Showing posts with label சிறிலங்காப் படைகள். Show all posts
Showing posts with label சிறிலங்காப் படைகள். Show all posts

Friday, November 01, 2013

படுகொலை செய்யப்படும் முன் இழுத்துச் செல்லப்படும் இசைப்பிரியா – சனல்-4 தொலைக்காட்சியின் புதிய ஆதாரம்

கொடூர பாலியல் வெறியாட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் சிங்களப் படைகளால் இசைப்பிரியா அவர்கள் உயிருடன் இழுத்துச் செல்லப்படும் காணொளி ஆதாரத்தை சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

பொதுநலவாய மாநாடு நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில் இக் காணொளி ஆதாரத்தை இன்று சனல்-4 தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.

இசைப்பிரியாவை தமிழீழத் தேசியத் தலைவரின் புதல்வி துவாரகா என்று கருதி சிங்களப் படையினர் இழுத்துச் செல்லும் பொழுது தான் துவாரகா இல்லை என்று அவ்விடத்தில் அழுதபடியே இசைப்பிரியா கூறும் ஒலிப்பதிவும் இக்காணொளியில் உள்ளது.
 

Friday, May 21, 2010

இலங்கைப் படையினர் புலிப் போராளியை கத்தியால் குத்தி கொலை பண்ணும் கோரக்காட்சிகள்

கடந்த வருடம் இறுதி யுத்தத்தில் சிங்கள படைகளால் கைது செய்யப்பட்ட போராளிகளை கோரமாக வதை செய்து சிங்கள இராணுவத்தினர் கொன்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மீண்டும் ஒரு போர்க்குற்றக் காட்சி ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது.
மேலும் சிங்களப் படைகளால் அரங்கேற்றப்பட்டு மகிழ்ச்சி கொண்டாடிய காட்டுமிராண்டித்தனமான போர்க்குற்ற ஆதாரங்களில் சிலவற்றை மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) வெளியிட்டுள்ளது.

இதில் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட ஒரு போராளியை சிங்கள படையினர் தென்னை மரத்தில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்திரவதை செய்து கொலை செய்து தமிழரின் தேசியக்கொடியினை போர்த்தி அழகுபார்த்த கோரக் காட்சியின் படங்கள் சில வெளியிடப்பட்டுள்ளன.

இந்த படத்தை பார்த்ததும் தமிழா உன் மனம் கொதிக்கிறதல்லவா? அமெரிக்காவின் குவண்டேனமா சிறையை போல இங்கே பொதுமக்களும் போராளிகளும் பலத்த சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவது ஆதாரபூர்வமாக தொடர்ந்து வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

மனிதநேயத்தையும் பொருட்படுத்தாது, கண்மூடித்தனமாக நடந்த இக்கொடுமைகளின் ஆதாரங்கள் கிடைத்தபோதிலும், மனித உரிமைகள் கண்காணிப்பகம் பாராமுகமாக செயற்பட்டு வருகின்றமை வெட்டவெளிச்சமாகிறது.

இச்செய்தியானது உலக தமிழ் மக்களை உலுக்கியுள்ள இவ்வேளையில் புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் தமிழக உறவுகள் அனைத்து ஒரே வழியில் நின்று போராடவேண்டிய தேவையையும், கொடுங்கொல் நாடாகிய இலங்கையை போர்க்குற்றத்திற்கான விசாரணைக்கு கொண்டுவர சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் வேண்டியுள்ளனர்.

