Showing posts with label மாவீரர் நாள். Show all posts
Showing posts with label மாவீரர் நாள். Show all posts

Wednesday, November 27, 2013

யாழில் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர் தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பு

தமிழீழக் கனவுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காய் தம் இன்னுயிரை தியாகம் செய்து சாவினை தழுவிக்கொண்ட மாவீரக் குழந்தைகளுக்கு இராணுவக் கெடுப்பிடிகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தில் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று மாலை 6.01 இற்கு யாழ்ப்பாணத்தில் ஜப்பானின் ஜெயக்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட நவீன சத்திரசிகிச்சைக் கட்டிடத்தின் மேல்தளத்தில் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கட்டிடத்தின் மேல் தளத்தில் தீபம் சுடர் விட்டு எரிவதைக் கண்ட இராணுவத்தினர் வைத்தியசாலை வளாகத்தினுள்ளே ஓடி வந்ததால் வைத்தியசாலை வளாகம் போர்க்களமாக சில மணித்தியாலம் மாறியிருந்தது.

இதேவேளை யாழ்ப்பாணத்தின் சகல பகுதிகளிலும் இன்று மாலை இராணுவத்தினர் கடும் ரோந்துப் பணிகளை மேற்கொண்டனர். ஆனாலும் இராணுவத்தின் நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் மக்கள் தமது வீடுகளில் சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இதேவேளை நேற்று இன்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினரது அடாவடித் தனங்கள் அதிகரித்துக் காணப்பட்டது.
குறிப்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினீர்களா என கேட்டு இன்று மாலை இரண்டு இளைஞர்கள் இராணுவத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

இதை விட பல இடங்களில் இராணுவத்தினர் மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சூழலில் இராணுவம் குவிக்கப்பட்டு மக்கள் கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் சுடர் ஏற்றப்பட்டததைத் தொடர்ந்து கடும் பதற்றம் யாழ்.நகர் பகுதியில் நிலவி வருகின்றது.

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு

அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவுத்தூபிக்கு மாணவர்களால் சுடர் ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் மௌனப் பிரார்த்தனை மூலம் மாவீரர்களுக்கான தமது அஞ்சலியை இன்றையதினம் அமைதியான முறையில் செலுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம் ,பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு பதட்டம் நிலவுகின்ற நிலையிலும் எமது மண்ணுக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் யாழ்ப்பாணத்தில் பிரத்தியேகமாக பல இடங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20131127-140806.jpg
20131127-140815.jpg
20131127-140826.jpg
20131127-140838.jpg
20131127-140845.jpg

மாவீரர் தினம் தொடர்பாக அரசியல் வாதிகள் மற்றும் உலகத் தலைவர்களின் கருத்துக்கள்

மாவீரர் தினம் தொடர்பாக அரசியல் வாதிகள் மற்றும் உலகத் தலைவர்கள், தங்களது கருத்துகளை லங்காசிறி வானொலிக்கு வழங்கிய சிறப்பு செவ்வியில் தெரிவித்துள்ளனர்.
மாவீரர் தினம் அனுஸ்டிப்பது குறித்து கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கருத்து

அடுத்தகட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்கும்!- பழ.நெடுமாறன்

அடுக்கட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்க இருக்கிறது. அந்த போருக்கு இந்த பாசறையில் இருக்கும் போராளிகளும் பங்கேற்க வேண்டும் என்று பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
நவம்பர் 27 மாவீரர் தினம். உலகம் முழுவதும் உள்ள உணர்வாளர்கள் அனுசரிக்கும் நாள். இந்த நாளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர் தின அரங்க கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து கலந்து கொண்டனர். சின்னாளப்பட்டி தனியார் பள்ளி மாணவர்கள் 60 பேர் வந்து முற்றத்தை பார்த்தனர்.


விழாவில் நெடுமாறன் பேசும்போது.. முற்றத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். இது தமிழினத்தின் அவலத்தின் துயர சின்னம். இந்த முற்றம் இனி போராளிகளை உருவாக்கும் பயிற்சி களமாக பாசறையாக செயல்படும்.


அடுக்கட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்க இருக்கிறது. அந்த போருக்கு இந்த பாசறையில் இருக்கும் போராளிகளும் பங்கேற்க வேண்டும் என்று பேசினார்.

சுவிட்சலாந்து நாட்டின் எழுச்சியுடன் பல்லாயிரம் மக்கள் புடை சூழ மாவீரர் தினம்

சுவிட்சலாந்து நாட்டில் பல்லாயிரம் மக்கள் புடை சூழ மாவீரர் தினம் எழுச்சியுடன் ஆரம்பமானது.
அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் களைப் பெறுப்பாளர் ரகுபதி ஏற்றி வைத்தார்.
 பொதுச் சுடரினை இன்றைய நிகழ்வின் சிறப்பு அதிதி தமிழ் நாட்டில் இருந்து வருகைதந்த வீரசந்தானம் ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தாயக விடுதலையில் தம் உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களின் பெற்றார் உறவுகள் தொடர்ந்து சுடரேற்றி நிகழ்வு தாயக உணர்வுகளுடன் நடந்து வருகிறது.

Sunday, November 27, 2011

தமிழ்ஈழத்தில் மிக விரைவில் புலிக்கொடி பறக்கும் இந்நாளில் தமிழர்கள் உறதி ஏற்போம் – புலவர் புலமை பித்தன் (Video in)

தமிழீழத் தேசியத் தலைவருக்கு புலவர் புலமை பித்தன்அவர்களின் வாழ்த்து மற்றும் மாவீரர் நாள் சூளுரை .


2012 மாவீரர் தினம், சில்லறைச் சண்டை சச்சரவுகளையும் போட்டி பொறாமைகளையும் தவிர்த்து நடக்க இதய சுத்தியுடன் முயற்சியுங்கள்- இம்மானுவேல்!

ஈழத் தமிழர் அனைவரினாலும் மதிப்புடன் நினைவுகூரப்படும் மாவீரர் தினத்தை எமது தேசிய எழுச்சி நாளாக அனுட்டிக்கிறோம்.

2011 மாவீரர் தினம் தேசிய எழுச்சி நாள்

அன்புக்கும் மதிப்பிற்குமுரிய எனது தமிழ் ஈழ சகோதரங்களே

தேசிய வழிபாடு. உயிரை அர்ப்பணித்தவர்களை நினைவுகூருதல் எப்படி எழுச்சி நாளாகும். எமது நீண்ட விடுதலைப் போராட்டத்தில் சாவிலும் வாழ்வோம். வீழ்ந்தாலும் எழுவோம் எனத் திடம் கொண்டிருக்கின்றோம் என்பதுதான். ஆகையினால் தான் மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் உயிர் நீர்த்தவர்களை நன்றியுணர்வுடனும், வணக்கத்துடனும் நினைவு கூர்வதுடன் அந் நிகழ்வை ஊற்றாகக் கொண்டு மாவீரரின் வீரத் தியாகத்தின் உணர்வை உள்வாங்கி நாமும் வீரத் தியாகத்துடன் எழுச்சி பெற்று போராட எம்மைத் தயார் செய்கின்றோம். இத் தினத்திற்குரிய புனித தத்துவத்தை மாசுபடுத்தாது, அதை எமது இனத்தின் தேசிய வழிபாடு போல மதித்து நடந்து கொள்ளுமாறு எல்லோரையும் ஒழுங்குபடுத்தும் பணியாளர்களையும் பங்குபற்றும் பொது மக்களையும் பணிவுடன் வேண்டுகின்றேன்.

இப் புனித நிகழ்வை மாசுபடுத்தும் அல்லது கொச்சைப்படுத்தும் சில்லறைச் சண்டை சச்சரவுகளையும் போட்டி பொறாமைகளையும் தவிர்த்து நடக்க இதய சுத்தியுடன் முயற்சியுங்கள். இந்த ஆண்டு எம்மை எட்டும் தகவல்கள் மிக மிக மன வருத்தத்தைக் கொடுக்கின்றன..

முடிந்த முள்ளிவாய்க்காலும் தொடரும் போராட்டமும்

இந்த நாளின் நிகழ்வுகளை முள்ளிவாய்க்காலுக்கு முன்பு செய்தது போல எல்லாம் செய்ய முடியாததையிட்டு நாமும் எல்லோரும் வருந்துகின்றோம். ஆனால் இன்றைய சூழலுக்கும் தேவைக்கும் தற்போதைய சவால்களுக்கும் உகந்ததாக இந்நாளை அனுட்டிப்பதே நீதியும் பொருத்தமுமானது. அதாவது மக்களுக்கு தாயகம் மீட்க தன்னுயிர் நீர்த்த மாவீரரின் ஆழ்ந்த அர்ப்பணிப்பை நினைவுபடுத்தி இன்றைய சூழலில் நாம் எதிர்கொள்ளும் சவால்களையும், துன்பங்களையும் எதிர்த்து போராட தேவையான மக்கள் சக்தியைப் பெருக்க அவர்களுடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளுங்கள்

எமது போராட்டத்தின் புதிய மரிமாணத்தையும் சூழலையும் அதன் வெவ்வேறு சவால்களையும் தேவைகளையும் இன்னும் நாங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. முள்ளிவாய்க்கால் முடிந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் போராட்டத்தின் புதிய கட்டத்தை நடத்த வேண்டிய புலம்பெயர் மக்கள் அதிகமானோர் இன்னும் சரியாக தம்முடைய பங்கையும் பணிகளையும் விளங்கவில்லை. இத் தெளிவற்ற நிலையே இன்று எம் மத்தியில் இருக்கும் பிரச்சினைகள் பிரிவினை பலவற்றிற்கு காரணமாயிருக்கிறது.

முள்ளிவாய்க்காலினான் முன் போரும் போராட்டமும் வன்னித் தலைமைத்துவத்தின் கீழ் ஈழத்தில் நடந்தது. புலம்பெயர்ந்த மக்கள் உணர்விலும் உதவியிலும் ஒன்றித்திருந்தனர். ஆனால் இன்று வன்னித் தலைமைத்துவமும் இல்லை. அங்கு ஆயுதப் போருமில்லை. அங்கு எஞ்சி இருக்கும் எழுந்து நின்று உரியமுறையில் போராட சக்தியுமில்லை. வசதியுமில்லை. இந் நிலையில் புலம்பெயர்ந்த மக்கள் போர் முடிந்தாலும் போராட்டம் தொடரும், வீழ்ந்தாலும் எழுவோம் சாவிலும் வாழ்வோம் என்பதற்கு ஒப்ப போராட்டத்தை தொடருகின்றோம்.

