Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Thursday, November 15, 2012

தமிழ் இனக்கொலையை விசாரிக்க அனைத்து நாடுகள் குழுவை நியமிக்க வேண்டும் - வைகோ

இலட்சக்கணக்கன ஈழத்தமிழர்களை ஈவு இரக்கமின்றிக் கோரமாகப் படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசுக்கு முப்படை ஆயுதங்களையும், வழங்கி, மற்ற அணு ஆயுத வல்லரசுகளிடம் ஆயுதம் வாங்குவதவதற்கும் சிங்கள அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைத் தந்து தமிழ் இன அழிப்பு யுத்தத்தை நடத்திய இந்திய அரசு, நடைபெற்ற தமிழ் இனக்கொலையின் கூட்டுக் குற்றவாளியாகும்.

குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தோர், களத்தில் ஆயுதம் ஏந்தாதோர் என அனைத்துத் தமிழர்களையும் சிங்கள அரசு, உலகில் தடைசெய்யப்பட்ட குண்டுகளை வீசி 2008 ஆம் ஆண்டில் தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து படுகொலையை நடத்தியபோது அதைத் தடுப்பதற்கோ வெளி உலகத்திற்கு உண்மை கொண்டு வருவதற்கோ, ஐக்கிய நாடுகள் மன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிங்கள அரசின் மிரட்டுலுக்குப் பயந்து ஐ.நா. மன்ற அதிகாரிகள் ஈழத்தமிழர்களைக் காக்கும் கடமையைச் செய்யாமல் இலங்கையை விட்டு வெளியேறியது மன்னிக்கமுடியாத குற்றமாகும்.

‘எங்களை இந்த அழிவில் தவிக்க விட்டுப் போய் விடாதீர்கள்’ என்று தமிழர்கள் காலில் விழுந்து மன்றாடி இருக்கிறார்கள். மனித நேயத்தைக் காற்றில் பறக்கவிட்டு ஐ.நா. அதிகாரிகள் வெளியேறியது மிகப் பெரிய தவறு என்று அப்போது வெளியேற மறுத்த ஐ.நா அதிகாரி பென்சமின் டிக்ஸ் கூறியுள்ளார்.

இலங்கைத் தீவில் ஐ.நா. மன்றத்தின் நடவடிக்கைகளை உள் ஆய்வு செய்த அதிகாரி சார்லஸ் பெட்ரி இறுதியாக ஐ.நா.வுக்குத் தந்த அறிக்கையில் முக்கியமான 30 பக்கங்கள் நீக்கப்பட்டதாக வந்த செய்தி அதிர்ச்சி தருகிறது. 2009 மே மாதம் வரையில் ஈழத்தமிழர்களைக் காக்கத் தவறிய ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான் கீ மூன், 2010 ஜனவரி டப்ளின் தீர்ப்பாய அறிக்கைக்குப் பின்னரே - மனித உரிமையில் கவலை கொண்டவர்கள் பல நாடுகளில் இருந்து தங்கள் குமுறலைக் கொட்டிய பிறகே - 2010 ஜூன் 22 ஆம் தேதி இலங்கைத் தீவில் நடந்தவற்றை அறிய மார்சுகி தருஸ்மான், ஸ்டீவன் ராட்னர், யாஸ்மின் சூக்கா ஆகிய மூவர் குழுவை நியமித்தார். 2008 செப்டம்பரில் இருந்து 2009 மே 19 வரை நடைபெற்ற சம்பவங்களை அம்மூவரும் ஆய்வு செய்தனர்.

இந்த அறிவிப்புக்கு சிங்கள அதிபர் ராஜபக்சே, சக அமைச்சர் ஒருவரின் தலைமையில் பான் கீ மூனை இழிவுபடுத்தி போராட்டம் நடத்தினான். ஐ.நா. கொடிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. மார்சுகி தருஸ்மான் தலைமையிலான குழு நடத்திய ஆய்வும், தந்த அறிக்கையும், உலகெங்கிலும் மனித நேயம் உள்ளோரை மனம் பதறச் செய்தது. அந்த அறிக்கையிலேயே 1 லட்சத்து 37 ஆயிரம் தமிழர்கள் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டனர் என்ற தகவலை ஊன்றி படித்தால் அறியலாம். ஆனால் உண்மையில் 3 இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

இலண்டன் சேனல் 4 வெளியிட்ட இசைப்ரியா கொலை செய்தியும், எட்டு ஈழத்தமிழ் இளைஞர்கள் நிர்வாணமாகக் கண்களும் கைகளும் கட்டி இழுத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியும் மூவர் அறிக்கையில் இடம்பெற்றன. ஈழத்தமிழர்களின் படுகொலை குறித்து அனைத்து உண்மைகளையும் அறிய சுதந்திரமான ஒரு விசாரணை குழு அனைத்து நாடுகள் சார்பில் அமைக்கப்பட வேண்டுமென்று மார்சுகி தருஸ்மான் மூவர் குழுவே ஐ.நா பொதுச்செயலாளருக்கு அப்போதே பரிந்துரை செய்தது.

நெஞ்சை நடுங்க வைக்கும் ஈழத்தமிழர்கள் படுகொலை குறித்த உண்மைகள் ஓரளவு வெளிவந்துள்ளன. 2009 ஆம் ஆண்டு ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் சிங்கள அரசைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றிய படுபாதகச் செயலை இந்திய அரசும், கியூபா அரசும் முன்னின்று நடத்தின. ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்குப் பொருளாதார தடை விதித்த போது சிங்கள அதிபர் ராஜ பக்சேவை இந்தியாவுக்கு இரு முறை அழைத்து வந்து வரவேற்பு கொடுத்து உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவ முயன்றது காங்கிரஸ் தலைமையிலான இந்தியஅரசு.

உண்மைகளை முன்கூட்டி அறிகின்ற மதி நுட்பத்தோடு தியாக தீபம் முத்துக்குமார் தனது மரணசாசனத்தில் ஈழத்தமிழர் படுகொலைக்கு உடந்தையாக செயல்பட்ட துரோகிகளை அடையாளம் காட்டியதோடு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் மீதும் சரியாக குற்றச்சாட்டை வைத்தார். ஈழத்தமிழரைப் படுகொலை செய்த சிங்கள அரசுக்கு உடந்தையாக செயல்பட்டோரும், தமிழ்நாட்டுத் தமிழர்களை வஞ்சகமாக ஏமாற்றியோரும் உள்ளிட்ட துரோகிகள் எல்லாம் ஈழத்தமிழர் உரிமைக்குக் குரல் கொடுப்பதாகச் சொல்லும் மோசடி நாடகத்தின் முகத்திரையைக் காலம் கிழித்து எறியும்.

உலகில் ஈழத்தமிழர்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்களே இல்லையா? அவர்கள் நாதியற்றவர்களா? நானிலத்தில் அவர்களின் அபயக்குரல் எங்கும் கேட்கவில்லையா? என்ற கேள்விகள் உலகெங்கிலும் மனசாட்சி உள்ள மனிதர்களை உலுக்க ஆரம்பித்து விட்டன. எனவே சிங்களவர் நடத்திய இனக்கொலையைத் தடுக்கத் தவறிய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஈழத்தமிழருக்கு இழைக்கப்பட்ட கற்பனை செய்ய முடியாத கொடுந்துயரம் குறித்து முழு உண்மையைக் கண்டறியவும், இனகொலை புரிந்த ராஜ பக்சே கூட்டத்தைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தவும் ஒரு விசாரணை குழுவை முதலில் அனைத்து நாடுகள் அமைக்க முன்வர வேண்டும். இந்த நிலையை உருவாக்க உலகெங்கும் உள்ள ஈழத்தமிழ் சகோதர்களும், தமிழ் இன உணர்வாளர்களும், இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் குரல் எழுப்ப வேண்டுகிறேன்.

‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
15.11.2012 மறுமலர்ச்சி தி.மு.க

ஐ.நா.சபை சிறீலங்காவில் விட்ட தவறுகளை, எதிர்வரும் காலங்களில் மீண்டும் விடக்கூடாது - கொலம் மெக்ரே

ஐ.நா.சபை சிறீலங்காவில் விட்ட தவறுகளை, எதிர்வரும் காலங்களில் மீண்டும் விடக்கூடாது என்ற உறுதியை வழங்க வேண்டும். சிறீலங்கா அரசு திட்டமிட்டே போரை நடத்தியது. இதனால் போர் வலயத்தில் இடம்பெற்ற துன்பியல் சம்பவங்கள் வெளிவராது போயின என்று சனல் 4 செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை சிறீலங்கா அரசு ஆரம்பிக்கும் போது, இந்த செயற்பாடுகளுக்கு சாட்சியங்களை இல்லாது செய்யும் பணிகளையும் திட்டமிட்டு நடத்தியது. அதன் அடிப்படையிலேயே வடக்கில் இருந்து ஊடகங்கள் முதற்கட்டமாக வெளியேற்றப்பட்டன.

சர்வதேச ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டன. அதன்பின்னர் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் வெளியேற்றப்பட்டன.

இந்த நிலையிலேயே ஐக்கிய நாடுகள் சபையும் அங்கிருந்து விலகிக் கொண்டது. இதன்மூலம் இறுதிப்போரின்போது பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் வெளிவராது போயின என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் நடைபெறாதிருக்கவும், ஐக்கிய நாடுகள் மீதான நம்பிக்கை பேணப்படவும், ஐக்கிய நாடுகள் சபை அதற்கு ஈடான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கேட்டுள்ளார்.

Wednesday, November 07, 2012

எமக்கு வீர முகவரியை தந்த போராளிகள் பற்றி எவரும் சிந்திப்பதாக தெரியவில்லை,

இனப்படுகொலை முடிந்து மூன்றாண்டுகள் ஓடிவிட்டது. இருந்தும் பல மட்டங்களில் இன்னும் திருப்தி ஏற்பட்டதாகத்தெரியவில்லை.
செத்தவர்கள், தப்பி ஓடியவர்கள் போக, மீதமுள்ளவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஏதாவது வழி தேடவேண்டும். ஏதாவது மாற்றத்தை சர்வதேசம் பஞ்சாயத்து செய்து ஈட்டித்தருமா என்று "போராடியவர்கள்" வெளி உலகத்தில் நடப்பவை தெரியாமல் ஆகாயத்தை பார்த்து காத்திருக்கின்றனர். அதேநேரம் உள்நாட்டிலும் வெளி மட்டங்களிலும் தேர்வுசெய்யப்பட்ட உளவியல்ரீதியான வன்மங்களும் தலை கழுவி கவிழ்க்கும் தந்தரங்களும் சகல மட்டங்களிலும் தலைவிரித்தாடுகிறது.

காட்டுமிராண்டிகளின் தன்னிச்சையான தலையீடுகளால் சர்வதேச பஞ்சாயத்துக்கூட திசைதிருப்பப்பட்டு வாய்தா தொடர்ந்து வம்பர்களின் கை ஓங்கிவிடும்மோ என்று அச்சப்படும்வகையில் அனைத்தும் திட்டமிட்டு திசைதிருப்பப்பட்டு பயணிப்பதாகவே சம்பவங்கள் உணரவைக்கின்றன. இந்த பஞ்சாயத்து மற்றும் கபட நாடகங்கள் முடிக்கப்படும் தறுவாயில் போராளிகள் ஓர் இருவராவது மிஞ்சுவார்களா என்ற கேள்விக்கு எவரிடமும் விடையில்லை. போராளிகள் மறக்கப்பட்டுவிட்டனரோ என்ற பெரும் கவலையும் எழும்பாமலில்லை. முடிந்தவரை அனைத்து தளங்களிலும் ஏமாற்றுவேலை உளவியல் ரீதியாக திட்டமிடப்படுகின்றன. இது ஏன் கேட்பதற்கு ஆள் இல்லை என்ற இழக்காரமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

மக்கள் பரம்பலை குறைப்பதற்க்காக மேற்கொள்ளும் ஸ்ரீலங்காவின் முதலாவது வேலைத்திட்டம் இராணுவ அடர்த்திமூலமும், சிங்கள குடியேற்றங்கள் மூலமும் செய்து முடிக்கப்பட்டுவிட்டது. அதற்கு தமிழ் அரசியற் கட்சிகளும், இந்திய கொள்கை வகுப்பாளர்களும், ஸ்ரீலங்காவின் உயர் அரச அதிகாரிகளும் அனைத்து ஆதரவையும் வழங்கி நியாயப்படுத்தி விளம்பரப்படுத்துகின்றனர்.

தடை முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளில் கொல்லப்பட்டவர்கள், சித்தசுவாதீனமாக்கப்பட்டவர்கள் போக மீதமுள்ளவர்களை உள ரீதியாக சித்திரவதை செய்து சிதைத்து தலை கழுவி நாடு கடத்தும் முயற்சி அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. வேலைவாய்ப்பு என்ற பெயரில் கண்காணாத அரபி தேசங்களுக்கு நாடு கடத்தி ஒருவருடன் ஒருவர் தொடர்பாடலை தவிர்த்து தனிமைப்படுத்தும் நோக்கமும் திட்டமிடப்பட்டிருக்கிறது, இத்திட்டத்தின்மூலம் நாட்டில் ஆண்களை இல்லாமல் செய்யும் சூழ்ச்சியும் உளவியல் ரீதியாக வக்கிர நோக்கத்துடன் வேகமாக நடைபெறுகிறது. இத்திட்டம் ஓரளவு வெற்றிபெறும் சாத்தியமும் இருப்பதாகவே உணரக்கூடியதாக உள்ளது. . தொடர் இராணுவ கண்காணிப்பு புனர்வாழ்வு என்றபெயரில் கொத்தடிமையாக இருக்காமல் எங்காவது இராணுவ பிரசன்னம் இல்லாத இடத்துக்கு சென்றுவிடலாம் என்ற வெறுப்பு மனநிலைக்கு போராளிகள் வருவதற்கு சூழல்கள் வழிவகுக்கும் என்றே நம்பலாம்.

தீர்வுத்திட்டம் ஒன்றை ஒருபோதும் கொடுக்க விரும்பாத சிங்கள இனவாதிகள், போராளிகளை தன்னிச்சையாக வெளியே விட்டுவிட்டால் அமைப்பு ரீதியாக மீண்டும் ஒன்றுகூடிவிடுவார்கள் என்ற அச்சமும், அரசியல் தஞ்சம் கிடைக்கக்கூடிய நாடுகளுக்கு சென்றடைந்து போர்க்குற்ற வாக்குமூலங்களை கொடுத்து சர்வதேச அழுத்தத்துக்கு ஆளாக்கிவிடுவார்கள் என்ற அச்சமும் சேர்ந்து, போராளிகளை தனிமைப்படுத்தி கண்காணாமல் அரபு தேசங்களுக்கு கிரையம் செய்யும் திட்டமும் உளவியல் அடிப்படையில் வகுக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி நமது பெரியவர் சம்பந்தன் ஐயா அறிந்தாரோ என்னவோ யாமறியோம்.