Thursday, January 28, 2010

சிறீலங்கா, மக்களை இரகசிய இடங்களில் தடுத்து வைத்து துன்புறுத்தும் நாடு: ஐ.நா


தகவல்கள் அறியமுடியாது மக்களை இரகசிய இடங்களில் தடுத்து வைத்து துன்புறுத்தும் நாடுகளின் பட்டியலில் சிறீலங்காவும் அடங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையை சேர்ந்த விசாரணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நான்கு அங்கத்தவர்களை கொண்ட ஐ.நாவின் மனித உரிமைகள் விசாரணைக்குழு தனது 221 பக்க அறிக்கையில் சிறீலங்கா, சீனா, பாகிஸ்த்தான், ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் மக்களை இரகசிய இடங்களில் தடுத்து வைத்து துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தகவல்களை அறியமுடியாது மக்களை இரகசிய இடங்களில் தடுத்து வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் சிறீலங்காவும் உள்ளது. விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா இராணுவத்திற்கும் இடையில் நடைபெற்ற போரை தொடர்ந்து சிறீலங்கா இராணுவம் இரகசிய தடுப்பு முகாம்களை நடத்தி வருகின்றது.

இராணுவ உடையில் அல்லது பொதுமக்களின் உடையில் வரும் சிறீலங்கா படையினர் தமிழ் மக்களை எழுந்தமானமாக கைது செய்து வாரக்கணக்கில் இரகசிய இடங்களில் தடுத்து வைத்து வருகின்றனர்.

இவ்வாறான ஒரு இடம் கொழும்பின் கொல்பிட்டியில் காலி வீதிக்கு அண்மையாக உள்ளதாக துன்புறுத்தல்களுக்கு எதிரான சிறப்பு பிரதிநிதி தெரிவித்துள்ளார். அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்ச்சியா துன்புறுத்தப்பட்டே விசாரணை செய்யப்படுகின்றனர்.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்கள் என அவர்களை பலவந்தமாக ஒத்துக்கொள்ள செய்யும் நடவடிக்கை இது. 1992 ஆம் ஆண்டில் இருந்து இரகசிய முகாம்களில் மக்களை தடுத்து வைக்கும் அதிக அதிகாரங்களை சிறீலங்கா அரசு படையினருக்கு வழங்கியுள்ளது.

அவசரகாலச்சட்ட விதிகளில் 1993 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தங்களில் மக்களை இரகசிய இடங்களில் தடுத்து வைத்திருக்க முடியாது. ஆனால் சிறீலங்காவில் அது தொடர்கின்றது. அங்கு துன்புறுத்தல்களும் நிகழ்கின்றன. குற்றவாளிக்குக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்புக்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இராணுவத்தினராலும், காவல்துறையினராலும் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள், பலவந்தமாக காணாமல் போகும் சம்பவங்கள், இரகசிய இடங்களில் தடுத்துவைக்கப்படுதல் போன்றவை தொடர்பாக குரல் கொடுத்து வருகின்றன.

சிறீலங்காவில் பலவந்தமாக மக்கள் காணாமல்போவது தொடர்பில் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு பலவந்தமாக காணாமல் போவோர் தொடர்பான செயற்குழு அறிக்கை ஒன்றை 2008 ஆம் ஆண்டு அனுப்பியிருந்தது.

அதனை தொடர்ந்து சிறீலங்காவில் மக்கள் கடத்தப்படுவது, இரகசிய இடங்களில் தடுத்து வைக்கப்படுவது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை வெளியிட்டிருந்ததும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Saturday, January 09, 2010

கோத்தபாயாவின் மனைவி அதிகளவு பணத்துடன் நாட்டை விட்டு தப்பிஓட்டம்

எதிர்வரும் அரச தலைவருக்கான தேர்தலில் மகிந்த ராஜபக்சாவுக்கு சாதகமான முடிவுகள் வரும் என்ற நம்பிக்கைகள் அரச தரப்பில் குறைந்து வருவதால் பாதுகாப்பு செயலாளர் கோததபாயாவின் மனைவி அதிகளவு பணத்துடன் வெளிநாடு ஒன்றுக்கு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்கா அரச தலைவருக்கான தேர்தல் எதிர்வரும் 26 ஆம் நாள் நடைபெறவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கன ஆதரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றன.

