கொடூர பாலியல் வெறியாட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் சிங்களப் படைகளால் இசைப்பிரியா அவர்கள் உயிருடன் இழுத்துச் செல்லப்படும் காணொளி ஆதாரத்தை சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
பொதுநலவாய மாநாடு நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில் இக் காணொளி ஆதாரத்தை இன்று சனல்-4 தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.
இசைப்பிரியாவை தமிழீழத் தேசியத் தலைவரின் புதல்வி துவாரகா என்று கருதி சிங்களப் படையினர் இழுத்துச் செல்லும் பொழுது தான் துவாரகா இல்லை என்று அவ்விடத்தில் அழுதபடியே இசைப்பிரியா கூறும் ஒலிப்பதிவும் இக்காணொளியில் உள்ளது.
விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான விக்ரர் இயக்கத்தின் தலை சிறந்த போர் தளபதிகளில் ஒருவராவார். மன்னார் பிராந்தியத் தளபதியாகப் பணியாற்றிய விக்ரர் 12.10.1986 அன்று அடம்பன் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 27 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
யாழ். குடாநாட்டுக்கு அது புதிய காட்சியாக இருந்தது. ஒவ்வொரு ஊர்களின் ஊடாகவும், கிராமங்களின் வழியாகவும், நகரங்களின் ஊடாகவும் அந்த வீரனின் இறுதி ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது.
வீதிகளின் இருமருங்கிலும் மக்கள் வரிசையாக நின்று தமது தோட்டங்களிலும்,முற்றங்களிலும் பூத்திருந்த மலர்களை கொண்டுவந்து அவனின் உடல்தாங்கிய அந்த ஊர்திக்கு முன்பாக தூவி கண்ணீர் மல்க நின்றனர்.
அதற்குமுன்னர் ஒருபோதும் இப்படியான இறுதி ஊர்வல நிகழ்வு உணர்வுடனும், லட்சோபலட்சம் மக்களின் வழியனுப்பலுடனும் நடந்ததே இல்லை. யாழ். மண்ணில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு இருப்பதால் மக்கள் எந்தவித பயமுமின்றி தமது இதயத்துள் இருக்கும் விடுதலை வீரனுக்கு தமது இறுதி மரியாதையை செலுத்தியபடி இருந்தனர்.
இரவு பகலாக அந்த ஊர்தி யாழ். மண்ணின் அனைத்து இடங்களுக்கூடாகவும் நகர்ந்தது. எமது மண்ணில் இருந்து சிங்கள இராணுவத்தினர் விரட்டியடிக்கப்பட வேண்டும். எமது மக்கள் அச்சமின்றிய வாழ்வு ஒன்று வாழவேண்டும் என்ற கனவு கண்ட அந்த வீரன் அந்த பேழைக்குள் இருந்தபடியே அவற்றை பார்த்து உண்மையில் மனம் நிறைந்திருப்பான்.
யாழ். மண் விடுதலைப் போராளிகளின் கைகளுக்குள் வருவதற்காக ஓய்வற்ற உழைப்பும் திறனும் காட்டிய அந்த வீரன் லெப்.கேணல் விக்ரரின் இறுதி ஊர்வலம்தான் அது. ஒஸ்கார்..ஒஸ்கார்..என்ற சங்கேத அழைப்பிற்குரிய அந்த பெருவீரன் தாயக மண்ணில் விதையாகி கால் நூற்றாண்டுகள் கடந்து போய்விட்டன.
விக்ரர், இவனை எப்படி அடையாளப்படுத்துவது. அச்சம் கொஞ்சமும் இல்லாத பெருவீரன் என்றா? பழகும்போது குழந்தையை போல பழகும் மனதுள்ளவன் என்றா? களங்களில் நெருப்புகனரும் விழிகளுடன் உத்தரவிடும் ஆளுமைமிக்க தளபதி என்றா?…எப்படியும் அவனை அடையாளப்படுத்தலாம். அத்தனை ஆளுமைகளும் அவனிடத்தில் இருந்தன.
எந்த விடுதலைப் போராட்டம் என்றாலும் புரட்சி அமைப்பு என்றாலும் அதில் இணைபவர்கள் இரண்டு வழிகளில் இணைவார்கள். அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் மெல்லியதாக முளைவிடும் பொழுதிலேயே அதனை நிராகரித்து அதனில் இருந்து விடுதலைபெற என்று ஆரம்பித்திலேயே அமைப்பில் இணையும் வழி ஒன்று.
அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் உச்சமாகி கொடிய கொலைவெறியாட்டத்தினூடாக உணர்வுபெற்று விடுதலை அமைப்பில் இணையும் வழி அடுத்தது.1983 கறுப்பு யூலை இனப்படுகொலைகளுக்கு பின்னர் விடுதலை அமைப்புகள் வீச்சுப் பெறவும்,வீக்கம் பெறவும் ஆரம்பிக்க முன்னரே 1983 க்கு முன்னரேயே விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தவன் விக்ரர்.
1981ன் இறுதிப் பகுதியில் விக்ரரின் விடுதலைப்புலிகளுடனான தொடர்பு ஆரம்பிக்கிறது. ஆரம்பப் பொழுதுகளில் அமைப்புக்குள் உள்வாங்குவதற்கான அனைத்து கவனிப்புகளிலும் விக்ரரின் உறுதி தலைமையால் கவனிக்கப்பட்டு பயிற்சிக்காக முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் அமைந்திருந்த முகாம் ஒன்றுக்கு அனுப்பப்படுகின்றான்.
அங்கே லிங்கம், பொட்டு, பசீர், ரஞ்சன், கணேஸ், விக்டர், ஆனந்த் ஆகியோரும் இன்னும் சிலருக்கும் தலைவர் நேரடியாகவே பயிற்சிகளை ஆரம்பிக்கிறார். பயிற்சி முகாமின் உணவுப்பிரிவில் மூத்த உறுப்பினர்களான கிட்டுவும், ரஞ்சன்லாலாவும் இருக்கின்றனர். உடற்பயிற்சியாளராக செல்லக்கிளி அம்மான் இருக்கிறார்.
இந்த பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்த அதிகமானவர்கள் உறுதியிலும், விடுதலைப் போராட்டத்தின் ஏற்ற இறக்கங்கள் பற்றிய தெளிவிலும் தமது இறுதிக்கணம் வரைக்கும் மலையை நிகர்த்த உருக்கு உறுதியுடன் நின்றதற்கு காரணம் தலைவரின் நேரடி பயிற்சி, பயிற்சியின் பின்னான மாலைப் பொழுதுகளில் அமைப்பின் மூத்த உறுப்பினர்களான செல்லக்கிளி அண்ணா, சீலன், கிட்டு, ரஞ்சன், புலேந்திரன் ஆகியோர் உட்பட மற்றும் சிலரும் இணைந்த அனுபவ பங்கீடுகள்.
இவைகளேதான் விக்ரரையும் ஒரு உன்னதமான போராளியாக, மிகப்பெரும் வீரனாக வரித்தெடுத்த காரணிகளாகும்.சக போராளிகள் அனைவர் மீதும் அளவற்ற அன்பும், பாசமும் காட்டும் ஒரு பெரிய குழந்தையாக அவன் இருந்தான்.
அதிலும் பயிற்சிக்கு முன்னரும் பயிற்சிக்கு பின்னரும் அவன் இருந்த இளவாலைப் பகுதியில் அமைந்திருந்த வீட்டில் அவனுடன் இருந்தோர் இன்றும்கூட அவனின் நினைவுகளையும் செயல்களையும் ஒருவகையான பெருமிதத்துடனும் ஈர்ப்புடனும் கண்களில் ஒளிபொங்க நினைவு கூருவதை பார்க்கலாம்.
விக்ரரின் அஞ்சாமையையும், சீறிப்பாயும் துப்பாக்கி சன்னங்களுக்கு மத்தியிலும் நிதானமாக நகரும் அவனின் வேகத்தையும் அந்த நேரம் இருந்த போராளிகளுக்கு அடையாளம் காட்டியது திருநெல்வேலி தபாற்பெட்டி சந்தியில் 1983 யூலை 23ல் சிங்கள இராணுவத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தாக்குதல் ஆகும்.
மிகவும் செறிவான வாகனப் போக்குவரத்தும், சிங்கள காவல்துறை, சிங்கள இராணுவ நடமாட்டம் என்பன அடிக்கடி நிகழும் திருநெல்வேலி வீதியில் இரவில் வீதியை குழிதோண்டி அதில் சக்கையை வைத்து எக்ஸ்புளோடருக்கு தொடர்பு கொடுக்கும் வேலையை செல்லிக்கிளி அம்மான், அப்பையா அண்ணை ஆகியோருடன் இணைந்து செய்து முடித்தவன் விக்ரர்.
விக்ரர் அமைப்பில் இணைந்த பிறகு மன்னார் பகுதியில் நிகழ்ந்த தாக்குதல்களில் அநேகமாக அனைத்திலும் விக்ரரின் நேரடி பங்களிப்பும் விக்டரின் எம்16 கிறனைற் செலுத்தியின் வெடிப்பும் இருந்தே இருக்கும்.மன்னார் பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலில் விக்ரருடன் குமரப்பா போன்றோர் இணைந்திருந்தாலும்கூட அந்த தாக்குதலுக்கான திட்டமிடல், ஒருங்கிணைப்பு என அனைத்தையும் அற்புதமாக கையாண்டவன் விக்ரர்.
வெறும் தாக்குதல்களை மட்டும் நடாத்திக் கொண்டிருக்காமல் சிங்களத்திடம் இருந்து விடுவிக்கப்பட்ட மன்னார் பிரதேசத்தின் பகுதிகளில் மக்கள் அமைப்புகளை உருவாக்குவதிலும், மக்கள் மத்தியில் விடுதலைப் போராட்டம் பற்றி தெளிவையும், அரசியல் அறிவையும் ஊட்டுவதிலும் விக்டரின் செயற்பாடுகள் மிகவும் ஆழமாக அமைந்திருந்தன.அவன் மக்களால் ஆழமாக நேசிக்கப்பட்டதற்கு பின்னால் மக்களுடனான அவனின் ஆத்மார்த்தமான தொடர்பே காரணமாகும்.
