Showing posts with label சுனாமி. Show all posts
Showing posts with label சுனாமி. Show all posts

Sunday, March 13, 2011

ஜப்பானில் உயிரிழந்தோர் தொகை 10,000 இற்கும் மேல்? 3வது அணு உலையும் வெடிப்பு?

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமியைத் தொடர்ந்து

அங்கு உயிரிழந்தோர் தொகை 10, 000 இற்கும் மேற்பட்டு செல்லலாம் என ஐப்பானின் மியாகி பிரதேச பொலிஸ் அதிகாரி ஒருவரின் டுவிட்டரை ஆதாரம் காட்டி பிபிசி தெரிவித்துள்ளது.

இன்று மதியம் வரை அப்பிரதேசத்தில் 379 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை நிலநடுக்கம் பலமாக பாதித்த பிரதேசமான செண்டாய் பிரதேசத்திற்கு உடனடியாக தண்ணீர் மற்றும் உணவுகள் தேவைப்படுவதாக தெரிவித்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வெள்ளியன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் புகுஷிமா அணு உலகைகளில் 3வது அணு உலையும் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் அங்கு தொடர்ச்சியாக சிறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது-

அணு உலைகள் பாதிப்பால் கதிர்வீச்சு ஏற்படும் அபாயம்! ஜப்பானில் அவசர நிலை பிரகடனம்

ஜப்பான் பூகம்பம், சுனாமியால் அணு உலைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன அங்குள்ள புகுசிமா மாவட்டத்தில் 5 இடங்களில் அணு உலைகள் இருந்தன.

இந்த 5 அணு உலைகளுமே பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.அதில் ஒரு அணு உலையில் அதிக அளவில் கடல் நீர் புகுந்து விட்டது.

இதனால் அணு உலை குளிர்படுத்தும் அமைப்பு முற்றிலும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. அதில் இருந்து அணுக்கதிர் வீச்சு கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

எனவே அந்த பகுதியில் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் 3000 ஆயிரம் குடும்பங்கள் வெளியேற்றப் பட்டு உள்ளனர்.

அதே போல மற்ற அணு உலைகளிலும் கசிவு ஏற்படலாம் என கருதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப் பட்டு உள்ளது.

அணுகதிர் வீச்சு ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில் முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. 5 அணு உலைகளிலும் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப் பட்டுள்ளது. இதனால் ஜப்பானில் பெரிய அளவில் மின் துண்டிப்பு ஏற்பட்டு உள்ளது.

Friday, March 11, 2011

ஜப்பானை கடுமையாகத் தாக்கியுள்ள ஆழிப்பேரலை!

ஜப்பானில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஏற்பட்ட அதி பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஆகியவற்றில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 350 ஐ கடந்துள்ளதாக (வெள்ளிக்கிழமை மாலை) உத்தியோக பூர்வமாக

அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாளைக்குள் மீட்கப்படும் சடலங்களின் எண்ணிக்கை 1000 ஐ தாண்டலாம் என கவலை வெளியிடப்பட்டுள்ளது.

8.9 மக்னிடியூட் அளவில் பதிவாகியிருந்த நிலநடுக்க அதிர்வினால், டோக்கியோவின் வடக்கு கிழக்கு பகுதிகளில் சுமார் 400 கி.மீ பரப்பளவுக்கு கடும் தேசம் ஏற்பட்டிருக்கிறது. நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியினால், கார்கள், கட்டிடங்கள், கப்பல்கள் அடித்துச்செல்லப்பட்டுள்ளன.

350 பேர் உயிரிழந்துள்ளதை ஜப்பான் அரசு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் 500 ற்கு மேற்பட்டோரை இதுவரை காணவில்லை.

துறைமுக நகரமான மியாகியின் செண்டாய் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அங்கு 200 - 300 இடைப்பட்ட உடலங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

உலகின் ஐந்தாவது மிகப்பெறும் நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளதுடன், நியூசிலாந்தின் கிரிஸ்ட் சேர்ச்சில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்திலும் பார்க்க 8,000 மடங்கு அதிகம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பசுபிக் கடலில் உருவாகிய சுனாமி மணிக்கு 800 கி.மீ வேகத்தில் ஜெட் லைனர் வேகத்தில் தனது கோரத்தை வெளிப்படுத்தியது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலும், வாஷிங்டன், ஒரேஜன் நகரங்களிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதுடன், கடல் பிரதேசத்திற்கு அருகாமையிலிருந்த மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு விரையுமாறு அறிவுறுத்தப்பட்டது.

எனினும் அங்கு இதுவரை ஏற்பட்ட தேசங்கள் தொடர்பில் இன்னமும் தகவல் வெளியாகவில்லை.
கலிபோர்னியாவின் க்ரெசெண்ட் நகரில், 2 மீற்றர் உயரத்திற்கு சுனாமி அலைகள் எழுந்துள்ளன.

ஜப்பானில் மியாகி (Miyagi), (Fukshima) புக்ஷிமா நகரங்களை சுனாமி கடுமையாக தாக்கியுள்ளது. சென்டேய்(Sendai) நகரின் அமைந்துள்ள ஜப்பானின் பிரதான விமான நிலையம் கடுமையான தேசத்திற்கு உள்ளாகியுள்ளது. விமான ஓடுபாதையில், கப்பல்களும், கார்களும் நீரினால் அடித்துச்செல்லப்படுவதை காண முடிந்துள்ளது.

மனியாமிசோமா, புக்ஷிமா நகரங்களில், 1,800 க்கு மேற்பட்ட வீடுகள் தேசமடைந்துள்ளன. டோக்கியோவில், பட்டமளிப்பு விழா நடைபெற்ற ஒரு இடத்தில் நில அதிர்வுகளின் தாக்கத்தால் கூரைகள் இடிந்துவீழவே 20 பேர் படுகாயமடடந்துள்ளனர்.

இன்ஷிஹாரா நகர், ஷிபா நகர் கெஸென்னுமா ஆகிய பிரதேசங்களில் சுனாமியினால் கட்டிடங்கள், வீடுகள் அடித்துச்செல்லப்பட்டுள்ளன.

எனினும் துரித கதியில் ஜப்பானின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், குறித்த நகரங்களை சுனாமி தாக்கப்போவது முன்கூட்டியே மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிதனால், புக்ஷிமா எரிசக்தி நிலத்தின் அருகாமையில் வசித்து வந்த 3000 ற்கு மேற்பட்ட பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படத்தப்பட்டுள்ளனர்.

இதுவரை உலகில் அதில உயிரிழப்புக்களை ஏற்படுத்திய நிலநடுக்கங்கள்

1976 ஜூலை 27 - சீனா - ரிக்டர் அளவி 7.5 - உயிரிழப்புக்கள் 655,000

2010 ஜனவரி 12 - ஹெய்ட்டி - ரிக்டர் அளவில் 7.0 - உயிரிழப்புக்கள் 222,570

2005 அக். 8 - பாகிஸ்த்தான் ரிக்டர் அளவில் 7.6 - உயிரிழப்புக்கள் 80,361

எனினும் இவை அனைத்தையும் விட, தற்போது ஜப்பானில் தாக்கியுள்ள நிலநடுக்கத்தின் மக்னிடியூட் அளவு (8.9) அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.