இதனை தொடர்ந்து அரச தரப்பில் உள்ள பலரும் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முயன்று வருகின்றனர். அரச ஊடகங்களின் தலைவர்கள் பலர் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல நுளைவு அனுமதிகளை பெற்றுள்ள அதே சமயம் பாதுகாப்பு செயலாளரின் மனைவியும் வெளிநாடு ஒன்றுக்கு தப்பி சென்றுள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயாவின் மனைவி பெயர் குறிப்பிடாத ஆசிய நாடு ஒன்றிற்கு முதலில் சென்றுள்ளதாகவும், அதனை தொடர்ந்து அவர் வேறு ஒரு நாட்டுக்கு செல்ல உள்ளதாகவும் அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவர் தன்னனுடன் அதிகளவு பணத்தை எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தன்வசம் உள்ள ஏனைய நிதிகளையும் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளுக்கு மாற்றுவதற்கு கோத்தபயா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறீலங்காவில் இருந்து எவ்வளவு பணத்தையும் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல முடியும் என அண்மையில் மத்திய வங்கி அறிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது

Monday, November 09, 2009

இராணுவத்தால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் - மகிந்த ராஜபக்ச கவலை


ஸ்ரீலங்கா இராணுவத்தால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கவலை அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு விசுவாசமான பல உயர் அதிகாரிகளும் சிப்பாய்களும் இராணுவத்தில் இருப்பதாகவும் அவர்களால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்றும் மகிந்த ராஜபக்ச தனக்கு நெருக்கமான சில அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்பாய ராஜபக்சவினால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை கொண்ட ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இராணுவ தலைமையகத்தை கடந்து செல்லும் போது அங்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரை கடமையில் ஈடுபடுத்துமாறும் பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இராணுவத்தின் அச்சுறுத்தல் காரணமாக கடந்த வாரம் வன்னிக்கு மேற்கொண்ட விஜயத்தின் போதும் ஜனாதிபதி இராணுவத்தினருக்கு மிக அருகில் செல்லாது தவிர்ததாகவும் பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

சரத் பொன்சேகா நாட்டில் இல்லாத சமயத்தில் வன்னிக்கு விஜயம் மேற்கொள்ள ஜனாதிபதி தீர்மானித்தமைக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலே காரணம் என்றும் தெரியவந்துள்ளது.

Monday, September 21, 2009

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் தடுப்பு முகாம்களில்

[திங்கட்கிழமை, 21 செப்ரெம்பர் 2009]
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், நிர்வாகம் மற்றும் ஏனைய தரப்புகள், முயற்சித்தும்,வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் 74 பேரையும் அழைத்த வந்து படைத்தரப்பு, கைதடி முகாமில் தடுத்து வைத்துள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதேவேளை 34 பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட்ட 534 பேரை நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்த படைத்தரப்பு, யாழ்ப்பாணத்தில் கடற்படைத்தரப்பிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 34 பல்கலைக்கழக மாணவர்களும் தென்மாராட்சியின் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய 500 பொதுமக்களும் தீவுப்பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இதில் பலர் பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடுகளில் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்.

குறித்த வீடுகளில் இருந்தவர்கள் 1990 ம் ஆண்டுக் காலப்பகுதியில் படை நடவடிக்கை காரணமாக தீவுப்பகுதியில் இருந்து வெளியேறிவிட்டனர்.

Wednesday, August 26, 2009

கண்களையும் கைகளையும் கட்டிப் போட்டுவிட்டு சிங்களப் படை தமிழர்களை சுட்டுக்கொல்லும் கோரக் காட்சிகள்: அம்பலப்படுத்துகின்றது 'சனல் - 4'