2009 ம் ஆண்டிலிருந்து கணிசமான மக்கள் கடுமையான கடல்ப்பயணத்தின் ஆபத்தை பொருட்படுத்தாமல் அவுஸ்திரேலியாவை நோக்கி புலம்பெயர்ந்து படையெடுக்கத்தொடங்கியிருந்தனர், ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவும் அகதிகளுக்கு ஓரளவு ஆதரவாக நடந்துகொண்டிருந்தது. அந்த நோக்கத்தையும் சிதைக்கும்வண்ணம் ஸ்ரீலங்கா அரசு பொய் குடியேற்றவாசிகளை திட்டமிட்டு அவுஸ்திரேலியாவுக்குள் அனுப்பி உண்மையான அகதிகளுக்கும் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கிடைக்காதவண்ணம் பல சதிகளை செய்து வருகிறது. அச் சதித்திட்டத்தில் ஜனாதிபதி மஹிந்தவின் மகன் நாமல் ராஜபக்க்ஷவும் கோத்தபயவும் ஸ்ரீலங்கா புலனாய்வுத்துறை, மற்றும் கடற்படையுடன் இணைந்து செயற்பட்டதாக அறியப்பட்டது, அதுபற்றிய செய்திகள் பல பத்திரிகை ஊடகங்களில் வெளிவந்தன.

இனத்துவேஷம் காரணமாக சிங்கள அரசு அனைத்து கீழ்மட்டமான உத்திகளையும் கையாளுகிறதென்று பார்த்தால். தமிழ்நாட்டு சில அரசியல் கட்சிகளும், சில பத்திரிகைகளும் தொடர்ந்து விஷமம் செய்துவருகின்றன. அதில் உச்சக்கட்டமாக த ஹிந்து, தினமலர், ஆகிய பத்திரிகைகள் ஆரம்பந்தொட்டே வெளிப்படையாக நஞ்சை கக்கி வந்திருக்கின்றன, திமுகவின் கூட்டாளி பத்திரிகையான நக்கீரன் நல்லவன் போல நடித்து புனைக்கதைகளை வெளியிட்டு கருணாநிதியின் அதே தந்திர விஷமம் செய்து பணமீட்டியும் வந்தது. ஆனந்தவிகடன் என்ற பத்திரிகை வன்மத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் அவ்வப்போது சில அவதூறு செய்திகளை பூசி மெழுகி பிரசுரித்து வந்திருந்தாலும், இன்றளவில் ஆனந்தவிகடனின் முகமூடியும் கழற்றப்பட்டு சுயரூபம் வெளிவந்திருக்கிறது.

"நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!" என்ற தலைப்பில் வக்கிர உணர்வுடன் ஆனந்தவிகடனில் எழுதப்பட்ட கட்டுரை காழ்ப்புணற்சியில் திட்டமிடப்பட்டு போராட்டத்தை கொச்சைப்படுத்தி சேறடிப்பதற்கு என்று புனையப்பட்ட ஒன்று என்பது அக்கட்டுரை எழுதிய நேர்த்தியும் வஞ்சகமான கால்வாரல் உத்தியும் மிதந்து நிற்கிறது .

அதிகாரங்களால் செய்ய முடியாத வஞ்சகத்தின் எச்சங்களை நிறைவுசெய்யும் நோக்கோடு வஞ்சகமும் வக்கிரமும், எழுத்துமூலம் வடிப்பட்டிருக்கிறது. தமிழக மக்களின் போராட்ட ஆதரவு உணர்வுகளை சிதைத்து நீர்த்துப்போகச்செய்து இந்தியாவின் கொள்கையை நியாயப்படுத்தும் உத்தியும். ஆனந்தவிகடன் மூலம் நரித்தனமாக சரிக்கட்டப்பட்டிருக்கிறது.

அதிகாரவர்க்கம், புலனாய்வாளர்கள், கொள்கைவகுப்பாளர்கள் இப்படி ஒரு கீழ்த்தரமான உத்தியை கையாள நினைத்திருந்தாலும் உள்ளூர ஆனந்தவிகடன் பத்திரிகைக்கும் போராட்டத்தையும் போராளிகளையும் கொச்சைப்படுத்துவதில் உடன்பாடு குறைவில்லாமலே இருந்திருக்கிறது. வியாபாரத்துக்காக தமிழக பத்திரிகைகள் இப்படியான செய்திகளை இன்று மட்டுமல்ல 2009ன் பின் பல சமயங்களில் நானும்கூட என்னும் உத்தியில் உளவியல் கால்வாரலை செய்தே வந்திருக்கின்றன, 2008, 2009 களில் நக்கீரன் ஒரு ஈழப்பத்திரிகைபோலவே தன்னிச்சையாக செயற்பட்டு கற்பனை கதைகள் பலவற்றை வெளியிட்டு வந்தது.

ஆனந்தவிகடன் என்ற பத்திரிகை கீழ்த்தரமாக இப்படி எழுதி வயிறு வளர்க்கவேண்டுமானால் நேரடியாக ஸீ தமிழ் தொலைக்காட்சியுடன் தொடர்புகொண்டு "சொல்லுவதெல்லாம் உண்மை" நிகழ்ச்சி தயாரிப்பாளர்களை அணுகினால் அந் நிகழ்ச்சியில் தினம் தினம் பகிரங்கப்படுத்தும் நிறைய பாலிய வக்கிரங்கள் மிருகத்தனமான சமூகச்சீர்கேடுகளை கூடிய ஆதாரங்கள் படங்களுடன் தினமும் வெளியிடலாம். செய்திக்கும் பஞ்சமில்லை, இந்தியாவில் நடக்காத பாலியல் வக்கிரங்கள் சமூகச்சீர்கேடுகளா வேறு எங்கும் நடந்துவிட்டன.

ஒருவேளை அப்டித்தான் ஒரு போராளிக்கு மிருகத்தனமான இராணுவத்தால் சீரழிக்கப்பட்டு ஒரு துர் நிலை ஏற்பட்டிருந்தாலும் நூற்றாண்டு பாரம்பரிய கொண்ட பத்திரிகை என்று தம்பட்டமடிக்கும் விகடன் ஒரு விடுதலை பெண் போராளிபால் அணுகும் முறை இதுவல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

வேற்று நாட்டில் வேற்று இனத்தவர்களால் நடத்தப்படும் சனல் 4, நடந்துகொண்ட நாகரீகத்தை இவர்கள் எப்போ கற்றுக்கொள்ளப்போகிறார்கள். ஈழத்தமிழர்களுக்கு எதிரி சிங்களவன் மட்டுமல்ல தமிழ் நாட்டில் சிங்களவனை விட கொடியவர்கள் இருக்கின்றார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று, அந்த பத்திரிகையின் பெயரை எழுதவே அருவருப்பாக இருக்கிறது. அனுதாபப்பட்டு கழிவிரக்கத்தை வெளியிடுவதுபோல அப்பட்டமான காழ்ப்புணர்ச்சியாகவே அந்த கட்டுரை நெஞ்சத்தில் அனலை கொட்டியிருக்கிறது.

ஈழப்போராட்டத்திற்கு தற்போதய தோல்வி என்பது நிரந்தரமானதல்ல. நாம் பலமாக இருந்தபோது இந்த வஞ்சகர்கூட்டம் எப்படி நடந்தது என்பதை நினைத்துப்பார்க்க துன்பத்திலும் சிரிப்பு வருகிறது.

ஒன்றை மட்டும் இந்த வஞ்சகர்களுக்கு தெரிவிக்கமுடியும். ஈழம் ஒன்று ஸ்ரீலங்காவிலிருந்து பிரியும்வரை களம் ஒன்று இருந்துகொண்டேயிருக்கும். என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள முடியும்.

எந்த வடிவத்திலும் துரோகிகள் எம்முடன் கூட இருந்து செயற்படுவர் என்பதை தலைவர் எம் மக்களுக்கு மிகச்சரியாகவே புரியவும் வைத்திருக்கிறார்.

30 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் போராட்டம் நடந்து வந்திருக்கிறது, தாயகத்திலிருந்த மக்கள் மட்டுமல்லாது பல்லாயிரம் மைல்களுக்கப்பால் புலம்பெயர் தேசங்களில் சுதந்திரமாக வாழும் இரண்டு மில்லியன் வரையினாலான மக்கள் ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக விடுதலை நோக்கி பயணப்பட்டுள்ளனர் இங்கு எவரும் பதவிக்காகவோ பட்டத்திற்காகவோ போராட்டத்திற்கு சாமரம் வீசி நிற்கவில்லை. உணர்வு ரீதியாக தலைவனின் கொள்கையை ஏற்று பயணித்திருக்கின்றனர். பொய் பிரச்சாரத்தை அள்ளிவிட்டு ஐந்து வருட தேர்தல் முறைமையில் தேர்ந்தெடுக்கும் ஒரு அட்டைக்கத்தி கலாச்சாரம் ஈழத்தில் நிகழ்ந்திருக்கவில்லை.

ஒரு காலத்தில் சினிமா பாடலில்க்கூட விடுதலை புலிகளை, போராட்டத்தை உருவகப்படுத்தி கருத்துசொல்ல ஒருவரும் விரும்பியிருக்கவில்லை, அப்படித்தான் தலைவரின் கொள்கை கோட்பாடுகள் அமைந்திருந்தன. இது ஒன்றும் கருணாநிதியின் அடுக்குமொழி வசனத்தில் வளர்ந்த இயக்கமல்ல. உணர்விலும் சத்தியத்திலும் உறுதியிலும் வளர்க்கப்பட்ட பேரியக்கம், தலைவனின் தலையாய பண்புகளும் அதைத்தான் ஒவ்வொரு மனிதனிடமும் குடிகொண்டிருக்கிறது.

அப் பத்திரிகையின் கட்டுரையில் பின்னணியில் நிச்சியம் அரசியல் பின்னணியுடன் இந்திய புலனாய்வுத்துறையான றோவின் திசை திருப்பும் வஞ்சகமும் ஒருசேர இருப்பதை உணரக்கூடியதாக உள்ளது, றோவின் தலையீடு ஏற்கெனவே அறியப்பட்ட அனுபவம் போராட்டத்துக்கு உண்டு. விகடனுக்கு சோரம்போனாலும் பணம் பிரதானமாக தெரிந்திருக்கிறது..

அடுத்து அழையா விருந்தாளி முத்துவேல் கருணாநிதியின் நகைச்சுவைப்பகுதிக்கு வரவேண்டிய தேவை இருக்கிறது.

ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக, "டெசோ' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், தி.மு.க., கருத்துக்கள் அடங்கிய ஆவணத்தை, ஐ.நா., துணை பொதுசெயலர் மற்றும் ஐ.நா., மனித உரிமை ஆணையத்திடம், கட்சியின் பொருளாளர் ஸ்ராலின், பார்லிமென்ட் குழு தலைவர், டி.ஆர்.பாலு ஆகியோர் ஒப்படைத்துள்ளனர்.

இதற்கு முன், 1961ல், தூத்துக்குடி தி.மு.க., பொதுக்குழுவில், ஈழத் தமிழர்களுக்காக நிறைவேற்றப்பட்டத் தீர்மானம், 1985ல் நடத்தப்பட்ட, ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தின் நகல்கள் ஆகியவற்றை, ஐ.நா., சபைக்கு அனுப்பியுள்ளோம். ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றிய புகைப்படங்கள் அடங்கிய, "சிடி'யையும் ஐ.நா., சபையில் அளித்துள்ளோம். ஈழத் தமிழர்களின் வாழ்வில் புதிய ஒளியை இம்முயற்சி ஏற்படுத்தும் என, நம்புகிறோம்.

ஐ.நா., சபையிடம் ஒப்படைத்துள்ள ஆவணத்தில், "ஈழத் தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தி, அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப மறுவாழ்வை முடிவு செய்ய வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளோம். பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு, சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்கவும் நடவடிக்கை எடுப்போம்.

"டெசோ' மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள் பற்றி, மத்திய அரசுக்கு நன்கு தெரியும். எனவே, ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்கு, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை, "டெசோ' மாநாட்டுத் தீர்மானத்தில் இடம்பெறவில்லை.ஆனால், ஈழத் தமிழர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, அவர்கள் மத்தியில் நடத்தப்படும் பொது வாக்கெடுப்பின் அடிப்படையில், தனி நாடு உருவாக்கலாம். பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை, லண்டனில் நடைபெறும் "இலங்கை தமிழர்கள் மாநாட்டிலும்" வலியுறுத்துவோம்.இவ்வாறு, கருணாநிதி கூறினார்.

கருணாநிதி குறிப்பிடும் கருத்து மட்டும் எவராலும் புறக்கணிக்க முடியாதது என்பது உண்மையே, நடைமுறையும் வேறு விதமாக இல்லை என்பதும் நூறு வீதம் ஏற்றுக்கொள்ளக்கூடியாவையே. ஆனால்……………... சொல்லியவர் யார் என்று பார்த்தால் முடிவு எப்படி அமையும் என்பதை ஆராய்ந்து பார்க்கத்தேவையில்லை. இந்த செய்தியை ஈழத்து சிறு குழந்தைகள் கேட்க நேர்ந்தால் உடனடியாக ஓடிச்சென்று bunker க்குள் படுத்துக்கொள்ளும்.

1958,தொடக்கம் 2012 டெசோ வரை பலநூறு தீர்மானங்களை இயற்றியதாக குறிப்பிடும் அவர் ஒரு தீர்மானத்தையாவது திரும்ப ஒருமுறை வாசித்தாவது பார்த்திருப்பாரா என்று பார்த்தால் பூய்ச்சியம்தான் பதிலாக கிடைக்கும். ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதும் 31 நாட்கள் விடுப்பெடுத்து பின் அவர் கையில் எடுப்பது என்னவோ ஈழ அரசியல் பாசம்தான். ஆட்சி கிடைத்துவிட்டால் அவர் என்ன செய்வார் என்பதை 2008, 2009 ம் ஆண்டை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் படுகொலைகளை எண்ணிப்பார்த்தால் அவராது தீர்மானங்களின் ஆழம், வண்டவாளம் நன்கு புரியும்.