போராட்டத்தின் கட்டமைப்புக்கள்

இப் புதிய கட்டத்திற்கு இலட்சியத் தெளிவு ஏற்படுத்த வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளவும் உறுதிப்படுத்தினோம். இவ்விலட்சியத்தை முன்னெடுத்துச் செல்ல ஏதுவாக ஒரு புதிய முயற்சியை நாடு கடந்த அரசாங்கம் என்ற கட்டமைப்பில் முயலுகின்றோம். எமது போராட்டத்தின் சர்வதேச சவால்களை சந்திக்கவும் செயல்படவும் ஏற்கனவே நாடுகளின் மட்டத்தில் செயற்பட்டு வந்த அமைப்புக்களை இணைத்து உலகத் தமிழர் பேரவையை ஆரம்பித்தோம். ஈழத்தில் எஞ்சியிருக்கும் எமது உறவுகளையும் அவர்களின் தேவைகள் உரிமைகளை பிரதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனும் பொருத்தமான உறவையும் தொடர்புகளையும் பேணி வருகின்றோம். இப்படி போராட்டத்தில் இலங்கை அரசாங்கத்திடமிருந்தும் சர்வதேசத்திடமிருந்துன் அமைப்புக்கள் மக்களை வரும் புதிய சவால்களையும் பிரச்சினைகளையும் சந்தித்து செயற்படுவதில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளையில் அந்தந்த நாடுகளில் இயங்கும் அமைப்புக்கள் மக்களை விசேடமாக இழையரை ஒன்றிணைத்து அவர்கள் சார்பில் அந்தந்த அரசாங்கங்களுடனும் அங்கேயுள்ள அரசுசார்பற்ற நிறுவனங்களுடனும், எமக்கு சார்பான பரப்புரைகளையும் பரிந்துரைகளையும் செய்ய முயலுகின்றோம். இது போராட்டத்தின் ஒரு முக்கிய இன்றியமையாத பகுதி

நிகழ்ச்சிகள் எமக்குள், போராட்டம் வெளி சக்திகள் அமைப்புக்களுடன்.

மக்கள் மத்தியில் நடக்கும் நிகழ்ச்சிகள் மக்கள் சக்தியை பெருக்குவதற்கு இன்றியமையாதவை. ஆனால் அவைகளைப் போராட்டமென்றாற் போல அவைகளிலே முழுக் கவனத்தையும் செலுத்தக் கூடாது. மனிதனுக்கு சாப்பிடுவது அல்லது சக்தி திரட்டுவது முக்கியம். ஆனால் அது வாழ்வாக அமைய முடியாது. செய்ய வேண்டிய பணியாக அமைய முடியாது. சக்தி திரட்டும் நிகழ்வுகளையும் போராடவேண்டிய சக்தி அமைப்புகளையும் சரியாக இனங்கண்டு கொள்ளவேண்டும்.

துரதிஸ்டவிதமாக இன்று சிலர் நினவுநாள் நிகழ்ச்சிகளையும் அமைப்புகளையும் மாத்திரம் மையப்படுத்தி நடக்கின்றர். நாம் இலட்சியத்தை மையப்படுத்தி அமைப்புகளையும் தனிநபர்களையும் இலட்சியத்தின் பணியாளர்களாக நடந்து கொள்வோமாயிருந்தால் நமது போராட்டம் வேகத்திலும் வீரத்திலும் முன்னேறும்.

எமது விடுதலைப் போராட்டத்தின் புதிய கட்டத்தின் தன்மையையும் சவால்களையும் உண்மையாக உணர்ந்து மும்முரமாகவும் முழுவீச்சுடனும் செயற்படவேண்டிய நேரமிது. ஈழத்தில் சிங்கள அரசாங்கம் இரவு பகலாக எம் மண்ணையும் மக்களையும் அழித்துக் கொண்டு வெளி நாடுகளில் பொய்ப்பிரச்சாரத்துடன் எமக்கெதிரான போரை மும்முரமாக விஸ்தரிக்கும் தருணத்தில் புலம்பெயர்ந்த மக்கள் முபொருபொழுதும் இல்லாத வகையில் போராட வேண்டிய நேரம் இது. தனித்தனி நாடுகள் ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் போராட நாம் எல்லோரும் அழைக்கப்படுகின்றோம்.

ஆகையினால் அன்பானவர்களே தளராத இலட்சிய உறுதியுடனும் தெளிவான பார்வையுடனும் ஆழமாக அர்ப்பணிப்புடனும் பொருத்தமான பங்களிப்பைச் செய்ய உங்களை பணிவுடன் அழைக்கின்றோம்.

பணியாளன் – எஸ்.யே. இம்மானுவேல்
ஜேர்மனி

ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் அழித்தாலன்றித் தமிழீழத் தாகத்தை யாராலும் அழித்துவிட முடியாது.

தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்துள்ள மாவீரர் நாள்ச் செய்தி,

தமிழீழ மக்களின் இனப்பிரச்சனையையும் அவர்களின் விடுதலைப் போராட்டத்துக்கான நியாயத்தையும் புரிந்துகொண்டு அழிக்கப்படும் ஓர் இனத்தின் விடுதலைக்காகப் போராடிவரும் எமதியக்கத்தின் மீது போடப்பட்டுள்ள தடைச்சட்டங்களை நீக்கி எமது மக்கள் நியாயமானதொரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு உலகநாடுகள் ஆதரவளிக்க வேண்டும். இனப்படுகொலையைப் புரிந்துவரும் சிங்கள ஆட்சியாளர்களின் பொய்ப் பரப்புரைகளைச் செவிமடுக்காமல் தமிழீழத்துக்கான தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்குமாறு இந்தியா உட்பட உலகநாடுகள் அனைத்தையும் வேண்டிநிற்கின்றோம்.

27.11.2011
எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று மாவீரர் நாள். எமது இனத்தின் விடுதலைக்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிருக்குயிரான வீரமறவர்களை நினைவு கூர்ந்து மதிப்பளிக்கும் புனித நாள். இது உலகத்தமிழினம் விடுதலைவேட்கை கொண்டு எழுச்சி கொள்ளும் மகத்தான நாள். தமிழரெல்லாம் தமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள்.


எமது விடுதலைப் பயணத்தின் முக்கியமான கட்டத்தில் இன்று நாம் நிற்கின்றோம். போராட்டம் இன்னும் ஓயவில்லை. தமிழீழத்தாகம் தீரவில்லை. மிகவும் கொடுங்கோன்மையான இராணுவச் சர்வாதிகார ஆட்சி தமிழர் தாயகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ளது. ஆயுத பலத்தின் மூலம் தமிழீழ மக்களைச் சிங்களப் பேரினவாதம் அடக்கியாண்டு நிற்கின்றது.


போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் போராட்ட இலட்சியம் மாறப் போவதில்லை. இழப்புக்களை எண்ணிச் சோர்வடையாமல் இலட்சியப் போராட்டத்தைத் தொடரும் பணி எமதாகும். இன்று தமிழீழத்துக்கான போராட்டம் தாயகத்தில் மட்டுமன்றி உலகளவில்; தமிழர்கள் வாழ்கின்ற எல்லாக் களங்களிலும் முனைப்புப்பெற்று நிற்கின்றது.

நீண்டதும் கடினமானதுமான தமிழீழத்துக்கான விடுதலைப் போரில் நாம் சந்தித்த இன்னல்கள், இடையூறுகள் ஏராளம். ஆனாலும் நாம் மனம் துவண்டு விடவில்லை. சவால்கள் நிறைந்த காலகட்டமாக இன்றைய நாள் இருப்பினும் அதுவே எமது நம்பிக்கைக்கான காலகட்டத்தின் திருநாளாகவும் இருக்கிறது.

தமிழர் வரலாற்றின் வழிவந்த வீரமரபை அடியொற்றிக் களமாடி மடிந்த விடுதலை வீரமறவர்களை ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து மதிப்பளிக்கும் மாவீரர் நாளாகஇ எமதியக்கத்தின் முதல் மாவீரர் லெப்.சங்கர் வீரச்சாவடைந்த நாளான நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தெரிவு செய்யப்பட்டது.

தமிழர் தாயகம் எதிரியின் பிடியில் வந்த பின்பு மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்தும் எதிரிப் படைகளால் சிதைத்தழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மணலாறு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்த அனைத்துத் துயிலுமில்லங்களும் சிதைக்கப்பட்டதோடு அவற்றின் மேல் இராணுவத்தினருக்கான கட்டடங்கள் கட்டப்படுகின்றன. தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் ஆறாத ரணத்தையும் சினத்தையும் ஏற்படுத்திய இந்தக் காட்டுமிராண்டிச் செயலுக்கு நிகரானதொன்றை நாகரிக உலகின் பிறிதெந்தப் பாகத்திலும் காணமுடியாது.

ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் அழித்தாலன்றித் தமிழீழத் தாகத்தை யாராலும் அழித்துவிட முடியாது. தமிழீழ விடுதலைப் போராட்டம் 2009 இல் முள்ளிவாய்க்காலைக் கடந்தும் தீராத தமிழீழத் தாகத்துடன் இன்னும் முனைப்புப்பெற்று நிற்கின்றது.

நவம்பர் 2011 இல் சிறிலங்கா அரசு நியமித்த “உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு” அண்மையில் தனது அறிக்கையை வெளியிட்டது. குற்றவாளிகளை இனங்காண்பதற்கும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த அறிக்கை வழிகோலும் எனக் கூறப்பட்டது. குற்றவாளிகளாகக் காண்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதி கூறினார். ஆனால் சிறிலங்கா அரசு நியமித்த ஆணைக்குழுவானது சிங்கள அரசின் தேவைக்கு உதவும் அறிக்கையையே வெளியிட்டது. உண்மையான குற்றவாளிகளான சிறிலங்கா அதிபர் ராஜபக்ச உட்பட அவருடைய சகோதரர்களையும் கொலைவெறியோடு தமிழ்மக்களைக் கொன்ற இராணுவத் தலைமையையும் அந்த ஆணைக்குழுவால் எப்படிக் குற்றவாளிகளாகக் காண முடியும்? இலங்கை அரசியல் வரலாற்றில் ஆணைக்குழுக்களும் அறிக்கைகளும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கை மாத்திரமே.

ஐ.நா. மனித உரிமைச் சட்டங்கள், போர் நெறிமுறைகள் மற்றும் உலக இராசதந்திர ஒழுங்குகள் போன்றவற்றையெல்லாம் சிறிலங்கா அரசு கேள்விக்குறியாக்கியுள்ளதுடன், போர்க்குற்றம் புரிந்த தனது இராணுவ அதிகாரிகளை இராசதந்திரிகளாகவும் தூதரக அதிகாரிகளாகவும் வெளிநாடுகளிலுள்ள சிறிலங்காவின் தூதரகங்களில் துணிச்சலாக அமர்த்தியுள்ளது.

