Showing posts with label ஜெனிவா. Show all posts
Showing posts with label ஜெனிவா. Show all posts

Saturday, March 23, 2013

தமிழ் நாட்டை தமிழன் ஆண்டால் ஈழத்தமிழனுக்கு தீர்வு ஜெனிவாவில் சீமான் முளக்கம்


தமிழ் நாட்டை தமிழன் ஆளத் தவறியதன் விளைவே ஈழத் தமிழன் ஏதிலிகளாக அலைவதற்கு காரணம் எதிர்வரும் காலங்களில் இவ்வாரான தவறுகளைக் களைந்து தமிழ் நாட்டை தமிழன் ஆண்டு தனி ஈழம் அமைப்பது உறுதி
என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் ஜெனிவா நகரில் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து சிறப்புரையாற்றுகையில் தெரிவித்தார்

Friday, March 22, 2013

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு சீமான் தலைமையில் ஜநா முன்றலில் திரண்ட மக்கள் வெள்ளம்!


இன்று மாலை ஜநா முன்றலில் பல தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு இளையோர் அமைப்பு சுவிஸ் கிளையின் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வு 2:30 மணியளவில் நிகழ்வு ஆரம்பமானது.
இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ் சீமான் சட்டத்தரணி தடா சந்திரசேகரன் மற்றும் கட்சி செயற்பாட்டாளர் கிருஸ்ணா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். ஆரம்ப நிகழ்வாக தமிழீழழ தேசியக் கொடியினை சுவிஸ் இளையோர் அமைப்பின் ஒருங்கினைப்பாளர் துவாரகன் ஏற்றிவைத்து அகவணக்கம் செய்யப்பட்டது.
சுடரேற்றலும் அதனை தொடர்ந்து முருகதாசன் திடலில் தமிழீழ மண் மீட்பு போரில் தம் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்கள் பொது மக்கள் மற்றும் தமிழ் நாட்டில் ஈழவிடுதலைக்காக தம் உடலில் தீ மூட்டியவர்களையும் நினைந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் மற்றும் சட்டத்தரணி தடா சந்திரசேகரன் ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்து உணர்வு நிறைந்த நினைவுகளுடன் நிகழ்வு ஆரம்பமானது.

Thursday, March 21, 2013

ஜெனீவாத் தீர்மானம்: தமிழர்களுக்கு வெற்றியல்ல, ஆனால் இலங்கைக்கு தோல்வி! - வி.உருத்திரகுமாரன்

அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானம் தமிழ் மக்களின் உணர்வுகளை எதிர்பார்ப்புக்களை நெருங்கி வரவில்லை. இதனால் இத் தீர்மானத்தை நாம் தழிழர்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதமுடீயாது.