கருணாநிதியின் அரசியல் வளர்ச்சியின் மூலவேரே இப்படியான கருத்துக்களை முன்வைத்து தடைதாண்டுவதுதான். அதை கருணாநிதியின் கடந்தகால வழித்தடம் பிசுறின்றி எடுத்துக்காட்டுகிறது. 1961ம் ஆண்டு தமிழர்களுக்காக தூத்துக்குடியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஐம்பது வருடங்கள் கடந்தும் கை துடைக்கவும் உதவியிருக்கவில்லை. ஆனாலும் மூன்று நான்கு இலட்சம்பேர் கொல்லப்பட்டபின்னும் எந்தக்கூச்சமும் இல்லாமல் திமுகவை நியாயப்படுத்துவதற்கு புள்ளி விபரமாக 1961 ஆண்டு 1985 ஆண்டு 2012 டெசோ வரை தடைதாண்டல் நிகழ்ச்சிகள் கூச்சமின்றி ஞாபகப்படுத்தப்படுகிறது. ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றிய புகைப்படங்கள் அடங்கிய, சீடி, குறுந்தகடுகள் ஐநா சபைக்கு அனுப்பியிருப்பதாக குறிப்பிடுகிறார். அந்த சீடி க்களை கருணாநிதி போட்டு பார்த்தாரா என்பது தெரியவில்லை. கருணாநிதியின் கைங்கர்யத்தில் நடந்த அந்த படுகொலை சிடிக்களை கருணாநிது ஒருமுறை போட்டு பார்த்துவிட்டு ஐநாவுக்கு கொடுத்து அனுப்பியிருக்கலாம். அவரது நெஞ்சுக்கு நிம்மதியாக இருந்திருக்கும்.

2009ல் கருணாநிதியை தோலுரிக்கும் விதமாக மக்கள் தொலைக்காட்சியும் பல இணையத்தளங்களும் அந்த சிடிக்களை கருணாநிதிக்கு எதிராக வெளியிட்டு மண் வாரி திட்டி தீர்த்தன, அப்போ காவல்த்துறையை கொண்டு மக்கள் தொலைக்காட்சியை முடக்க முயற்சித்தவர் பகவான் கருணாநிதி, இன்று வெட்கம் குற்ற உணர்வு எதுவும் இல்லாமல் தனது அரசியல் மீட்சிக்காக சிடிக்கள் ஐநா மன்றத்துக்கு அனுப்பியிருப்பதாக வேஷம் போடுகிறார், ஆனால் கருணாநிதி சம்பந்தப்பட்ட அனைத்து போர்க்குற்ற வீடியோ ஆதாரங்களும் சனல் 4 முலமும் வேறு வழிகள் மூலமும் ஏற்கெனவே ஐநா பெற்றுவிட்டது.

2009ல் நாம் தமிழர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மற்றும் வைகோ, நெடுமாறன் அவர்கள் இதுபோன்ற குறுந்தகடுகளை தமிழக மக்களுக்கு வினியோகிக்க முற்பட்டபோது, அவை தனக்கு எதிரானது என்பதை தெரிந்து அனைத்தையும் பறிமுதல் செய்து சீமானை தேசியப்பாதுகாப்புக்கு துரோகமிளைத்தவர் என்று தேசத்துரோகியாக உருவகப்படுத்தி சிறையில் அடைத்தவர் இதே காத்தமுத்து கருணாநிதி.

கருணாநிதியின் டெசோ தீர்மானங்கள் என்ன தாக்கத்தை ஈழத்தமிழர்களுக்கு ஏற்படுத்துகிறதோ இல்லயோ கருணாநிதிக்கும் திமுகவுக்கும் இடையில் இன்று மலைபோல் திரண்டிருக்கும் தடை சற்றேனும் விலகுமென அவர் எதிர்பார்க்கிறார். விளிம்பு நிலையில் இருப்பவர்களும் புதியவர்களும், மறக்கும் தன்மை கொண்டவர்களும் கருணாநிதியின் கண்கட்டு வித்தை விளையாட்டில் ஈர்க்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால் வீழ்ச்சியிலிருந்து மீண்டுவிடலாம் என அவர் திட்டமிட்டு எதிர்பார்க்கிறார். அதுதான் காலாகாலமாக கருணாநிதியின் கவசமாகவும் இருந்து வருகிறது. கருணாநிதி எடுத்துவைத்திருக்கும் டெசோவின் தீர்மானம் ஒன்றும் புதிதானதுமல்ல. Amnesty international, international crisis group, UN Human rights council ஆகிய அமைப்புக்களும் ஐநா சபையும் அதைத்தான் வலியுறுத்துகின்றன.

கருணாநிதி தனது தப்பித்தலுக்காக எதையும் செய்யக்கூடியவர் என்பது ஒருபுறம் இருந்தாலும் அவர் கடைசிகாலத்தில் மனம் மாறிவிட்டாரோ என்ற ஐயுறவும் லூசுத்தனமான பலரை இரண்டும் கெட்டான் மனநிலைக்கு தள்ளி குளப்பியிருக்கிறது. இதுகூட கருணாநிதிக்கு கணிசமான வெற்றியே. தொடர்ந்து கருணாநிதிக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்காவிட்டால் அவர் இதே கொள்கையை (தடைதாண்டல் உத்தியை) இன்னும் கடுமையாக்கி காவடி எடுத்து தொடருவார் அந்த கட்டத்தில் தமிழக அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பது அனைவரும் அறிந்ததே.

ஐநா சபைக்குள் ஒரு கோரிக்கை மனுவை உறுப்பு நாடு அந்தஸ்து அல்லாதோர் நேரிடையாக கொண்டு சேர்ப்பது என்பது சற்று சிரமமான காரியமே.

சாதாரண ஒரு தனிமனிதன் ஒரு மனுவை எழுதி பதிவுத்தபாலில் ஐநாவுக்கு அனுப்பிவைத்தால் அந்தமனுவின் முக்கியத்துவம் பொறுத்து அதற்கான பதிலை ஐநா அந்த மனிதனுக்கு அனுப்பி வைக்கக்கூடும். உறுப்புரிமைகொண்ட ஒரு நாட்டின் அங்கீகாரத்துடன் பதிவுசெய்யப்பட்ட ஒரு வெகுஜன அமைப்பு ஒரு சமூகம் சார்ந்து முக்கியமான ஒரு கோரிக்கையை கையளிக்க விரும்பினால் ஐநா மன்றத்திடம் அனுமதிகேட்டு முறையிடலாம், கூறிப்பிட்ட விடயத்தின் அவசியம் முக்கியத்துவம் பரிசீலிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்படும். அந்தவகையில் ஈழப்பிரச்சினை ஐநாவால் அறியப்பட்ட ஒன்று என்பதால் டெசோ சார்பாக முறைப்பாடு கையளிக்க கேட்கப்பட்ட வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஐநாவின் வரவேற்பு மண்டபத்தில் (information hall) டெசோ தீர்மானம் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

டெசோ தீர்மானம் ஐநாவுக்கு கையளிக்கப்பட்டுவிட்டதால் தீர்மானத்தில் முன்மொழியப்பட்ட விடயங்களை ஐநா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும் என்றோ குறிப்பிட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றோ எந்த விதியும் இல்லை. டெசோவின் தீர்மானங்கள் இந்தியாவின் ஒப்புதலுடன் அதற்கான பாதையூடாக ஐநாவை சென்றடைந்தால் அந்த தீர்மானத்துக்கு இராசதந்திர அந்தஸ்து கிடைக்கும். இந்தியாவில் உள்ள ஒரு அமைப்பு, இந்திய ஆட்சி அதிகாரத்தில் பங்காளியான திமுக ஈழ விடுதலையில் கரிசினையான உடன்பாடு இருந்திருந்தால் எப்பாடு பட்டாவது டெசோவின் தீர்மானத்தை இந்திய அரசின் ஒப்புதலுடன் ஐநா மன்றத்தில் கொடுத்திருக்கவேண்டும்.

இந்திய நாட்டை நிர்வகிக்கும் பல மந்திரிகளை தன்னகத்தே கொண்ட திமுக தலைவர் கருணாநிதி. மத்தியில் கொள்கைகளை தீர்மானிக்கவல்ல செல்வாக்குமிக்க பங்காளிக்கட்சியாகவும் இருந்துவருகிறார், குடும்ப பிணக்குகளை சீர் செய்வதற்காக பலமுறை மத்திய அரசை மிரட்டி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த சம்பவங்களும் நிறைய உண்டு. அப்படியிருக்கும் பட்சத்தில் ஏன் டெசோ தீர்மானத்தை முறைப்படி மத்திய அரசின் ஒப்புதலுடன் இராசதந்திர தகுதிக்கு கொண்டுவர முயற்சிக்கவில்லை. மத்திய அரசுக்கு டெசோவின் தீர்மானம் அனைத்தும் தெரியும் என்று ஊக அடிப்படையில் பூசி மெழுகி நியாயப்படுத்தியிருக்கிறார்.

வேலைத்திட்டம் செயற்பாடு எதிர்மறையாக இருப்பினும், டெசோ அடிப்படையில் தமிழீழத்துக்கான ஆதரவு கொள்கையை மூலமாகக்கொண்ட ஒரு அமைப்பு என்பதே கருணாநிதியின் கூற்று. அப்படியான அமைப்பு தனது விருப்பம் ஒன்றை கோரிக்கையாக வைப்பது இயல்பானதே, இதே கருத்துப்பட்ட பல கோரிக்கைகள் ஏற்கெனவே ஐநாவின் பார்வையில் இருக்கிறது, எனவே டெசோ தீர்மானத்துக்கு ஐநா எவ்வளவு முன்னுரிமை கொடுக்கும் என்பதும் தெரியவில்லை டெசோ என்ற அமைப்பு பன்முகப்பட்ட சமூக பிற்படுத்தப்பட்டோர் நலன்புரி அமைப்பாக இருப்பின் அதன் கோரிக்கையை ஐநா வேறு வகையாக பாற்பதற்கு சந்தற்பம் உண்டு

டெசோ மாநாட்டில் முன்மொழிந்த தீர்மானங்கள் மத்திய அரசுக்கு தெரிகிறதோ இல்லையோ ஈழத்தமிழர்கள் அனைவரும் அறிந்ததே.

அடிப்படையில் (திமுக) கருணாநிதி ஈழ இன அழிப்பின்போது நேரிடையாக வகுத்த பாத்திரம் எவ்வகையானது என்பது பற்றியும், மத்திய அரசு நடந்துகொண்ட முறைகள் பற்றியும் ஒவ்வொரு ஈழத்தமிழனும் வேதனையுடன் அறிந்துதான் இருக்கின்றனர், இந்திய மத்திய அரசின் ஈழத்தமிழர் பற்றிய வெளியுறவுக்கொள்கை சென்றமாத நிருபாமாவின் பேட்டிவரை வெளிப்படையாக அறியப்பட்டே இருக்கிறது. திமுக பற்றிய கொள்கை என்பதை விடவும் தனிப்பட்ட முறையில் கருணாநிதி எப்பேற்பட்ட கொள்கையை ஈழத்தமிழர்பால் கொண்டிருக்கிறார் என்பதற்கு 1/2 நாள் உண்ணாவிரதம் மட்டும் சான்று அல்ல, தியாகி முத்துக்குமரன் முதல் 19 பேர் தீயில் கருகியபோதும், தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் அன்னை மருத்துவ உதவிக்கு தமிழகம் வந்தபோதும் கருணாநிதியின் எதிர்வினை எப்படி இருந்தது என்பதை அனைத்தும் உலகம் அறிந்துகொண்டதே. அது திரும்பத்திரும்ப பேசப்பட்ட விடயமாக இருந்தாலும் விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கும் மறதிக்காரர்களுக்கும் கருணாவின் ஆசைக்கதைகளை கேட்டு ஏமாறும்நிலையில் இருப்பவர்களுக்கும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டுவது தேவையான ஒன்றாகவே படுகிறது.

அடுத்து லண்டனில் நடைபெறும் உலகத்தமிழர் மாநாடு என்பதைக்கூட கருணாநிதி "உலகத்தமிழர் மாநாடு" என்று உச்சரிக்க விரும்பவில்லை "இலங்கை தமிழர் மாநாடு" என்றே நக்கலாக குறிப்பிட்டு விளித்திருக்கிறார் என்பதையும் லண்டன் மாநாட்டுக்கு அழைப்பு அனுப்பி வரவேற்பவர்கள் புரிந்துகொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றனர். இருந்தும் அந்த மாநாட்டில் தனது கட்சி ஆளுமையை செலுத்தி 'தடைதாண்டும்'; உத்தியை விரிவுபடுத்த பிரயத்தனப்படுகிறார் என்பதையும் நாம் ஏமாளிகளாக ஏற்றுக்கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம்.

நீதியான, நடுநிலையான, ஒருதலைபட்ஷமில்லாமல் விவாதிக்கவல்ல தமிழர்களின் அரசியல் கட்சிகள், முற்போக்கு அமைப்புக்கள், பிற மொழி அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் உலகத்தமிழர் மாநாட்டில் பங்குபற்றவேண்டும் என்பது அனைவரினதும் அவாவாக இருக்கும், ஆனால் காலையில் எனது குழந்தைகளை கொன்றவனுக்கு, எனது தாயை சகோதரியை சீரழித்தவனுக்கு மாலையில் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருப்பது. அதிர்ச்சியளிக்கிறது. தமிழர் சமூகத்தின் ஒரு அரசியல் கட்சி என்பதினால் கருணாநிதியின் கட்சிக்கு அழைப்பிதழ் அனுப்புவதாக இருந்தால் பாகுபாடில்லாமல் உலகத்தமிழர் மாநாடு என்ற சுலோகத்தின்கீழ் இலங்கையில் இருக்கும் தமிழர் கட்சி என்று மந்திரி பதவியையும் வகிக்கும் டக்கிளஸ் தேவானந்தாவின் கட்சிக்கும், கருணா, பிள்ளையான் ஆகியோரின் கட்சிகளுக்கும் அழைப்பிதழ் அனுப்புவதுதான் நியாயமானதாக இருக்கும். அப்படியில்லாமல் அவர்கள் துரோகிகள் என வகைப்படுத்தப்படுவார்களாயின் கருணாநிதிக்கு எந்த அடிப்படையில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்கிறது, கருணாநிதி தனது ( தடைதாண்டலுக்காக) குடும்ப சிக்கல் தீரும் நேர்த்திக்கடனுக்காக டெசோ என்ற காவடியை தூக்கி உட்கார்ந்து ஆடுகிறார், என்பதால் நேற்றய முள்ளிவாய்க்கால் படுகொலைகள் எதிலும் கருணாநிதி சம்பந்தமில்லாதவர் என்றே ஆகிவிடுமா?? அல்லது நேற்றைய நிகழ்வுகள் அனைத்தும் நடக்கவில்லை என்றே கொள்ளவேண்டுமா???, அல்லது மறக்கப்பட்டுவிட்டதா????.

இந்த நடைமுறை ஒரு வளர்ப்பு பிராணியின் குணாம்ஷத்தை ஞாபகப்படுத்துகிறது.

ஈழதேசம் இணையத்திற்காக.

கனகதரன்.

Wednesday, September 26, 2012

அம்பாறை மாவட்டத்தில் 187 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பெற்றுக் கொண்டார் தமிழ் மாணவி கே. வைசாஷாலி

2012ஆண்டு தரம் 5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தோற்றிய திருக்கோவில் ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலை மாணவி கே. வைசாஷாலி 187 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
 
இம்மாணவி அக்கரைப்பற்று 7ம் பிரிவு, நெசவு நிலைய முன்வீதியைச் சோர்ந்த கட்டிடக் கலைஞரான கனகசபேசன் மற்றும் ஆசிரியை யோகேஸ் தம்பதிகளின் புதல்வியுமாவார்.
' இதேவேளை இப் பாடசாலையில் தரம் 5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் 23 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளதாக பாடசாலை அதிபர் எம்.கிருபைராஜா தெரிவித்தார்.
 