விடுவிக்கப்பட்ட மன்னார் நிலப்பகுதியில் விக்ரர் பயிற்சி முகாம்களையும் உருவாக்கி ஏராளமான புதிய போராளிகளை தாய் மண்ணிலேயே உருவாக்குவதிலும் முனைப்புடன் செயற்பட்டவன். விக்ரர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் காட்டிய உறுதியும், தலைமைப் பண்பும், வீரமும் மிகவிரைவாகவே அவனை விடுதலைப்புலிகள் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினர் என்ற அதியுச்ச நிர்வாக மையத்துக்குள் உள்வாங்கி கொண்டது. சிங்கள தேசத்தின் இராணுவத்தினரை தமிழீழ மண்ணில் இருந்து துரத்தும் நடவடிக்கை தினமும் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலமது.
இராணுவம் முகாம்களுக்குள் முடங்கிக் கிடப்பதும், சிலவேளைகளில் முகாம்களை விட்டு சிறிய தொகையாக வெளிவரும் இராணுவத்தினரை உடனடியாக அந்த பகுதிக்கு விரையும் விடுதலைப்புலிப் போராளிகள் விரட்டியடிப்பதும் அன்றாட நிகழ்வுகள் அப்போது.
அப்படியான ஒருபொழுதில் 12.10.1986 அன்று அதிகாலையில் அடம்பன்நகருக்குள் இராணுவம் நுழைந்துவிட்டதாக கிடைத்த தகவலை அடுத்து கருக்காய்க்குளத்தினூடாகவும், ஆண்டான்குளப் பகுதியாலும், நாயாற்று வெளிக்குள்ளாக தாமரைக்குளத்தினூடாகவும் அடம்பனுக்குள் விக்ரரின் தலைமையில் நுழைந்து விடுதலைப்புலிகள் நடாத்திய தாக்குலில் சிங்கள இராணுவத்துக்கு துணையாக ஹெலிக்கொப்படரும் வந்து தாக்குதலை ஆகாயத்தில் இருந்து நடாத்தியபோதும் வீரமுடன் போரிட்ட அந்த தளபதி எதிரியின் சன்னம் ஒன்று நெஞ்சுக்குள்ளாக புகுந்து சென்றுவிட வீரமரணமடைகிறான்.
ஒருமாமலையின் சரிவாக விக்ரரின் மரணம் அமைப்பை உலுக்கியது அந்த பொழுதில். தலைமை கொடுக்கும் பணியை செயற்படுத்தும் திறனும், அதனை செயற்படுத்தியே தீரவேண்டும் என்ற இலட்சிய உணர்வும் உடைய ஒரு பெருவீரன் அவன்.விக்ரர் மரணித்த அந்த சண்டையில்தான் முதன்முதலாக பெண்கள் அணி தாக்குதலில் நேரடியாக இறக்கப்பட்டனர்.
நாயாற்று வெளிக்குள்ளாக தாமரைக்குளம் கடந்து அடம்பனுக்குள் நுழைந்த சாஜகானின் அணியில் விக்ரரின் வழிகாட்டலில்தான் முதலில் பெண்புலிகள் எதிரிக்கு எதிரான சண்டையில் நின்றனர்.
அதுமட்டுமல்லாமல் அந்த சண்டையில்தான் முதன்முதலாக சிங்கள இராணுவத்தை செர்ந்த இரண்டு வீரர்கள் உயிருடன் பிடிக்கப்படுகிறார்கள். 2வது லெப்.அஜித் சந்திரசிறீ, கோப்ரல் கே.டபிள்யூ பண்டார ஆகியோரே பிடிக்கப்பட்ட சிங்கள இராணுவத்தினர். விக்ரர் தாயக மண்ணில் வீழ்ந்துவிட்ட தாக்குதலில்கூட அவன் இன்னொரு அங்கீகாரத்தையும், விடுதலைப் போராட்டத்துக்கு பாரிய எழுச்சியையும் இந்த இராணுவ வீரர்களின் கைதுகள் மூலம் உருவாக்கிச் சென்றிருந்தான்.
சிங்கள தேசத்துடன் தமிழர் தேசம் ஒரு உத்தியோகபூர்வமான கைதிகள் பரிமாற்றத்தைச் செய்வதற்கு விக்டரின் அடம்பன் சண்டையில் சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினர் காரணமாக இருந்தனர்.
சிங்கள தேசத்தின் பாதுகாப்பு அமைச்சர் அத்துலக் முதலியும், சிங்கள தேசத்தின் முப்படைகளின் தளபதியான சிறில் ரணதுங்கா, பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் நேரடியாக பலாலி சென்று பலாலி வாசலில் வைத்து விடுதலைப்புலிகளான அருணாவையும், காமினியையும் விடுவித்தனர்.
அதற்கு பரிமாற்றமாக அடம்பன் சண்டையில் பிடிக்கப்பட்டவர்களை கிட்டு விடுவித்தார். இப்போது பார்த்தால் இது சிறிய சம்பவமாக தெரியும். ஆனால் அன்றைய பொழுதில் இது ஏற்படுத்திய எழுச்சியும் மன உறுதி ஏற்றமும் வார்த்தைகளில் வடிக்க முடியாதவை.
இப்போது இருபத்தைந்து வருடங்களாகி விட்டது. விக்ரர் என்ற என்ற அற்புதமான வீரனின் நினைவுகளும், மாசுமறுவற்ற அவனின் உன்னதமான இலட்சிய பற்றும் என்றென்றும் எமது மக்களால் இதயத்தின் ஆழத்திலிருந்து நினைவு கொள்ளப்படும்.
என்றாவது ஒருநாள் விடுதலைப்புலிகள் தலைமை விக்ரரின் இதுவரை பதியப்படாத பக்கங்களையும்,அவற்றில் தலைமையின் கட்டளையை ஏற்று அவன் செய்ய வீரத்தையும் பதிவு செய்யும் போது நிச்சயமாக ஒரு உன்னதத்திலும் உன்னதமான வீரனாக அவன் இன்னும் உயர்ந்து தெரிவான்.
பிரித்தானியத் தமிழர் பேரவையும், தமிழருக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த "இலங்கையில் தமிழின அழிப்பு" என்ற தலைப்பிலான கருத்தரங்கொன்று கடந்த செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.
பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள Portcullis House என்னும் இடத்தில் இக்கருத்தரங்கு இடம்பெற்றது.
பல்வேறு அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் ஆய்வாளர்கள், கல்விமான்கள், அரசியல் செயற்பாட்டளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு, விவாதங்கள் மற்றும் இலங்கையால் அரங்கேற்றப்பட்ட இனவழிப்பு சம்மந்தமான கேள்வி- பதில் அரங்கமாகவும் உருப்பெற்றது.
இலங்கையில் தமிழ் மக்களின் நிலை தொடர்பான, தமிழ் மக்களுக்கும் - வேற்றின மக்களுக்கும், தனிநபர்களுக்கும்- அமைப்புகளுக்கும், என சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கிடையான, ஆரோக்கியமான கலந்துரையாடல் இங்கு இடம் பெற்றது.
மேலும் பல ஆய்வுகள், வெளியீடுகள், தரவுத் தொகுப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் சாட்சியங்கள் போன்றனவை மூலம் இன்வழிப்பு நடைபெறுவதனை தமிழரல்லாதவர்கள் ஏற்றுக் கொள்ள இந்த நிகழ்வு ஒரு முன்நோக்கிய நகர்வாய் அமையப் பெற்றதென ஏற்பாட்டாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் மற்றும் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர், வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கரின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒரு புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டி எழுப்பிய நிகழ்ச்சி பாரத நாட்டை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி உலகத்தின் மனட்சாட்சியை தீண்டிவிட்ட நிகழ்ச்சி என்று தீர்க்க தரிசனமாக தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் அன்று தெரிவித்துள்ளார்.
ஈகைச்சுடர் லெப்டினன் கேணல் திலீபனின் 26ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஐந்தம்ச கோரிக்கையினை முன்வைத்து சாகும்வரை உண்ணா நோன்பிருந்து காந்திதேசத்தின் முகத்தில் கரியை பூசிய இராசையா பார்த்தீபன் என்று அழைக்கப்படும் லெப்டினன் கேணல் திலீபனின் 26ஆம் ஆண்டு நீங்கா நினைவுகளை எங்கள் மனதில் நிறுத்தி விடுதலை பயணத்தினை தொடர்வோம்..
அதேவேளை விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் வான்படையினை உருவாக்கி வரலாறு படைத்த கேணல் சங்கர் அண்ணா அவர்கள் 26.09.2001 அன்று சிறீலங்கா படையினரின் தாக்குதலில் வீரச்சாவடைந்து 12 ஆம் ஆண்டு நினைவு நாட்களையும் இன்றைய நாளில் நினைவிற் கொள்கின்றோம்.
திலீபன் ஒரு ஈடு இணையற்ற மகாத்தான தியாகத்தை புரிந்தான் அவனது மரணம் ஒருமாபெரும் வரலாற்று நிகழ்வு தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒருபுரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டிஎழுப்பிய நிகழ்ச்சி பாரத நாட்டை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி உலகத்தின் மனட்சாட்சியை தீண்டிவிட்ட நிகழ்ச்சி.
எனது அன்பார்ந்த மக்களே..திலீபன் யாருக்கா இறந்தான் எதற்காக இறந்தான் அவனது இறப்பின் அர்த்தம் என்ன?
அவனது இறப்பு ஏன் ஒரு மகத்தான நிகழ்ச்சியாக மக்கள் எல்லோரையும் எழுச்சி கொள்ளசெய்த ஒரு புரட்சிகர நிகழ்ச்சியாக அமைந்தது. திலீபன் உங்களுக்காக இறந்தான் உங்கள் உரிமைக்காக இறந்தான். உங்கள் மண்ணுக்காக இறந்தான். உங்கள் பாதுகாப்பிற்காக சுதந்திரத்திற்காக கௌரவத்திற்காக இறந்தான்.
