Showing posts with label போர்குற்ற நாள் 2009 மே. Show all posts
Showing posts with label போர்குற்ற நாள் 2009 மே. Show all posts

Friday, May 20, 2011

‘மே 18’ அவுஸ்திரேலியாவின் ‘தேசிய நினைவேந்தல் நாள்’ நிகழ்வுகள்

ஈழத்தமிழர்கள் வாழ்வில் பேரழிவை ஏற்படுத்திய மே மாதத்தின் துயரநாட்களையும் அப்பேரிடர் மத்தியிலும் மண்ணோடு இணைந்துநின்று மரணித்த எம் உறவுகளையும் விடுதலைக்காக விலையான எம் தேசத்தின் புதல்வர்களையும் நினைவுகொள்ளும் நினைவேந்தல் நாள் நிகழ்வுகள் அவுஸ்திரேலியாவின் சிட்னி,

மெல்பேண் நகரங்களில் நடைபெற்றுள்ளன.
மே மாதம் 18ம் திகதி மாலை 4.30 தொடக்கம் மாலை 6.30 வரை மெல்பேணில் நடைபெற்ற நினைவேந்தல் நாள் நிகழ்வில் 500 இற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு தமது அகவணக்கத்தை செலுத்தினர்.

விக்ரோறியாவின் தமிழர் அமைப்புக்கள் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்வில் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

கிறீன் கட்சியின் மத்திய மெல்பேண் நாடாளுமன்ற உறுப்பினர் அடம் பான்ற், கிறீன் கட்சியின் மெல்பேண் மாநில செனட்டர் கலாநிதி ரிச்சர்ட் டி நட்டால், விக்ரோறிய தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லூக் டொனலன்ட், நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி ஜனனி, வண.பிதா டீக்கன், லிபரல் கட்சியின் உறுப்பினரும், இந்திய தமிழ் சங்கத் தலைவருமான ஆஸ்டன் அசோக்குமார் மற்றும் ஏனைய அவுஸ்திரேலிய சமூக செயற்பாட்டாளர்கள் வன் ரட், சூ போல்ற்றன் ஆகியோரும் உரையாற்றினர். ‘

'முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம்’ என்ற பாட்டிற்கு இளைஞர் ஸ்ரீராம் சிறப்பாக பரதநாட்டியம் ஆடினார். அவருடைய தங்கை கீதா “பூமிப் பாட்டு”என்ற மைக்கல் ஜக்சனின் ஆங்கில பாட்டை உருக்கமாக பாடி, பலரதும் கவனத்கை ஈர்த்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட ஐ.நாவுக்கான கையெழுத்து பெறும் நடவடிக்கைகளிலும் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.



அத்துடன் இந்த மனிதப் படுகொலைகளைப் பற்றியும், போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வற்புறுத்தும் பதாதைகளும், படங்களும், உருவச்சிலைகளும் அங்கு பல்லின மக்களின் கவனத்தினை ஈர்க்கக்கூடிய வகையில் இருந்ததோடு, பல்லாயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்களும் அந்த வழியால் சென்ற பல்லின மக்களுக்கு தொண்டர்களினால் வழங்கப்பட்டது.

இதேவேளை மாலை ஆறு மணிக்கு சிட்னியின் மாட்டீன் பிளேசில் ஆரம்பமான நினைவேந்தல் நாள் நிகழ்வில் 600 ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு முள்ளிவாய்க்காலில் விதையான உறவுகளுக்கு தமது அகவணக்கத்தை செலுத்தினர்.

முன்னாள் நியுசவுத் வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வேர்ஜினியா ஜட்ஜ் (Virginia Judge) கிறீன் கட்சியைச் சேர்ந்த பெடரல் செனட்டர் லீ றேனான் (Lee Rhiannon) நியு சவுத் வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் சூபிறிஜ் (David Shoebridge) நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி பாலசிங்கம் பிரபாகரன் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த சேரன் ஆகியோர் உரையாற்றினர்.

இதேவேளை மதியம் முதல் மாலை ஆறு மணி வரை தமிழ் இளையோர் அமைப்பினர் சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பான துண்டுப்பிரசுரங்களை, இந் நிகழ்விற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட சிறப்பு ஊர்தியில் சென்றும் விநியோகித்தனர். 3000 இற்கும் மேற்பட்ட ஏனைய சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு இத்துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நினைவேந்தல் நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்டோர் சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசை உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு கோரியதுடன் அண்மையில் சிறிலங்கா கடற்படைத்தளபதி ஒருவரை தூதுவராக ஏற்றுக்கொண்டமைக்கும் தமது அதிருப்தியையும் தெரிவித்தனர்.