Thursday, June 28, 2012

மனித மலங்களை ஊற்றி கொடுமை செய்யும் இலங்கை இராணுவம் !

மனித மலங்களை வாளியுடன் ஊற்றி கொடுமை செய்யும் இலங்கைப் படைகளின் அதி உட்ச அராஜகம்:- தமிழ் அரசியல் கைதியின் வாக்குமூலம்:-

வவுணியா சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளின் அவலம் தொடர்கிறது. நீதிமன்றங்களின் உத்தரவுகளை உதாசீனம் செய்து அடாவடித்தனம் புரியும் பாதுகாப்பு அமைச்சு ! அரசியல் கைதி சரவணபவன் எங்கே? ஆவரை எம் முன் நிறுத்தும் வரை எமது அகிம்சைப் போராட்டம் தொடரும் என்கின்றனர் கைதிகள் !

வவுனியா சிறைச்சாலையில் 31 அரசியல் கைதிகள் இருக்கின்றோம். பத்திரிகைகளில் வந்த செய்திகள் மக்களுக்கு காட்டும் விதத்தில் மிகபை;படுத்தப்படுத்தி வந்துள்ளது. சில சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றது. அது அகிம்சை ரீதியில்தான் நடந்திருக்கு. அரசியல் கைதிகள் இதுவரையில் அகிம்சை ரீதியில்தான் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். எந்த விதக் காரணம் கொண்டும் நிர்வாகத்தின் செய்றபாடுக்ளை நிறுத்தவோ முடக்கவோ நாங்கள் போகவில்லை என சிறையில் இருந்து சிறைக் கைதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் 25ம்திகதி மாலையளவில் சரவணபவன் என்ற சக அரசியல் கைதி ஒருவரை அனுராதபுரம் பகுதியிலுள்ள நீதிமன்றம் ஒன்றின் வழக்கின் பிரகாரம் அனுரபாதபுரம் சிறைச்சாலைக்கு இங்கிருந்து மாற்றினார்கள். இடம்மாற்றிய வேளை அவருக்கு அங்கிருந்த குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட கைதிகளுடன் சில முரண்பாடுக்ள ஏற்பட்டன. அதாவது நாங்கள் இங்கு எமது விடுதலை கோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவதால் அது தொடர்பில் அவர்களுடன் கருத்து முரண்பாடு இருக்கின்றது. அதையும் அனுராதபுரம் காவற்துறை அத்தியட்சகருக்கெதிராக ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையும் பயன்படுத்தி சரவணபவனை தனது அலுவலகத்தில் வைத்து கிரிக்கட் விக்கட்டுக்களால் காவற்துறை அதிகாரி அடித்திருக்கின்றார்.நாங்கள் உறுதிப்படுத்திக் கொண்டோம்.

சிறைச்சாலைக்கு பொறுப்பானவருக்கு முன்பாக அவரது அடிவருடிகள் எனச் சொல்லப்படுகின்ற 02 கைதிகள் அவர்மீது மனித மலங்களை வீசியிருக்கின்றனர். ஒரு தடைவ அல்ல 3 , 4 தடவைகள் வீசியிருக்கினம். அறைக்குள் அடைத்து வைத்து விட்டு கதவு கம்பிக்களுக்குள்ளால் கிட்ட வரச்சொல்லிப் போட்டு வாளியால் அள்ளி ஊற்றியிருக்ப்ன்றார்கள். இதனை அந்த காவற்துறை அதிகாரி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பார்த்து விட்டுப் போயிருக்கின்றார். சரவணபவன் எவ்வாறு மண்றாடிக் கேட்டும் அவரை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லவில்லை. மறுநாள் காலையில் அவரைக் குளிக்கவும் விடாமல் சாப்பாடும் கொடுக்காமல் அறையில் வைத்திருக்கின்றார்கள்.

மறுநாள் காலையில் அவன் காலில் விழுந்து குழறியதை அடுத்து ஏனைய அதிகாரிகளின் உதவியுடன் காவற்துறை அதிகாரியுடன் அவரது அலுவலகத்தில் போய்க் கதைத்த பின்பும் உடைகளும் மாற்றப்படாமல் அதே உடையுடன் அவனை அடித்ததுடன் மீண்டும் சிறையில் போட்டு அடைத்திருக்கின்றார்கள். இப்ப இந்தக் கைதி எங்கிருக்கின்றார் என்ற தகவல்களே இல்லை. அவர் தனது நீதிமன்ற வழக்குகளுக்கு போனாரா அல்லது போகவில்லையா என்பது கூட தெரியவில்லை. எந்த அதிகாரிகளிமும் இது பற்றிக் கேடட்டால் அவர்கள் அதுபற்றிக் கதைக்க மறுக்கின்றார்கள் என சிறையில் இருந்து சிறைக் கைதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Monday, June 25, 2012

வடக்கு நிலை தொடர்பாக ஜெனிவாவில் சிறிலங்கா சமர்ப்பித்த தவறான புள்ளிவிபரங்கள் அம்பலம்

சிறிலங்கா அரசாங்கம் வடக்கின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பித்துள்ள புள்ளிவிபரங்களின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது.

கடந்தவாரம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 20வது அமர்வில் சிறிலங்கா பிரதிநிதிகள் குழுவுக்குத் தலைமை தாங்கும் மனிசா குணசேகர அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.

இந்த அறிக்கையில் வடக்கில் சிறிலங்கா படையினரின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், யாழ்.குடாநாட்டில் படையினரின் எண்ணிக்கை 20 ஆயிரமாக குறைக்கப்பட்டு விட்டதாகவும், உயர் பாதுகாப்பு வலயங்களும் 40 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இதற்கு மாறான புள்ளிவிபரங்களை சிறிலங்கா படைகளின் யாழ்.தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க வெளியிட்டுள்ளதால், ஜெனிவாவில் சிறிலங்கா அரசாங்கம் சமர்ப்பித்த தகவல்கள் உண்மையானவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிறிலங்கா அரச ஊடகம் ஒன்றில் நேற்று வெளியாகியுள்ள, சிறிலங்கா இராணுவத்தின் யாழ்.படைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவின் செவ்வியில்,

“யாழ் குடாநாட்டில் முன்னர் 27 ஆயிரம் படையினர் நிலை கொண்டிருந்தனர்.

தற்போது வழமைநிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து சிறிலங்கா படையினரின் எண்ணிக்கை 15,600 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

யாழ்.குடாநாட்டில் முன்னர் உயர்பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் செய்யப்பட்டிருந்த 3741.09 ஏக்கர் நிலப்பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது.

ஆகப் பிந்திய தரவுகளின்படி, சிறிலங்காவின் ஏனைய மாகாணங்களில் உள்ளதைப் போல 6381 ஏக்கர் நிலப்பரப்பே, இராணுவப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.“ என்று குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.குடாநாட்டில் உயர்பாதுகாப்பு வலயம் 40 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள போதும், மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவின் புள்ளிவிபரப்படி 37 வீத நிலப்பரப்பே விடுவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.குடாநாட்டில் 20 ஆயிரம் படையினரே நிலை கொண்டுள்ளதாக ஜெனிவா அறிக்கையில் கூறப்பட்டுள்ள அதேவேளை, மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, 15,600 படையினரே நிலை கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதனால், சிறிலங்கா அரசாங்கம் வடக்கின் பாதுகாப்பு நிலை தொடர்பான தவறான புள்ளிவிபரங்களைக் கொடுத்து அனைத்துலக சமூகத்தை ஏமாற்ற முனைகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்தவாரம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்த போது, மீள்குடியமர்த்தப்படாதுள்ளோர் பற்றிய தவறான தகவல்களை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, June 14, 2012

தேசிய தலைவரின் மகன் பாலச்சந்திரன் கொலை: வெளிவராத உண்மைகள் !

தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் 12 வயது மகன் பாலச்சந்திரனை, இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது என்ற செய்தியை இதுவரை பல ஊடகங்கள் வெளியிட்டிருந்தது. அதனைத் தவிர இச் செய்தியை சனல் 4 தொலைக்காட்சியும் வெளியிட்டது யாவரும் அறிந்ததே. இருப்பினும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது, இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது என்று எல்லா ஊடகங்களும் தெரிவித்தபோதிலும், குறிப்பாக எவர் இப் படுகொலைகளை மேற்கொண்டிருந்தனர் அவர்களின் பெயர் என்ன என்பது தொடர்பாக இதுவரை எத்தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். எமக்கு கிடைத்த உறுதியான தகவலின் அடிப்படையில், சிறுவன் பாலச்சந்திரன் எப்போது, எங்கே, யாரல் யாரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற விடையங்கள் தற்போது தெளிவாகியுள்ளது.

போர் முடிவுற்றதாக இலங்கை இராணுவம் அறிவித்த மே 19ம் திகதி அதிகாலை 7.30 மணிக்கு நந்திக்கடல் களப்பின் மேற்குப் புறமாக பாலச்சந்திரன் இராணுவத்திடம் சென்று சரணடைந்துள்ளார். இராணுவத்தின் 4ஆவது விஜயபாகு படைப்பிரிவின், முத்துபண்டாவின் தலைமையில் இருந்த 08 பேர் கொண்ட இராணுவப் படையணியிடம் இவர்கள் சரணடைந்ததாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் தலைவரது பிரத்தியே பாதுகாப்பு உறுப்பினர் இருவருடன் பாலச்சந்திரன் இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளார். இவரோடு மேலும் மூவர் பாதுகாப்புக்காக பாலச்சந்திரனோடு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது லெப்டினன் கேர்ணல் அலுவிகார அவரது 681ஆவது பட்டாலியனின் கட்டளைத் தளபதியாக பணியாற்றிய லெப்டினன் கேர்ணல் லலந்த கமமே ஊடாக, 53ஆவது படையணியில் அன்று மேஜர் ஜெனரல் பதவியிலிருந்த கமல் குணரத்னவிற்கு இவ்விடையத்தை அறிவித்துள்ளார். சிறிது தூரத்தில் இருந்த கமல் குணரத்னவின் உத்தரவிற்கமைய, பாலச்சந்திரன் உள்ளிட்ட குழுவினரை நந்திக்கடல் களப்பு பிரதேசத்திலிருந்து கமல் குணரத்ன இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கமல் குணரத்ன பாலச்சந்திரன் உள்ளிட்ட குழுவினரிடம் பிரத்தியேகமாக விசாரணைகளை நடத்தியுள்ளார். இதன்போது தனது தந்தையிடமிருந்து பிரிந்து பாதுகாப்புத் தரப்பினருடன் வந்து இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

பாலச்சந்திரனிடம் பெறப்பட்டத் தகவல்களை கமல் குணரத்ன உடனடியாக பாதுகாப்புச் செயலாளருக்கு தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார். இந்தத் தகவல்கள் அனைத்தையும் பாதுகாப்புச் செயலாளர் கருணாவிற்கு அறிவித்துள்ளார். இதன்போது பாலச்சந்திரன் எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக வரக்கூடும் என்பதுடன், சிறு வயது என்பதால் நீதிமன்றத் தண்டனைகளிலிருந்தும் தப்பிவிடுவதற்க சாத்தியம் இருப்பதாகவும், எனவே சிறுவனை கொன்றுவிடுவதே சரியான முடிவும் எனவும் பாதுகாப்புச் செயலாளருக்கு கருணா கூறியுள்ளார் என மேலும் அறியப்படுகிறது. இதற்கமைய மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை தொலைபேசியில் தொடர்புகொண்ட பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்�ஷ, மேஜர் ஜெனரலின் தனிப்பட்ட மேற்பார்வையில் பாலச்சந்திரனை சுட்டுக் கொன்று, தடயங்களை அழித்துவிடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

பாலச்சந்திரனின் கொலை தொடர்பாக பிரித்தானியாவின் ''செனல் 4'' தொலைக்காட்சியும் பல தகவல்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இந்தப் படையணியில் இருந்த இராணுவ அதிகாரியொருவரே மேற்கண்ட தகவல்களை கசியவிட்டுள்ளார். குறிப்பிட்ட இராணுவ அதிகாரியின் மகன் ஒருவர் சமீபத்தில் தீராத நோய் ஒன்றினால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும், தான் முன் நிலையில் பாலச்சந்திரணுக்கு நடந்த கொடுமைகளை, தான் வெளியே சொன்னால் தான் தன் பழி தீரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து 14 வயது பச்சிளம் பாலகன் என்று கூடப் பாராமல், அவனை கொலைசெய்தது பிரிகேடியர் கமல் குணரத்னவே என்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. விரைவில் இச் சாட்சி தந்த ஒளிநாடாவும் அதிர்வு இணையத்தால் வெளிடப்படும் என்பதனையும் அறியத்தருகிறோம் !


நன்றி:அதிர்வு இணையம்

Saturday, May 05, 2012

விடுதலைப் போராட்டத்தை நான் காட்டிக் கொடுத்ததென்பது அப்பட்டமான பொய்!- கே.பி. பேட்டி

தமிழர் விடுதலைப் போராட்டத்தை நான் ஒருபோதும் காட்டிக் கொடுக்கவில்லை. அப்படிச் சொல்வது அப்பட்டமான பொய் என விடுதலைப் புலிகளின் ஆயுத முகவராகச் செயற்பட்டுவந்தவரும் தற்போது இலங்கை அரசின் பாதுகாப்பில் உள்ளவருமான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்தார்.
யாழ் உதயனின் சகோதரப் பத்திரிகையான "சுடர்ஒளிக்கு' வழங்கிய செவ்வியிலேயே அவர் இப்படிக் கூறினார். அந்தக் கேள்விக்கு அவர் வழங்கிய பதில் இங்கே

கே: தமிழ் மக்கள் மனங்களில் உள்ள முக்கியமான கேள்வியொன்றை நான் கேட்க விரும்புகிறேன். அதை பகிரங்கமாக கேட்டு உங்கள் பதிலையும் பகிரங்கப்படுத்த வேண்டியது எனது ஒரு பொறுப்பு என்றும் கருதுகின்றேன்.

தமிழர் விடுதலைப் போராட்டத்தை நீங்கள் இறுதி நேரத்தில் காட்டிக் கொடுத்துவிட்டீர்கள்? நீங்கள் துரோகி என்பது தான் தமிழர்களின் மனநிலை. உங்களின் பதில் என்ன? நீங்கள் குற்றவாளியா, இல்லையா?
ப: பிரபாகரன் என்னும் எனது உயிர் நண்பனுடன் சேர்ந்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தவர்களில் நானும் ஒருவன். நானே அந்த இயக்கத்தை ஆரம்பித்து எனது வாழ்நாளில் 30 வருடத்திற்கும் மேலான காலத்தை அதற்காகச் செலவிட்டிருக்கிறேன்.