[புதன்கிழமை, 26 ஓகஸ்ட் 2009] வன்னி படையெடுப்பை நடத்திய சிறிலங்காப் படைகள் கைகளையும் கண்களையும் கட்டி வைத்துவிட்டுத் தமிழர்களைச் சுட்டுக்கொல்லும் பட்டவர்த்தனமான காட்சிகளை பிரித்தானிய காணொலிச் செய்திச் சேவையான 'சனல் -4' நிறுவனத்தின் ஜொனதன் மில்லர் வெளியிட்டுள்ளார். இந்தக் காணொலிக் காட்சிகளை வெளியிட்டுள்ள 'சிறிலங்காவில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்' (Journalists for Democracy in Sri Lanka) என்ற அமைப்பு, இந்தக் காட்சிகள் கடந்த ஜனவரி 2009 இல் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளதாகவும், இதே காலப் பகுதியில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் போர்ப் பகுதிகளுக்குச் செல்வதை சிறிலங்கா அரசு தடை செய்துவிட்டிருந்தது எனவும் 'சனல் - 4' தெரிவிக்கின்றது. இந்தக் காட்சிகள், "சிறிலங்கா அரசின் போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்களாக இல்லையா?" என ஜொனதன் மில்லர் கேள்வி எழுப்புகினன்றார். இதேவேளையில் இந்த காணொலி காட்சிகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதுவரகம் - தமிழ் மக்களுக்கு எதிரான கோரச் செயல்களில் தமது படையினர் ஈடுபட்டனர் என்பதை மறுத்துள்ளதுடன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் மட்டுமே தமது படையினர் ஈடுபட்டனர் எனவும் தெரிவித்துள்ளதாக 'சனல் - 4' தெரிவிக்கின்றது. மேலும் - "கடந்த காலங்களில் சிறிலங்கா அரசையும் படையினரையும் மாசுபடுத்தும் விதமாக இவ்வாறான - பொய்யாக உருவாக்கப்பட்ட - ஆவணங்களை ஊடக நிறுவனங்கள் வெளியிட்டதாகவும். அதனால், இந்தக் காணொலிக் காட்சிகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திய பின்னரே இதனை வெளியிடுமாறும் பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதுவரகம் தம்மிடம் கோரியதாகவும் 'சனல் - 4' நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் காணொலியை தன்னோடு சோர்ந்து பார்த்த, பக்க சார்பற்ற ஒரு சிங்கள ஊடகவியலாளர் - இது உண்மையானது தான் என தன்னிடம் கூறியதாகவும் ஜொனதன் மில்லர் குறிப்பிடுகின்றார். குறிப்பு: மனதை மோசமாக பாதிக்கும் காட்சிகள் இந்த காணலியில் இடம்பெற்றுள்ளன. 'சிறிலங்காவில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்' அமைப்பு வெளியிட்ட காணொலி காட்சியை பார்வையிட: /video/2009/aug/channel4_video.asx

Tuesday, August 18, 2009

எந்தச் சூழ்நிலையிலும் வடபகுதியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தளர்த்தப்படாது: சரத் பொன்சேகா அறிவிப்பு

[செவ்வாய்க்கிழமை, 18 ஓகஸ்ட் 2009,] வடபகுதியில் தற்போது சுமூகமான ஒரு நிலை காணப்படுகின்ற போதிலும் எந்தவொரு சூழ்நிலையிலும் அந்தப் பகுதியின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் குறைக்கப்போவதில்லை என சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதான அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றார். கண்டிக்கு நேற்று திங்கட்கிழமை பயணம் ஒன்றை மேற்கொண்ட சரத் பொன்சேகா, அஸ்கிரிய பிரிவு மகாநாயக்க தேரரைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியபோது, "பயங்கரவாதிகள் இன்னும் முழுமையாக படையினரால் அழிக்கப்படவில்லை. தீவிரமான பயங்கரவாதிகள் கூட பலர் உள்ளனர்" எனத் தெரிவித்தார். எதிர்காலத்தில் வடபகுதியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் பலப்படுத்துவதற்கும் தான் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்த அவர், தற்போது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வடபகுதி முகாம்கள் பலவற்றை நிரந்தரமான முகாம்களாக மாற்றியமைப்பதற்கும் திட்டமிட்டிருப்பதாகவும் மகாநாயக்க தேரரிடம் விளக்கினார். இடம்பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக இங்கு குறிப்பிட்ட அவர், இதற்கான நன்கு திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டார். "அவர்கள் மீண்டும் பயங்கரவாதிகளுடன் இணைந்துகொள்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அரச தலைவரும் ஏனைய முக்கிய பிரமுகர்கள் பலருக்கும் இப்போதும் பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் இருக்கின்றது" எனவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார். "அவர்கள் இப்போதும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்கிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனரான செல்வராசா பத்மநாதன் பல உண்மைகளை இப்போது வெளியிட்டு வருகின்றார்" எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