தான் நேசித்த மக்களுக்காக, தான் நேசித்த மண்ணுக்காக ஒருவன் எத்தகைய உயர்ந்த உன்னத தியாகத்தை செய்யமுடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத்தான் அவன் செய்திருக்கின்றான்.
ஒரு உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால் உயிரினும் உன்னதமானது எமது உரிமை எமது சுதந்திரம் எமது கௌரவம்.. என்றும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் ஈகைச்சுடன் லெப்ரினன் கேணல் திலீபன் நினைவாக தெரிவித்துள்ளார்.
பாரதம் தான் எமது இனப்பிரச்சினையில் தலையிட்டது. பாரதம் தான் எமது மக்களின் உரிமைக்கு உத்தரவாதம் அளித்தது. பாரதம் தான் எம்மிடம் ஆயுதங்களை வாங்கியது.
பாரதம் தான் எமது ஆயதப்போராட்டத்தை நிறுத்தி வைத்தது. ஆகவே பாரத அரசிடம் தான் நாம் உரிமைகோரி போராட வேண்டும். எனவேதான் பாரதத்துடன் தர்மயுத்த அம்பை தொடுத்தான் திலீபன்.
அத்தோடு அகிம்சை வடிவத்தை ஆயதமாக எடுத்துக்கொண்டான். நீராகாரம் கூட அருந்தாது மரணநோன்பை திலீபன் தழுவிகொள்வதற்கு 24மணிநேரம் முன்பே இந்திய தூதர் டிக்சிற்கு முன்னறிவித்தல் கொடுத்தோம். ஆனால் எதுவும் நடைபெறவில்லை.
அதற்கு மாறாக திலீபனின் உண்ணாவிரதத்தை கேவலமாக கொச்சைப்படுத்தியது என்றும் தமிழீழ விடுதலை போராட்டத்தின் நீண்டகால நிகழ்வுகளை தலைவர் அவர்கள் அன்றே சொல்லியிருந்தார்.
அந்தத் தியாக தீபத்தின் இலட்சியங்கள் நிறைவேற, எம்மை நாம் அர்ப்பணிப்போமாக!
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, நாடுகளின் தலைவர்கள் மற்றும் உலக முழுவதிலும் உள்ள சிவில் அமைப்புகளின் தலைவர்களை சந்திக்கும் வட்டமேசை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதன் போது சிவில், சமூக அமைப்புகளுக்கு எதிரான தடைகள் குறித்து அவர் இவர்களுடன் விவாதித்துள்ளார்.
சிவில், சமூக அமைப்புகள் எதிர்நோக்கும் தடைகள், அந்த அமைப்புகளை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், அவற்றுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இதன் போது விவாதிக்கப்பட்டுள்ளது.
23 ஆம் திகதி நடைபெற்ற இந்த விவாதத்தில் கலந்து கொள்ள இலங்கையின் மாற்றுக்கொள்கைக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவிற்கு வெள்ளை மாளிகை அழைப்பு விடுத்திருந்து.
நவநீதம்பிள்ளை அம்மையாரின் வாய் மூல அறிக்கை சமர்ப்பிக்கபபடுவதற்கு முன்னர் உரையைத் தாங்கிய பிரதிகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. ஐநாவின் மனித உரிமைகள் உதவி ஆணையாளரினால் இலங்கை தொடர்பான அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது.
இதில் தான் இலங்கை சென்று வந்த நிலையில் தனது விஜயத்தின் போது இலங்கை அரசாங்கம் கையாண்ட முறை மிகவும் வருத்தமளிப்பதாகவும், தாம் சென்றிருந்த வேளை வெளிநாடுகளுக்கு காட்டுவதற்காக இராணுவக் குறைப்பு செய்ததுடன் வட-கிழக்கை விட்டு தாம் அகன்றதும் இராணுவம் மீண்டும் சென்றதை சுட்டிக்காட்டியுள்ளதுடன்,
சர்வதேச சமூகத்திற்கு பிரதான கடமை உண்டு சுயாதீன விசாரணை வேண்டும்.
இலங்கையில் சுயாதீனமான பொலிஸ்துறை இல்லை, தொடர்ந்தும் கட்டுப்பாடுகளுடன் இயங்கும் நிலை
காணாமல் போனவர்கள் வட-கிழக்கில் மட்டும் தான் ஆய்வு வெளி மாவட்டங்களுக்கு இல்லை,
ஐநா காணாமல் போனேர் அமைப்பு இலங்கை செல்ல அனுமதிக்க வேண்டும்,
2008--2012 வரை பாதுகாப்புத் தடைச் சட்டத்தில் 50 போர் வரை கைது,
மீள் குடியேற்றம் திருப்தியில்லை, 2008 க்கு முன்னர் இடம் பெயர்ந்தவர்கள் இன்னமும் அகதிகளாக,
திருமலை மாணவர் படுகொலை மற்றும் பிரான்ஸ் தொண்டு நிறுவன படுகொலைக்கு தீர்வில்லை,
சரணடைந்த விடுதலைப்புலிகள் 11758 நபர்கள் விடுதலையானதாகவும் 234 பேர் புனர்வாழ்வு, 98 பேருக்கு எதிராக வழக்கு,
வெலிகடை, வவுனியா மற்றும் இன்னும் பல படுகொலைகளுக்கு விசாரணை இல்லை, வெளிப்படைத்தன்மை காணப்பட வேண்டும்,
பௌத்த மதம் தவிர்ந்த ஏனைய மதங்கள் மீது அடக்கு முறை,
என இன்னும் பல விடயங்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது
இவைகள் பிரதான விடயமாக பார்க்கப்படுகிறது.
இவ் அறிக்கை வருவதனை அறிந்து கொண்ட இலங்கை அரச தரப்பு பிரதிநிதிகளின் பிரசன்னம் மிக மிக குறைவாக உள்ளமை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க வழமையான பாணியில் நவிபிள்ளையின் அறிக்கையினை நிராகரித்ததுடன், நாட்டில் இராணுவம் எந்தக் குற்றமும் செய்யவில்லை நாம் ஜனநாயகத்தை மதிக்கிறோம் என்பதற்கு வடமாகாண சபை தேர்தல் சிறந்த எடுத்துக்காட்டு எனக் கூறி அறிக்கையின் விடங்களை நியாயப்படுத்தி செல்ல முற்பட்ட வேளை சபைக்கு தலைமை தாங்கியவரால் உரை இடைநிறுத்தப்பட்டது. மேலும் உரையாற்ற முற்பட்ட வேளை அனுமதி மறுக்கப்பட்டது.
நவநீதம்பிள்ளை வெளியிட்ட அறிக்கையிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட சில விபரங்கள்!
போர் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு நம்பகமான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும், அதையும் மார்ச் மாதத்துக்குள் செய்யவேண்டும், அப்படி செய்யாவிட்டால் சர்வதேச சமூகம் தனியாக ஒரு விசாரணையை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று ஐநா மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் நவிபிள்ளை எச்சரித்துள்ளார்
ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் நவிபிள்ளை இலங்கைக்கு ஒரு வாரகால விஜயம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் கண்டதையும், கேட்டதையும், விசாரித்து அறிந்ததையும் அவரின் சார்பில், மனித உரிமைகள் பேரவையின் துணைத் தலைவர் வாயிலாக வாய்வழி அறிக்கையாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
போரின்போது பொதுமக்கள் தரப்புக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள், இராணுவம் விசாரணையின்றி சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டும் சனல் 4 வெளியிட்ட வீடியோ போன்றவை தொடர்பில் மனித உரிமைகள் பேரவை கவலை வெளியிட்டும் இது தொடர்பில் முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக தனக்குத் தெரியவில்லை என்று நவி பிள்ளை கூறியுள்ளார்.
குற்றச்சாட்டுகள் தொடர்பாக இராணுவமும், கடற்படையும் நடத்தும் விசாரணைகள் நம்பிக்கையை அளிப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
போர்க்குற்றங்கள் குறித்த தேசிய விசாரணைகள் நம்பகரமான முறையில் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் சர்வதேச சமூகம் தனியாக விசாரணை நடத்தும் பொறிமுறையை ஏற்படுத்த வேண்டிய கடமை இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்
விடுதலைப் புலிகள் தொடர்புடைய போர் குற்றங்களை முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று தான் தொடர்ந்து வலியுறுத்திவருவதாகவும் இது தொடர்பில் சம்மந்தப்பட்டோர் மீதான வழக்குகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும் ஐநா ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.
திருகோணமலை கொலை விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை
திருகோணமலை கடற்கரையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பில் சட்ட மா அதிபர் தன்னிடம் விளக்கமளித்தார் என்றும் இந்த வழக்கு விசாரணை தொடர்பில் தொழில்நுட்ப உதவிகளை அளிக்கத் தயாராக இருப்பதாக இலங்கை அரசிடம் தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏ.சி.எப் நிறுவனத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்ட வழக்கு உள்ளிட்ட பலவற்றில் முன்னேற்றம் இல்லாத நிலையையும் தாம் அவதானிப்பதாக நவி பிள்ளை தெரிவித்தார்.
இலங்கைக்கு சென்றபோது தான் சென்ற கிராமங்களுக்கு, தான் செல்வதற்கு முன்பும், பின்பும் காவல்துறையும் இராணுவமும் சென்றது என்று குறிப்பட்ட நவி பிள்ளை திருகோணமலையில் தன்னை சந்தித்தவர்கள் தன்னிடம் என்ன கூறினார்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட்டார்கள் என்றும் தெரிவித்தார். இது இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளியுறவுச் செயலரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது என்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்த செய்திகள் மீது ஐநா மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இலங்கையில் சட்டத்தின் ஆட்சியும், ஜனநாயக நிறுவனங்களும் மதிப்பிறக்கம் செய்யப்படுவது மற்றும் அருகிப்போவது குறித்து தான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக கூறிய நவி பிள்ளை, 17 ஆவது சட்ட திருத்தத்தை மீண்டும் கொண்டுவருவது மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நீதிமன்றம் மேலாய்வு செய்ய வழி செய்யப்பட வேண்டும் என்று படிப்பினைகள் ஆணைக்குழு தெரிவித்திருந்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
வட மாகாணத் தேர்தல் நடைபெற்றதை வரவேற்றுள்ள நவி பிள்ளை, 13 ஆவது சட்ட திருத்தம் அமல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று நம்புவதாகத் தெரிவித்தார் நவி பிள்ளை.