நான் ஒரு மரக்கொப்பில் இருந்துகொண்டு அந்தக் கொப்பை நானே வெட்டுவேனா?

முதலாவதாக, ஒரு ஆத்மரீதியான உறவு அந்தப் போராளிகளுக்கும், எனக்குமிடையில் இருந்தது. இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டைப் பார்த்தால் நான் எனது தாயைக் காட்டிக்கொடுத்தது போல் தான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நான் எனது வாழ்க்கையில் சந்தித்த ஒரேயொரு உயிர் நண்பன் பிரபாகரன். அவரைக் காட்டிக் கொடுத்ததாக சொல்வது அப்பட்டமான பொய். தமிழர்களைப் பொறுத்தவரை போர் ஏன் தோற்றது என்பது புரியாத புதிராக இருக்கிறது.

பிரபாகரனை அவர்கள் கடவுளாகப் பார்த்தார்கள். அரசனாகப் பார்த்தார்கள். அவர் தோற்க மாட்டார் என்று அவர்கள் மனதில் வைத்துவிட்டார்கள். திடீரென்று தோற்றுவிட்டார். இதற்கு என்ன காரணம். யாரோ பின்னணியில் இருந்து காட்டிக்கொடுத்துவிட்டார்களோ என்று சந்தேகம். இதில் புலம்பெயர் சமூகத்தில் இருக்கும் ஒருசில குழப்பவாதிகள் கே.பி. தான் இதற்கு காரணமென இலகுவாகக் கூறிவிட்டனர். அதனை அப்பாவி மக்களின் ஒருசிலரும் நம்பி கே.பி. தான் காட்டிக்கொடுத்டதுவிட்டாரோ என்று நம்புகின்றனர்.

நான் மலேசியாவில் ஒரு அறைக்குள் தனியே இருந்தேன். பிரபாகரன் இங்கு எத்தனை தளபதிகள், எத்தனை ஆயுதங்கள் எத்தனை தாங்கிகளுடன் நின்றிருந்தார். நான் மலேசியாவிலிருந்து காட்டிகொடுத்து அவர் போரில் தோற்றார் என்பது நிஜம் அல்லவே!

யதார்த்தமாக நீங்கள் சிந்தியுங்கள். கருணா வெளியேறினார். கருணா வெளியேறியவுடன் பிரபாகரன் தோற்றாரா? கருணாவுக்குத் தெரியாத விடயங்கள் எனக்குத் தெரிந்ததா? இல்லையே... கருணா தலைவரின் பக்கத்தில் இருந்தவர். அவர் விலகும்போது அவரால் பிரபாகரனை அழிக்க முடிந்ததா? இல்லையே. இதே குற்றச்சாட்டை முன்வைக்கும் அரசியல்வாதிகள் தான், பிரபாகரன் மீண்டும் வருவார் என்கின்றனர்.
ஒரு பக்கத்தில் கே.பி. காட்டிக்கொடுத்துதான் பிரபாகரன் அழிந்துவிட்டார் என்றும் கூறும் அதே ஆட்கள்தான் மறுபுறம் பிரபாகரன் மீண்டும் வருவார், மீண்டும் போர் வெடிக்கும் என்று கூறுகின்றனர்.

இவர்கள் உண்மையைப் பேசுவதில்லை. அதுதான் முக்கியமான காரணமேயொழிய வேறொன்றுமில்லை. இதை நினைக்கும் போதே மனதுக்கு கவலையாக இருக்கிறது. நான் நேரத்துக்கு நேரம் ஒரு கதை பேசி இருப்பவன் அல்ல. எனது மக்களுக்காக 35 வருடகாலமாக வேலை செய்துகொண்டிருப்பவன்.

இவர்கள் போல் நேரத்துக்கு நேரம் பேசும் மனிதன் அல்ல. அப்படியான சூழலில் நான் வளரவும் இல்லை. அரசியல்வாதிகள் போல் பொய்கூறி நான் மக்களிடம் செல்லவும் இல்லை. இது ஒரு அப்பட்டமான பொய்..

கே: போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தீர்களா என்று நான் கேட்டபோது நீங்கள் பதிலளிக்கையில் உங்களது கண்கள் கலங்குவதைக் கண்டேன். அந்த கேள்விக்கு பதிலளிக்கும்போது ஏன் அந்த உணர்ச்சிபூர்வம்?

ப: (மீண்டும் கண்கலங்குகிறார்) மனித வாழ்க்கை அற்புதமானது. எனது வாழ்க்கையை எனது மக்களுக்காக அர்ப்பணித்துள்ளேன். ஆனால், இவர்கள் கூறும் அப்பட்டமான குற்றச்சாட்டு. எனது நட்பையே வியாபாரமாக பார்க்கிறது. அது வியாபாரம் அல்ல.... அது அரசியல் அல்ல... அவற்றிற்கும் அப்பாற்பட்டது. ஆத்மரீதியான நட்பு. அதனை இவர்கள் கொச்சைப் படுத்துகின்றனர். (நா தழுதழுக்கிறது) இதனை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கே: பிரபாகரன் உங்கள் நல்ல நண்பன் என்கிறீர்கள். திரும்பி வரமாட்டார் என்கிறீர்கள். அவரின் மறைவு தமிழர்களின் அரசியல் அல்லது அரசியல் போராட்டத்தில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதா?

ப: அந்த பிரபாகரனின் தலைமைத்துவத்தைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது உண்மை. காரணம் இது அரசியல் போராட்டம் மட்டுமல்ல. அவர் உருவாக்கிய சமூக கட்டமைப்பு பல சீர்குலைந்துவிட்டன. இன்று பார்த்தீர்களானால் யாழ்ப்பாணத்தில் அல்லது வன்னியில் எத்தனையோ சமூக விரோத செயல்கள் மலிந்து போயுள்ளன. ஆனால், அவர் இருக்கும்போது அவை நடக்கவில்லை. தமிழ் மக்களுக்குரிய சரியான தலைமைத்துவம் இல்லாமல் போயிருக்கிறது. அது கவலைக்குரிய விடயம். இதனை நிவர்த்தி செய்வது அவ்வளவு இலகுவான காரியமல்ல.

கே: மக்கள் சேவைக்காக உங்களை அர்ப்பணித்துள்ளதாகக் கூறுகிறீர்கள். அந்தச் சேவையை ஒருபடி மேலே சென்று செய்வதற்காக அரசியலுக்கு வரும் நோக்கம் எதுவும் இருக்கிறதா?

ப: என்னைப் பொறுத்தவரை நான் இப்போது செய்வது மனிதாபிமான சேவை. அரசியலில் நான் இறங்கும்போது இவை பாதிக்கப்படும். இது வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கப்படும். என்னைப் பொறுத்தவரை அரசியலில் நான் நாட்டமில்லாதவன். மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்பதே எனது இலட்சியம். ஆனால், இந்த மக்களைத் தொடர்ந்து தமிழ் அரசியல் தலைமைகளும், தமிழ்நாட்டு அரசியல் பிரமுகர்களும் ஏமாற்றி, வாட்டி வதைப்பார்களானால் நான் சிலதை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவேன்.

கே: நீங்கள் நேரடியாக அரசியலுக்கு வரப் போகின்றீர்கள் என நான் எடுத்துக்கொள்ளலாமா?

ப: அது நேரடியாகவா, மறைமுகமாகவா என்பதை முடிவாக என்னால் சொல்ல முடியாது. ஆனால், இந்த மக்களைக் காப்பாற்ற வேண்டிய ஒரு கடப்பாடு எனக்குள்ளது. அது அரசியலில் இறங்கித்தான் செய்ய வேண்டுமென்றால் வேறு வழியில்லை. இறங்கித்தான் ஆக வேண்டும். மக்களைத் தொடர்ச்சியாக இப்படியான அவலத்தில் வைத்திருக்க முடியாது.

கே: தேவைப்பட்டால் நீங்கள் அரசியலுக்கு வருவீர்கள் என்கிறீர்கள். அது வட மாகாணசபைத் தேர்தலாக இருக்குமா?

ப: ( சத்தமாகச் சிரிக்கிறார்) நீங்கள் பெரிய குண்டையே தூக்கிப் போடுகின்றீர்கள். அப்படி எதனையும் இதுவரை என் மனதில் யோசிக்கவில்லை. இன்றுவரை இல்லை. ஆனால், எனது மக்களைக் காப்பாற்ற வேண்டிய தேவை வந்தால், தொடர்ந்தும் எமது மக்களைத் தமிழ்த் தலைவர்கள் ஏமாற்றினால், அதுதான் ஒரே வழியென்றால் நான் மறு பரிசீலனை செய்துதான் ஆகவேண்டும் என்றார்.

Thursday, April 26, 2012

கலைஞர் அய்யா... தயவு செய்து பேச வேண்டாம் ! சிரித்தபடி கேட்கும் சீமான் - ஜுவி பேட்டி !

தமிழ் ஈழம் அடையும் வரை ஓய மாட்டேன் என்றும் 'தமிழ் ஈழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி திடீர் என அறிவித்து இருப்பது தமிழ் உணர்வாளர்களையும் அதிர வைத்துள்ளது. 'ஆட்சியில் இருந்த காலத்தில் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது கருணாநிதி பேசுவது நாடகம் என்று சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள். இந்த நிலையில், நாம்தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடம் பேசினோம். ''ஆற்ற முடியாத காயங்​களோடும் வலியோடும் பெரும் சோகத்தோடும் இருந்த எம் மக்கள் இப்போதுதான் மெள்ள விடுபட்டு வருகின்றனர். துக்கமான காட்சியை அடுத்து, ஒரு நகைச்சுவைக் காட்சியைப் போல, கலைஞர் அய்யா திடீ​ரென ஈழத்தைப் பற்றி பேசி இருக்கிறார். அவரு​டைய திடீர் 'தமிழீழ ஆர்​வத்தைப் பார்த்து ஒவ்வொரு தமிழனும் வாய்விட்டுச் சிரிக்கிறான். அவரால் எப்படி இதுபோல அறிக்கை வெளியிட முடிகிறதோ ?

இறுதிப்போர் நடந்துகொண்டு இருந்த​போது, 'ஈழம் இனி சாத்தியம் இல்லை� என பேசினீர்கள். 'மத்திய அரசின் நிலைப்​பாடுதான் மாநில அரசின் நிலைப்பாடு� என்றீர்கள். ஒன்றுபட்ட இலங்கைக்குள், மாநில சுயாட்சியும் அதிகாரப் பரவலும் வேண்டும் என்பதுதான் அவரது கொள்கையாகச் சொன்னார். 65 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில், மிகப்பெரிய வலிமையான கட்சியை நடத்தும் கலைஞரின் முழக்கமே 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி� என்பதுதான். அதையே அவரால் அடைய முடியவில்லை. இந்தியாவிலேயே இந்த நிலைமை என்றால், இலங்கை ஜனநாயக நாடே இல்லை. அது, பவுத்த மதத் தீவிரவாத நாடு. அங்கு ஒரு சிங்கள பவுத்தனைத் தவிர யாருமே தலைமை அமைச்சராக வரமுடியாது.

அங்கே எப்படி மாநில சுயாட்சி கிடைக்கும்? இதை உணராத கலைஞர், மாநில அதிகாரம் பெற வேண்டும் என்று ஈழத் தமிழனுக்கு அறிவுரை சொன்னார். இப்போது, 'ஈழத்தை அடையும் வரை ஓயமாட்டேன்� என்று சொல்கிறார். நியாயப்படி, அவர், 'ஈழத்தை அழிக்கும் வரை ஓயமாட்டேன்� என்றுதான் சொல்லி இருக்க வேண்டும். அண்ணன் திருமாவளவன், சென்னையில் ஈழஆதரவு மாநாடு நடத்தியபோது, அதற்கான விளம்பரங்களில் 'ஈழம்� என்ற வார்த்தையைக் காவல்துறையைக் கொண்டு அழித்தவர் நீங்கள். அதை மறைக்க முடியுமா? ஈழம் என்ற சொல் இருக்கக் கூடாது என்​பதற்காக, இலங்கைத் தமிழர்... இலங்கைத் தமிழர் என்று பேசி​வந்தவர். தொடர்ச்சியாக, என்னை ஐந்து முறை சிறைப்படுத்தினீர்களே, நான் என்ன பேசினேன்?


இன்றைக்கு நீங்கள் பேசியிருப்பதைத்தானே, அன்றைக்கு நான் பேசினேன்? 'இறுதிப்போர் காணொளி காட்சியைப் பார்க்க முடியவில்லை என்கிறீர்கள்.

இந்தக் காணொளிக் காட்சியை, அச்செடுத்து, வீடுவீடாகக் கொடுத்த​போது, கொடுத்தவர்களைத் தேடித்தேடி சிறைப்​பிடித்தீர்களே ஏன்? நீங்கள் இன்றைக்குச் சொல்லும் ஈழ விடுதலைக்காகத்தானே தம்பி முத்துக்குமார் தீக்குளித்தான்? ஏன் நீங்கள் அவனுக்காக ஒரு இரங்கல்கூட தெரிவிக்க​வில்லை? அவன் மரணத்துக்காகத் திரண்ட இளைஞர்களின் எழுச்சியை, கல்லூரி விடுதிகளை மூடி ஏன் அடக்கினீர்கள்? பெரும் ஊடகம் வைத்திருக்கிற நீங்கள் அதைப்பற்றி சிறு செய்திகூட அதில் வெளியிடவில்லையே, ஏன்?

இன்றில்லாவிட்டாலும் நாளை மலரும் என்று நீங்கள் சொல்லும் ஈழத்துக்காகத்தானே, வழக்கறிஞர்கள் போராடி​னார்கள்? ஏன் அவர்களைக் காவல்துறையை விட்டு வெறிபிடித்த மாதிரி அடித்தீர்கள் ?

'ஈழம் அடையும்வரை ஓயமாட்டேன்� என்று, என் தலைவர் பிரபாகரன், அந்த ஈழ மண்ணில் கருவியோடு நின்றுகொண்டு இருந்தபோது, ஏன் நீங்கள் சொல்லவில்லை? பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள் சிந்திய ரத்தம் வீண்போகாது என்று இப்போது சொல்கிற நீங்கள், 'மாவீரர்களின் கல்லறைகளைக் கட்டினதைவிட வேற காரியத்துல கவனம் செலுத்தியிருக்கலாம்� என்று அப்போது சொன்னது ஏன்? 'தேவையில்லாமல் ஈழத்தைப் பற்றிப் பேசி தமிழகத்தில் வீணாக அரசியல் செய்கிறார்கள்� என நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நாடாளுமன்றத் தேர்தலில் பேசினீர்களா, இல்லையா? அந்த மக்களின் மீது இவ்வளவு அக்கறையும் பற்றும் கொண்டிருக்கிற நீங்கள், போர்க்குற்ற வீடியோவை உங்களின் ஊடகத்தின் மூலம் வெளியிடாதது ஏன்? இறுதிப் போரிலே, எதிரியால் உருக்குலைக்கப்பட்ட தமிழ் உறவுகளைக் காப்பாற்ற, தமிழகம் முழுவதும் குருவி சேர்த்ததுபோல, அத்தியாவசிய மருந்துப் பொருட்களைச் சேகரித்தார்களே, தமிழ் இளைஞர்கள். அவர்களை எல்லாம் வேட்டையாடி சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்தீர்களே, ஏன்?