இராணுவத்தளம், கடற்படைத்தளம், விமானப்படைத்தளம் உட்படப் பொருளாதார மையங்களையும் சிறிலங்காவில் அமைக்க உலகின் சில வல்லாதிக்க சக்திகள் போட்டியில் ஈடுபடுகின்றன. இதன்காரணமாகச் சிறிலங்கா அரசு செய்த போர்க்குற்றங்களை இந்நாடுகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த விழைகின்றன.சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட “சிறிலங்காவின் கொலைக்களம்” என்ற ஆவண ஒளிப்படத் தொகுப்பு உலக மனச்சாட்சியின் பார்வையை எம் மக்களின் பக்கம் திருப்பியிருப்பது நல்லதொரு அறிகுறியாகவே உள்ளது. அனைத்துலக ஊடகங்களால் கவனிக்கப்படாதிருந்த எமது மக்களின் அவலங்களை வெளிக்கொணர்ந்த சனல் 4 தொலைக்காட்சிக்கும், மனித உரிமை அமைப்புக்களுக்கும் ஆர்வலர்களுக்கும் எமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். போர்க்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதோடு தமிழர்களுக்கான ஓர் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை அனைத்துலகச் சமுகத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறும் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தமிழீழம் எமது கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு மரியாதை கிடைத்திருந்தது. முப்பத்து மூன்று ஆண்டுகளாகச் சிங்கள மொழித்திணிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. சிங்களக் குடியேற்றம் முற்றுமுழுதாகத் தடுக்கப்பட்டிருந்தது. தமிழீழத்தின் மீதான சிங்களப்படை வெறியர்களின் அடக்குமுறை, பொதுமக்களுக்கு எதிரான வன்கொடுமைகள், தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் என்பன தடுக்கப்பட்டிருந்தன.

ஆனால் தந்தை செல்வாவின் காலத்தில் தமிழர்களுக்கு இருந்த அறப்போராட்ட உரிமைகூட இன்று மறுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்க்கட்சிகள் உண்ணாநிலைப் போராட்டமோ – சட்டமறுப்போ – மறியல் போராட்டமோ – கதவடைப்போ – ஒத்துழையாமையோ – ஏன் ஒரு பொதுக்கூட்டம்கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. உலகச் சட்டங்கள் வழங்கியுள்ள அறவழியிலான போராட்ட உரிமை – கருத்துத் தெரிவிக்கும் உரிமை அனைத்தும் எமது தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன.

சிங்கள ஆட்சியாளர்கள், தமிழீழ மக்களின் கோரிக்கையை மட்டுமல்ல தமிழீழ மக்களின் உரிமை தொடர்பான உலகநாடுகளின் வேண்டுகோள்களையும் கூட ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. தமிழரின் தாயகப் பிரதேசமான வடக்குக்கிழக்கில் பூர்வீக அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. மூன்று இலட்சம் சிங்களப் படைகளாலும் அவர்களின் இராணுவக் காவலரண்களாலும் இன்றுவரை குடியேறிக்கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான சிங்களக் குடியேறிகளாலும் தமிழீழம் ஆக்கிரமிக்கப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னான இந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழீழ மக்களின் அரசியல் தீர்வுக்கான எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளாமல் அவர்களை இன்னமும் ஒரு அரசியல் வெறுமைக்குள் வைத்திருக்கவே சிறிலங்கா அரசாங்கம் முனைகிறது.

ஏற்கனவே இருந்த உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் எமது மக்கள் மீண்டும் குடியேற அனுமதிக்கப்படாத நிலையில் மேலும்பல தமிழர் வாழ்விடங்கள் இராணுவப் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுத் தமிழ்மக்கள் தமது வாழ்விடங்களுக்குச் செல்லமுடியாமல் தடுக்கப்படுகின்றனர். தமிழர் வாழ்விடங்களில் திட்டமிடப்பட்ட முறையில் கலாச்சாரச் சீரழிவு சிங்கள அரசால் பரப்பப்படுகிறது. கிறீஸ் மனிதன் போன்ற அசாதாரண சம்பவங்களை உருவாக்கித் தமிழ்மக்கள் மீது உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தியும் போரற்ற சூழ்நிலையிலுங்கூட மக்;கள் வாழ்விடங்களில் படையினரின் பிரசன்னத்தை அதிகரித்தும் எமது மக்களின் நாளாந்த வாழ்வியலைக் குழப்பி அவர்களைப் பதட்டநிலைக்குள் வைத்து அரசியல் செய்வதே இந்தச் சிங்கள ஆட்சியாளர்களின் நோக்கமாகும்.

தமிழீழ மக்களின் இனப்பிரச்சனையையும் அவர்களின் விடுதலைப் போராட்டத்துக்கான நியாயத்தையும் புரிந்துகொண்டு அழிக்கப்படும் ஓர் இனத்தின் விடுதலைக்காகப் போராடிவரும் எமதியக்கத்தின் மீது போடப்பட்டுள்ள தடைச்சட்டங்களை நீக்கி எமது மக்கள் நியாயமானதொரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு உலகநாடுகள் ஆதரவளிக்க வேண்டும். இனப்படுகொலையைப் புரிந்துவரும் சிங்கள ஆட்சியாளர்களின் பொய்ப் பரப்புரைகளைச் செவிமடுக்காமல் தமிழீழத்துக்கான தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்குமாறு இந்தியா உட்பட உலகநாடுகள் அனைத்தையும் வேண்டிநிற்கின்றோம்.

எமது விடுதலைக்கான போராட்டம் இன்று தமிழகம் தொட்டுத் தமிழர் வாழும் நாடுகள் அனைத்திலும் எழுச்சி பெற்றுள்ளது. இன உணர்வும் மொழிப்பற்றும் மேலோங்கியுள்ளன. தமிழர் என்ற பெருமிதம் தமிழர் நெஞ்சில் ஊற்றெடுத்துள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் அளவுக்குத் தமிழுணர்வும் தமிழீழ மக்கள் மீதான ஆதரவும் தமிழ்நாட்டிலே வலுப்பெற்றுள்ளன.

தாயகத் தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் ஒன்றிணைவதைத் தடுப்பதற்குச் சிங்களப்பேரினவாத அரசு கங்கணம் கட்டி நிற்கின்றது. பலம் பொருந்திய சக்தியாக உலகத்தமிழர் உருவாவதைத் தடுக்க உலக நாடுகளின் ஆதரவையும் வேண்டி நிற்கின்றது. புலம்பெயர் தமிழர்களின் பலத்தைக் குறைப்பதற்காகவும் மனிதநேயப் பணிகளை முடக்குவதற்காகவும் சதித்திட்டங்களும் சூழ்ச்சிகளும் அரங்கேற்றப்படுகின்றன.

புலம்பெயர் தேசங்களில் அறிவாளிகளாகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும் வளர்ந்துவரும் தமிழ் இளையோர் தம்மீது தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் வைத்துள்ள அபரிமிதமான நம்பிக்கையை உணர்ந்து தமிழீழத்தின் விடியலுக்காகத் தொடர்ந்தும் அயராது உழைக்கவேண்டும். எமது தாயகத்தில் சிங்கள இராணுவ நெருக்குவாரத்துக்குள்ளும் சிறிலங்கா அரசின் சிறைகளுக்குள்ளும் வாடும் தமது வயதையொத்த இளையவர்களின் எதிர்காலத்தைச் சிறப்பாகக் கட்டமைக்கும் பொறுப்பும் கடமையும் தமக்கு உள்ளது என்பதைப் புரிந்துகொண்டு தாயக விடுதலைக்கான தமது முழுமையான பங்களிப்பை ஆர்வமுடன் செய்ய விரைந்து முன்வரவேண்டுமென அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்;.

எமக்கு முன்னால் எழக்கூடிய எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து தமிழரின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடுவோம். இழப்புக்களைக் கண்டு அஞ்சாமல் தளராத உறுதியுடன் தொடர்ந்து போராடும் மக்களே இறுதியில் வெற்றிபெறுவாரென்ற உண்மையை நெஞ்சில் நிறுத்தி நாம் செயலுறுதியுடன் போராடுவோம். காலம் இட்ட கட்டளைப்படி தமிழ்மக்களின் இருப்பைத் தக்கவைக்கும் தீர்வான தமிழீழத்தனியரசு கிடைக்கும் வரை நாம் எல்லா வழிகளிலும் தொடர்ந்து போராடுவோம்.


எமது மாவீரர்களின் வீரம் செறிந்த போராட்ட வாழ்வையும் எமது விடுதலைக்காக அவர்கள் புரிந்த மகத்தான ஈகங்களையும் நினைவுகூரும் இன்றைய நாளில் எத்தகைய துன்பங்களும் சவால்களும் எதிர்வந்தாலும்; தமிழீழத் தனியரசை வென்றெடுக்கும் வரை தளராது போராடுவோம் என்று நாம் உறுதி கூறுகின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்”

தமிழீழ விடுதலைப் புலிகள்

தமிழீழம்.

எமது மக்களுக்காக, எமது மக்களது உயிர்வாழ்விற்காகத் தமது உன்னதமான உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு இன்று நாம் தலைதாழ்த்தி வணக்கம் செலுத்துகிறோம்: நாம் தமிழர் கட்சியின் மாவீரர் தின அறிக்கை..

என் உயிருக்கு இனிப்பான தாய் தமிழ் உறவுகளே,

வணக்கம். கடல் கோள்கள் பல தோன்றியும் அழிந்திடாத, அழித்திட முடியாத மானுடத்தின் மூத்தக் குடியான தமிழினம், வரலாற்றின் ஒரு சில நூற்றாண்டுகளில் அதனை வழிநடத்திச் செல்லும் தலைமை அற்றிருந்த ஒரு காலத்தில் தனது ஆட்சிமையை இழந்திருந்த நிலையை பயன்படுத்திக்கொண்டு, காலனி ஆதிக்கம் செய்த ஐரோப்பியர் வெளியேறியதும், இனப் பெரும்பான்மையை பயன்படுத்திக்கொண்டு, இலங்கையில் நமதருமைத் தமிழினத்தின் மீது சிங்கள, பௌத்த இனவாத அரசியல் தலைவர்களும், ஆட்சியாளர்களும் பூட்டிய அடிமைத் தளையை உடைத்தெறிய, தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் உருவாக்கிய விடுதலைப் படையில் தம்மை இணைத்துக்கொண்டு, அந்த மாபெரும் வீரப்போரின் வெற்றிக்காக தம்மையே ஈகையாகத் தந்த மாவீரர்களை உலகத் தமிழினம் நன்றியோடு நினைத்துப் பார்க்கும் உன்னத நாள் நவம்பர் 27.

நமது பெருமைக்குரிய பாட்டனார்கள் தங்களிடம் இருந்ததைக் கொடுத்த கொடையாளிகளாக இருந்தனர். ஆனால் நமது மாவீரர்கள் தங்கள் உயிரையே கொடையாக அளித்து இனத்தின் மானம் காத்துள்ளனர். உயிரினும் பெரிது இனம், அதனினும் பெரிது அதன் மானம். ஆயிரம் ஆண்டுகளாக அடிமையாய் வாழ்வதைவிட சுதந்திரமாக சாவது மேலானது. அதுவும் அந்தச் சுதந்திரத்திற்காக சாவது அதனினும் மேலானது. தமிழ் இனத்தின் விடுதலை என்பது இவ்வுலகில் உள்ள எதனினும் பெரிது எனும் உன்னத இலட்சியத்தோடு விடுதலைக் களம் புகுந்து, உலக வாழ்க்கை, குடும்பம், பாசம், பற்று, சொந்தம், பந்தம், நட்பு என்று அனைத்து உறவுகளையும் அறுத்தெறிந்துவிட்டு, என் இனத்தின் எதிர்காலம் வாழ என்னையே தருகிறேன் என்று உறுதி பூண்டு, சிங்கள பௌத்த இனவாத அரசியல் பெற்றெடுத்த அரச பயங்கரவாதத்தை எதிர்கொண்டு அதன் அடக்குமுறை முதுகெலும்பை உடைத்தெறிந்து தமிழீழ தேசத்தை உலகிற்கு அடையாளம் காட்டிய பெருமைக்குரியவர்கள் நமது மாவீரர்கள்.