ஆனால் நிச்சயமாக இதனை சிறிலங்காவுக்கான தோல்வியாக நாம் பார்க்கமுடியும் ன நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரமதர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் பிரேரணை குறித்து பிரதமர் வி.உருத்திரமாரன் அவர்களினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் முழு விபரம்.
ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 13அதிகப்படியான வாக்குகளால் நிறைவேறியுள்ளது. 47 நாடுகளை உறுப்பினராக கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் 26 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும் 13 நாடுகள் எதிராகவும் வாக்களிக்க 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது நடுநிலையும் வகித்திருந்தன.
அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானம் தமிழ் மக்களின் உணர்வுகளை எதிர்பார்ப்புக்களை நெருங்கி வரவில்லை. இதனால் இத் தீர்மானத்தை நாம் தழிழர்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதமுடியாது. ஆனால் நிச்சயமாக இதனை சிறிலங்காவுக்கான தோல்வியாக நாம் பார்க்கமுடியும்.
அனைத்துலக அழுத்தங்கள் எதுவுமின்றி தான் விரும்பியவாறு அதிகாரத்தை தமிழர் தேசத்தின் மீதும் இலங்கைத்தீவின் ஏனைய மக்கள்மீதும் செலுத்த விரும்பும் மகிந்த இராஜபக்சவின் குடும்பஆட்சிக்கு இத் தீர்மானம் ஒருதொல்லையாகவே இருக்கும். மேலும் இத்தகைய தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் விவாதிக்கப்படுவதும் நிறைவேற்றப்படுவதும் சிங்களம் மறைக்கவும் மறக்கவும் விரும்பும் இறுதிக் போர்க்கால நிகழ்வுகளை அனைத்துலக அரங்கில் வெளிச்சத்துக்கு கொண்டுவருவதற்கு வழிகோலச் செய்கிறது.
கடந்த வருடத்தோடு ஒப்பிடும் போது சிறிலங்காவுக்கான ஆதரவு வீழ்ச்சியும் அமைந்திருக்கிறது. சிறிலங்காவின் உறுதியான ஆதரவு நாடான யப்பான் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது நடுநிலைமை வகித்திருப்பதனை இங்கு குறிப்பிடலாம்.
சிறிலங்காவுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளை சிறிலங்காவின் ஆதரவு நாடுகள் என்பதனை விட ஏதோ ஒருவகையில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகைளுடன் முரண்பட்ட நாடுகள் எனக் குறிப்பிடுவதும் கூடுதல் பொருத்தமாக இருக்கும்.
இந்த உலகம் அமெரிக்கா தலைமையிலான ஒற்றை உலக ஒழுங்கில் (unipolar world order) இருந்து விலகி பலமுனை உலக ஒழுங்கினுள் (Mulit-polar world order)நுழையும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பதனையும் எடுத்துக்காட்டுகிறது. இருந்தபோதும் சிறிலங்கா அனைத்துலக அரங்கில் கூடுதலான தனிமைப்பட்டு வருகிறது என்பதனை ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை வாக்கெடுப்பு சுட்டிக் காட்டுகிறது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்படும் தீர்மானங்களில் இரண்டு விடயங்கள் உள்ளடக்கப்படுவது மிகவும் முக்கியமானது.
முதலாவது, ஈழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களஅரசு இனஅழிப்பு (Genocide) புரிகிறது எனும் விடயம் தீர்மானத்தில் உள்ளடக்கபடல்.
இரண்டாவது, இன அழிப்பில் ஈடுப்பட்டவர்கள் மீது அனைத்துலகப் பொறிமுறை ஒன்றின் ஊடாக நீதியான பக்கச் சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்டுவர்களுக்கு நீதிவழங்கப்படவேண்டும் என்பது உள்ளடக்கபடல். 