'சிங்களர்கள் கோபப்படும்படி நடந்துகொள்ளக்​கூடாது என்று அப்போது சொன்னீர்கள். இன்று, நீங்கள் ஈழத்துக்காகப் பேசுவதற்கு கோத்தபய ராஜ​பக்ஷே கோபப்படுகிறாரே? ஈழத் தமிழர்களுக்காக கண்ணீராக வருகிறது என இன்று சொல்கிறீர்களே. அன்று இறுதிப் போரில் தமிழ்க் குழந்தைகள் கரிக்கட்டையாகக் கிடந்த படங்கள் வரும்போது, பத்திரிகையின் அதே பக்கங்களில், உங்கள் பிள்ளை மதுரையில் பிறந்தநாள் கேக் வெட்டிக் கொண்டாடிய படமும் வந்ததே ஐயா? மறக்க முடியுமா எங்களால்? இன்றும் நா கூசாமல் சகோதர யுத்தம் என்று பேசுகிறீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கு இடையில் நடப்பது என்ன அன்பு முத்தமா? அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் ஒன்றாக இருக்க முடியுமா? எம்.ஜி.ஆரை ஏன் நீக்கினீர்கள்? வைகோவை ஏன் நீக்கினீர்கள்?

ஐயா, கலைஞரே. நீங்கள் தமிழ் இனத்துக்கு இனியாவது நல்லது ஏதாவது செய்யலாம் என நினைத்தீர்கள் என்றால், இதுபோல பேசாமல் அமைதியாக இருங்கள். நீங்கள் இருக்கும் திசைபார்த்து வணங்குகிறோம்'' எனச் சீற்றத்துடன் முடித்தார், சீமான்.

இதற்கு கருணாநிதி என்ன பதில் சொல்வாரோ?

இரா. தமிழ்க்கனல்.

Tuesday, April 03, 2012

ஜெனிவாவில் இறுதிக் கணங்கள்!- அம்பலத்துக்கு வரும் மேலதிக தகவல்கள்

ஜெனிவாவில் அரசு பிரகடனப்படுத்திய இராஜதந்திரப் போரில் அது தோற்றுவிட்டாலும், அங்கே நடந்த அரசியல், இராஜதந்திர முயற்சிகள் குறித்த தகவல்கள் தொடர்ந்து அம்பலமாகி வருகின்றன.
அப்படி ஜெனிவாவில் நடைபெற்ற மேலும் பல விடயங்களின் தொகுப்பு வருமாறு:

தீர்மான இறுதி வரைபு வெளியாவதற்கு பல நாட்கள் முன்னதாகவே, ஜெனிவாவில் இந்திய அமெரிக்க இராஜதந்திரிகள் இரகசியமான ஆலோசனைகளில் மூழ்கியிருந்தனர். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளுடன் இலங்கை அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தீர்மான வாசகம் திருத்தப்படவேண்டும் என் பதில் இந்தியா ஒற்றைக்காலில் நின்றது.

இந்தப் பேரத்தில் மிகவும் முக்கிய பங்கை ஆற்றியவர், ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கான இந்தியாவின் புதிய தூதர் திலிப் சின்கா ஆவார். ஜெனிவாத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு 5 நாட்கள் முன்னதாகவே அவர் ஞாயிற்றுக்கிழமை புதுடில்லியில் இருந்து ஜெனிவாவுக்கு வந்திருந்தார். அமெரிக்க அதிகாரிகளுடன் உடனடியாகவே அவர் ஆழமான ஆலோசனைகளை நடத்தினார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு சின்காவுக்கு இரவு விருந்தளித்தார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். ஜெனிவாவில் உள்ள இலங்கைத் தூதரகம் இந்த விருந்தை ஒழுங்கு செய்தது. அதற்குக் காரணம், இந்தியாவை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலையாவது வகித்து ஒதுங்கி நிற்குமாறு வலியுறுத்துவதேயாகும்.

ஜெனிவாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட முன்னர், இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலராக இருந்தவர் திலிப் சின்கா. இலங்கைக்கு ஆதரவாக இந்தத் தடவை இந்தியா நடந்துகொள்ளாது என்பதை அந்த இரவு விருந்தின்போதே சின்கா, பிரீஸுக்குத் தெளிவுபடுத்திவிட்டார்.

உள்நாட்டு விவகாரங்களினால் இந்தமுறை இலங்கையைக் காப்பாற்ற முடியாது என்று அவர் கைவிரித்து விட்டார். விருந்து முடித்து வெளியே வந்த இலங்கை அமைச்சர் ஒருவர், தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கப் போகிறது என்பதைப் பகிரங்கமாகக் கூறினார். அதேவேளை, வாக்கெடுப்புக்கு முதல்நாளான புதன்கிழமை இரவு மிகக் கடுமையான இராஜதந்திர பேரம் பேசல்கள் இலங்கை அமெரிக்க இந்தியத் தரப்புகளில் இடம்பெற்றன.

தீர்மானத்தில் திருத்தம் செய்வதற்கு அமெரிக்கப் பிரதிநிதி எலின் டொனஹேயுடன் பேரம் பேசுமாறு திலிப் சின்காவுக்கு புதுடில்லியில் இருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தீர்மானத்தைத் திருத்துவதற்கு அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் விரும்பவில்லை. அப்படிச் செய்வது இலங்கையை வழிப்படுத்துவதாக அமையாது என்று அவை கருதின. ஆனால், திலிப் சின்கா மிகக் கடுமையாக, விடாப்பிடிப் போக்குடன் இருந்தார்.

ஒரு கட்டத்தில் அவர், திருத்தமாட்டேன் என்று அமெரிக்கா பிடிவாதம் பிடித்தால் இந்தியா தீர்மானத்தை எதிர்க்கும் என்று மிரட்டினார். 2009ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா முன்னின்று தோற்கடித்ததையும் அவர் நினைவுபடுத்திச் சுட்டிக்காட்டினார்.

கடைசியாக இந்தியாவின் வழிக்கு வந்தது அமெரிக்கா. தீர்மான வாசகங்கள் திருத்தப்பட்டன. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசின் ஒப்புதலுடன், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் ஆலோச்னை மற்றும் தொழில் நுட்ப உதவிகளை வழங்கலாம் என்ற இந்தியாவின் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அமெரிக்கா கொண்டு வந்த இந்தத் தீர்மானத்துக்கு ஹங்கேரி, ருமேனியா, நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, மொனாக்கோ, ஸ்பெயின், லித்வேனியா, பின்லாந்து, சைப்ரஸ், குரோசியா, பல்கேரியா, ஸ்லோவேனியா, எஸ்தோனியா, செக் குடியரசு, லக்சம்பேர்க், கிறீஸ், இஸ்ரேல், ஸ்லோவாக்கியா, மோல்டா, ஜோர்ஜியா, சுவிற்சர்லாந்து, சோமாலியா, கனடா, கமரூன், லிச்சன் ஸ்டைன், நோர்வே, டென்மார்க், சுவீடன், அயர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், போர்த்துக்கல், ஆஸ்திரியா, போலந்து, பிரித்தானியா, ஜெர்மனி, இத்தாலி, ஐஸ்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய 40 நாடுகள் துணை அனுசரணை வழங்கியிருந்தன.

இவற்றில் 13 நாடுகள் மட்டுமே ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இந்த முறை வாக்களிக்கும் உரிமையைக் கொண்டிருந்தன. 40 நாடுகளின் ஆதரவுடன் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்திருந்தாலும், இந்தியாவின் அழுத்தங்களுக்கு அமெரிக்கா பணிந்து போக வேண்டியிருந்ததால், முன்னைய வரைபின்படி அதிக நெருக்குதல்களைக் கொடுக்கும் வகையிலான தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது போனது என்று அமெரிக்க இராஜதந்திரிகள் கூறுகிறார்கள்.

Friday, March 30, 2012

சிறிலங்காவுக்கு கடுமையான ‘சமிக்ஞை‘ ஒன்றை அனுப்பியுள்ளது – அமெரிக்கா

சிறீலங்காவில் நிலையானதொரு அமைதியை எட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு கடுமையான சமிக்ஞை ஒன்றை சர்வதேச சமூகத்துடன் இணைந்து அமெரிக்கா அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்று முடிந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் பற்றி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நூலண்ட் அம்மையார் நேற்று வொஷிங்டனில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையிலேயே இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா ஈரான் யேமன் லிபியா சிரியா பர்மா உள்ளிட்ட நாடுகள் தொடர்பான கருத்துகளை வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் சிறிலங்கா தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது!
உண்மையான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலின் மூலமே நிலையான அமைதியை எட்டமுடியும் என்ற கடுமையான சமிக்ஞை ஒன்றை சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக சமூகத்துடன் இணைந்து அமெரிக்கா அனுப்பியுள்ளது. அதற்கு உதவ சர்வதேச சமூகம் தயாராகவே உள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் பொறுப்புக்கூறலுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் புதிய தீர்மானத்தின் மூலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஊக்குவிப்பை வழங்கியுள்ளது.

இந்த இலக்கை அடைவதற்கு சிறிலங்கா அரசுடன் இணைந்து பணியாற்றுவதற்கு அமெரிக்கா கடமைப்பட்டுள்ளது. என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறீலங்காவின் எல்லை தாண்டிய அரச பயங்கரவாதத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம் - சுவிஸ் ஈழத்தமிழரவை.

அன்புக்கும் மதிப்புக்குமுரிய சுவிஸ் வாழ் தமிழீழ மக்களே!!!

சிறீலங்காவின் பேரினவாத பயங்கரவாத அரசின் மனிதகுலத்துக்கு எதிரான செயற்பாடுகள்
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறவில்லை. 4 இலட்சம் மக்களை கொன்று நரபலி
வேட்டையாடிவிட்டு தொடர்ச்சியாக இனப்படுகொலையை புரிந்து வருவது மட்டுமில்லாது
சர்வதேச நாடுகள் எங்கும் இக் காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக ஒலித்துவரும்
குரல்களையும் அடக்குவதற்கு திட்டமிட்டுச் செயற்பட்டு வருகிறது.

இதன் ஓர் கட்டமாக சுவிஸ் நாட்டில் இலங்கை தூதரகத்தின் பின்னனியோடு நாட்டைக்காக்கும் தமிழர் கூட்டமைப்பு (இலங்கையர் பாதுகப்புப் படை) எனும் பயங்கரவாதக்கும்பல் ஒன்று தமிழ் மனிதநேயச் செயற்பாட்டாளர்களுக்கு குறிப்பாக இளையோர்களுக்கு கொலைமிரட்டல் கடிதங்களை அனுப்பியுள்ளது.


அக்கடிதங்கள் சில காலங்களுக்கு முன் தமிழர் தாயகப் பகுதிகளில் பலருக்கு அனுப்பப்பட்டிருந்தது.தற்போது புலம்பெயர் நாடுகளிலும் பலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தம்மால் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டோருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதாகவும் ( பெயர்விபரங்களோடு) இனியும் பலருக்கு சர்வதேச ரீதியாக வழங்கப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இலங்கை அரசின் இப் பயங்கரவாத செயற்பாட்டை சுவிஸ் ஈழத்தமிழரவை வன்மையாகக்கண்டிப்பதுடன் இதற்கெதிரான செயற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது. சுவிஸ் காவற்துறையினரும் பல முறைப்பாடுகளை பெற்றுக்கொண்டதால் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


இச்செயற்பாடுகள் தமிழீழ அழிவுக்கல்ல மாறாக சிறீலங்கா அரசின் முழுமையான
அழிவுக்கே வழிவகுக்கும் என நாம் உறுதியாக நம்புகிறோம்.

இப்படிப்பட்ட சிறுமை விளையாட்டுகளை கண்டு தமிழ் மக்கள் பதட்டமடைய வேண்டாம் என நாம் வேண்டிக்கொள்கிறோம். அத்துடன் இப்படிப்பட்ட கடிதங்களை பெற்றால் காவற்துறையிடம் கையளிக்கவும். வேறு இது சார்ந்த விடையங்கள் இருப்பின் உங்கள் ஈழத்தமிழரவையுடன் தொடர்பு கொள்ளவும் (தொலைபேசி:079 308 06 69 )
இது தொடர்பாக சுவிஸ் ஊடகங்களில்:
http://www.20min.ch/schweiz/news/story/14820842
http://www.20min.ch/schweiz/news/story/29638827
http://gfbv.ch/de/?408/1/Todesdrohungen-gegen-Tamilen-in-der-Schweiz-GfbV-fordert-Schweizer-Behorden-zum-Handeln-auf
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
சுவிஸ் ஈழத்தமிழரவை

விடுதலைப் புலிகள் சூடானைப் போன்ற பிளவை இலங்கையில் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்: சிறீலங்கா அரசு குற்றச்சாட்டு.

தமிழீழ விடுதலைப் புலிகள் சூடான் நாட்டில் போன்ற பிளவினை இலங்கை ஏற்படுத்த முனைப்பு காட்டி வருவதாக சிறீலங்கா அரசாங்கத்தின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிவினைவாத சக்திகளுக்கு மேற்குலக நாடுகள் துணை நிற்கும் வரையில் இலங்கையில் மெய்யான நல்லிணக்கம் என்பது யதார்த்தப்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வினை எட்டும் முனைப்புக்களுக்கு புலம்பெயர் தமிழ் சமூகம் பெரும் தடையாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது சில சக்திகள் கடுமையான தாக்கத்தை செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்பில் வெளிநாடுகளில் வாழும் தமிழர் அமைப்புக்களும், சர்வதேச ஊடகங்களும் முரண்பட்ட புள்ளி விபரத் தகவல்களை வெளியிட்டு வருவதகாக் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ்ஸ் போ ஒபாமா போன்ற அமைப்புக்கள் சர்ஜன வாக்கெடுப்பின் மூலம் இலங்கையை பிளவடையச் செய்யும் முனைப்புக்களை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சூடானில் நடத்தப்பட்டதனைப் போன்றதொரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி நாட்டை பிளவுபடுத்த சதித் திட்டம் தீட்டப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பிரிவினைவாதத்தை தூண்டும் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து வெளிநாட்டு அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Monday, March 26, 2012

போரின் இறுதி நாட்களில் நடந்தது என்ன? – மதகுரு சொல்லும் உண்மைக்கதை(!)