'எமது மண்ணுக்காக, எமது மக்களுக்காக, எமது மக்களது உயிர்வாழ்விற்காகத் தமது உன்னதமான உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு இன்று நாம் தலைதாழ்த்தி வணக்கம் செலுத்துகிறோம். எமது மாவீரர்கள் மகத்தான லட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கிற உயரிய லட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த லட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்" என்றார் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் தியாகத்தை ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் நாம் நினைவுகூர்ந்து எழுச்சி பெற்று வருகிறோம். இந்த நாள், நமது தேசியத் தலைவர் கூறியதுபோல், ஒருபோதும் துக்க நாள் அல்ல, ஏனெனில் நமது மாவீரர்கள் வீழ்ந்ததெல்லாம் நாம் அழுவதற்காக அல்ல, எழுவதற்காகவே. தன் உயிரை ஆகுதியாக்கி இனத்தின் விடுதலை எனும் யாகத்தை நடத்திய நமது மாவீரர்களின் வீரவரலாற்றில் இருந்து படிப்பினைகளைப் பெற்று, எந்த இலட்சிய இலக்கை அடைய அவர்கள் எந்த தியாக வேள்வியில் தங்களை கரைத்துக் கொண்டனரோ, அந்த வேள்வியில் தன்னலம் பாராது நம்மை நாம் மேலும் உறுதியுடன் இணைத்துக் கொண்டு போராட உறுதி செய்துகொள்ளும் நாள் இது.

சங்க கால இலக்கியகங்களிலும், இந்த ஈராயிரம் ஆண்டுகளில் சில நூற்றாண்டுகளில் வரலாற்றிலும் பதிவான தமிழினத்தின் வீர வரலாறு ஈழத் தமிழ் மண்ணில் வெளிப்பட்டது. அந்த வீரகாவியமே, தமிழினத்தின் கைகளில் உள்ள அத்துணை காவியங்களில் கூறப்பட்ட வீர வரலாறுகள் யாவும் உண்மையே என்பதை பறைசாற்றியது. அப்படிப்பட்ட ஒரு மாபெரும் விடுதலைப் போராட்டத்தை, தமிழினத்தின் வீறுகொண்டெழுந்த இலட்சியப்போரை, ஒன்று, இரண்டல்ல, தெற்காசிய வல்லாதிக்கங்களுடனும் சேர்த்து 20 நாடுகள் சதித்திட்டம் தீட்டி, தமிழரின் விடுதலைப் போராட்டத்தை�பயங்கரவாதம்" என்ற ஒற்றை வார்த்தையைப் பயன்படுத்தி, சிங்கள பௌத்த இனவாத அரசு கட்டவிழ்த்துவிட்ட அரச பயங்கரவாதத்தை மறைத்து, 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்று கூறி, தமிழ் இனத்தையும், அதன் நியாயம் சார்ந்த அரசியல் விடுதலைப்போராட்டத்தையும் அழித்தொழிக்க முற்பட்டன, அதில் மிகப் பெரும் அளவிற்கு வெற்றியும் பெற்றன.

எந்த இனத்தின் விடுதலைக்காகவும், நிரந்தர பாதுகாப்பிற்காகவும் ஆயுதம் ஏந்தினரோ, அந்த மக்கள் அனைவரையும், பல இட்சக் கணக்கில் முள்ளிவாய்க்கால், வட்டுவாடல் ஆகிய இரு சிறிய கிராமங்களுக்குள் சுற்றி வளைத்திட்ட நிலையில் முற்றிலுமாக அழித்தொழிக்க படு பயங்கர தாக்குதல் தொடுத்த வேளையில்தான், அவர்கள் பாதுகாப்புடன் வெளியேற தங்களின் துப்பாக்கிகளை மௌனிக்கின்றோம் என்று உலக நாடுகளுக்கு அறிவித்துவிட்டு, எதிர்த்தாக்குதலை நிறுத்தினர்.

நமது மாவீரர்களின் அந்த அறிவிப்பு போரை நிறுத்தும், பசியால், பட்டினியால், எதிரியின் தாக்குதலால் படுகாயமுற்று முடங்கிக் கிடந்த மூன்றரை இலட்சம் பேரைக் காக்கும் என்று நாம் எதிர்பார்த்தோம். உலக நாடுகளும் எதிர்பார்த்தன. ஆனால் போரை நிறுத்த வெள்ளைக் கொடியேந்திச் சென்றவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அதிபயங்கரமான ஒரு பெரும் தாக்குதல் நடத்தி பல பத்தாயிரக்கணக்கான மக்களைக் கொன்றொழித்து போர் முடிந்ததாக சிங்கள இனவாத அரசு அறிவித்தது.

எந்தப் போரை முடித்துவிட்டதாக சிங்கள பௌத்த இனவாத அரசு கூறியதோ, அந்தப் போர்தான், தமிழரின் உன்னதமான விடுதலையை வென்றெடுக்க, தேசியத்தலைவரால் தொடங்கப்பட்ட அந்தப் போர்தான் இன்று உலக அளவில் ஜனநாயக அரசியல் பாதையில் தமிழினம் முன்னெப்போதும் காட்டாத புத்தி வீரியத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

உலக வல்லாதிக்கங்களின் நேரிடையான ஆயுத உதவிகளுடனும், மறைமுக இராஜதந்திர ஆதரவுடன் வலிந்து கைப்பற்றிய தமிழீழ தேசத்தை, எஞ்சியுள்ள அதன் மக்களை எல்லா வகையிலும் சிதைத்து சின்னா பின்னப்படுத்தி வருகிறது சிங்கள பௌத்த இனவாத அரசு. நமது இளம் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். நமது மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்படுகிறது. புலம் பெயர்ந்து வாழும் மக்களின் சொத்துக்களை கபளீகரம் செய்யவே மறுபதிவு என்று திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது சிங்கள அரசு.

தமிழீழ தேசத்தின் நகரங்கள் அனைத்தும் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு, பெரும் முகாம்களும், குடியிருப்புகளும் கட்டப்பட்டு, முழுமையான இராணுவ நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. முகமூடி அணிந்தவர்கள், கிரீஸ் மனிதர்கள் என்று பல்வேறு வேடமணிந்து தங்களை மறைத்துக் கொண்ட சிங்கள காடையர்கள், தமிழ் மக்களின் துயரத்தை நாளுக்கு நாள் பெருக்கி வருகின்றனர்.

இவை யாவும் தெரிந்தும் கண்டு கொள்ளாமல் இராஜ தந்திர மௌனத்தை கடைபிடித்து வருகிறது சர்வதேசம். அதற்குக் காரணம் தெற்காசிய நாடுகளின் சந்தைகளைச் சார்ந்து வாழ வேண்டிய பொருளாதார நெருக்கடி. இப்படி எல்லா முனைகளிலும் தமிழீழ தேசத்து மக்கள் ஆக்கிரமிப்பிற்கும், மிரட்டல், உருட்டல்களுக்கும் ஆளாகியுள்ள நிலையில், அவர்களால் விடுதலைப்போராட்டத்தை முன்னெடுவியலாது என்பதைப் புரிந்துகொண்ட சிங்கள பௌத்த இனவாத அரசு, தனது தெற்காசிய நண்பர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரு தீர்வைத் திணித்திட பெரும் முயற்சி செய்து வருகிறது.

அதுதான் இலங்கையிலும், டெல்லியிலும், வாஷிங்டனிலும் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள். இவர்கள் கூறும் தீர்வு என்பது ஈழத் தமிழினத்தின் அரசியல் வேட்கைகளை நிறைவு செய்ய அல்ல, தீர்வு எனும் போர்வையில் விடுதலைப் போராட்டத்திற்கு முடிவு கட்டவே முற்பட்டுள்ளனர்.

உலகில் நமது விடுதலையைப் பற்றி நிமிர்ந்து பேசக்கூட அனுமதிக்க மறுக்கும் நாடுகள், நமக்காக கண்ணீர் சிந்தாத நாடுகள், நமது துன்பத்தைத், துயரத்தைச் சற்றும் பொருட்படுத்தாத நாடுகள், நமக்கான, நாம் எதிர்பார்க்கும் தீர்வைத் தருவார்கள் என்று நம்புவது கேலிக்கூத்தாகும். நமது மூச்சுக்காற்றை நாமே சுவாசிப்பது போல, நமக்கான உணவை நாம் உண்பதுபோல, நமக்கான விடுதலையை நாம்தான் போராடி பெற வேண்டும். நாம் நமக்குள் தமிழ்நாட்டிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் தமிழனத்தின் அரசியல் விடுதலைப் போராட்டம் ஆழமாகவும் பரவலாகவும் வலிமையுடன் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழின அழிப்புப் போர் நடைபெற்ற காலத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட தமிழின அரசியல் எழுச்சி, போரைத் தங்கள் அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக்கொண்ட, போரை நிறுத்தத் தவறிய அரசியல் சக்திகளைப் புறக்கணித்து, ஒரு புதிய அரசியல் கட்சியின் தோற்றத்திற்கு வித்திட்டது. தமிழின விடுதலையை, அரசியல் உரிமை மீட்பை மையப்படுத்தி நாம் தமிழர் என்கிற ஒற்றை அடிப்படையுடன் அக்கட்சி சீரிய வகையில் செயல்பட்டதன் விளைவே இன்று தமிழின அரசியலுக்குப் பலமான கால்கோளை இட்டுள்ளது.

இதற்குக் காரணம் இனத்தின் நலனைப் பேணுபவர் யார், அதனை அரசியலாக்கி பயன்பெறுவோர் யார் என்பதில் தமிழினம் காட்டிய புரிந்துணர்வே. அது புலம் பெயர்ந்த தமிழர்களிடையேயும் மலர வேண்டும். அப்படிப்பட்ட சரியான புரிதலே தமிழினத்தின் மீட்சிக்கு கால்கோளாக தமிழின ஒற்றுமையை உறுதிப்படுத்தும். தெளிவான அரசியல் புரிதலுடனான தமிழின ஒற்றுமையின் மூலமே தமிழீழ தேசத்தைச் சிங்கள பௌத்த இனவாத பிடியில் இருந்து மீட்கவல்ல பாதையை நமக்குத் திறக்கும்.

அரசியல் புரிந்துணர்வுடன் கூடிய ஒற்றுமையை உருவாக்கி, பலப்படுத்தி, தமிழீழ விடுதலையை நோக்கிப் போராடுவோம். நமது உன்னத இலட்சியப் போராட்டத்திற்கு நமது மாவீரர்களின் தியாகம் உடைக்க முடியாத பெரும் பலமாக நமக்குத் துணை நிற்கும். சத்தியம் நமக்குச் சாட்சியாக இருக்கிறது, வரலாறு நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது, இதில் ஆயிரம் ஆயிரம் கனவுகளுடன் வீர விதைகளாக மண்ணில் புதைந்த நம் மாவீரர்களின் இலட்சியம் நம்மை வழிநடத்தும்.