ராணுவப் பிரசன்னம் குறித்து கவலை
போர் முடிந்து நான்கு ஆண்டுகளான பிறகும் அங்கு காணப்படும் கணிசமான இராணுவப் பிரசன்னம் குறித்து ஐ நா ஆணையர் கவலை வெளியிட்டார்.
பெண்கள், சிறுமிகள் மற்றும் பலவீனமான நிலையில் இருக்கும் பெண்களின் தலைமையிலான வீடுகளில் இருக்கும் பெண்கள் இராணுவத்தால் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்க் ஆளாகக் கூடிய சூழல் குறித்து கவலை வெளியிட்ட நவி பிள்ளை, பாலியல் துஷ்பிரயோகங்களை அரசு கிஞ்சிதமும் சகிக்கக் கூடாது என்று அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
தனியார் நிலங்களை இராணுவத் தேவைகளுக்காக கட்டாயமாக கையகப்படுத்துவது குறித்த ஆவணங்கள் நவி பிள்ளைக்கு அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகணத்தில் சிவில் நிர்வாகத்திலும், பொருளாதார நடவடிக்கைகளிலும், கல்வி , விவசாயம், சுற்றுலா போன்ற துறைகளிலும் இராணுவத்தின் பங்களிப்பு அதிகம் காணப்படுவதாகவும் அவர் அவதானித்துள்ளார். சிவில் நிர்வாகத்துக்குட்பட்ட விடயங்களில் இருந்து இராணுவத்தை ஒரு காலவரைக்குள் விலக்கிக் கொள்ளுமாறு அரசிடம் நவி பிள்ளை தெரிவித்துள்ளார்.
கற்றறிந்த பாடங்கள் ஆணைக்குழு அளித்த பரிந்துரைகளில் கூடுதலாக 53 பரிந்துரைகளை அமல்படுத்த அரசு முன்வந்துள்ளதை பாராட்டியுள்ள மனித உரிமைகள் ஆணையர் அதே நேரம் அரசு இது தொடர்பில் ஒரு பொது விவாதத்தை நடத்தினால் அதனால் கூடுதல் பயன் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
காணாமல் போனோர் நிலை
காணமல் போனோர் நிலையும் இன்று முக்கிய இடத்தை பிடித்தது.
கடந்த 1990 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடையில் வடக்கிலும் கிழக்கிலும் காணாமல் போனோர் குறித்து விசாரிக்க அரசு ஒரு குழுவை அமைத்திருந்தாலும், போருக்குப் பிறகு கொழும்பிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் விசாரணை நடக்காது என்பதால் இந்த ஆணையத்தின் வரம்புகளை விரிவு படுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார். காணமல் போனோர் குறித்து அரசு முன்பு அமைத்த 5 ஆணையங்களால் பயனேதும் ஏற்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
காணமல் போனோர் தொடர்பிலான சர்வதேச ஒப்பந்தத்தை 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கைச்சாத்திடுவதன் மூலம் இது தொடர்பில் அரசுக்குள்ள உறுதிப்பாட்டை காட்ட முடியும் என்றும் காணமல் போனோர் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்த கடத்தி காணமல் போனோர் தொடர்பிலான ஐ நா நிபுணர் குழுவின் சேவைகளை அரசு பயன்படுத்திக் கொள்ளும் என்றும் தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை வழியில் போராடி ஈழத் தமிழரின் விடுதலைக்காக தன்னுயிரை ஈர்ந்த. தியாக தீபம் திலீபன் அவர்களின் 26ம் ஆண்டின் முதலாவது நாள் இன்று. "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழ மலரட்டும்"என்று உலகத் தமிழருக்கு அறை கூவல் விடுத்து. அன்று உருகி உருகி மெழுகாகி உறைந்து போன உத்தமனின் நினைவு நாளில் அவரின் கனவை எம் நெஞ்சங்களில் சுமந்து ஈழவிடுதலை நோக்கி அனைவரும் புதிய புரட்சிக்குத் தயாராகுவோம்.
“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கு எதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணா நோன்பிருந்து வீரச்சாவடைந்தவர். அவருக்கு உதவியாளராக இருந்த போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணா நோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.” காலை 9.30 மணி! பாடசாலை பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனைச் சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாகப் பேசுகிறார். காலை 9.45 மணி! “வோக்கிடோக்கி”யில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற “வானை” நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்கிறோம். ஆம். அவரின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் ஏறுகிறார். அவரின் பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி, பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஐன், நான், மற்றும் சிலர். வான் நல்லூர் கந்தசாமி கோயிலை நோக்கி ஓடுகிறது. பாதையின் இரு பக்கத்திலும் மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கையசைத்து வழியனுப்புகிறார்கள். வான் நின்றதும், பிரதித் தலைவர் மாத்தையா எதிர்வந்து நின்று, திலீபனைக் கட்டி அணைத்து வரவேற்று, உண்ணாவிரத மேடைக்கு அழைத்துச் செல்கிறார். நாங்களும் பின்னால் போய்க் கொண்டிக்கிறோம்…. எதிர்பாராத விதமாக அந்த நிகழ்ச்சி நடக்கிறது. வயதான ஒர் அம்மா, தள்ளாடிய சிவந்த நிற மேனி, பழுத்த தலை, ஆனால் ஒளி தவழும் கண்களில் கண்ணீர் மல்க, திலீபனை மறித்து, தன் கையில் சுமந்துவந்த அர்ச்சனைச் சரையிலிருந்து நடுங்கும் விரல்களால் திருநீற்றை எடுத்து திலீபனின் நெற்றியில் பூசுகிறார். சுற்றியிருந்த “கமெரா”க்கள் எல்லாம் அந்தக் காட்சியைக் “கிளிக்” செய்கின்றன. வீரத்திலகமிடுகிறார். அந்தத் தாய்… தாயற்ற திலீபன் அந்தத் தாயின் பாச உணர்வில் மூழ்கிப்போய் விடுகிறார்.
காலை 9.45 மணி! உண்ணாவிரத மேடையிலே உள்ள நாற்காலியில் திலீபனை அமர வைக்கிறார், தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா அவர்கள். எனக்கு அப்போது ஒரு நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வந்தது. நெல்லியடி இராணுவ முகாம் தாக்குதலுக்கு முன்பாக கப்டன் மில்லரிடம் திட்டத்தை ஒப்படைத்து, வழியனுப்பி வைக்கிறார் மாத்தையா. அன்று மில்லர் வீரத்துக்குக் காவியம் ஒன்றையே படைத்துவிட்டு வீரமரணம் அடைந்தான். இன்று திலீபன்…? திலீபனின் அருகே நான், ராஐன், பிரசாத், சிறீ ஆகியோர் அமர்ந்திருக்கிறோம். திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. அங்கு பக்கத்திலிருந்த மேடையில் பிரசாத் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. திரு. நடேசன், காசி ஆனந்தன் ஆகியோர் திலீபனின் உண்ணாவிரதம் எதற்காக ஆரம்பிக்கப்படுகிறது என்பது பற்றி விளக்கமளித்தார்கள்… தமிழ் மக்களினதும் தமிழர் தாயகத்தினதும் உரிமைகளைப் பேணும் நோக்கமாக, இந்தியா மக்களினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில், தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட ஐந்து கோரிக்கைகளும் பின்வருவன: 1. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடாத்தப்படும் சிங்களக் குடியேற்றம், உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை “புனர்வாழ்வு” என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
4. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
5. இந்தியா அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள இராணுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.
பிரசாத் அவர்களால் மேற்படி ஐந்து கோரிக்கைகளும் வாசிக்கப்பட்டன. இதே கோரிக்கைகளை 13-09-1987 அன்று இந்தியா உயர் ஸ்தானிகரின் கையில் நேரடியாகக் கிடைக்கக்கூடியதாக அனுப்பி 24 மணித்தியால அவகாசமும் கொடுத்திருந்தார்கள்… ஆனால், 15-09-1987 வரை எந்தப் பதிலும் தூதுவரிடமிருந்து கிடைக்காத காரணத்தினால் சாகும்வரை உண்ணாவிரதமும், மறியல் போராட்டமும் நடாத்துவதேன தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதேசப் பொறுப்பாளர்களின் கூட்டத்தில் 13-09-1987 அன்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படிதான் திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பித்தது… பிற்பகல் 2.00 மணி!திலீபன் கம்பீரமாக வீற்றிருக்கிறார். உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மணித்தி---யாலங்கள் முடிந்துவிட்டன. இரண்டாவது மேடையிலே நடைபெற்றக் கொண்டிருந்த உண்- -ணாவிரத விளக்கக் கூட்டம் முடிவடைந்துவிட்டது. “படிப்பதற்குப் புத்தகங்கள் வேண்டும்” என்று என் காதுக்குள் குசுகுசுக்கிறார் திலீபன். நான் ராஐனிடம் சொல்கிறேன். பதினைந்து நிமிடங்களில் பல அரிய நூல்கள் மேடைக்கு வருகின்றன. விடுதலைப் போராட்டங்கள் பற்றி அறிவதில் திலீபனுக்கு மிகுந்த ஆர்வம் எப்போதுமே உண்டு. பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, ஹோசிமின், யாசீர் அரபாத் போன்றவர்களின் வாழ்க்கையைப் பற்றிய நூல்களை நேரம் கிடைக்கும்போது படிப்பார். பலஸ்தீன மக்களின் வாழ்க்கையைப் பற்றிப் படிப்பதென்றால் அவருக்குப் பலாச்சுளைமா- -திரிப் பிடிக்கும். “பலஸ்தீனக் கவிதைகள்” என்ற நூலை அவரிடம் கொடுத்தேன். அதை மிகவும் ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினார். மாலை 5.00 மணிக்கு பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாயிற்று. பாடசாலை மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு கவிதைகளை வாசிக்கத் தொடங்கினர். சுசீலா என்ற மாணவி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தன் கவிதையை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கட்டத்தில் அவர் அழுதேவிட்டார். “அண்ணா திலீபா! இளம் வயதில் உண்ணாமல் தமிழினத்துக்காக…… கவிதை தொகுப்பை முடித்துவிட்டு (பலஸ்தீனக் கவிதைகள்), கவிதை மழையில் நனையத் தொடங்கினார். அவர் விழிகளில் முட்டிய நீர்த்தேக்கத்தை ஒரு கணம் என் கண்கள் காணத் தவறவில்லை. ஏத்தனை இளகிய மனம் அவருக்கு? இந்த இளம் குருத்து இன்னும் எத்தனை நாட்களுக்கு ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் வாடி வதங்கப் போகிறது? அகிம்சைப் போராட்டத்துக்கே ஆணிவேராகத் திகழ்ந்த அண்ணல் காந்தியடிகள் கூட, தனது உண்ணாவிரதப் போராட்டங்களை நீராகாரம் அருந்தித்தானே நடத்தினார்! ஏன்? ஐரிஷ் போராட்ட வீரன் “பொபி சாண்ட்ஸ்” என்ன செய்தான்? சிறைக்குள், நீராகரம் அருந்தித்தான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து உயிர்நீத்தான்.