இவ் இரண்டு விடயங்களையும் அமெரிக்கத் தீர்மானம் உள்ளடக்கவில்லை. இதனால் இத் தீர்மானத்தை தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரும் தீர்மானமாக, திருப்பதிப்படுத்தும் தீர்மானமாக நாம் கருதமுடியாது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவையில் அரசுகள் இயங்கும் பொறிமுறையினைப் அறிந்தவர்கள் என்ற வகையிலும் நலன்களின் அடிப்படையில் அமையும் அரசுகளின் இலாப நட்டக் கணக்களின் சூத்திரங்களைப் புரிந்தவர்கள் என்ற வகையிலும் இந்தத் தீர்மானம் எமக்கு ஆச்சரியமான ஒன்றாக அமையவில்லை. இருப்பினும் நீதிகோரிற்கும் தமிழ் மக்களின் நீதிக்கானகுரல் இத் தீர்மானத்தில் உரியமுறையில் மதிக்கப்படவில்லை என்பது குறித்து நமது அதிருப்தியினை பதிவு செய்ய விரும்புகிறோம்.
குறைந்தபட்சம் இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதுகூட தீர்மானத்தில் உரியவகையில் உள்ளடக்கப்படவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கும் விடயமாகும்.
மத அடிப்படையிலும் அரசியல் கருத்து அடிப்படையிலும் இலங்கைத் தீவில் மனிதஉரிமைகள் மீறப்படுகின்றன என்று குறிப்பிடும் இத் தீர்மானம் இலங்கைத் தீவில் பாரியமுறையில் மனிதஉரிமை மீறல்கள் தமிழினம் அடிப்படையிலேயே மீறப்படுகின்றன என்ற உண்மையை சுட்டிக்காட்டாமையை நாம் கண்டிக்கின்றோம்.
இத் தருணத்தில், நாம் கவனத்திற் கொள்ள வேண்டிய சில விடயங்களை மக்களுடன் பகிர்ந்துகொள்ளுதல் முக்கியம் எனக் கருதுகிறேன். நாம் உலக அரசுகளுடன் நமக்கு நியாயம் கிடைப்பதற்காக அரசியல் இராஜதந்திர வழிகளில் தொடர்சியாகப் போராடவேண்டியவர்களாக உள்ளோம்.
இலங்கைத்தீவில் சிங்கள அரசாங்கம் தமிழீழ மக்கள் மேல் கட்டவிழ்த்துவிட்டுள்ள கொடூர வன்முறை இன அழிப்பின் (genocide) பாற்பட்டது என்பதைப் புரிந்து கொள்வது ஒன்றும் கடினமான விடயமல்ல. இருப்பினும் இதனை இனஅழிப்பாக வெளிப்படுத்தாது வன்னிப் போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்தது இரு தரப்பிரானாலும் புரியப்பட்ட போர்குற்றம் என்ற நிலைப்பாட்டையே அனைத்துலக அரசுகள் கொண்டிருக்கின்றன.
இன அழிப்பை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அதற்கு பாதுகாப்பான தீர்வாக பாதுகாப்பு, (self defense), தன்னினம் பேணுதல் (self preservation) ஆகிய சர்வதேச சட்ட தார்மீகக் கோட்பாடுகளின் அடிப்படையில் பரிகார நீதியாக remedial justice ) தமிழீழத் தனிஅரசுஅமைக்கும் நிலையை ஏற்றுக் கொண்டாக வேண்டிய நிலை அனைத்துலக அரசுகளுக்கு ஏற்படும். இதன் காரணமாக உண்மை தெரிந்திருந்தும் இந்தப் பிரச்சனையை தாம் பேணவிரும்பும் எல்லைகளுக்குள்ளேயே சுழல விடுகின்றன.
இத்தகைய அரசுகளை நாம் எவ்வாறு அணுகப்போகிறோம்? இது குறித்த மூலோபாயத்தையும் தந்திரோபாயத்தையும் நாம் நன்கு வடிவமைத்துக் கொள்ளவேண்டும்.
முள்ளிவாய்க்கால் ஊடாக நாம் படித்துக் கொண்ட முக்கிய பாடங்களில் ஒன்று நம்மிடம் எவ்வளவுதான் நியாயம் இருந்தாலும் எவ்வளவுதான் அர்ப்பணிப்பு இருந்தாலும் எவ்வளவுதான் வீரம் இருந்தாலும் பலமிக்க அரசுகள் எதிரியுடன் கைகோர்க்குமேயானால் நாம் வெற்றியடைய முடியாது என்பதுதான்.
இதனால் இன்று நமது மூலோபாயமாக பலம்மிக்க அரசுகளுக்கும் நமது எதிரியான சிங்கள அரசுக்கும் உள்ள நெருக்கத்தை எவ்வாறு குறைத்து கொள்வது குறித்தும் பலமிக்க அரசுகளினுடன் நாம் எவ்வாறு நமது உறவுகளை எவ்வாறு வளர்த்துக் கொள்ளப் போகின்றோம் என்பது குறித்தும் இருக்கவேண்டும். இதற்காக நாம் நமது நலன்களை அனைத்துலக அரசுகளிடம் பலியிடமுடியாது. அதேவேளையில் அனைத்துலக அரசுகளும் உடனடியாக தமது நலன்களை முழுமையாக கைவிட்டு நியாயத்தின் அடிப்படையில் நம்மை ஆதரித்துக்கொள்ளும் எனவும் எதிபார்க்கமுடியாது. இதனால் பலம்மிக்க அரசுகளை கையாளுவதற்கு நாம் இரண்டு தந்திரோபாயங்களை கையாளல் பயன்தரும் எனக் கருதுகிறேன்.
