பட்டிருக்கிறார்கள், இலங்கையில் நான் இருக்கும்போதே இந்த அளவுக்கு மனித உரிமை மீறல்கள் நடந்தி ருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குற்றப்பத்திரிகை வாசித்திருக்கிறார்.
மேலும், இலங்கைப் போரின் போது அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டது, விடுதலைப் புலிகளுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் விசாரணையின்றி மரண தண்டனை அளிக்கப்பட்டது,
வெள்ளை வானில் ஆட்கள் கடத்தப்பட்டது, இராணுவமயமாக்கலால் தமிழ் பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, பத்திரிகையாளர்களுக்கு எதிரான அடக்குமுறை ஆகிய மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் போர் முடிவடைந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அங்கு நிலைமை சீரடைவதற்கு மாறாக சீரழிந்து வருகிறது என்பது நவநீதம் பிள்ளையின் அறிக்கையின் மூலமாக உறுதியாகியிருக்கிறது.
இலங்கையில் நிலவும் மிக மோசமான மனித உரிமைச் சூழல் குறித்து சான்றளிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையரை விட சிறந்த ஒருவர் இருக்க முடியாது. போருக்குப் பிறகு இலங்கையில் நிலைமை மேம்பட்டு வருவதாக கூறி வந்த இந்திய வெளியுறவுத் துறையினரின் முகமூடி இதன் மூலம் கிழிக்கப்பட்டிருக்கிறது.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது நவநீதம் பிள்ளை முன்வைத்த குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ள குற்றச்சாட்டுக்கள் மிகவும் கடுமையானவை. இதற்கான ஆதாரங்கள் தெளிவாக இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கு இவற்றைவிட வலிமையான ஆதாரங்கள் தேவையில்லை. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து அந்நாட்டு அரசே விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் மூலம் இரண்டு ஆண்டுகள் காலக்கெடு கொடுத்த பிறகும் ராஜபக்ஷ அரசு இன்றுவரை ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை.
எனவே, இலங்கை அரசை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபடுவதை இந்தியா கைவிட வேண்டும். மாறாக, இலங்கை மீது பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை அடுத்த ஆண்டு பெப்ரவரி- மார்ச் மாதங்களில் கூடும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இந்தியா கொண்டுவர வேண்டும்.
அதுமட்டுமின்றி, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட ராஜபக்ஷ அரசை கண்டிக்கும் வகையில் பொதுநலவாய அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கவும், கொழும்பில் வரும் நவம்பர் மாதம் நடைபெற விருக்கும் பொதுநலவாய ஆட்சித் தலைவர்கள் மாநாட்டை வேறு நாட்டிற்கு மாற்றவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இன,மதம் எதுவாக இருந்தாலும் சகவாழ்வு முக்கியமானது: வாகரையில் ஜனாதிபதி மகிந்த


ஒரு நாட்டிற்குள் வாழும் போது இனம், மதம் என்பன எதுவாக இருந்தாலும் அமைதியும் சகவாழ்வுமே முக்கியமானது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் சுனாமி பேரலையால் சேதமடைந்த புனித பேதுருவானவரின் தேவாலயத் திறப்பு விழாவும், திருப்பலி நிகழ்வும் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பசீர் சேகுதாவூத், பிரதியமைச்சர்களான விநாயகமூர்த்தி முரளிதரன், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் ஜயவிக்கிரம, வாகரை பிரதேச செயலாளர் செல்வி. ஆர். இராகுலநாயகி, மறைமாவட்ட ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மீள்நிர்மானிக்கப்பட்ட நிலையில் இவ்தேவாலயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி,
சகலரும் ஒத்துழைப்புடன் வாழ்வதன் மூலம் சுதந்திரம் மற்றும் அமைதியான நாட்டை கட்டியெழுப்ப முடியும்.
வைராக்கியம், குரோத மனபான்மைகளை கைவிட்டு, அமைதியாகவும் ஐக்கியமாகவும் சகவாழ்வுடன் வாழவேண்டும் என்று கடந்த காலத்தில் சகல மதத் தலைவர்களுக்கு போதித்தவை அன்றைய காலத்தை விட இன்று மிகவும் முக்கியமானதாக உள்ளது.
மூன்று தசாப்தங்களாக போரினால் பாதிக்கப்பட்டிருந்த வாகரை பிரதேசம் துரிதமான முன்னேற்றத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றது.
வளர்ச்சியடைந்து வரும் நாட்டில் எதிர்கால சந்ததியினரை நல்வழிக்கு கொண்டு வரவேண்டிய பொறுப்பு சகல மதத் தலைவர்களுக்கு இருக்கின்றது.
தற்போதைய அரசாங்கம் சகல மதங்களை சரிநிகர் சமமாக கருதும் அரசாங்கம். சகல மதங்களை சர்ந்தவர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.