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த திரு. பொட்டி ராமுலு என்பவரும் அதே முறையில்தான் உண்ணாவிரதம் இருந்து, இறுதியில் தியாக மரணம் அடைந்தார். 1956 ஓகஸ்ட் 27 இல், சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 63 வயதான விருதுநகர் சங்கரலிங்க நாடார் 78 ஆவது நாள், அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாமல் உயிர்துறந்தார் ( 13 ஆண்டுகளின் பின் பேரறிஞர் அண்ணாவால், 1969 இல் சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது). பகத்சிங்கின் தோழரான வங்காளத்தைச் சேர்ந்த ஐதீந்திர நாத்தாஸ் என்ற இளைஞன் 13.07.1929 இல் லாகூர் சிறையில், சிறைக்கொடுமைகளை எதிர்த்து உண்ணாவிரதமிருந்து 13.09.1929 அன்று, 63 ஆம் நாள் வீரமரணமடைந்தார் (அதன் பின் சிறைச்சாலை விதிகள் தளர்த்தப்பட்டன).
ஆனால் நம் திலீபன்? உலகத்திலேயே நான் அறிந்தவரையில் இரண்டாவதாக, ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தவர் என்ற பெருமதிப்பைப் பெறுகிறார். அப்படியானால் அந்த முதல் நபர் யார்? அவர் வேறு யாருமல்ல, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்தான் 1986 ஆம் ஆண்டு நொவெம்பர் மாதம் இந்தியாவில் அவர் இருந்த போது, தகவல் தொடர்புச் சாதனங்களை இந்திய அரசு கைப்பற்றியதைக் கண்டித்து, ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து, உலகில் புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பித்துவைத்த பெருமை அவரையே சாரும். இரண்டாம் நாளே இந்திய அரசு பணிந்ததால் அந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் வெற்றி பெற்றார். அதுபோல், அவரால் உருவாக்கப்பட்ட திலீபன் இன்று குதித்து விட்டார். அவரது கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றுமானால் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிடத் தயார். இல்லையென்றால் இறுதிமூச்சு வரை அதைத் தொடரத் தயாராக இருந்தார். திலீபன் மிகவும் மன உறுதி படைத்தவர். ஓல்லியான உடலாயினும் திடமான இதயம் அவரிடம் இருந்தது. தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருக்கும் வரை எதையும் சாதிக்கலாம் என்ற தலைவர் பிரபாகரனின் அசையாத கொள்கையிலே பற்று வைத்திருப்பவர், திலீபன். அவரது கோரிக்கைகள் நிறைவேறுமா? காலம்தான் பதில் சொல்லவேண்டும். இந்த உண்ணாவிரதம் அரசின் தலையீட்டினால் வெற்றி பெறுமானால் அந்த வெற்றி திலீபனையே சாரும். அதுபோல் இந்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இறுதிவரை உண்ணாவிரதம் இருந்தே திலீபன் இறக்க நேரிட்டல்? அதில் கிடைக்கும் தோல்வியும் திலீபனுக்கு ஓர் மாபெரும் வெற்றிதான். உலகில், புதிய அத்தியாயம் ஒன்றின் “சிருஷ்டி கர்த்தா” என்ற பெருமை அவனையே சாரும். ஆனால், அதற்காக எங்கள் குல விளக்கை நாமே அணைக்க வேண்டுமா? “இறைவா! திலீபனைக் காப்பாற்றிவிடு!” கூடியிருந்த மக்கள் நல்லூர்க் கந்தனிடம் அடிக்கடி இப்படி வேண்டிக்கொள்கிறார்கள்- இதை நான் அவதானிக்கிறேன்.
பழந்தமிழ் மன்னனாகிய சங்கிலியன் அரசாண்ட நல்லூர் அரசதானியிலே…. அதுவும் தமிழ்க் கடவுளாகிய குமரனின் சன்னிதியில்… ஒரு இளம்புலி உண்ணாமல் துவண்டு கிடக்கிறது……… ஒரு நல்ல முடிவு கிடைக்கவேண்டும். இல்லையேல் உலகில் நீதி செத்துவிடும். எனக்குள் இப்படி எண்ணிக் கொள்கிறேன்.
அப்போது ஒர் இளைஞன் மேடையில் முழங்கிக் கொண்டிருக்கிறான். ”திலீபன் அண்ணாவின் கோரிக்கைகள் மட்டுமல்ல, தமிழ் மக்களின் கோரிக்கைகளும் இதுதான். இதை நிறைவேற்ற வேண்டியது இந்திய அரசின் கடமையாகும். அவர் தமிழீழம் தாருங்கள் என்பதற்காக உண்ணாவிரதம் இருக்கவில்லை. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்தே ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றும்படி வற்புறுத்தித் தான் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கிறார். எந்த காரணத்தாலாவது இதை இந்திய அரசு நிறைவேற்றத் தவறுமானால், திலீபன் அண்ணா இறப்பது நிச்சயம். திலீபன் அண்ணா இறந்தால் ஒரு பூகம்பம் இங்கே வெடிக்கும், ஒரு புரட்சி இங்கே வெடிக்கும். இதுதான் என்னால் கூறமுடியும்” அவரின் பேச்சு முடிந்ததும் கூடியிருந்த மக்கள், அந்தப் பேச்சை வரவேற்பதுபோல் கைகளைத்தட்டி ஆரவாரஞ் செய்கின்றனர். அந்த ஒலி அடங்க வெகு நேரம் பிடிக்கின்றது. அன்று இரவு பதினொரு மணியளவில் தலைவர் வே.பிரபாகரன் திலீபனைப் பார்ப்பதற்காக மேடைக்கு வருகிறார். அவருடன் சொர்ணம், இம்ரான், அஜித், சங்கர், மாத்தையா, ஜொனி இப்படி பலரும் வருகின்றனர். வெகுநேரம்வரை தலைவருடன் உரையாடிக் கொண்ருந்தார் திலீபன். யாரையும் அதிக நேரம் பேச அனுமதிக்க வேண்டாம் என்று, போகும்போது என்னிடம் கூறிவிட்டுச் சென்றார் தலைவர். நீர், உணவு உட்கொள்ளாத ஒருவர், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால் விரைவில் களைப்படைந்துவிடுவார். அதனால்தான் தலைவர் அப்படிக் கூறிவிட்டுச்சென்றார். அன்றிரவு பத்திரிகை நிருபர்களும், பத்திரிகைத் துறையைச் சார்ந்தவர்களும் திலீபனைப் பார்க்க மேடைக்கு வந்தனர். “முரசொலி” ஆசிரியர் திருச்செல்வம், ஈழமுரசைச் சேர்ந்த பஷீர் போன்றோருடன் திலீபன் மனம்திறந்து பேசினார். அவரைக் கட்டுப்படுத்த எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதிகம் பேசி உடம்பைக் கெடுத்துக்கொள்ளப் போகிறாரே என்பதனால் அவரை அன்பாகக் கடிந்து கொண்டேன். இரவு 11.30 மணியளவில் கஷ்டப்பட்டு சிறிநீர் கழித்துவிட்டு, சுமார் 12 மணியளவில் படுக்கைக்குச் சென்றார். ஆவர் ஆழ்ந்து உறங்கத் தொடங்கியபோது நேரம் 1.30 மணி.அவரின் நாடித்துடிப்பைப் பிடித்து அவதானிக்கிறேன். நாடித்துடிப்பு:- 88 சுவாசத்துடிப்பு:- 20 அவர் சுயநினைவுடன் இருக்கும்போது வைத்திய பரிசோதனை செய்வதற்கு அனுமதிக்க- -மாட்டார். தனக்கு உயிர்மீது ஆசையில்லை என்பதால் பரிசோதனை தேவையில்லை என்று கூறுவார். அவன் விருப்பத்துக்கு மாறாக உணவோ நீரோ மருந்துவமோ இறுதிவரை அளிக்கக் கூடாதென்று, முதல் நாளே என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டார். நானும் ராஐனும் அவரின் பக்கத்தில் படுத்துவிட்டோம். மேடையின் மறுபுறத்தில் இரு “நவினன்களும்” படுக்கைபோட்டனர். மேடைக்கு முன்பாக மகளிர் அமைப்பு உறுப்பினர்களும், பொது மக்களும் கொட்டக் கொட்ட கண் விழித்துக் கொண்டிருந்தனர்.
லண்டனில் உள்ள வங்கியொன்றில் அதிநவீன முறையைப் ( Hi-tech) பயன்படுத்தி கொள்ளையடிக்க முற்பட்ட கும்பலொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தென் கிழக்கு லண்டனில் அமைந்துள்ள சன்டேன்டர் (Santander) வங்கியில் புகுந்த 12 பேர் கொண்ட கும்பலானது அதிநவீன முறையினைப் பயன்படுத்தி கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
இவ்வாறு நகரிலுள்ள வங்கிகளில் பல மில்லியன் பவுண்களை கொள்ளையடித்துள்ளனர்.