Friday, August 14, 2009

பதுக்கிவைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை கண்டுபிடிக்கும் வரை சமாதானம் ஏற்பட்டுவிட்டது என கூறமுடியாது: பிரதமர் அறிவிப்பு

[வெள்ளிக்கிழமை, 14 ஓகஸ்ட் 2009,] "சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு நகரில் பெரும் தொகையான ஆயுதங்களும் வெடிபொருட்களும் தாக்குதல்களை நடத்தும் நோக்கத்துடன் விடுதலைப் புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கண்டுபிடிக்கப்படும் வரை நாட்டில் சமாதானம் ஏற்பட்டுவிட்டது என என்னால் பிரகடனப்படுத்த முடியாது" என அந்நாட்டுப் பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க அறிவித்துள்ளார். "மலேசியாவில் இருந்து கைது செய்யப்பட்டு கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட செல்வராஜா பத்மநாதன், கொழும்பில் தாக்குதல்களை நடத்தும் நோக்கத்துடன் பெரும் தொகையான ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் கொழும்பு நகரில் விடுதலைப் புலிகள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார் எனக் குறிப்பிட்ட பிரதமர், "இவ்வாறு பதுக்கிவைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் அனைத்தும் கண்டுபிடிக்கப்படும் வரையில் நாட்டில் சமாதானம் ஏற்பட்டுவிட்டது என என்னால் பிரகடனம் செய்ய முடியாது" எனவும் அறிவித்தார். ஹொரணை பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க, "நாடு எதிர்நோக்கிய மிகப்பெரிய சவாலை நாம் இல்லாது ஒழித்துவிட்டபோதிலும், கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இன்னும் பெருமளவு ஆயுதங்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளன. இவற்றைக் கண்டுபிடித்து அழிப்பது அவசியம்" எனவும் குறிப்பிட்டார். "நாம் மேலும் ஒருவரையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்திருக்கின்றோம். குண்டுகளையும் வெடிபொருட்களையும் கொழும்புக்கும் அதன் சுற்றுப்புறங்களுக்கும் கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பு இவரிடமே இருந்தது" எனவும் தெரிவித்த பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, "நாட்டில் அமைதி நிலவ வேண்டுமானால், இவ்வாறு மறைத்துவைக்கப்பட்டுள்ள ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் கண்டுபிடித்து நாம் அழிக்க வேண்டும்" எனவும் வலியுறுத்தினார்.

Sunday, July 26, 2009

தமிழர் கொலைகளை மூடிமறைக்க முயற்சித்த தயான் ஜயதிலகவுக்கு ஆதரவு தரும் டக்ளஸ்

[ஞாயிற்றுக்கிழமை, 26 யூலை 2009] வன்னியில் நடைபெற்ற இறுதிப் போரின்போது, பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் சிறிலங்காப் படையினரால் கொல்லப்பட்டமையை ஐக்கிய நாடுகள் சபையில் மறைத்து அரசின் செயற்பாடுகளை நியாயப்படுத்தி வந்த, அப்போதைய ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்தரத் தூதுவர் தயான் ஜயதிலகவுக்கு ஆதரவளிக்க ஈ.பி.டி.பி. தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா முன்வந்துள்ளார். தயான் ஜயதிலக்க அவரின் தூதுவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் தான் நேரடியாகப் பேச இருக்கிறார் என டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் இருந்து ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் கடும் குற்றச்சாட்டுக்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றைத் தடுப்பதற்குத் தயான் ஜயதிலக்க எடுத்த நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த அரசு அவரை அண்மையில் பதவியில் இருந்து திடீரெனத் திரும்ப அழைத்துக்கொண்டது. தயான் ஜயதிலக அவரது இராஜதந்திரப் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னணி காரணங்கள் தனக்குத் தெரியாது என்று கூறிய அமைச்சர் டக்ளஸ், இருந்தபோதும் இது பற்றி ராஜபக்சவை சந்திக்கும்போது தான் நிச்சயம் பேச இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