இனத்தின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த நம் மாவீரர்களின் நினைவுகளைப்போற்றுவோம். ஈழ விடுதலை என்பது என் விடுதலை, ஒவ்வொரு தமிழனுக்குமான தாயக விடுதலை, உலகெங்கும் பரவி வாழும் 12 கோடி தமிழினத்திற்குமான தேச விடுதலை.

'எமது தேசத்தின் விடுதலைக்காகச் சாவை அரவணைத்து சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்களை நினைவுகூறும் இன்றைய நன்னாளில் எந்த லட்சியத்திற்காக ஆயிரமாயிரம் விடுதலைவீரர்கள் களப்பணியானார்களோ அந்த லட்சியத்தை அடைந்தே தீர்வோமென உறுதியடுத்துக் கொள்வோமாக� என்றால் தேசியத்தலைவர். அவர் வழியில் நின்று விடுதலை இலட்சியத்தை எட்ட உறுதியுடன் ஒற்றுமையுடன் போராடுவோம்..

தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்...

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

சீமான்

Wednesday, November 23, 2011

மாவீரர் நாள்… எங்கள் தேசத்தின் பெரு வலி! எங்கள் தேசியத்தின் புத்துணர்ச்சி! எங்கள் மீள் எழுச்சியின் முகவரி!

தேசியத் தலைவர் அவர்களால், எங்கள் காவிய நாயகர்களுக்காகப் பிரகடனப்படுத்தப்பட்ட புனித நாள். எங்கள் தேசம் மீண்டும் சிங்கள ஆட்சியாளர்களிடம் வீழும்வரை, மாவீரர் நாள் தமிழீழத்தின் தேசிய எழுச்சி நாளாகக் கோலம் கொண்டது. தமிழீழம் மட்டுமல்ல, தமிழர் வாழு நாடுகளை அது பற்றிப் படர்ந்து பரணி பாட வைத்தது.

இந்த நாள் எமக்கான மகத்துவமான புனித நாளாகப் புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றாய் எழுந்து, எழுச்சியுடன் வீர வணக்கம் செய்தார்கள். புலம்பெயர் தேசங்களில் அந்தக் காவிய நாயகர்களது நினைவு வணக்க நாளை எழுச்சியுடன் நடாத்தும் செயற்பாடுகள் தேசியத் தலைவரால் விடுதலைப் புலிகளது புலம்பெயர் கட்டமைப்புக்களிடம் விடுக்கப்பட்டது.

காலப் பெரு வெள்ளத்தாலும் அழியாத காவிய நாயகர்களை மீள எழுப்பி உறவாடும் நாளை முள்ளிவாய்க்கால் பேரவலம் தாண்டியும் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்கள் எழுச்சியுடன் நடாத்தியது வரலாறு.

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடி சூடும் தமிழுக்காய், புலிக் கொடியேந்திப் போரில் களமாடி வீழ்ந்த எம் தேசத்தின் வேங்கைகளுக்குப் புலம்பெயர் தமிழர்கள் மலர்கொண்டு அர்ச்சிக்கும் நிகழ்வு இன்று வரலாற்றுப் பேரவலத்தை எதிர்கொண்டுள்ளது. தமிழ்த் தேசியத் தளங்களைக் குறி வைக்கும் சிங்கள ஆட்சியாளர்கள், இந்த மாவீரர் தினத்தைப் பிளப்பதனூடாக அந்த வீர மறவர்களின் தாயகக் கனவைச் சிதைத்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் எங்கள் மத்தியில் புதிய போர்க் களம் ஒன்றைத் திறந்துள்ளான்.

புரியப்படாத சில காரணங்களுடன் மாவீரர் தினத்தைச் சிதைப்பதற்கு எம்மவாகளே எதிரிக்கு உதவுவது போன்று, இதுவரை காலமும் விடுதலைப் புலிகளது புலம்பெயர் கட்டமைப்புக்களால் நிகழ்த்தப்படுவந்த மாவீரர் தினத்திற்குப் போட்டியாக, புலம்பெயர் நாடெங்கும் போட்டி மாவீரர் தினத்தை நடாத்துவதற்கு முயற்சி செய்கின்றனர்.

தேசியத் தலைவரது கட்டளைகளை மீறுபவன், அவரது சிந்தனைகளை உதாசீனம் செய்பவன், அவரது தமிழீழ விடுதலை இலட்சியத்தை எதிரியுடன் சமரசம் செய்து கொள்பவன் யாராகவிருந்தாலும் அவனைத் தமிழீழம் மன்னிக்காது, வரலாறு மன்னிக்காது, மாவீரர்களும் மன்னிக்கமாட்டார்கள். விடுதலைப் புலிகளால் கட்டி எழுப்பப்பட்ட புலம்பெயர் தேசியத் தளத்தைச் சிதைத்துவிட்டு, மறுபடியும் ஒரு மண் குடிசையைத்தானும் கட்டுவதற்கு எவராலும் முடியப் போவதில்லை. அதனால்தான், எதிரி திட்டமிட்ட வகையில் மாவீரர் தினத்தைக் குறிவைத்து நகர்கின்றான்.

எனவே, புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள் எதிரிகளின் சூழ்ச்சிக்குப் பலியாகிவிடாமல், மாவீரர் கனவுகளுக்கு வடிவம் கொடுக்க, புலம்பெயர் தேசங்கள் தோறும் தொடர்ந்து பணியாற்றும் தமிழ்த் தேசிய தளங்களுடன் இணைந்து நின்று, இன்று நடைபெறும் வரலாற்றுச் சதியினை முறியடிக்க வேண்டும்.

கார்த்திகை மாதம், எங்கள் வல்லமைக்காக எங்கள் மாவீரர்களுக்கு கார்த்திகைப் பூ வைத்து வணங்கும் நாளுக்கான மாதமும் அதுதான். எங்கள் தேசத்தின் அடிமை விலங்ககற்றி, எம்மைச் சுதந்திர வாழ்வுக்குரிய மனிதர்களாக மாற்றம் கொள்ள வைத்து, தேசிய விடுதலைக்காக எம்மைக் களமிறக்கிய வீரத் தமிழன் பிரபாகரன் அவர்களை எமக்குத் தந்த மாதமும் கார்த்திகைக்கான சிறப்பாக உள்ளது.

தமிழினத்தைத் தலை நிமிர வைத்து, அவனியெங்கும் முகவரிகள் பெற்றுத்தந்துவிட்டு, விடுதலைக்கு வித்தான வேங்கைகளைத் தொழுவதற்காகவே, அந்த மாதத்தில் கார்த்திகைப் பூக்களும் சிலிர்த்துப் பூச் சொரியும் அதிசயமும் அந்த மாதத்தின் தனியழகு. தமிழீ மண்ணில் சிங்கள தேசம் நடாத்தி முடித்த இன அழிப்பின் பின்னரும், இந்தக் காந்தள் மலர்கள் கல்லறைப் பூக்களுக்கு அஞ்சலி செலுத்துவதை சிங்களத்தால் இன்றும் தடுக்க முடியாததாக காட்சியாக உள்ளது.

தமிழீழம் தலை சாய்த்து வணங்கிய மாவீரர்களது கல்லறைகளும் சிங்களத்தால் சிதைக்கப்பட்டு, உலகத் தமிழினத்தின் உணர்வுகளுக்குச் சவாலாகிப் போன காலங்களில், நாம் இன்னமும் ஒன்றாகிப் பலமாகி ஒரே தளத்தில் நின்று எங்கள் மாவீரர்களை வணங்குவோம்!

தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

Monday, November 21, 2011

மாவீரர் வாரம்‏

மாவீரர்களின் மரணம் என்பது ஒரு வரலாற்று நிகழ்வு, புனிதமான ஒரு விடுதலைப்பயணத்தில் தம் இன்னுயிரை துறந்த அந்த உன்னத மனிதர்களின் நினைவை நெஞ்சில் நிறுத்தி அவர்களின் விடுதலைப்பயணத்தை தொடர்வதே ஒவ்வொரு தமிழரினதும் கடமையாகும், தமிழீழ விடுதலை என்ற நீண்ட பயணத்தின் பெறுமதிமிக்க மைல்க்கற்கள் எங்கள் மாவீரர்களே.

நவம்பர் மாதத்தின் 21ம் நாள்தொடக்கம் 27ம் நாள்வரையிலான ஒருவாரகாலம் எம் மாவீரர்களின் இலட்சியத்தியாகத்திற்க்காக அவர்களை வணங்கி நிற்க்கும் வாரம். விடுதலை என்பது மிக அதிக தியாகங்களினால் பெறப்படும் ஒன்று தமிழர்களின் அந்த விடுதலைக்காக தமது சொந்த வாழ்க்கையைத்துறந்து மிகப்பெரும் தியாகங்கள் புரிந்து வீரமரணம் அடைந்தவர்கள் எங்கள் மாவீரர்கள்.

நீர், உணவு, உறக்கம் என அவசியத்தேவைகளை மறந்து எம் மக்களின் விடுதலைக்கும், பாதுகாப்பிற்க்கும் அயராது பாடுபட்ட அந்த உன்னதமான எங்கள் உறவுகளை நிகழ்காலத்தின் கடவுள்கள் என்று சொல்வது எல்லாவிதத்திலும் தகும்.

எத்தனை இடரிலும் துயரினிலும்,இலட்சியத்தில் நிலைதடுமாறாமல் போராடி வீழ்ந்த அந்த உன்னத வீரர்களை நாங்கள் போற்றிவணங்கிய துயிலுமில்லங்கள் கூட நாகரிகமும், மனிதாபிமானமும்மற்ற கொடிய அரசுகளால் அழிக்கப்பட்ட போதும் தமிழர்களினது மனங்களிலிருந்து அழிக்கப்படவில்லை என்பது 2009 மாவீரர்தினத்திலிருந்து எதிரிக்கும், உலகுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது, அந்த நிலையையும் மாற்றிவிட நினைக்கின்ற கயவர்களுக்கு இந்த வருட மாவீரர் எழுச்சிநாள் கோடிட்டு காட்டிவிடும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை. குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் எவ்வித குழப்பமுமில்லாமல் வழமைபோல இம்முறையும் மாவீரர்தினத்தில் கலந்து கொள்வார்கள் என்ற நிலை சமகால நிகழ்வுகளிலிருந்து தெரிகின்றது.

மாவீரர்வாரத்தின் இறுதி நாளில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தலைவரின் உரை நிகழும் அந்த நேரத்தை யாரும் பயன்படுத்தவோ, முக்கியமாக உரைநிகழ்த்தவோ வேண்டாமென எல்லாத் தமிழர்களையும் போல நாமும் சம்மந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம், அந்த நேரம் எமது தேசியத்தலைவரின் உரைநிகழும் உன்னத நிமிடங்களென்பதாலேயே இந்த வேண்டுகோள் என்பது புரிந்துகொள்ளப்படவேண்டும்.(இருண்ட மேகம் விலகும் போது தலைவர் உரை மீண்டும் இதே கார்த்திகை 27 - ல் உலகமெங்கும் ஒலிக்கும்) இவ்வேண்டுகோள் யாருக்கான புறக்கணிப்பல்ல, தேசியத்தலைவருக்கான மரியாதை என்பதை விளங்கிக்கொள்ள வேண்டுமென்பதே தமிழ்மக்களின் அவா.