வங்கியினுள் சென்ற கொள்ளையர்கள், வங்கி சம்பந்தப்பட்ட கணனித் தொடர்புகளை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான கருவியை இரகசியமாகப் பொருத்திவிட்டு சென்றனர். அதன் பின்னர் வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தினை கொள்ளையிட்டுள்ளனர்.
இவ்வாறு சன்டேன்டர் (Santander) வங்கியில் கொள்ளையடிக்க முற்பட்டபோது, பொலிஸாரால் மடிக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வந்த கொள்ளைச் சம்பவங்கள் பற்றி ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸ் நிபுணர்கள் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து இக் கொள்ளைச் சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் 2 பேர் இந்தியர்கள் மற்றும் ஏனையவர்கள் ஈரான், ஈராக்கைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் 23 வயது முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
லண்டனில் மூன்றாவது பெரிய வங்கியான சன்டேன்டர் (Santander) 1300 கிளைகளைக் கொண்டிருப்பதுடன், 25 மில்லியனுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் உள்நாட்டு ஆயுதப் போராட்டம் நிறைவடைந்ததன் பின்னர் நாட்டில் சுமுகமான ஜனநாயக சூழலை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் காணப்பட்ட போதிலும் தற்போது அவ்விடயங்களிலிருந்து தூரச் சென்று சா்வாதிகாரப் பாதையில் பயணிக்கும் வெளிப்பாடுகளும் சமிக்ஞைகளுமே காணப்படுகின்றன. குறிப்பாக இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உள ரீதியான முன்னேற்றங்களை இன்னும் அடையவில்லை என ஐநா சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார்
பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் உள ரீதியான முன்னேற்றம் காணபபடவில்லை.
சர்வதேச குற்றச்சாட்டுகள் குறித்த உள்ளக விசாரணையில் உண்மைத்தன்மை இல்லை.
போர்க்குற்றம் தொடர்பில் சுயாதீன விசாரணை இன்றேல் சர்வதேச விசாரணையைத் தவிர வேறு வழியில்லை.
பள்ளிவாசல், தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளமை குறித்து உரிய விசாரணை அவசியம்.
அரசியல் கைதிகள் தொடர்பில் அரசின் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமையவில்லை.
சா்வதேச குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான ஆக்கபூர்வமான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகவும், நம்பகத்தன்மையுடனும் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை இராணுவமே விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பது எந்த வகையிலும் நியாயபூர்வமானதாகவோ, ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவோ அமையாது. ஏற்கனவே இலங்கைப் படைகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காணப்படுகையில் எமக்குச் சாட்சியமளித்த வடக்கு, கிழக்கு மக்களை அச்சுறுத்துவது மேலும் நிலைமையை மோசமடையவே செய்யும்.
ஆகவே மனித உரிமைகள் உள்ளிட்ட இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தேசிய ரீதியிலான சுயாதீனமானதும், வெளிப்படையானதுமான விசாரணைகள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் சர்வதேச விசாரணைகளைத் தவிர இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற உண்மைகளைக் கண்டறிய வேறு பொறிமுறைகள் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நாடு திரும்புவதற்கு முன்னர் இலங்கை விஜயம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று சனிக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள ஐநா அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே மனித உரிமைகள் ஆணையாளர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
மனித உரிமைகள் மதிப்பீட்டிற்கான உத்தியோகபூர்வ 7 நாள் விஜயத்தை இலங்கையில் நிறைவு செய்துள்ளேன். இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசின் உயர்மட்ட உறுப்பினர்கள், மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உட்பட சிவில் அமைப்புகள் போன்றவர்களுடன் விசேட சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தேன். அதேபோன்று பாதுகாப்புச் செயலாளர், பிரதம நீதியரசர், ஜனாதிபதியின் செயலாளர்ஹ உள்ளிட்டோரையும் சந்தித்தேன். மேலும் யுத்தம் இடம்பெற்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் விஜயம் செய்து அரச அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினேன். குறிப்பாக இறுதி யுத்தம் இடம்பெற்ற ப’குதிகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள பொதுமக்களையும் சந்தித்தேன்.
இச்சந்தர்ப்பத்தை எமக்கு வழங்கியமைக்காக இலங்கை அரசுக்கு நன்றி கூறுகின்றேன். இவ்வாறான நீண்ட நாள் விஜயமொன்றை எந்தவொரு நாட்டிலும் இதற்கு முன்னர் மேற்கொள்ளவில்லை. இலங்கையின் அனைத்து தரப்புகளிடமும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் உன்னிப்பாகக் கருத்துகளைக் கேட்டறிந்து கொண்டேன். இதன் பிரகாரம் எதிர்வரும் செப்படம்பர் மாதம் இடம்பெறவுள்ஹள ஜெனிவா அமர்வில் இலங்கை விஜயம் தொடர்பிலான அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்க உள்ளதுடன் மார்ச் மாதத்தில் முழுவளவிலான அறிக்கையினைச் சமர்ப்பிப்பேன்.
இலங்கையில் தற்போது கண்டறிந்து கொண்ட மனித உரிமைகள் நிலைவரங்களை இருவிதமாக இனங்கண்டுள்ளேன். கடந்த 27 வருட காலமாக இலங்கையில் காணப்பட்ட அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான ஆயுதப் போராட்டத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள மனித உரிமைகள் தொடர்பிலான சவால்கள் எவ்வாறு நாடளாவிய ரீதியில் எதிர்கொள்ளப்படுகிறது. சில உள்நாட்டு ஊடகங்கள், அமைச்சர்கள் மற்றும் குறிப்பிட்ட சில தரப்புக்கள் ஐநாவில் தமிழ் புலிகள் உள்ளதாக என்னைச் சுட்டிக்காட்டிக் கூறுகின்றன. இது கடந்த வாரத்திலும் எனது விஜயம் பற்றி சுட்டிக்காட்டிக் கூறப்பட்டது. இவ்வாறான பிரசாரத்தில் மூன்று அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். நான் தென்னாபிரிக்கர் என்ற வகையில் பெருமையடைகின்றேன். அதேபோன்று விடுதலைப்புலிகள் கொலைகார அமைப்பு என்பதை உறுதி செய்து கொள்கிறேன். ஏனெனில் அவர்கள் பல்லாயிரம் உயிர்களை அழித்துள்ளனர். நீலன் திருச்செல்வத்தை1999ம் ஆண்டு யூலை மாதம் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் கொலை செய்தனர். இவ்வாறு இலங்கையர்கள் பலரும் கொல்லப்பட்டனர். இதனையிட்டு நான் கவலையடைவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறு உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்படவர்களை உள்நாட்டில் மேற்கொண்ட வடக்கு கிழக்கு விஜயத்தின் போது சந்தித்தேன். பலர் காணாமல் போயுள்ளனர். கொல்லப்பட்டும் உள்ளனர். மேலும் பலர் போரினால் கடுமையாக இழப்புக்களையும் சந்தித்துள்ளனர். இவற்றுக்கான சாட்சியங்களாக ஷெல் தாக்கப்பட்ட மரங்கள், அழிவடைந்த வீடுகள் என்பன முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் இன்னும் காணப்படுகின்றன.
உள்நாட்டு யுத்தத்தின் பின்னரான செயற்பாடுகளில் நல்லிணக்கத்துக்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டிய அவசியம் காணப்பட்டது. இந்த நல்லிணக்கச் செயற்பாட்டை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஊடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள பலவேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வெளிப்படையான விசாரணைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக திருகோணமலை மாணவர்களின் கொலை, ஐநா தொண்டு ஊழியர்களின் கொலை போன்ற விடயங்களை வெளிப்படையாக விசாரணை செய்து அறிக்கைகளை சமா்ப்பித்திருக்க வேண்டும். ஆனால் அவை இன்னும் இடம்பெறவில்ல. அதேபோன்று நல்லிணக்க ஆணைக்குழுவில் பரிந்துரைக்ஹகப்பட்ட பல்வேறு முக்கியமான விடயங்கள் தொடர்பிலும் ன்னேற்றங்கள் காணப்படவில்லை.
மாறாக மேன்மேலும் மனித உரிமைகளுக்கு நெருக்கடியான சூழலே இலங்கையில் காணப்படுகின்றது. குறிப்பாக வடக்கில் இராணுவத்தை ஒரே இரவில் குறைக்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் என்னிடம் குறிப்பிட்டார். இதனைப் பல்வேறு பொறிமுறைகளை கையாண்டு படிப்படியாதகப் படைகளை வடக்கிலிருந்து குறைப்பதற்கான வழிமுறைகளை முன்னெடுக்கலாம். சிவில் நிர்வாகத்தில் இராணுவம் ஆதிக்கம் செலுத்துவது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்லஇ குறிப்பாக இராணுவத்துக்கு எதிராகக் காணப்படுகின்ற பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுக்கள் காணப்படுகையில் அவற்றை உரிய முறையில் விசாரணை செய்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்காதுள்ளமை பாதிக்கப்பட்ட மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளேயே தள்ளிவிடும்.
காணாமல் போனோர் விவகாரங்களில் தீர்வை எட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அண்மையில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட காணாமல் போனோர் குறித்து ஆராய்வதற்கான குழு சிறந்த முன்னெடுப்பாகும். இருப்பினும் கடந்த காலத்தில் இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் நிலைவரங்கள் எத்தன்மை கொண்டது என்பதனை நாம் அறிவோம். ஆகவே வெறுமனே ஆணைக்குழுக்கள் அமைத்து பயனில்லை. காணாமல் போனோர் குறித்து எனது அறிக்கையில் முக்கிய பரிந்துரைகளை மேற்கொள்ளவுள்ளேன். ஐநா சபையில் காணப்படுகின்ற காணாமல் போனோர் விவகாரங்கள் தொடர்பிலான பிரிவுகளை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துவேன்.