Monday, June 29, 2009

"சிரச" தொலைக்காட்சியின் ஒலிவாங்கியை வீசி எறிந்த அமைச்சர் மேர்வின் சில்வா

[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூன் 2009] போர்க்களத்தில் நின்று செய்திகளை சேகரித்து வெளியிட்ட ஊடகவியலாளர்களைக் கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் மேர்வின் சில்வா "சிரச' தொலைக்காட்சி ஊடகத்தின் ஒலி வாங்கியை வீசி எறிந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் பல அமைச்சர்கள், முப்படைகளின் பேச்சாளர்கள் கலந்து கொண்ட நிகழ்விலேயே இச்சம்பம் நடைபெற்றுள்ளது. இந்த நிழ்வில் கலந்து கொண்டு உரையாற்ற முற்பட்ட அமைச்சர் மேர்வின் சில்வா நாட்டை நேசிக்கும் ஒழுக்கமான ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் கௌரவிக்கும் இச்சந்தர்ப்பத்தில் உள்நாட்டில் இருந்துகொண்டு சர்வதேசத்துடன் இணைந்து, வடக்கின் இராணுவ நடவடிக்கைகளை இழிவுபடுத்தி நாட்டுக்கு துரோகம் செய்த சிரச ஊடகத்தை அனுமதிக்கக்கூடாது எனக் கூறிய அமைச்சர் மேர்வின் சில்வா அந்நிறுவனத்தின் ஒலிவாங்கியை வீசி எறிந்தார். இதனையடுத்து இங்கு உரையாற்றிய அமைச்சர், நாட்டை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுவித்த எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மன்னர் என்றே அழைக்க வேண்டும். அதுவே நாம் அவருக்கு கொடுக்கும் கௌரவமாகும்

Sunday, August 27, 2006

விடுதலைப்புலிகள் எனக்கூறி கப்பம் கேட்ட முன்னாள் இராணுவ வீரர் கைது பிரபல வாகன விற்பனை நிலையம் ஒன்றிற்கு விடுதலைப் புலிகள் என தொலைபேசியில் தெரிவித்து பத்து இலட்சம் ரூபா கப்பம் கோரியதாகக் கூறப்படும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை கண்டி குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு கப்பமாக 10 இலட்சம் ரூபா வேண்டும் எனவும், இதனை கண்டி நகருக்கு அண்மையாகவுள்ள மைதானம் ஒன்றிற்கு எடுத்து வந்து குறிப்பிட்ட நேரத்தில் வைத்துச் செல்லவேண்டும் எனவும், இது தொடர்பாக பொலிசாருக்கோ அல்லது படையினருக்கோ அறிவிக்க கூடாதெனவும் தொலைபேசி மூலம் கண்டியிலுள்ள பிரபல வாகன விற்பனை நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட நேரத்தில் வாகன விற்பனை நிலைய உரிமையாளர் குறிப்பிட்ட இடத்தில் பணப்பையை வைத்துள்ளார்.கப்பமாக பணம் கேட்ட நபர் அப் பணப்பையை எடுக்கச் சென்ற வேளை சிவில் உடையில் மறைந்திருந்த பொலிசார் அந்நபரை மடக்கி பிடித்துள்ளனர். விசாரணையின் போது சந்தேக நபர் முன்னர் இராணுவத்தில் கடமையாற்றியவர் என்றும் கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர் என்றும் தெரியவந்துள்ளது.பொலிசார் சந்தேக நபரை கண்டி நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்த போது நீதிவான் சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் கொழும்பு நகரில் பாரிய் தேடுதல் நடவடைக்கை படையினருடன் சேர்ந்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு நகரில் ஊடுறுவியிருக்கலாம் என தற்கொலை குண்டுதாரிகள் சந்தேசக நபர்களை கண்டுபிடிக்கும் நோக்குடன் கொழும்பு கோட்டை, கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், மருதானை, பொரளை போன்ற இடங்களில் சகல வாகனங்களும் நிறுத்தப்பாட்டு, தீவிர சோதனை நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. வீதியில் போவோர் வருவோர் தனித்தனியாக விசாரணைகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக போக்குவரத்து பதிப்படைந்து வருகிறது.