ஒவ்வொரு தமிழரும் மாவீரர்வாரத்தில் இயலுமான வரை களியாட்ட நிகழ்வுகளைத் தவிர்த்து தமிழர் தேசிய எழுச்சிநாளை அனுட்டிக்க வேண்டுமென்பதே தமிழர்களின் வேண்டுகோள். புனிதமான அந்த வீரர்கள் உயிர்துறந்தது எமது சுதந்திர வாழ்க்கைக்காகவே. உலகம் வியர்ந்து நின்ற தமிழரின் வீரம் மங்கிவிடுவதில்லை என்பது நாமடையும் சுதந்திர தேசத்தின் எழுச்சியிலிருந்து வெளிப்படும், அதுபோல உள்ளங்களிலும் இல்லங்களிலும் தியாக உறவுகளின் நினைவெழுச்சியே எமது விடுதலைக்கும் உயிரூட்டும் என்பதே உண்மை.

"சத்திய இலட்சியத்தீயில் தம்மையே ஆகுதியாக்கிய மாவீரர்களின் வழியில் சென்று, நாமும் எமது இலட்சியத்தை அடைவோம்" என்ற தலைவரின் கூற்றுக்கிணங்க மாவீரர்களைப்போற்றி வணங்கி, அவர்களின் இலட்சியப்பயணத்தைத் தொடர்வோம்.

-ராஜேஸ் (விடுதலை பெற்று தமிழீழத்தில் சந்திப்போம்)

Sunday, November 28, 2010

லண்டனில் 40,000 மேற்பட்டோர் கலந்துகொண்ட வரலாறு காணாத மாவீரர் தினக் கூட்டம்

லண்டனில் காலை 11.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை இந் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் அதன் முக்கிய நிழ்வுகள் சில படங்கள்

லண்டன் எக்ஸெல் மண்டபத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. காலை 11.00 மணிக்கு ஆரம்பமான இந் நிகழ்வுகளில் பெரும் தொகையான மக்கள் கலந்துகொண்டதோடு, மண்டபமும் நிரம்பி வழிந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. மாலை 6.00 மணிவரை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை முதல் மாலை 5.00 மணிவரையிலான நேரத்தில் சுமார் 40,000 ஆயிரம் பொதுமக்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு அகல் விளக்கு ஏற்றி தமது அஞ்சலியைச் செலுத்தினர். மாலை 6.00 மணி வரை மக்கள் கூட்டம் அலையெனத் திரண்டு வந்துகொண்டு இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

நோர்வே ஒஸ்லோவில் நடைபெற்ற தேசியமாவீரர் நாள் நிகழ்வு

 நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அமைந்துள்ள Valle Hovin உள்ளரங்க விளையாட்டு மண்டபத்தில் கார்த்திகை மாதம் 27ம் நாள் சனிக்கிழமை மதியம் 12.45 மணிக்கு மாவீரர் நாள் நிகழ்வுகள் மக்களின் பேராதரவோடு உணர்வுபர்வமாக கொண்டாடப்பட்டது.

இன்னும் சில ஆண்டுகள் நாம் காத்திருக்க வேண்டிய் நிலைவரினும்,எத்தனை வெங்கொடுமைகளை எதிரி எம்மீது வலிந்து திணித்தாலும்,விலைபோகும் பிறப்புக்களை விலைபேசித் தன்வசப்படுத்தினாலும், எம்தலைவன் எமக்குத்தந்த இலட்சிய இலக்காம் தமிழீழத்தனயரசின் இலட்சிய வேட்கையை மானமுள்ள தமிழனிடம் இருந்து எவரும் விலைபேசிட முடியாது என்பதனை நோர்வே வாழ் தமிழ் மக்கள் புரிந்தும் புரியாதவர்போல், அறிந்தும் அறியாதவர்போல்,தெரிந்தும் தெரியாதவர்போல் நடப்போர்க்கும் ,புலத்துத் தமிழனின் இலட்சிய இலக்கை புரியாது நடக்க,நடத்த முற்படுவோர்க்கும், இவ்வுலகிற்கும் மீண்டும் ஒருதடவை உறுதிபட உறைக்க வெளிக்காட்டியுள்ளார்கள்.

12.45 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த சர்வோதயன். சத்தியானந்தன் அவர்களால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த திரு.நடராசா.நவரத்தினராசா அவர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அதன்பின் அனைத்துலகச் செயலகத்தின் அறிக்கை வாசிக்கப்பட்டது. இவ் அறிக்கையின் முக்கிய சில கருத்துக்கள் ஆங்கிலத்தில் பிறமொழி பேசுவோரும் வருகை தந்திருந்த காரணத்திற்காக வாசிக்கப்பட்டது. தொடர்ந்து மணிஒலி ஒலிக்கப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டது. திரு பெரியசாமி மணியரசன் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றிவைக்க தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேளைகளே பாடல் மாவீரர்களை நினைவு கூரும் காட்சிப் படிமங்களோடு வெண்திரையில் விரிந்தது.
பாடல் நிறைவடையும் வரை மக்கள் எழுந்து நின்று மனமுருகித் தலை வணங்கினார்கள்.தொடர்ந்து மாவீரர் குடும்பங்கள் எம் மாவீரச் செல்வங்களுக்கு முதல் வணக்கம் செலுத்த, பொதுமக்ககளும் மலர்தூவி,சுடர்ஏற்றி வணக்கம் செலுத்தினர்.தொடர்ந்து தமிழீழத் தாய் நாட்டிற்காகத் தமது இன்னுயிரை ஈந்த மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி எமது இலட்சிய இலக்கை அடையும் வரை அற்பணிப்புடன் செயற்படுவேன் என்று உறுதி மொழி எடுக்கப்பட்டது.

திரு.பெரியசாமி.மணியரசன் அவர்கள் உரையாற்றும் போது புலம்பெயர் மக்களின் ஒருங்கிணைந்த சக்திதான் இன்று பலமாகவும் இறுக்கமாகவும் இருக்கவேண்டும் காரணம் எதிரி முதற்கொண்டு,ஏமாற்று வலை வீசுபவன்வரை இன்று புலத்து மக்களைச் சிதைக்கும் வழிமுறைகளில்ததான் அதி தீவிர முனைப்புக் காட்டி நிற்கின்றான், ஆகவே அவர்களுடைய தேவைக்கும் நோக்கத்திற்கும் பலிக்கடாக்கள் ஆகாது உறுதியோடும்,நம்பிக்கையோடும் தமிழீழத் தனியரசிற்கான இலட்சியப் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதனை,அசைகின்ற தேரின் வடத்துக்குக் கரம்கொடுப்பதிலும் நிற்கின்ற தேரை இழுப்பதற்கு வடத்துக்குக் கரம் கொடுப்பதே மேலான பணி என்ற உதாரணத்தோடு எடுத்துக் கூறினார்.

தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் அவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டின் கடந்தகால செயற் திட்டங்களையும்,வருங்காலத்தில் செய்யப்படவேண்டிய முக்கிய பணிகள் சார்ந்தும் எடுத்துக் கூறினார்.
தொடர்ந்து தமிழர் கலை பண்பாட்டுக்கழக இசைக் குழுவினரின் விடுதலை கானங்கள் இசை நிகழ்வும், அன்னை பூபதி திழ்க்கலைக் கூட மாணவிகள் வழங்கிய நிமிர்வு எனும் நாட்டிய நாடகமும் கலைநிகழ்வுகளாக இடம்பெற்றன.

தேசியக்கொடி இறக்கி வைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலை அனைவரும் எழுந்து நின்று கரகோசம் எழுப்பி பாடி நிகழ்வினை 17.35 மணிக்கு நிறைவுக்குக் கொண்டுவந்தனர்.

மட்டக்களப்பில் மாவீரர் தினம் பல பகுதிகளில் அனுஷ்டிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று பரவலாக இடம்பெற்ற மாவீரர் தின வைபவங்களில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றிருந்ததாக எமது தகவல் வட்டாரங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன.

புலிகளை ஒழித்துக் கட்டிவிட்டதாக பெருமெடுப்பிலான பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் இலங்கை அரசாங்கமானது மாவீரர் வாரத்தை முன்னிட்டு படைத்தரப்பை உச்சகட்ட உசார் நிலையில் வைத்திருந்தது.

அதனையும் மீறி நேற்று வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் பரவலாக மாவீரர் தின வைபவங்கள் நடைபெற்றதுடன், ஏராளம் பொதுமக்களும் அதில் ஆர்வம் காட்டியிருந்தனர்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலான முறையில் இராணுவக் கண்காணிப்பும் படைப்புலனாய்வாளர்களின் கடுமையான அவதானிப்புகளுக்கும் மத்தியில் நேற்று நடைபெற்ற மாவீரர் தின அனுஷ்டானங்கள் இரகசியமான முறையில் பரவலாக நடைபெற்றிருந்ததாக ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவீரர் தின வைபவங்களின் முக்கிய அம்சமான ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வும் அதன் போது நடைபெற்றிருந்தது.

வடக்கிலிருந்து கிழக்கு பிரிந்து இருப்பதையே அங்குள்ள மக்கள் விரும்புவதாக ஒரு சில அரசியல் வாதிகள் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கின்ற போதிலும் நேற்றைய நிகழ்வுகள் அதனைப் பொய்யாக்கியுள்ளன.

உணர்வு பூர்வமான இலட்சியப் பயணத்தில் பங்கேற்க கிழக்கு மாகாண மக்கள் இன்னும் தயாராக இருப்பதையே நேற்றைய நிகழ்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

மிகவும் இறுக்கமான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளையும் மீறி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டமையும், பெருமளவான பொதுமக்கள் அதில் ஆர்வம் காட்டியிருந்தமையும் அதனையே பறைசாற்றி நிற்கின்றதாக எமது மட்டக்களப்பு நிருபர் தெரிவிக்கின்றார்.

ஆயினும் பாதுகாப்புக் கருதி மாவீரர் தின வைபவங்கள் நடைபெற்ற இடங்களின் விபரங்களை இங்கே நாம் தவிர்த்துள்ளோம்.

மீண்டும் விடுதலைப்புலி சீறிப் பாயும் - பழ.நெடுமாறன்

தமிழீழ தேசிய மாவீரர்களை நினைவுகூரும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சென்னையில் தியாகராய நகர் பஸ் நிலையம் அருகே நேற்று மாலை நடைபெற்றது.

அந்நிகழ்வில் கலந்துகொண்ட உணர்வுமிக்க தமிழர்கள் உரையாற்றியிருந்தனர்.