இதனூடாக இலங்கை அரசாங்கம் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விசாரணைகளை மேற்கொள்ள முடிவதுடன் சா்வதேச காணாமல் போனோர் சாசன பொறிமுறைகளையும் கையாளக்கூடிய வகையிலும் அமையும். மேலும் இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை இராணுவமே விசாரணை செய்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அற்றுக்கு தேசிய அல்லது சர்வதேச ரீதியிலான விசாரணைகளே சாத்தியப்படும். அண்மையில் வெலிவேரியவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் அவசியமாகும். அதேபோன்று பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. இது குறித்தும் உரிய விசாரணைகள் மற்றும் பாதுகாப்பு பொறிமுறைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அரசியல் கைதிகள் விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் அமையவில்லை. இதனை நீதி அமைச்சருடனான சந்திப்பின் போதும் வினவினேன். அதற்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் பதிலளிக்கப்படவில்லை. ஆகவே சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உரிய நீதிதுறைசார் பொறிமுறையைக் கையாண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் யுத்தம் முடிந்து 4 வருட காலமாகியும் பயங்கரவாதச் சட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளது. இது ஏற்றுக்கொள்ளக் கூடியதொன்றல்ல.
2005ம் ஆண்டு தொடக்கம் இதுவரையில் சுமார் 30 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும், காணாமல் போயும் உள்ளனர். பல ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டும் உள்ளன. இவற்றிலிருந்து இலங்கையில் கருத்துச் சுதந்திரம் எந்தளவிற்கு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளது என்பது தெளிவுபடுகின்றது. இதனை சர்வதேச மனித உரிமைகள் சாசனங்கள் அனுமதிப்பதும் இல்லை. உள்நாட்டில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் ஜனநாயகம் முடக்கப்பட்டுள்ளது. 18வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் சுயாதீனமாக செயற்படக்கூடிய தேர்தல் மற்றும் மனித உரிமை போன்ற ஆணைக்குழுக்கள் சுயாதீனத் தன்மைகள் இழந்துள்ளன. குறிப்பாக முன்னாள் நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணைச் செயற்பாடுகளின் ஊடாக சுயாதீனமற்ற தன்மை வெளிப்பட்டது.
ஆகவே இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய போக்கு சர்வாதிகாரப் போக்காகவே காணப்படுகின்றது. உரிய வகையிலான பொறுப்புடைமைகளை பாதுகாத்துக் கொள்வதனையே இலங்கையிடம் ஐநா எதிர்பார்க்கின்றது எனக் கூறினார்.
மேலும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகள் சிலவற்றுக்டகுப் பதிலளிக்கையில்,
கேள்வி - விடுதலைப்புலிகள் மேற்கொண்ட வன்முறைகள் மற்றும் கொலைகள் தொடர்பில் வடக்கு கிழக்கில் சாட்சியங்களைப் பெற்றுக் கொண்டீர்களா?
பதில் - ஆம். மனித உரிமைகளை யார் மீறி இருந்தாலும் அதனை அனுமதிக்கும் நிலைப்பாட்டில் மனித உரிமைகள் என்ற வகையிலோ சாதாரண மனிதர் என்ற வகையிலோ அனுமதிக்க இயலாது. விடுதலைப்புலிள் செய்த மிகவும் மோசமான கொலைகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் நீலன் திருச்செல்வம் மீதான தற்கொலைத் தாக்குதலாகும்.
கேள்வி - பதவி நீக்கப்பட்டுள்ள முன்னாள் நீதியரசரை நீங்கள் சந்தித்துள்ளீர்களா?
பதில் - இல்லை. தற்போது பதவியிலுள்ள பிரதம நீதியரசரைச் சந்தித்’துப் பேசினேன்.
கேள்வி - இலங்கையில் போர்க்குற்றங்கள் என எதனை மையப்படுத்திக் கூறுகின்றீர்கள்?
பதில் - இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இறுதிக்காலப் பகுதியில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் குறித்து பல்வேறு சந்தேகங்களய் காணப்படுகின்றன. 2009ம் ஆண்டு யுத்தம் முடிந்தவுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனைச் சந்தித்ததன் பின்னர் நிபுணர் குழு அமைக்கப்பட்டு பல்வேறு விடயங்கள் தொடர்பில் விசாரணைக்கு வலியுறுத்தப்பட்டது.
இதில் சுட்டிக்காட்ப்பட்டுள்ள பல்வேறு விடயங்களில் மனித உரிமை மீறல்களும் போர்க்குற்றங்களும் முக்கியமானதாகும். இதற்குப் பின்னர் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளின் பிரகாரம் இ’துவரையில் கையாளப்பட்ட வழிமுறைகளே இன்னும் தொடர்கின்றன.
கேள்வி - காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் உங்களின் எதிர்காலச் செயற்பாடு என்ன?
பதில் - இலங்கையில் இதுவரையில் காணாமல் போனோர் குறித்து ஆக்கபூர்வமான வெளிப்பாடுகள் காணப்படவில்லை. இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏற்கனவே பல உறுதிமொழிகளையும் வழங்கியிருந்தார். ஆனால் அவை எதுவும் இதுவரையில் வெளிப்படவில்லை. ஆகவே காணாமல் போனோர் தொடர்பில் உரிய விசாரணைகள் தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்படாவிடின் சர்வதேச பொறிமுறை இன்றியமையாததாகும்.
கேள்வி - ஐநா மனித உரிமைகள் பேரவை பக்கச்சார்பாக செயற்படுவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக இலங்கை விடயத்தில் இந்நிலைவரம் மோசமாக உள்ளதாக ஜனாதிபதியும் கூறியுள்ளார். இது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில் - ஐநா சபை பக்கச்சார்பாக செயற்பட வேண்டிய தேவையில்லை. இலங்கைக்கு எதிரான 300 நிபந்தனைகள் பல நாடுகளினாலும் முன்வைக்கப்பட்டன. ஆகவே இலங்கை விடயத்தில் தனிப்பட்ட நோக்கத்துடன் நாம் செயற்படவில்லை என்பது வெளிப்படுகின்றது. அதேபோன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவை ஐநாவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டது.
கேள்வி - தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பில் சர்வதேச விசாரணைகள் தொடர்பில் வலியுறத்தப்படதாகக் கூறப்படுகின்றதே?
பதில் - தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உடனான சந்திப்பில் பல்வேறு விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன. குறிப்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையில் காணப்படுகின்ற 13வது திருத்தச்சட்டம் குறித்துப் பேசினோம். அதேபோன்று வடமாகாண சபைத் தேர்தல் முக்கியமான முன்னெடுப்பாகக் கருதுகின்றேன்.
பெண் போராளிகள் இன்று எதிர்நோக்கும் நெருக்கடிகளையும் அவலங்களையும் வெளிப்படுத்தும் வகையில் The Social Architects South Asia என்ற அமைப்பு ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அன்று விடுதலைக்காக போராடிய பெண்கள் இன்று தான் வாழும் சமுதாயத்துடன் போராடவேண்டிய அவலநிலை, தினம் தினம் காமவெறியுடன் அலையும் சிங்கள இராணுவம், இந்த கொடுமைகளின் மத்தியில் வாழும் முன்னாள் பெண் போராளிகளின் கூறும் கண்ணீர் கதைகள்
நேற்று மாலை ஜநா முன்றலில் பல தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு இளையோர் அமைப்பு சுவிஸ் கிளையின் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ் சீமான் இன்று டென்மார்க் நாட்டுக்கு பயணித்துள்ளார்.
இன்று மாலை டென்மார்க் இல் இடம்பெற இருக்கும் எழுச்சி மாலை நிகழ்வில், கலந்து கொள்வதற்காக செந்தமிழன் சீமான் அவர்கள் டென்மார்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
அவரை டென்மார்க் வாழ் தமிழ்மக்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றுள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து சீமான் அவர்கள் ஜேர்மனிக்கு புறப்படவுள்ளார். நாளை மறுதினம் ஜேர்மனி மக்களை சந்திப்பார் எனவும் ஜேர்மனி தமிழ் இளையோர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ் நாட்டை தமிழன் ஆளத் தவறியதன் விளைவே ஈழத் தமிழன் ஏதிலிகளாக அலைவதற்கு காரணம் எதிர்வரும் காலங்களில் இவ்வாரான தவறுகளைக் களைந்து தமிழ் நாட்டை தமிழன் ஆண்டு தனி ஈழம் அமைப்பது உறுதி
என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் ஜெனிவா நகரில் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து சிறப்புரையாற்றுகையில் தெரிவித்தார்
ஈழத்தமிழருக்காக சென்னையில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு இன்று பட்டினிப் போராட்டம் நடைபெற்றது.
1. ஈழத்தமிழர்கள், புலம்பெயர் வாழும் ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கு எடுக்க வேண்டும்.,சர்வதேச பன்னாட்டு நிதிமன்றம்முன் விசாரனை நடத்தப்படவேண்டும் .
2. முள்வேலிக்குள் இருக்கும் மக்களையும் இராணுவ இரகசிய சிறையில் இருக்கும் ஈழப்போராளிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
3. புனர்வாழ்வு என்ற பெயரில் நடத்தப்படும் கலாசார சீரழிவுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
4. வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள இராணுவங்களை உடனே வெளியேற்ற வேண்டும
5.தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை நிறுத்த வேண்டும்.
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை தமிழக மாணவர்கள் போராட்டம் ஏற்படுத்தியுள்ளது. ஈழத்தமிழர்களுக்காக அனைத்துக்கட்சிகளும் குரல் கொடுக்கும் நிலையினை தமிழக மாணவர்கள் போராட்டம் ஏற்படுத்தியுள்ளது.
