ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வட மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டங்களில் ஜனாதிபதி நேற்று சனிக்கிழமை கலந்துகொண்டார்.
இதன்போது, கிளிநொச்சி, இரணமடுவிலுள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது வடமாகாண தேர்தல், அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அங்கு சென்ற ஜனாதிபதி சிறுவர்களுக்கான கல்வித் தேவைகள் குறித்து கேட்டு அறிந்து கொண்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளரும் அவர்களின் ஆயுத முகவராகவும் இருந்து வந்த கே.பி போர் முடிவுக்கு வந்த பின்னர் வெளிநாடு ன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டார். தற்போது, அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் அவர், அரசசார்பற்ற நிறுவனமொன்றை நடத்தி வருகிறார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.