சம்பூரை நோக்கி படையினர் தாக்குதல். சம்பூரிலுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் நிகைளை நோக்கி இன்று காலை முதல் ஸ்ரீலங்கா படையினர் கடும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பல்குழல் எறிகணை மற்றும் ஆட்லறி எறிகணைகள் விடுதலைப்புலிகளின் பிரதேசங்களை நோக்கி ஏவப்படுவதாக திருமலை செய்திகள் தெரிவிக்கின்றன. படையினரின் இந்த தாக்குதல் நடவடிக்கையை அடுத்து விடுதலைப்புலிகளும் பதில் தாக்குலை மேற் கொண்டிருப்பதாக தெரியவருகிறது.

இந்தியாவுக்கு எதிராக சிறிலங்காவில் "களமுனை" திறந்திருக்கும் பாகிஸ்தான் இந்திய நிர்வாக ஜம்மு-காஸ்மீரைப் போல் சிறிலங்காவில் புதிய களமுனையை திறந்துள்ள வகையில் பாகிஸ்தானின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவராக பசீட் வாலி மொகமட் இரண்டு ஆண்டுகாலம் பணியாற்றி ஓய்வு பெற்றுச் செல்கிறார். அவரது "கைங்கர்யத்தில்" சிறிலங்காவுக்கு 2 கப்பல் ஆயுதங்கள் கடைசியாக கிடைத்துள்ளன. அந்தக் கப்பல்கள் வந்த நேரத்தில் கொழும்பில் நடந்த தாக்குதலில் பசீட் வாலி மொகமட் சிக்கிக் கொள்ள, பகிரங்கமாகவே பாகிஸ்தான் தரப்பினர் இந்திய "றோ" மீது குற்றம் சுமத்தினர். ஏனெனில் இந்தியாவின் பல வன்முறைகளுக்குக் காரணமாக குற்றம்சாட்டப்படும் பாகிஸ்தான் உளவு அமைப்பான "ஐ.எஸ்.ஐ."யின் முன்னாள் அதிகாரி அவர் என்பதுதான்.இப்போது சிறிலங்காவுக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள நபரும் இந்தியாவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கக் கூடும்.பாகிஸ்தானிய விமானப் படை பிரதித் தளபதியாக இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற ஏயர் வைஸ் மார்சல் சேக்சட் அஸ்லம் சௌத்ரிதான் இப்போதை புதிய தூதுவர்.- மலைப்பிரதேசங்கள் அடங்கிய பாகிஸ்தான் பலுசிஸ்தான் பிரதேசத்தில் நடைபெற்று வரும் விடுதலைப் போரை ஒடுக்குவதில் பாகிஸ்தானிய விமானப் படையை தீவிரமாக பயன்படுத்தியவர்.- அமெரிக்காவிடமிருந்து எஃப் - 16 ரக விமானக் கொள்வனவில் தீவிரம் காட்டியவர்- சீனாவுடன் இணைந்து ஜே.எஃப் - 17 அதிரடித் தாக்குதல் விமான உற்பத்திக்கான ஒப்பந்தத்தை உருவாக்குவதில் முனைப்பு காட்டியவர். இந்த விமானம் எதிர்வரும் ஆண்டு பாகிஸ்தான் விமானப் படையில் இணைக்கப்பட உள்ளது.- சீனா மற்றும் வடகொரியாவிடமிருந்து எம்-9 மற்றும் எம்-11 ஏவுகணைகளை இரகசியமாக கொள்வனதில் தொடர்புடையவர்.இத்தனை சக்திவாய்ந்த நபரைத்தான் "இராஜதந்திர" விடயங்களுக்கான தூதுவராக சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் அனுப்பி வைத்துள்ளது.