முள்ளிவாய்க்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை ‘சமூக சிற்பிகள்‘ அமைப்பினர் [The Social Architects -TSA]* கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

அவ்வாறு வெளியிடப்பட்டிருக்கின்ற 09 உண்மைக்கதைகளில் ஒரு கதையின் மொழியாக்கம் இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது.[சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 'போர் வலயமற்ற' பகுதியில் தாய் தந்தையரை இழந்த சிறுவர்களைப் பராமரிக்கும் விடுதியைச் சேர்ந்த சில எண்ணிக்கையான சிறார்களை பராமரிக்கும் பணியில் இராசதுரை ஈடுபட்டிருந்தார். ]

அவர் கூறுகிறார்,

நாங்கள் கிளிநொச்சியை விட்டு இடம்பெயர்த்தப்படுவதற்கு முன்னர் தேவாலய வளாகத்தில் நான் ஆறு பதுங்குகுழிகளை அமைத்திருந்தேன். இதேபோல் வன்னி முழுவதிலும் பல பதுங்குகுழிகளை நாங்கள் அமைத்திருந்தோம். ஒவ்வொரு தடவையும் நாங்கள் இடம்பெயர்த்தப்படும் போதும் முதலில் பதுங்குகுழிகளை அமைப்பதே எமது பிரதான பணியாக இருந்தது.

கிளிநொச்சி வைத்தியசாலை மீது தாக்குதல் மேற்கொண்டிருந்த வேளையில், அங்கே நான் நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தேன். மருத்துவமனைகளை குறிவைத்து தாக்குதல் நடாத்துவதானது யுத்த தந்திரோபாயமாகும். வன்னியில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், மக்கள் வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றபோதெல்லாம், சிறிலங்கா இராணுவத்தினர் முதலில் வைத்தியசாலைகளைக் குறிவைத்தே தாக்குதல் நடாத்தினர்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், பல ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். ஆனால் அவர்களுக்கு கொடுப்பதற்குத் தேவையான மயக்க மருந்து இல்லாததால் அங்கு கடமையாற்றிய வைத்தியர்கள் மயக்க மருந்து வழங்காமலேயே காயமடைந்தவர்களின் உடல் உறுப்புக்களை வெட்டி அகற்ற வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

உண்மையில் இங்கு கடமையாற்றிய வைத்தியர்கள் ‘இயந்திரங்கள்’ போலவே செயற்பட்டனர். காயமடைந்த மக்கள் ஆகக் கூடியது ஒரு சில நிமிடங்களே சத்திரசிகிச்சை அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்னர் காயமடைந்த பிற நோயாளிகளுக்கு தொடர்ந்து சத்திரசிகிச்சை வழங்கப்பட்டது.

உடையார்கட்டு என்ற இடத்தில் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் மீது ‘பொசுபரசுக் குண்டுகள்’ வீசப்பட்டன. இந்த வகைக் குண்டுகள் வீசப்பட்டதும் கறுப்பு நிறப் புகை வெளியேறும். அத்துடன் இந்தக் குண்டு எங்கு வீசப்படுகின்றதோ அங்கே உள்ள அனைத்தும் எரிந்து கருகிவிடும். இந்த வகைக் குண்டு வீசப்பட்டவுடன் அதன் சுவாலை ‘தறப்பாலில்’ பற்றி அதன் பகுதிகள் மக்கள் மீது விழுந்தவுடன் மக்கள் எரிகாயங்களுக்கு உள்ளாகினர்.

பொசுபரசுக் குண்டொன்று வீசப்பட்ட போது அதன் சுவாலைகள் வாழை இலைகள் மீது படர்ந்து பின் அங்கிருந்த மனிதர் ஒருவரின் உடலிலும் பற்றிக் கொண்டது. இதனால் மிக மோசமான முறையில் குறிப்பிட்ட மனிதர் எரிகாயங்களுக்கு உள்ளாகினார். இதனை நான் நேரில் பார்த்தேன். பொசுபரசுக் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகி மிக மோசமான எரிகாயங்களுக்கு உள்ளான பலர் யுத்த வலயத்திலிருந்து அகற்றப்பட்டு, கப்பல் மூலம் மேலதிக மருத்துவத்திற்காக கொண்டு செல்லப்பட்டனர்.

கொத்துக் குண்டுகள் முதலில் பரந்தன் பகுதியிலேயே வீசப்பட்டன. பல வகையான கொத்துக் குண்டுகளை சிறிலங்கா இராணுவத்தினர் பயன்படுத்தினர். கொத்துக் குண்டொன்றின் பிரதான குண்டு வானில் வெடித்துச் சிதறி பல சிறிய துண்டுகளாக உடைகின்றது. இரணைப்பாலை என்ற பிரதேசத்தில் வீசப்பட்ட கொத்துக் குண்டொன்று பல வர்ண நாடாக்களைக் கொண்டிருந்தது. இதனால் இவ்வகைக் குண்டானது சிறுவர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துக் கொண்டது. சிறுவர்கள் பல வர்ண நிறங்களால் கவர்ச்சிமிக்க வகையில் உருவாக்கப்பட்டிருந்த இக் கொத்துக் குண்டின் பகுதிகளை தொட்ட போது அவை வெடித்துச் சிதறிய சம்பவங்களும் உண்டு.

ஜனவரி 25, 2009 அன்று ஒரு நிமிடத்தில் வெடித்த எறிகணைகள் எத்தனை என்பதை நாம் எண்ணிக்கொண்டோம். நாங்கள் ஐந்து மதகுருமார்கள், அருட்சகோதரிகளைக் கொண்ட ஒரு குழு, பெற்றோரை இழந்த பிள்ளைகள் ஆகியோர் ஒன்றாக பதுங்குகுழிக்குள் இருந்தோம். அந்த வேளையில் நாம் இருந்த பகுதியை நோக்கி பல் குழல் எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது ஒரு நிமிடத்தில் 60 குண்டுகள் வெடித்ததை நாம் அவதானித்தோம்.

நான் உண்மையில் மிகப் பயங்கரமான, கோரமான நாட்கள் சிலவற்றைப் பற்றி எடுத்துக் கூறவேண்டும். மே 17,2009 அன்று யுத்தம் முடிவுற்றதாக சிறிலங்கா அரசாங்கத் தரப்பினர் வானொலிச் செய்திகள் மூலம் அறிவித்துக் கொண்டிருந்தனர். அத்துடன் சிறிலங்கா இராணுவம் தொடர்ந்தும் எஞ்சியுள்ள புலி உறுப்பினர்களை தேடி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் சிறிலங்கா அரசாங்கத் தரப்பு அறிவித்துக் கொண்டிருந்தது.

மிகக் கோரமான அந்த யுத்தத்தின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த பதுங்குகுழியில் எம்மில் ஐந்து மதகுருமார்கள், பெற்றோரை இழந்த 40 சிறார்கள் மற்றும் அருட்சகோதரிகள் சிலரும் தஞ்சம் புகுந்திருந்தோம். எம்மிடம் CDMA தொலைபேசி ஒன்றும், சற்றலைற் தொலைபேசி ஒன்றும் இருந்தன.

நாம் முதலில் எமது ஆயர் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டோம். பின்னர் இறுதி யுத்த நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்த பிரிகேடியர் சவீந்திர டீ சில்வாவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டோம். சவீந்திர டீ சில்வா தற்போது ஐ.நாவுக்கான சிறிலங்காத் தூதராகக் கடமையாற்றுகிறார். வெள்ளைக் கொடிகளை உயர்த்திப் பிடித்தவாறு பதுங்குகுழிகளை விட்டு வெளியேறுமாறு பிரிகேடியர் எம்மைக் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் 2009 மே 17 பிற்பகல் வேளையில் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு நாம் எமது பதுங்குகுழிகளை விட்டு வெளியேற முயற்சித்தோம். ஆனால் இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

யுத்த வலயத்தை விட்டு நாம் வெளியேறுவதற்கு முன்னர் இறுதி நான்கு நாட்களாக நாம் எதையும் சாப்பிடவுமில்லை. அத்துடன் நீர் கூட அருந்தவில்லை. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஒரு பிஸ்கட்டைப் பெற்றுக் கொள்வதே மிகவும் கடினமாக இருந்தது. கைவிடப்பட்ட பதுங்குகுழி ஒன்றில் விடுதலைப் புலிகளின் மிகவும் சக்தியை வழங்கவல்ல 10 உணவுப் பொதிகளை நாம் பெரும் போராட்டத்தின் பின் பெற்றுக் கொண்டோம். அப் பொதிகளை நாம் அறுபது பேரும் பகிர்ந்து உண்டோம்.

மே 17 இரவு, நான் கிட்டத்தட்ட 50 தடவைகள் வரை ஜெபமாலை செபம் செய்திருப்பேன். நாங்கள் கடற்கரைக்கு மிக அருகில் இருந்ததால் எமது பதுங்குகுழிகள் ஆழமற்றதாக காணப்பட்டன. இந்த இரவு முழுவதும் இராணுவச் சிப்பாய்கள் பதுங்குகுழிகளுக்குள் கைக்குண்டுகளை வீசி மக்களைக் கொலை செய்தனர். அந்த இரவு என்னுடன் இருந்த பெற்றோரை இழந்த சிறார்கள் “பாதிரியாரே, நாம் இங்கே சாகப் போகின்றோம்” எனக் கூறினார்கள்.

அடுத்த நாட் காலை அதாவது மே 18, இராணுவ வீரர்கள் எம்மை நெருங்கி வந்துகொண்டிருந்த போது, நாம் இரண்டாவது தடவையாகவும் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு பதுங்குகுழிகளை விட்டு வெளியேற முயற்சித்தோம். நாம் எம்மை அருட்சகோதரர்கள் என இனங் காண்பிப்பதற்காக அருட் சகோதர, சகோதரிகளின் அடையாளம் காட்டும் எமது வெள்ளைச் சீருடைகளை அணிந்திருந்தோம். மூன்று தடவைகள் நாம் வெளியேற முயற்சித்தோம். ஆனால் இந்த மூன்று தடவைகளும் சிறிலங்கா இராணுவச் சிப்பாய்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். அவர்கள் கிட்டத்தட்ட 115 மீற்றர் தூரத்தில் நின்றவாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இராணுவச் சிப்பாய்கள் எம்மை நோக்கி பெரிய குரலில் கத்தினார்கள், “நீங்கள் விடுதலைப் புலிகள், நாங்கள் உங்களைச் சுடப்போகிறோம்” என்றார்கள். அதன்பின்னர் அவர்கள் எம்மை வெளியே வருமாறு கட்டளையிட்டார்கள். அதனைத் தொடர்ந்து அருட்சகோதரிகள் மற்றும் பெற்றோரை இழந்த 40 சிறார்கள் ஆகியோருடன் நாம் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு பதுங்குகுழிகளை விட்டு வெளியேறினோம். வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு முழங்கால்களில் இருக்குமாறு அவர்கள் எமக்கு கட்டளையிட்டனர்.

அதில் நின்ற சிறிலங்கா இராணுவ வீரன் ஒருவன் சிங்கள மொழியில், “ஒவ்வொருவரையும் கொலை செய்யுமாறு எமது கட்டளைத் தளபதி எமக்கு கட்டளையிட்டுள்ளார்” எனக் கூறினான்.

எமது மேலாடைகளைக் களையுமாறு அவர்கள் எமக்கு கட்டளையிட்டனர். அதன் பின்னர் “நாம் அருட்சகோதரர்கள் எனவும் இவர்கள் சிறார்கள்” எனவும் வாதிட்டோம். அத்துடன் நாம் ஏற்கனவே பிரிகேடியருடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் குறிப்பிட்டோம். அதன் பின்னர் நாம் பிரிகேடியரிடம் தொடர்பு கொண்ட CDMA தொலைபேசி இலக்கத்தை அந்த இராணுவ வீரர்களிடம் கொடுத்தோம். உடனே அவர்கள் தொடர்பு கொண்டு நாம் ஏற்கனவே தொடர்பு கொண்ட விடயத்தை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

நாம் கிட்டத்தட்ட ஓரிரு மணித்தியாலங்கள் வரை இராணுவத்திடம் வாதாட்டம் மேற்கொண்டோம். எமக்கு முன் நின்ற அந்த இராணுவத்தினர் தமது முகத்தைச் சுற்றி கறுப்பு நிறத் துணியால் இறுகக் கட்டியிருந்தனர். கொலை செய்வதற்கு தருணம் பார்த்துக் காத்திருக்கும் மிருகங்கள் போல அவர்கள் காணப்பட்டனர். CDMA தொலைபேசியில் பிரிகேடியருடன் தொடர்பு கொண்ட பின்னரே எம்முடன் வாதாடிய குறித்த வீரனின் கோபம் தணிந்திருந்தது.

இது ஒருபுறமிருக்க, எம்மிலிருந்து சற்று தூரம் தள்ளி இராணுவ வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் மக்கள் சிலர் நிற்பதை நாம் கண்ணுற்றோம். இவர்கள் எம்மைப் போன்று இறுதி வரை பதுங்குகுழிகளுள் ஒழிந்திருந்தவர்கள் ஆவர். அந்த மக்களில் பலர் காயமடைந்திருந்தனர்.
இறுதியில், எம்மை அவ் இராணுவத்தினர் துருவித் துருவி சோதனை செய்தனர். எங்கள் ஒவ்வொருவரும் ஒரு கைப்பையை மட்டுமே எடுத்துச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதில் நின்ற இராணுவ வீரன் ஒருவர் எமது அருட்சகோதரர்களில் ஒருவரை காலால் உதைத்தான். உடனே அவர் கீழே விழுந்துவிட்டார்.

அவர்கள் எம்மை இரு பிரிவுகளாகப் பிரித்தனர். ஒவ்வொரு குழுவிலும் 30 பேர் இருந்தோம். இதனால் நாம் கொஞ்சம் வேகமாக நகர முடிந்தது. வீதியோரங்களில் எரிந்து கொண்டிருந்த வாகனங்கள் மற்றும் அந்த வாகனங்களின் கீழ் இறந்தபடி கிடந்த மக்களின் உடலங்களைக் கடந்தவாறு நாம் சென்றுகொண்டிருந்தோம். நரகத்தைப் போன்று அந்த இடம் காட்சி தந்தது.

“நாங்கள் பிரபாகரனை, பொட்டு அம்மானை, ஏனைய எல்லாத் தலைவர்களையும் கொலை செய்துவிட்டோம். இப்போது நீங்கள் எமது அடிமைகள்” என சிரித்தவாறு கூறினார்கள்.