அந்தவகையில் பழ.நெடுமாறன் அவர்கள் புலம்பெயர் மக்களுக்காக ஆற்றிய உரையில், குறிப்பாக சுவிஸ் வாழ் தமிழ்மக்களுக்காக அவர் குறிப்பிட்டுள்ளது என்னவெனில்

அன்புள்ள சுவிஸ் வாழ் தமிழ்மக்களே, உங்களை நான் உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன், எல்லோரும் உறுதியாக இருங்கள் தமிழீழ தேசிய தலைவர் 5ம் கட்ட ஈழப்போரை தலைமைதாங்கி நடத்த வெளிவரும் நாளை எதிர்பார்த்து காத்திருங்கள்.

முழுமையான பேச்சினை கீழுள்ள காணொளியில் கேட்கலாம்.

விடுதலைப்போர் அதே இடத்தில் அதே வீச்சில் மீண்டும் நடக்கும் - காசி ஆனந்தன்

மாவீரர் தினத்தன்று புலம்பெயர் மக்களுக்காக உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் உரையாற்றினார்.

அவர் ஆற்றிய உரையை தொடர்ந்து கேட்க காணொளியை அழுத்துங்கள்.




பிரபாகரன் மறைவாக இருக்கிறார்; விரைவில் வெளியில் வருவார்:வைகோ

சென்னை தியாகராய நகரில் நேற்று இரவு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், ‘’வெள்ளமென திரண்டு வந்துள்ள இளைஞர் கூட்டத்தை பார்க்கும் போது 2003ல் நான் கிளிநொச்சியில் பேசியகூட்டம் ஞாபகத்துக்கு வருகிறது.28 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மாவீரர் தின விழாவில் பிரபாகரன் பேசும்போது ஈழப்போரில் 1027 விடுதலைப்புலிகள் பலியானதை அப்போது குறிப்பிட்டார்.

பல்வேறு கால கட்டங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இணையதளம் மூலம் சில தவறான பிரச்சாரம் நடக்கிறது. இது நீடிக்காது.

முத்துக்குமார் போன்ற தியாக இளைஞர்களின் கனவு வீண்போகாது. இலங்கையில் மீள் குடியேற்றம் நடக்கிறது. அங்குள்ள அகதிகள் முகாமில் 30 ஆயிரம் பேர் இருப்பதாக இவர்கள் சொல்கிறார்கள். ஆனால் ராஜபக்சே 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் இருப்பதாக கூறுகிறார்.

ஒவ்வொரு முகாமில் இருந்து இன்னொரு முகா முக்குதான் மக்களை மாற்றுகின்றனர்.

தமிழர் பகுதியில் 100 மீட்டருக்கு ஒரு சிங்கள ராணுவ முகாம் உள்ளது. அங்கு சிங்கள குடியேற்றம் வேகமாக நடக்கிறது. சிவன், முருகன் கோவில்கள் பவுத்த ஸ்தலமாக மாறுகிறது. தமிழர்களால் அங்கு நிம்மதியாக வாழ முடியவில்லை. விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம் என்று கூறிய பிறகு ராணுவத்துக்கு அங்கு என்ன வேலை?

ஏற்கனவே என்மீது இறையான்மைக்கு எதிராக பேசியதாக 2 வழக்கு உள்ளது. அந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கலாம். ஆனாலும் நான் அஞ்சுவதில்லை. விடுதலைப்புலிகளை நான் நேற்றும் ஆதரித்தேன். இன்றும் ஆதரிக்கிறேன். நாளையும் ஆதரிப்பேன். இதன் பொருட்டு எந்த விளைவையும் சந்திக்க தயாராக உள்ளேன்.

தொடர்ந்து மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது. அதற்கான பலன் வெகுவிரைவில் கிடைக்கும். பீகார் தோல்வி இதில் முதல் கட்டமாக வந்துள்ளது.

காந்திய வழியில் போராடிய பிறகுதான் ஈழத்தமிழர்கள் தனிநாடு தீர்வுக்கு வந்தனர். அதன்பிறகு அடக்கு முறை அதிகமானதால் ஆயுதம் ஏந்தினர். தமிழ்ஈழம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். தாய் தமிழகம் அவர்களுக்கு உறுதியாக இருக்கும்.

பழநெடுமாறன் கூறியது போல் தாய் தமிழகத்தில் இருந்து இளைஞர்களை 5ம் கட்ட ஈழப்போருக்கு அனுப்பும் பணியில் ஈடுபடுவோம். நிறைவாகும் வரை மறைவாக இரு என கவிஞர் காசிஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரன் அதைத்தான் செய்கிறார். உரிய நேரத்தில் பிரபாகரன் வருவார். அவர் தலைமையில் தமிழ் ஈழம் அமையும்’’என்று தெரிவித்தார்.

Saturday, November 27, 2010

மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னெடுக்க உலகப் பரப்பெங்கும் வாழும் உலகத்தமிழனம் தயாரகி வருகின்றது:

அமெரிக்கா முதல் ஒஸ்றேலியா வரையிலான சகல கண்டங்களிலும் 23க்கும் மேற்பட்ட நாடுகளில் மாவீரர் நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றது. தமிழர் தாயகம் எங்கும் சிறிலாங்கா படையினர் மிகவும் விழிப்பு நிலையில் இருப்பதோடு மாவீரர் நாளோட தொடர்பட்ட செய்திகளை வெளியிட வேண்டாம் என்ற எச்சரிக்கையும் ஊடகங்களுக்கு விடப்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் தமிழர்தாயகம் எதிர்கொண்டுள்ள சிங்கள் பேரினவான அடக்குமுறையை புலம் பெயர் தமிழர் சமூகம் நெஞ்சினில் சுமந்த வண்ணமே மாவீரர் நாள் ஏற்பாடுகளை முன்னெடுத்த வருகின்றனர்.

ஏற்கனவே மாவீரர் குடும்பங்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகளும் மாவீரர் நாளையொட்டிய நிகழ்வுகளும் சிறப்புற ஏலவே நடந்து முடிந்து விட்டன. இதேவேளை தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள மாவீரர் கல்லறைகள் ஒரு இனச்சுத்திகரிப்பின் அங்கமாக உள்ள நிலையில் இதனை கருவாக கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனஒழிப்பு, போர்குற்றங்கள் குற்றவிசாரணைக்கும், தடுப்புக்குமான அமைச்சகமும் - roehampton பல்கலைக்கழக மனித உரிமைகள் மையமும் இணைந்து நடாத்துகின்ற ஆய்வரங்கமும் பலரது கவனத்தைப் பெற்றுள்ளது.

Thursday, November 25, 2010

இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் ஒருபோதும் ஓயோம் உறுதி!

தமிழ் மண்ணின் விடுதலைக்காக களம் ஆடி விழுப்புண்பட்டு வீழ்ந்து நடுகல்லாகிவிட்ட மாவீரர்களின் அளப்பரிய தற்கொடையை நினைவு கூறுமுகமாக மாவீரர் விழா உலகெங்கும் பரந்துபட்டு வாழும் தமிழ் மக்களால் சீரோடும் சிறப்போடும் வீறோடும் மறவுணர்வோடும் முன்னைய ஆண்டுகள் போலவே இந்த ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

மே 17 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மவுனிக்கப்பட்டது முதல் தமிழீழத்தில் எமது மாவீர தெய்வங்களுக்கு விழா எடுக்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. தமிழ்மக்களின் பேச்சுச் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.

தமிழீழத்தை வல்வளைப்புக்குள் வைத்திருக்கும் சிங்கள பேரினவாத அரசு காட்டுமிராண்டித்தனமான முறையில் எமது மாவீரர் துயிலும் இல்லங்களை உழுது அழித்துள்ளார்கள். போர்முறை விதிகளைக் காலில் போட்டு மிதித்துள்ளார்கள்.

எங்கள் மாவீர தெய்வங்களின் துயில் இல்லங்களை அழிப்பதன் மூலம் அவர்களது நினைவை எமது நெஞ்சங்களில் இருந்து நீக்கிவிடலாம் என்று சிங்கள இனவாத அரசு கனவு காண்கிறது.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் கடந்த ஆண்டு புலம்பெயர் நாடுகளில் மாவீரர்களுக்கு எடுத்த எழுச்சி விழாக்கள் அதற்குச் சான்றாகத் திகழுகின்றன.

எமது மாவீரர்கள் வீரத்தின் விளைநிலமாக விளங்கியவர்கள். செருமுகத்தில் எதிரிகளைப் பந்தாடி விழுப்புண் பட்டு வீழ்ந்தவர்கள். மண்ணில் மட்டுமல்ல விண்ணிலும் பெருங்கடலிலும் போராடிக் காவியம் ஆனவர்கள்.

கிறித்துவுக்குப் பின் 13 ஆம் நூற்றாண்டளவில் சோழ, பாண்டிய பேரரசுகள் மறைந்த பின்னர் எஞ்சியிருந்தது யாழ்ப்பாண இராச்சியமே. அதுவும் கிபி 1619 ஆம் ஆண்டு போர்த்துக்கீசரிடம் வீழ்ந்தது. அதன் பின்னர் இருபதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே தமிழினம் கையில் ஆயுதம் ஏந்தியது. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு மாவீரன் அதற்குத் தலைமை தாங்கி வரலாறு படைத்தான்.

தரைப்படை, கடற்படை, வான்படை எனப் போர்க்களங்கள் விரிந்தன. எதிரிகளின் படை முகாம்கள், போர்க்கப்பல்கள், வானூர்திகள் அழிக்கப்பட்டன.

1999 ஆம் ஆண்டு வன்னி மண்ணில் ஓங்கி வீசிய ஓயாத அலை எமது போராட்ட வரலாற்றில் பெரிய திருப்பு முனையாக இருந்தது. ஓயாத அலையில் ஒன்றல்ல பத்துக்கும் மேற்பட்ட இராணுவ முகாம்கள் சட சடவென, பொல பொல எனச் சரிந்தன! வன்னியில் 30 கும் மேற்பட்ட தமிழ் ஊர்கள் சிங்களப் படையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டன. மொத்தம் 1,400 சதுர கி.மீட்டர் நிலப்பரப்பு புலிகளின் கட்டுப்பாட்டில் மீண்டும் கொண்டுவரப்பட்டது. அதையடுத்து சிங்களப் படையின் அசைக்க முடியாத கோட்டைகள் என்று கொண்டாடப்பட்ட இயக்கச்சி – ஆனையிறவு மற்றும் பளை இராணுவ தளங்கள் வி.புலிகளின் கைகளில் வீழ்ந்தன.

எமது மாவீரர்களின் இத்தகைய வீரம் செறிந்த போர்களதான் இன்றும் உலகம் முழுதும் தமிழினத்துக்கு ஒரு முகவரியை வாங்கித்தந்துள்ளன.

இந்த ஆண்டு நடைபெறும் மாவீரர் விழாவில் தேசியத் தலைவரின் உரை இல்லாது இருக்கலாம். மாவீரர் துயிலும் இல்லங்களில் விளக்கேற்றி வணங்கும் காட்சிகளைத் தொலைக்காட்சியில் காணமுடியாமல் இருக்கலாம். ஆனால் உள்ளத்தில் ஊறும் உணர்வுகள் எப்போதும் போலவே இப்போதும் பீறிட்டுப் பாய வேண்டும்.

