Showing posts with label விக்கிலீக்ஸ். Show all posts
Showing posts with label விக்கிலீக்ஸ். Show all posts

Saturday, February 11, 2012

அமெரிக்காவுக்கு செய்திகொடுக்கும் நபராக இருந்த சரவணபவான் !

அமெரிக்காவுக்கு தகவல் வழங்குகின்றவர்களில் ஒருவராக உதயன் மற்றும் சுடர் ஒளி ஆகிய பத்திரிகைகளின் உரிமையாளர் ஈஸ்வரபாதம் சரவணபவன் செயல்பட்டு இருக்கின்றமை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2006 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருக்கிறது. இந்த ஆவணத்தை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது தலைமைக்கு அனுப்பியவேளை அதனை விக்கி லீக்ஸ் பெற்றுள்ளது.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வனுக்கும் இடையில் நல்லெண்ண தூதுவராக 2006 ஆம் ஆண்டின் ஜூன் மாத இறுதியில் ஈஸ்வரபாதம் சரவணபவன் செயல்பட்டு இருக்கின்றார். மஹிந்த ராஜபக்ஸவின் செய்தியை தமிழ்ச்செல்வனுக்கு அனுப்பி இருக்கின்றார். தமிழ்ச்செல்வன் இச்செய்திக்கு மின்னஞ்சல் மூலம் சரவணபவனுக்கு பதில் கொடுத்து இருந்தார்.

ஆனால் தமிழ்ச்செல்வனால் அனுப்பப்பட்ட மின்னஞ்சலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு காண்பிக்கின்றமைக்கு முன்பாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு 2006 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் திகதி காண்பித்து இருக்கின்றார் சரவணபவன். ஜனாதிபதி மஹிந்தருக்கு தமிழ்ச்செல்வனின் பதிலை இன்னமும் அனுப்பவில்லை என்றும் தூதரக அதிகாரிகளுக்கு தெரிவித்து இருக்கின்றார்.

Wednesday, February 08, 2012

இன்னொரு பிரபாகரன் ஆகின்றமைக்கு ஆசைப்பட்ட கருணா!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனுக்கு சமமானவராக நடத்தப்பட வேண்டும் என்கிற ஆசையால்தான் புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கருணா இயக்கத்தில் இருந்து உடைந்தார் என்று அமெரிக்காவுக்கு சொல்லி இருக்கின்றார் மட்டக்களப்பு மறை மாவட்ட ரோமன் கத்தோலிக்க ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை.

புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா உடைந்தமை குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவருக்கு சொந்த அபிப்பிராயத்தை சொன்னபோது ஆயர் இவ்வாறு குறிப்பிட்டு இருக்கின்றார்.

சுய நல ஆசையினாலேயே கருணா இயக்கத்தில் இருந்து உடைந்து உள்ளார், மாறாக கிழக்கு மாகாண தமிழர்கள் மீது அக்கறை கொண்டு இயக்கத்தில் இருந்து உடையவில்லை. பிரபாகரனுக்கு வழங்கப்படுகின்ற சம அந்தஸ்து அவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்கிற ஆசையில் இயக்கத்தை விட்டு உடைந்து உள்ளார் என ஆயர் கூறி இருக்கின்றார்.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2004 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இத்தகவல்கள்  கிடைத்து உள்ளன.

Thursday, December 01, 2011

அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தை புலிகளில் சிலர் ஓரங்கட்ட முயன்றனர்: விக்கிலீக்ஸ்!

விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான அன்ரன் பாலசிங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சமாதான நகர்வுகள் பற்றி விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்குள் முரண்பாடுகள் தோன்றியிருந்தன என்று அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்தார். இவ்வாறு 2002 ஆம் ஆண்டு ஒக்ரோபர் முதலாம் திகதி அப்போதைய அமெரிக்கத் தூதர் அஸ்லிவில்ஸ் அனுப்பியுள்ள கேபிள் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
சமாதான நடவடிக்கைகளின் போது இலங்கை அரசு தொடர்பாகஅன்ரன் பாலசிங்கம் மென்போக்கோடு செயற்படுவதாகப் புலிகளின் ஒரு சாரார் கருதுகின்றனர். கிழக்கில் கடும் போக்குடைய கருணா, கரிகாலன் ஆகியோருக்கும் வடக்கில் இருந்த புலிகளுக்கும் இடையேயான உறவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்தத் தகவலை புலிகளின் தொடர்பாடலை ஊடறுத்துக் கேட்ட போது தெரியவந்துள்ளதாக மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார். எனினும் அத்தகவலின் உறுதித் தன்மை பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை.

சமாதான நடவடிக்கைகள் புலிகளின் இராணுவ தயார் நிலையை மோசமாகப் பாதித்திருப்பதாக புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் பானு உட்பட பலர் கருத்தினர். எந்த முடிவுகளையும் இறுதியாக புலிகளின் தலைவர் பிரபாகரனே எடுப்பார். எனினும் அவரின் முடிவுகளில் அதிக தாக்கம் செலுத்துவோராக கடும் போக்குடைய புலித்தலைவர்களே இருந்தனர். அத்தகைய கடும்போக்குடைய புலிகள் சமாதான நடவடிக்கைகளில் இருந்து பாலசிங்கத்தை ஓரங்கட்ட முயற்சிக்கின்றனர். இவ்வாறு அமெரிக்கத் தூதர் கேபிள் தகவல் அனுப்பியதை விக்கிலீக்ஸ் இப்போது அம்பலப்படுத்தியுள்ளது.

Saturday, December 25, 2010

விக்கிலீக்ஸ் சொல்வது முற்றிலும் தவறாம் டக்ளஸ், கருணா சீற்றம் (ஒலிவடிவம்)

விக்கிலீக்ஸ் வெளியிட்டுவருகின்ற தகவல்களில் இலங்கையில் அரசுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுக்கள் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டிருந்ததுகுறிப்பாக ஈபிடிபி மற்றும் கருணா குழு ஆகியவையே கூடுதலான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.இந் நிலையில் இச் சம்பவங்கள் குறித்து லண்டன் பிபிசியின் தமிழோசை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரிடம் கண்ட செவ்விகளின் ஒலி வடிவத்தினை வாசகர்களுக்கு இணைக்கின்றோம்.



நன்றி – பிபிசி தமிழோசை