மரணித்துப்போன எம்முறவுகளை நெஞ்சில் நிறுத்தி குரலடங்கிப்போயுள்ள தாயக மக்களின் குரலாக, பல நூற்றுக்கணக்கான தமிழ் உறவுகள் பெருமளவில் திரண்டு வந்து, முள்ளிவாய்க்காலில் வித்தாகிப்போன எம்மக்களையும் எமது போராளிகளின் கனவை நனவாக்க அனைவரும் தொடர்ந்தும் செயற்படவேண்டும் என கேட்டுக்கொண்டதோடு “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற உறுதியுரையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

Wednesday, May 18, 2011

இன்று கனடாவில் ஒன்ராரியோ பாராளுமன்றம் முன்பாக மாபெரும் "போர்குற்ற நாள்" நிகழ்வு.

2009 மே மாதத்தில் பல்லாயிரக்கணக்கில் எங்கள் உறவுகளை வகைதொகையின்றி கொன்று குவித்து�� இலட்சக்கணக்கானவர்களை ஏதிலிகளாக்கி�� தற்போதும் எம்மினத்தைக் கருவறுத்துக்கொண்டிருக்கும் சிங்கள ஆட்சியாளரை சர்வதேச நீதிமன்றின்; முன்னால் போர்க் குற்றவாளியாக்குவோம் என்று சபதம் எடுத்து அழுதது போதும் � இனி எழுவோம் துணிவுடன் என கனடியத் தமிழர் தேசிய அவையினர் மாபெரும் போர்க்குற்ற நாள் நிகழ்வினை ஒழுங்கு செய்துள்ளனர்.

இந்நிகழ்வு இன்று புதன்; கிழமை மாலை 5.00 மணிக்கு ரொறன்ரோ நகர மத்தியில் அமைந்துள்ள ஒன்ராரியோ பாராளும்ன்றத்தின் முன்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இந்நிகழ்வில் மனித உரிமை ஆர்வலர்கள்�� பாராளுதன்ற உறுப்பினர்கள்�� அரசியலாளர்கள் மற்றும் பல பிரமுகர்கள் கலந்துகொள்வர் என அறியப்படுகிறது. அத்துடன் சிறிலங்கா அரசின் போர் குற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் கலை றிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதுடன் இறுதி நிகழ்வாக வணக்க நிகழ்வு இடம்பெறும். எனவே கலந்து கொள்பவர்களை தயவு செய்து மெழுகுவர்த்தி கொண்டுவருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிகழ்வுக்கான பெரியளவிலான சுவரொட்டிகள் ரொறன்ரோவில் உள்ள தமிழ் வர்த்தக நிலையங்களில் ஒட்டப்பட்டிருந்ததை காணக்கூடியதாக உள்ளது. பல தமிழ் வர்த்தக நிலையங்கள் தாமகவே புதன் கிழமை மாலை தமது வர்த்தக நிலையங்களை மூடுவதாக அறிவித்துள்ளனர்.

ரொறன்ரோவிலிருந்து ஒலி ஃ ஒளிபரப்பாகும் பிரதான ஊடகங்களான கனடியத்தமிழ் வானொலி ( ஊவுசு) பல்கலாச்சார வானொலி (ஊஆசு) �� சர்வதேச தமிழ் வானொலி (புவுசு) ரிவிஜ தொலைக்காட்சி (வுஏஐ)இ தமிழ் வண் (வுயஅடை ழநெ) ஆகியன வெளியாகும் விளம்பரங்களை எதிர்வரும் 18ம் திகதிவரை தற்காலிகமாக நிறுத்தி போர் குற்றம் தொடர்பான நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன.

ஊர்ச்சங்கங்கள் விளையாட்டுச்சங்கங்கள் மற்றும் இளையோர் அமைப்பினர் என வயது வேறுபாடின்றி தமது உறுவுகளின் இழப்பினை நினைந்து உணர்வு பூர்வமாக நிகழ்ச்சி ஏற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

போர்குற்ற நாள் நிகழ்வுக்கு செல்வதற்காக பெரும்பாலான மக்கள் தமது வேலைக்கு விடுப்பெடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பல்லாயிரக்களக்கான மக்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அறியப்படுகிறது

வீழ்வது தோல்வியல்ல வீழ்ந்த பின் மீண்டும் எழும்பாதிருப்பதே தோல்வி