நீங்கள் சுதந்திர தமிழீழம் மலர்வதை உங்கள் கண்களால் கண்டு உங்கள் தாயகத்திற்கு நீங்கள் திரும்பிச் செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஒன்றுபட்டு போராடுவோம் வெற்றி பெறுவோம் என்று சென்னையில் நடைபெற்ற தமிழகவாழ் ஈழத்தமிழர் பட்டினிப்போராட்டத்தில் கலந்துகொண்ட பழ.நெடுமாறன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பழ.நெடுமாறன் அவர்களின் உரையின் முழுமையான காணொளி:
பெரியாரும் நடிகவேளும் இருந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்கு இந்நிலை வந்திருக்காது: நடிகர் இராதாரவி
தந்தைப்பெரியாரும் நடிகவேள் எம்.ஆர்.இராதாவும் இருந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்கு இந்நிலை வந்திருக்காது. தமிழக தமிழர்கள் இப்பொழுதுதான் விழித்துள்ளதாக சொல்கிறார்கள்.. ஆனால் தமிழக தமிழர்கள் இன்னும் உறங்கவில்லை விழித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதே உண்மை.. தமிழீழ விடுதலை அடையாமல் உறங்கமாட்டோம்..வெற்றி நிச்சயம் என்று திரைப்பட நடிகர் இராதா ரவி தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைக்கு பொது வாக்கெடுப்பு எடுக்கக்கோரி தமிழக வாழ் ஈழத்தமிழர்கள் சென்னையில் இன்று ஒரு நாள் பட்டினிப்போராட்டம் நடத்தினர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் இராதா ரவி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இராதா ரவி அவர்களின் உரையின் முழுமையான காணொளி:
தமிழீழத்திற்கு இந்திய அரசு உதவாவிட்டாலும் சிங்கள அரசுக்கு மத்திய அரசு உதவுவதை நிறுத்தாவிட்டால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு மத்திய அரசு கொள்ளி வைக்கும். அரசியல் கட்சிகளை கடந்து மாணவர்கள் பட்டாளம் இந்திய அரசினை தலைவணங்க வைப்பார்கள்.
விடியல் கண்ணுக்கு தெரிகிறது. உங்கள் காலத்தில் ஈழத்தை நீங்கள் காண்பீர்கள் என்று தமிழகவாழ் ஈழத்தமிழர்கள் சென்னையில் நடத்திய பட்டினிப்போராட்டத்தில் கலந்துகொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
வைகோ அவர்களின் உரையினை கீழே காணொளியாக காணவும்..
என் தொப்புள் கொடி உறவுகளை கொன்று குவித்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக இருக்கும் இந்திய அரசினை நான் வெறுக்கிறேன். இந்திய அரசினை வேரறுக்க வேண்டும்... மண்ணின் மைந்தர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என்று நடிகர் மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று நடைபெற்ற தமிழகவாழ் ஈழத்தமிழர் பட்டினிப்போரில் கலந்துகொண்ட நடிகர் மன்சூரலிகான் தனது உரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்..
மன்சூரலிகான் அவர்களின் உரையினை காணொளியாக காணுங்கள்..
ஜெனீவாவில் அமெரிக்க தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு, இந்தியா, இத்தாலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 25 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்து தீர்மானத்தை வெற்றிபெறச் செய்தன.
இவ்வாறு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து தமிழக அரசியல்கட்சி பிரமுகர்கள் இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்துக்களை வழங்கியிருக்கின்றனர்.
சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான அனைத்துலக விசாரணையினை உலகத் தமிழர்கள் எதிர்பார்திருந்த நிலையில் இன்று நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் தீர்மானத்தில் அது குறித்தான போதுமான உள்ளடக்கம்
இல்லாத விவகாரம் குறித்து ஐ.நா மனித உரிமைச் சபையில் இராஜதந்திரச் செயற்பாடுகளில் பங்காற்றி வந்த தமிழர் தரப்பு பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமைச் சபை செயற்பாட்டாளர்களின் நாடுகடந்த தமழீழ அரசாங்கத்தின் நாதம் ஊடகசேவை வழியே வழங்கிய கருத்துக்கள் . சீமான் - நாம் தமிழர் கட்சி
.
ஜெறால்ட் பிரான்சிஸ் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
ஆனந்தசங்கரி - கனேடிய தமிழர் பேரவை
சுனந்த தேசப்பிரிய - சிங்கள ஊடகவியலாளர்
நாகலிங்கம் பாலசந்திரன் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
சுதா - பிரித்தானிய தமிழர் பேரவை
சிவராஜா - ஊடகவியலாளர் - இலங்கை
சத்தியா - ஊடகவியலாளர் - இந்தியா
செந்தில் - மருத்துவர் - இந்தியா சா.வி.கிருபாகரன் - தமிழர் மனித உரிமைகள் மையம்
ஆர்.அருள் - பசுமைத் தாயகம் - தமிழகம்
கே.பாலு - சட்டவல்லுனர் - தமிழகம்
சுதர்சன் சிவகுருநாதன் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து நாங்களும் வெளியேறுகிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இத்தனை ஆண்டுகாலமாக இலங்கைத் தமிழர்கள் மீது இல்லாத பாசம் இப்போது மத்திய அரசின் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திமுக, வி.சி. கட்சித்தலைவர்களுக்கு வந்துள்ளது.
மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கோரி நாங்கள் வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை என்று ஐ.மு கூட்டணியில் இருந்து திமுக விலகியுள்ளது. இதே காரணத்திற்காக தற்போது நாங்களும் கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். மத்திய அரசின் ஆதரவை வாபஸ் பெற்றுள்ள வி.சி கட்சி சார்பில் ஒரு உறுப்பினர் மட்டுமே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசில் இருந்து திமுக விலகுவதாக அக்கட்சியின் தலைவர் கலைஞர் 19,03,2013 காலை சென்னை அண்ணா அறிவாலத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் அறிவித்தார்.
அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையின் முழு வடிவம்:
ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக செல்வா காலந்தொட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் அங்குள்ள தமிழர்களின் உரிமைக்காகவும் - தமிழர் வாழ்வாதாரங்களின் பாதுகாப்புக்காகவும் - தமிழ் மொழியின் சமத்துவமான தகுதிக்காகவும் - குரலெழுப்பி வந்துள்ளது.
அண்ணா காலத்திலேயே 1956ஆம் ஆண்டு நடைபெற்ற சிதம்பரம் திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக் குழுவிலும், தொடர்ந்து கட்சியின் மாநாடுகளிலும், ஈழத் தமிழர்களின் உரிமைக்காக அறப் போராட்டங்கள் பலவற்றை நடத்திய வரலாற்றுப் பெருமை கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்.
செல்வா காலத்தில் ஈழத் தமிழர்களுக்காக அமைதியான முறையில் தொடங்கிய எழுச்சியையும், ஈழத் தமிழ்ச் சமுதாயப் புரட்சியையும் ஆயுத பலம் கொண்டு; அரசின் அதிகார வலிமையைக் காட்டி சிங்கள வெறியர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டலாம் என்று கருதி செயல்பட்ட சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் கொடுமைகளையும், அங்கு வாழும் தமிழர்களின் கலை, கலாச்சாரங்கள் போன்றவைகளையும், அழித்தொழிக்க முனைந்து வன்முறை வெறியாட்டங்களை நடத்திய சிங்கள வெறியர்களுக்கு எதிராக கிளம்பிய விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் போராளிகள் அந்த மண்ணில் அடுத்தடுத்த நடந்த போரில் பலியானார்கள் என்றாலுங்கூட; அங்கே கொழுந்து விட்டெரிந்த தமிழ் உணர்வு மங்கிப் போய் விடவில்லை என்பதற்கு உதாரணமாக; வரலாற்றில் பதிந்துள்ள பல நிகழ்ச்சிகளைக் கோடிட்டுக் காட்ட முடியும்.
தமிழ் இளைஞர்களும், வாலிபர்களும் தங்கள் இனம் வாழ - மொழி வாழ - நடத்திய வீர மரணப் போராட்டங்கள் கூட தமிழ் உணர்வற்றவர்களால் எள்ளி நகையாடப்பட்டாலும், அவைகளையெல்லாம் மீறி நமது குறிக்கோள் வெற்றியே முக்கியம் என்ற கொள்கை உறுதியோடு; ஈழப் போரில் மாண்டு மடிந்த போராளிகளுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிற சூழலில் அவர்தம் காலடி மண்ணெடுத்து, அதனைத் திலகமாக இட்டுக் கொண்டு, அந்தத் திலகத்தின் சாட்சியாக - தமிழ் ஈழத்தில் சிங்களப் பேரினவாதிகளால் நடத்தப்பட்ட - அதிலும் குறிப்பாக ராஜபக்சே அரசின் போர்க் குற்றங்கள் மலிந்த - இரு கருத்துக்கு இடமில்லாத வகையில் இனப் படுகொலையே நடத்தப்பட்டு - உலக அரங்கில் உள்ள நாடுகளின் விவாதத்திற்கு உரியதாக ஆகி விட்ட இந்தச் சூழலில் உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று மார் தட்டிக் கொள்ளும் இந்தியத் திருநாடு, இந்தப் பிரச்சனையின் ஆழத்தை உணராமல், விளைவுகளைக் கருதாமல், ஒதுங்கி நிற்பதோ; அல்லது எதிர் மறை கருத்துரைப்பதோ - இந்தியாவில் காந்தியடிகளும், இலங்கையில் தந்தை செல்வநாயகமும் சுதந்திரப் போராட்டத்திற்காகத் தேர்ந்தெடுத்து நடத்திய அறவழிகளை - அறவே மூடிவிடுவதற்கான; ஜனநாயக விரோதச் செயல்களாகும்.
இவைகளையெல்லாம் ஐ.நா. மன்றத்திலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திலும் நீதி நெறியோடு ஆய்ந்து பார்த்து - அனைத்து நாட்டு மக்களின் இதயத்தையும் குளிர வைக்கும் முடிவுகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதற்கு மாறாக இழப்பின் உச்சத்திற்கே தள்ளப்பட்ட இலங்கையும், அந்த இலங்கையின் “தொப்புள் கொடி” உறவு கொண்ட தமிழகம் இடம் பெற்றுள்ள இந்தியாவும், இந்த ஜனநாயக விரோதச் செயல்களுக்கு கதவுகளைத் திறந்து விட்டிருப்பதை இன உணர்வுள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்றுக் கொள்ள இயலாது.
எனவே “குதிரை குப்புறத் தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதை”யாக, அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தை பெருமளவுக்கு நீர்த்துப் போக விட்டதோடு; திராவிட முன்னேற்றக் கழகம் முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை. எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப் பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.