காயமடைந்த மக்களுக்கு உதவுமாறு நாம் சிறிலங்கா இராணுவத்திடம் கேட்டுக்கொண்டோம். அத்துடன் காலால் உதைக்கப்பட்ட குறித்த அருட்சகோதரருக்கும் உதவுமாறு கேட்டுக்கொண்டோம். அவர்கள் காயப்பட்ட மக்களை சாலம்பன் என்ற இடத்துக்கு கூட்டிச் சென்றார்கள். ஆனால் அவர்கள் இதய வருத்தமுடைய அந்த அருட்சகோதரனைத் தம்முடன் கூட்டிச் செல்லவில்லை. இதய வருத்தத்தால் அவதிப்பட்ட அந்த அருட்சகோதரனுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படவில்லை. அவருக்கு அப்போது 38 வயதாகவே இருந்தது. அவரை அந்த இடத்திலேயே விட்டு விட்டு இராணுவத்தினர் வெளியேறினர்.

நாம் பின்னர் பேருந்து ஒன்றில் சாலம்பன் என்ற இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டோம். அவர்கள் எமது ஆடைகளைக் களைந்து எம்மை நிர்வாணப்படுத்திய பின்னரே சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன் பின்னர் அவர்கள் எம்மை மண்டபம் ஒன்றுக்குள் கொண்டு சென்றனர். அங்கே “நாங்கள் உங்களது தலைவர்களைக் கொன்றுவிட்டோம். ஆனால் அவர்களில் சிலர் தற்போதும் உயிருடன் உள்ளனர். உங்ளுக்குள்ளேயே அவர்கள் இருக்கிறார்கள். ஆகவே விடுதலைப் புலிகள் யாராவது இருந்தால் உடனடியாக எம்மிடம் வந்து உங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்” என இராணுவத்தினர் அறிவித்தல் விடுத்தனர்.

ஆனால் தமது பெயரைப் பதிவதற்கு எவரும் முன்வரவில்லை. அதன் பின்னர் அருட்சகோதரர்கள் எல்லோரையும் விடுதலைப் புலிகள் என முத்திரை குத்திய அவர்கள் எமது பெயர்களைப் பலாத்காரமாக பதிவு செய்து கொண்டனர். இந்த நேரத்தில், “நாங்கள் மதகுருமார்கள்” என உறுதியாகக் கூறியதுடன் எமது அடையாள அட்டைகளையும் அவர்களிடம் காண்பித்தோம்.

கருணா குழுவைச் சேர்ந்த பலர் யுத்தத்தின் இறுதியில் எமது மக்களுடன் கலந்திருந்தனர். அவ்வாறு அங்கு இருந்தவர்களுள் ஒருவரை நான் முதலில் வன்னியில் சந்தித்திருந்தேன். இவர் என்னை மதகுரு என அடையாளப்படுத்திக் கொண்டார். நாம் நான்கு அருட்சகோதரர்களும் பிரிகேடியரைச் சந்திப்பதற்காக முள்ளிவாய்க்காலுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். எம்முடன் சேர்ந்து பயணித்த அந்தச் சிறார்களை அங்கேயே விட்டுவிட்டுச் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழி தெரியவில்லை.

நாம் அதே இடத்துக்கு திரும்பி வந்தபோது, எம்முடன் வந்த அந்தச் சிறார்கள் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டிருந்தனர். அத்துடன் புலிகள் உறுப்பினர்கள் என அவர்களின் பெயர்கள் பலாத்காரமாக பதியப்பட்டன. இதன் பின்னர், நாம் செட்டிக்குளம் என்ற இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டோம். அந்த இடத்தை அடைவதற்காக நாம் இரு நாட்கள் வரை உணவின்றி பேருந்திலேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது.

நாங்கள் பேருந்தில் புதுக்குடியிருப்பு வீதியால் கூட்டிச் செல்லப்பட்ட போது, மணி பிற்பகல் 6.30 ஆக இருந்தது. புதுக்குடியிருப்புக்கு அருகிலுள்ள மந்துவில் என்ற இடத்தை நாம் கடந்து சென்ற போது மிகப் பயங்கரமான காட்சியைக் காணவேண்டியிருந்தது. கிட்டத்தட்ட 300 வரையான இறந்த நிர்வாணமாக்கப்பட்ட உடலங்களை சிறிலங்கா இராணுவத்தினர் ஒன்றுகுவித்துக் கொண்டிருந்தனர்.

இதனை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அந்த உடலங்கள் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் ‘ரியூப் லைற்றுக்கள்’ பொருத்தப்பட்டிருந்தன. அத்துடன் இதனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த இராணுவ வீரர்கள் அந்த உடலங்களை படம் பிடித்தனர். பார்ப்பதற்கு அது ஒரு கொண்டாட்டம் போல் காணப்பட்டது. அங்கே குவிக்கப்பட்ட்டிருந்த அந்த மக்கள் அந்தப் பிரதேசத்தில் கொல்லப்பட்டிருப்பார்கள் என நான் கருதுகிறேன்.

நாம் மெனிக்பாம் முகாமில் குடியேற்றப்பட்டு முதல் ஒரு வாரமும் குடிப்பதற்கான நீரைப் பெற முடியவில்லை. பசி போக்க உணவு கிடைக்கவில்லை. மலசலகூடவசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. எமது முகாமுக்குள் வெளி ஆட்கள் வருவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இதனை ‘விடுதலைப் புலிகளின் முகாம்’ எனவும் ‘வலயம் 04′ எனவும் அழைத்தனர்.

எமது முகாமிலிருந்த மக்கள் கொலை செய்யப்படுவார்கள் என கருதப்பட்டது. எமது வாழ்வு ஆபத்தில் உள்ளதாக நாம் கருதினோம். எமது முகாமில் கிட்டத்தட்ட 40,000 பேர்வரை தங்கவைக்கப்பட்டனர். 16 பேர் படுத்து உறங்குவதற்காக சீனாத் தயாரிப்பான நீல நிறத் தறப்பாள் ஒன்று வழங்கப்பட்டது. இதனால் பெண்கள் கூடாரத்திற்குள்ளும், ஆண்கள் அதற்கு வெளியேயும் படுத்து உறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள் எம்மை மிருகங்கள் போல் நடாத்தினர்.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தளவில் சிறிலங்கா அரசாங்கமும், இராணுவப் புலனாய்வுத் துறையும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர். யாழ்ப்பாண வீதிகளில் உள்ள விளம்பரப் பலகைகளில் ‘ஒரு நாடு ஒரு மக்கள்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இத மக்களைப் பெரிதும் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

சிறிலங்கா அரசாங்கப் படையினர் அக்கராயன், முருகண்டி, வற்றாப்பளை ஆகிய மூன்று இடங்களிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். இவ்விடங்களில் சிங்கள மக்களுக்கான வீடுகள் கட்டப்படுகின்றன. வடக்கு மாகாணத்தின் மையமாக மாங்குளம் அமைக்கப்படவுள்ளது. இங்கு கிட்டத்தட்ட 300,000 மக்களைக் குடியேற்ற சிங்கள அரசாங்கம் திட்டமிடுகிறது.
ஒவ்வொரு பட்டினத்திலும் இன விகிதாசாரத்தை பேண அரசாங்கம் முயற்சிக்கிறது. இதனால் வடக்கில் உள்ள குடிசன பரம்பலில் மாற்றத்தைக் கொண்டு வர அரசாங்கம் திட்டமிடுகிறது. ஏற்கனவே நாவற்குழியில் சிங்களவர்கள் குடியேறுவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழில் மொழியாக்கம் – நித்தியபாரதி

Sunday, March 25, 2012

யேர்மனியில் "தியாகச் சுடர்கள்" வீரவணக்க நிகழ்வு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.

தமிழீழ விடுதலையினை வென்றெடுக்கும் போராட்டத்திற்கு பல்வேறு காலகட்டங்களில் பல்வேறுபட்ட சூழ்நிலைகளில் தமது உயிரை ஈகம் செய்த தியாகிகளிற்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு இன்று யேர்மனி பீலபெல்ட் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

1995 ஆம் ஆண்டு தமிழர்களின் வாழ்வில் மறக்கமுடியாத மிகப்பெரும் இடப்பெயர்வை யாழ் மக்கள் சந்தித்ததுடன் விடுதலைப் போராட்டமும் காடுகளால் சூழப்பட்ட வன்னிப்பகுதிக்குள் நகர்த்த வரலாற்றால் நிர்ப்பந்திக்கப்பட்டது.
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(2).jpg
இந்நிகழ்வு சாதாரண நிகழ்வாக அமைந்துவிடவில்லை. தமிழர்களின் விடுதலைப் போராட்டமே முடிந்து போய்விட்டதாக எல்லோராலும் கருதப்பட்டது. ஏன் உலக இராணுவ அரசியல் ஆய்வாளர்களால் கூட விடுதலைப்புலிகள் இனி அவ்வளவுதான் அவர்களை நம்பிய தமிழர்களின் கதி அதோகதிதான் என அடித்துக் கூறுமளவிற்கு தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் பெரும் திருப்புமுனையாக அமைந்துவிட்ட நிகழ்வாகும்.
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(3).jpg
உலகத்தமிழர்களை நிலைகுலைய வைத்த இந்நிகழ்வின் தாக்கத்தால் தமிழகத்தில் ஒரு உயிர் வெளி உலகிற்குத் தெரியாமல் இழக்கப்பட்டிருந்தது. அப்போது தமிழகத்து ஊடகங்கள் ஈழப்பிரச்சினையினை அவ்வளவாக கண்டு கொள்ளாத காலமாகவும் ஜெயலலிதாவின் கடுமையான ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருந்த காலமாகவும் இருந்தமையால் அப்துல் ரவூப் என்கின்ற தமிழனின் தியாக மரணம் உலகம் கண்டுகொள்ளாமல் போன துர்ப்பாக்கியம் ஏற்பட்டது.

2009 சனவரி 29 அன்று வன்னியில் தமிழினம் மாபெரும் இனச்சுத்திகரிப்பை நோக்கி தள்ளப்பட்டது கண்டு அதனை தமிழகம் இந்தியா உள்ளிட்ட உலகம் கண்டு கொள்ளாது சிங்களத்தை ஊக்குவித்துவருவதை கண்டித்து தனது ஒப்பற்ற உயிரை தீச்சுவாலைக்கு தின்னக்குடுத்த நெருப்புத் தமிழன் முத்துக்குமார் வரலாறாகிப் போயிருந்தான்.

முத்துக்குமார் வழியில் தமிழகத்தில் மேலும் 15 தமிழர்கள் தீச்சுவாலைகளை மேனி படரவிட்டு தமிழன அழிப்பை தடுக்க முற்பட்டு தியாக வரலாறு படைத்திருந்தனர்.http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(5).jpg
முத்துக்குமார் தமிழகத்தில் கொதிநிலையினை ஏற்படுத்தியிருந்த சமயத்தில் மலேசியாவிலும் தமிழ்ச் சகோதரர்கள் இருவர் தமதுயிரை இனவிடுதலைக்காக ஈகம் செய்தார்கள்.

உலகின் மனச்சாட்சியின் இருப்பிடமாக கருதப்படும் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு முன்னால் ஐரோப்பாவை சூழ்ந்து கொண்டிருந்த பனிப்படலத்தையும் வல்லரசுகளின் கண்ணை மறைத்து நின்ற வல்லாதிக்க நலனையும் அகற்றுவதற்காக தீச்சுவாலையினை மேனி படரவிட்டு உலகத்தின் முகத்திரையினை கிழித்து வரலாறுபடைத்தான் நெருப்புத் தமிழன் முருகதாசன்.

இராசீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருபது ஆண்டுகளிற்கு மேலாக நீதி மறுக்கப்பட்டு சோனியாவின் பழிவாங்கும் நிலைப்பாட்டின் நிகழ்கால சாட்சிகளாக விளங்கிக் கொண்டு இருக்கும் அருமைச் சகோதரர்கள் முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு உறுதிப்படுத்தப்பட்டு உலகத்தமிழினமே ஆடிப்போயிருந்த நிலையில் தீச்சுவாலை தனது உடலை பற்றிக்கொள்ள அனுமதித்து சகோதரி செங்கொடி தீக்குளிப்பு வரலாற்றில் புதிய அத்தியாயத்தை திறந்துவைத்து சரித்திரமாகியிருந்தார்.
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(6).jpg
இப்படி தமிழின விடுதலை ஒன்றையே குறிக்கோளாக கொண்டு தீக்குளித்து வரலாறாகிப் போன தியாகச்சுடர்களிற்கு ஒருங்கே வீரவணக்கம் செலுத்தி நினைவில் நிறுத்தி ஆராதிப்பதற்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி கிழை ஏற்பாடு செய்திருந்தது.

இன்று மதியம் 2மணியளவில் ஆரம்பித்த வீரவணக்க நிகழ்வு மிகவும் எழுச்சியோடு நடைபெற்றுள்ளது.நிகழ்வின் ஆரம்பமாக தமிழீழத் தேசியக் கொடியினை பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் சகோதரர் திருமலைச்செல்வன் அவர்கள் ஏற்றிவைதார். அகவணக்கத்தை தொடர்ந்து ஈகைச்சுடரினை மனிதநேய செயற்பாட்டாளர் ரூபன் அவர்களும் பீலபெல்ட் இளையோர் அமைப்பை சேர்ந்த செல்வன் ஜெனா அவர்களும் ஏற்றிவைத்தனர்.தொடர்ந்து பொதுச்சுடரினை செல்வன் ம.நிலவன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து மலரஞ்சலியும் இடம்பெற்றதையடுத்து,இளஞ்சூரியன் இசைக்குழுவினரின் இசைவணக்கம் நடைபெற்றது.அதன் தொடர்ச்சியாக விடுதலை நடனங்கள் நாடகங்கள் என்பன மிகுந்த எழுச்சியுன் நடைபெற்றன. நிகழ்வின் நடுவில் யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திருமலைச்செல்வன் அவர்களின் உரையும் இடம்பெற்றது.இன்று தமிழினத்தின் விடுதலைக்களம் ஜெனீவாவில் புதிய வடிவெடுத்து நிற்கின்ற வேளையில் தீக்குளித்து வரலாறாகிப்போன நெருப்புத் தமிழர்களை நெஞ்சில் நிறுத்தி வீரவணக்கம் செலுத்தியது முக்கியத்துவம் பெபற்றுள்ளது. இந்த வீரவணக்க நிகழ்வில் யேர்மனிவாழ் ஈழத்தமிழர்கள் பலர் கலந்து கொண்டு தமது வீரவணக்கத்தை செலுத்தினார்கள்.http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(13).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld.jpg
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(4).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(7).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(9).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(10).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(8).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(20).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(11).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(12).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(14).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(15).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(17).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(16).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(18).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(19).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(22).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(23).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(24).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(26).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(25).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(21).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(27).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(30).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(28).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(29).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(31).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(32).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(33).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(34).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(37).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(35).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(38).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(39).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(40).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(41).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(43).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(42).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(44).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(46).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(45).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(48).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(50).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(49).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(51).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(53).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(52).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(55).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(54).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(56).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(58).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(59).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(57).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-bilefeld%20(60).jpg

ஈழதேசம் இணையம்.