எமது விடுதலைப் பயிரை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கண்ணீர், வியர்வை, குருதி சிந்திப் போராடி வந்திருக்கிறோம். அவை எல்லாம் வீண் போகக் கூடாது.

முள்ளி வாய்க்கால் இறுதிப் போர் வரை தமிழீழ விடுதலை வேள்வியில் முப்பதாயிரத்துக்கும் அதிகமான தளபதிகளும் வீரர்களும் வீராங்கனைகளும் கடற்புலிகளும் கரும்புலிகளும் களமாடி கடலில் கரைந்தும் காற்றில் கலந்தும் தீயில் எரிந்தும் மண்ணில் புதைந்தும் போயிருக்கிறார்கள். அந்த மறைந்தும் மறையாத மாவீர தெய்வங்களுக்கு வாழ்த்தும் வீர வணக்கமும், வழிபாடும் செய்யும் இந்நாள் தமிழ் மக்களுக்கு ஒருதிருநாள். தமிழினத்தின் தேசிய நாள்.

களத்தில் விழுப்புண் பட்டு மரணத்தைத் தழுவிக் கொண்ட முதல் விடுதலைப் .புலிப் போராளி சங்கர் என்ற சத்தியநாதன் களத்தில் வீழ்ந்து மரணத்தைத் தழுவிக் கொண்ட நொவம்பர் 27ஆம் நாளையே இன்று உலகெங்கும் மாவீரர் நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

விடுதலை என்பது சும்மா வராது. அதற்கு ஒரு விலை இருக்கிறது. “அக்கா அக்கா என்று நீ அழைத்தாய் அக்கா வந்து கொடுக்க சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?” என்று தச்சன் கூடே சதமென்று கிடந்த கிளியைப் பார்த்து வானவீதியில் பறந்து திரிந்து தென்னங் கீற்றுப் பொன்னூஞ்சல் ஆடிச் சோலை பயின்று சாலையில் மேய்ந்து வானும் மண்ணும்தன் வசத்திற்கொண்ட சோலைக் கிளி கேட்டதாம்.

உலக வரலாற்றில் விடுதலைக்குப் போராடிய மக்கள் எல்லோரும் குருதி், கண்ணீர், வியர்வை இவற்றை விலையாகக் கொடுத்தே விடுதலையை வென்றெடுத்திருக்கிறார்கள். அய்ரிஷ் தொடங்கி எரித்திரியா வரை, கொசோவோ தொடங்கி கிழக்கு தீமோர் வரை இடம்பெற்ற வீரம் செறிந்த விடுதலைப் போராட்டங்கள் நீண்ட காலத்தின் பின்னரே வெற்றியடைந்தன. அந்த மக்கள் அதன் பின்னரே சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது. இந்த உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது.

கிழக்கு தீமோர் மக்கள் விடுதலைக்காக ஆண்டுக் கணக்கில் ஆயுதம் ஏந்தி, குருதி சிந்திப் போராடிக் கண்ணினும் இனிய தங்கள் பொன்னாட்டை அன்னிய நாட்டின் பிடியிலிருந்து மீட்டு எடுத்தார்கள். இன்று கிழக்கு திமோர் அய்க்கிய நாடுகள் அவையின் 191ஆவது உறுப்பு நாடாக அனுமதிக்கப்பட்டு அந்த நாட்டின் கொடி அய்க்கிய நாடுகள் அவை முன்றலில் பட்டொளி வீசிப் பறக்கிறது!

தமிழீழ மக்களது விடுதலைப் போராட்டம் இந்த இயற்கை நியதிக்கு விதி விலக்கானதல்ல. எங்கள் விடுதலைக்காக உச்சகட்ட விலை கொடுத்துள்ளோம். அது வீண்போகக் கூடாது.

ஆயுதங்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டாலும் போருக்கான காரண காரியங்கள் முன்னரைவிட இன்று பூதாகாரமா எழுந்து நிற்கின்றன. வடக்கும் கிழக்கும் சிங்களப் படைகளின் நேரடி ஆட்சியில் கொண்வரப்பட்டுள்ளன. ஓய்வு பெற்ற சிங்களத் தளபதிகளே ஆளுநர், அரச அதிபர், செயலர் ஆகிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். வடகிழக்கில் உள்ள ஏழு நிருவாக மாவட்டங்களில் மூன்று மாவட்டங்களில் மட்டும் தமிழர்கள் அரச அதிபர்களாக இருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆற்று அணை உடைந்தால் எப்படியோ அப்படியான ஒரு நிலை வடக்கிலும் கிழக்கிலும் எழுந்துள்ளது.

திருகோணமலையில் தமிழ் மக்களின் பாரம்பரிய இடங்களைத் தொல்லியல் ஆய்வு எனும் போர்வையில் சிங்கள மயமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. தமிழ் மக்களின் பாரம்பரிய இடங்களில் புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறி பவுத்த விகாரைகள் கட்டப்பட்டு வருகின்றன. அண்மையில் கன்னியா வெந்நீரூற்று அமைந்துள்ள பகுதியை திருகோணமலை அரச அதிபர் ரி.ஆர்.ஆர்.சில்வா (முன்னாள் இராணுவ தளபதி) தொல்லியல் ஆய்வு இடம் எனப் பிரகடனத்படுத்தி அதனைக் கையகப்படுத்தியுள்ளார். பிரதேச அவை அங்கு வைத்திருந்த அறிவித்தல் பலகையை அவர் பிடுங்கி எறிந்துள்ளார். குச்சவெளியிலும் பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் கிணறு வெட்டும்போது புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறி அதே அதிபர் அதனையும் தொல்லியல் ஆய்வு இடமாக அறிவித்துள்ளார். அது மட்டுமல்ல இந்த இரண்டு இடங்களிலும் பவுத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளன. திரியாய் என்னும் ஊரில் அமைந்துள்ள வெலகம் விகாரைக்கு 1,000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பண்டைய யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமும் இன்றைய தமிழ் மக்களது கலை கலாசாரம், நாகரிகம் இவற்றின் தொட்டில் என அழைக்கப்படும் யாழ்ப்பாணத்திலும் சிங்களக் குடியேற்றங்கள் அரசு ஆதரவோடு நடைபெறுகின்றன. மணியம்தோட்டம், கைதடி போன்ற பகுதிகளில் இராணுவம் தென்னிலங்கையில் இருந்து சென்ற சிங்களவர்களைக் குடியமர்த்தி உள்ளது. அவர்கள் குடியிருப்பதற்கு சீனாவின் உதவியோடு வீடுகளையும் கட்டிக் கொடுக்கிறது.

ஊடகத்துறை அமைச்சர் கெகலிய இரம்புக்வெல்ல “இந்த நாடு எல்லோருக்கும் சொந்தம். யாரும் எந்த இடத்திலும் வாழலாம்” என்கிறார். மேல் எழுந்தவாறு பார்த்தால் இது பெருந்தன்மை போல் தோன்றும். ஆனால் உண்மையில் சிங்கள இனவாத அரசின் மேலாதிக்க சிந்தனையையே இது காட்டுகிறது. தென்னிலங்கையில் உருவாக்கப்பட்ட எந்தக் குடியேற்றத்திட்டத்தில் ஆவது தமிழர்கள் குடியேற்றப்பட்டுள்ளார்களா?

தமிழர்களது தாயக மண்ணை அபகரிப்பதன் மூலம் தமிழர்களின் தாயகக் கோட்பாட்டை உடைப்பதே இனவாத சிங்கள அரசின் தலையாய திட்டமாக இருக்கிறது. இதில் கிழக்கில் பேரளவு வெற்றிபெற்ற சிங்கள இனவாத அரசு தனது கவனத்தை வடக்குக்குத் திருப்பியுள்ளது. இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ள வடக்கை சிங்கள – பவுத்த மயப்படுத்துவது எளிதாக இருக்கும் என அது நம்புகிறது.

ஒரு சுதந்திர தமிழீழ நாட்டிலேயே தமிழ் மக்கள் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் யாருக்கும் தலைவணங்காது வாழமுடியும் என்ற உண்மையை கடந்த கால வரலாறு எடுத்துக் காட்டுவதாக இருக்கிது. எனவே நாம் பிறந்த பொன்னாட்டை மாற்றலர் பிடியிலிருந்து விடுவிக்க இந்த மாவீர் நினைவு நாளில் நாம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதுவே தாயக விடுதலைக் கனவுகளை நெஞ்சினில் சுமந்து சாவினைத் தழுவிக் கொண்ட எம் மாவீரர்களுக்கு நாம் செலுத்தக்கூடியமிகப் பெரிய நினைவு வணக்கமாகும்.

கார்த்திகை 27 இல் உங்கள் கல்லறைகளிலும் எங்கள் வீடுகளிலும் விளக்கேற்றி உறுதி எடுத்துக் கொள்கிறோம்!


மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி! இழிவாக வாழோம்!
தமிழீழப்போரில் ஒருபோதும் ஓயோம் உறுதி!


உங்கள் ஈகை வீண்போகாது!
உங்களை அழித்தவர்களைப் பழிவாங்குவோம்!
உங்கள் தாயகக் கனவினை நினைவாக்குவோம்!

Thursday, December 03, 2009

அமெரிக்கா, நியூயோர்க்கில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு (வீடியோ இணைப்பு)


அமெரிக்கா, நியூயோர்க்கில் பலநூற்றுக்கணக்கான மக்கள் தேசிய நினைவெழுச்சி நாளை எழுச்சியுடன் நினைவு கூர்ந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (29.11.2009) அன்று மாலை 5.30 மணியளவில் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் அமெரிக்க தேசியக் கொடியும், தமிழீழ தேசியக் கொடியும் மாவீரர் குடும்ப உறுபினரால் முதலில் ஏற்றப்பட்டு, தொடர்ந்து தாய் மண்ணிற்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கும், மாவீரர் குடும்பத்தவர்களால் ஈகை சுடர்கள் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து, மாவீரர்களுக்கும், மரணித்த மக்களுக்கும் எல்லோராலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலி நடனத்துடன் நிகழ்சிகள் ஆரம்பமானது.

வாத்திய இசை, மாவீரர் கானங்கள், எழுச்சி நடனங்கள், கவிதை, பேச்சு, நாடகம் என பல நிகழ்ச்சிகள் என்றுமில்லாதவாறு சிறப்பாக நடைபெற்றன.

தொடர்ந்து சிறப்பு பேச்சாளராக சட்டத்தரணி விசுவநாதன் ருத்ரகுமாரின் பேச்சு இடம்பெற்றது. தமிழ்நட்டை சேர்ந்த மருத்துவர் இளங்கோவன், தமிழின உணர்வாளர் மருத்துவர் ஜெயலிங்கம், தயாபரன் அவர்களின் மாவீரர் உரையும் இடம்பெற்றன.

இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும் என்ற பாடலுடன் கொடிகள் இறக்கப்பட்டு, மிகவும் உணர்வுபூர்வமாக நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் பலநூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.