இந்தியாவுக்கு எதிரான சக்திகளான சீனா மற்றும் பாகிஸ்தானிடம் மிக நெருக்கமும் ஆயுதக் கொள்வனவும் மேற்கொண்டு வரும் சிறிலங்கா அதற்கு கைமாறாக செய்திருக்கும் விடயமானது தென்னிந்தியாவை என்ன செய்யுமோ என்ற அச்சத்தை இந்திய .ராஜதந்திரிகள் வட்டாரத்தில் உருவாக்கியுள்ளது.- பாகிஸ்தான் தூதுவராக இருந்து ஓய்வு பெற்ற பசீட் வாலி மொகமட், கொழும்பு தூதரகத்தில் 1990-களில் மற்றொரு பொறுப்பில் பணிபுரிந்த போது தமிழகத்தில் நடந்த கோவை குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்ட்ப்பவர்- இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இயங்கும் ஜிகாத் குழுவினருக்கு பாகிஸ்தானின் மதராசாக்களில் பயிற்சி அளிக்க உதவியவர்- ஜிகாத் குழு குறித்த உண்மைகளை விடுதலைப் புலிகள் அம்பலப்படுத்திய நிலையில் பாகிஸ்தானிய புலனாய்வு அமைப்பின் ஆலோசனையின் பெயரில் கிழக்கு மாகாண முஸ்லிம் ரெஜிமெண்ட் உருவாக்கத்துக்கு காரணமாக இருந்தவர்.இந்தியாவுக்கு எதிராக இயங்குவதில் இவருக்கு அவர் சளைத்தவர் அல்ல- அவருக்கு இவர் சளைத்தவர் என்ற வகையில் பாகிஸ்தான் தனது தூதுவர்களை நியமித்து வருகிறது.இந்தியாவின் பிரதான தொழில் மையங்களும் பாதுகாப்புத் தளபாட நிறுவனங்களும் அமைந்திருக்கும் தென்னிந்தியாவை இலக்கு வைத்தே சிறிலங்காவில் தனது தளத்தை- களமுனையை பாகிஸ்தான் திறந்திருக்கிறது என்று இந்திய இராஜதந்திரிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர். மும்பாய், பெங்களுர், சென்னை, ஹைதராபாத், கொச்சி ஆகிய பிரதான தென்னிந்திய நகரங்களில் மும்பையைத் தவிர மற்றவைகளில் மத மோதல்கள் நடத்த முயற்சிக்கப்பட்டு தோல்வியடைந்திருக்கின்றன. ஆகையால் இந்திய அரசியலின் நிலைமைத்தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் இந்த நகரங்களில் பாகிஸ்தான் புலனாய்வுத்துறையால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் எளிதில் ஊடுருவும் சாத்தியமிருப்பதாகவும் அவர்கள் சுட்டுக்காட்டுகின்றனர்.ஜம்மு-காஸ்மீர் மற்றும் குஜராத் ஊடுருவல்களை விட தென்னிந்திய ஊடுருவல்களால் இந்தியாவின் அரசியல் நிலைத்தன்மைக்கு எப்போதும் ஆபத்து காத்திருக்கிறது என்றும் அவர்கள் எச்சரித்து வருகின்றனர்.இதற்கு எதிர்வினையாக "லாகூர்" பாணி நடவடிக்கைகளை கொழும்பில் "இந்தியா முடுக்கி விடலாம்".ஆனால் அந்த நடவடிக்கைகளை இனி புலிகளின் தலையில் போட்டு சிறிலங்கா தப்பிக்க முடியாது. அண்மைய கொழும்புத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் தெரிவித்தது போல் உடனே இந்தியாவின் றோவை பாகிஸ்தான் பகிரங்கமாக குற்றம்சாட்டும்.இனி வேறு வழியில்லை... இந்தியாவை சிறிலங்கா பகைத்துத்தான் ஆக வேண்டும்.