முதலாவது, நமது நலன்களையும் பலமிக்க அரசுகளின் நலன்களையும் எவ்வாறு இணைய வைப்பது என்பது குறித்து சிந்திப்பதும் அதற்கான திட்டங்களை வகுத்துக் கொள்வதுமாகும். அது இராஜதந்திரமட்டத்தில் நடைபெற வேண்டியது.
இரண்டாவது, நாம் மக்களாக அரசுகளுடன் ஜனநாயக வழியில் அரசியல் ரீதியாகப் போராடுவது.
இவ் இரண்டு வழிமுறைகளும் ஒன்றோடொன்று கை கோர்த்துச் செல்லவேண்டும். அரசுகள் தமது நலன்கள் என்ற அச்சில் சுழல்பவை. ஆனால் இந்த அரசுகளை இயக்குவதில் அரசியல் தலைவர்களுக்கு முக்கிய பங்குண்டு.
அரசியல் தலைவர்களுக்கு மக்கள் ஆதரவு என்பது மிகவும் முக்கியமானது. மக்கள் ஆதரவை வென்றெடுத்தல் என்பது அரசியல் தலைவர்களுக்கு முக்கியமான நலன்சார் விடயமாகும். அதனால் அரச இயந்திரத்துக்கும் அரசியல் தலைவர்களுக்கும் நலன்கள் எல்லா விடயங்களிலும் ஒன்றாக அமைந்து விடுவதில்லை. பல சந்தரப்பங்களில் மக்கள் ஆதரவினை இழந்துவிடக்கூடாது என்பதற்காக அரச தலைவர்கள் தமது அரசின் அரசியல் நிலைப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்த நிர்ப்பந்திக்கப்படுவதுண்டு.
இந்தப் பின்னணயில் நாம் தமிழகத்தில் இடம் பெறும் மாணவர் போராட்டங்களை நோக்கும் போது அவற்றின் முக்கியத்துவத்தினை நாம் புரிந்துகொள்ளமுடியும். மக்களின் ஆதரவுடன் நடைபெறும் தமிழக மாணவர் போராட்டங்களுக்கு தமிழக மற்றும் இந்திய அரசியல் தலைவர்கள் தமது நிலைப்பாடுகளை மாற்றவைக்கக்கூடிய ஆற்றல் உண்டு.
தற்போது இடம்பெற்றுவரும் தமிழக மாணவர் போராட்டங்கள் இன அழிப்புக்குறித்தும் அனைத்துலக விசாரணையையும் சுதந்திர தமிழீழம் குறித்தும் ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் வாக்கெடுப்பினையும் வலியுறுத்துகின்றன. ஈழத் தமிழ் மக்ககள் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் சமத்துவமாகவும் வாழ்வதற்கு சுதந்திர தமிழ்ஈழம் தவிர்ந்த மாற்றுவழி இல்லை என்பதனை நன்கு புரிந்துகொண்டவர்களாகவே தமிழக மாணவர்கள் களம் இறங்கியுள்ளார்கள்.
ஈழத் தமிழ்மக்களுக்காக போராட்டகளத்தில் குதித்திருக்கும் தமிழக மாணவ சமுதாயத்தின் கரங்களை நாம் தோழமை உணர்வுடன் பற்றிக் கொள்கின்றோம். மாணவர்களின் போராட்டங்களை ஆதரித்து நிற்கும் அரசியல் தலைவர்களோடும் தமிழக மக்களுடனும் நாம் தோழமையோடு நமது கரங்களை இணைத்துக் கொள்கின்றோம்.
நாம் விரும்புகிறோமோ இல்லையோ தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வெற்றி இந்திய அரசை தம் வசப் படுத்துவதில் தமிழகம் அடையும் வெற்றியில் பெரிதும் தங்கியுள்ளது என்பது அரசியல் யதார்த்தமாக உள்ளது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தென்னாசியப் பகுதியில் இந்தியா ஒரு முதன்மைசக்தி என்ற அடிப்படையிலும் வளர்ச்சியடையும் உலகசக்தி என்ற அடிப்படையிலும் தான் உலக இராஜதந்திரக் கணக்கு எழுதப்படுகின்றது. உலக ஒழுங்கு தீர்மானிக்கப்படுகின்றது . இதனால் தென்னாசியாவில் தமிழீழம் என்றும் புதிய நாடு உருவாவதில் இந்தியாவின் பாத்திரம் முக்கியமானது.
இதனால் நாம் தமிழீழ விடுதலை போராட்டத்தின் வெற்றிக்கான நமது மூலோபாயத்தில் இந்திய அரசு சுதந்திரத் தமிழீழத்தை அங்கீகரிக்கவைக்கும் இலக்கினை கொண்டவர்களாக இயங்கவேண்டும். இது உடனடியாக சாத்தியப் படாத விடயமாக இருக்கலாம். ஆனால் உள்நாட்டு நிலைமைகளை அந்நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைகளில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தமுடியும்.
உதாரணமாக ஐக்கியநாடுகள் மனிதஉரிமைப் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு மலேசியா எதிர்த்து வாக்களிக்காமல் நடுநிலை வகித்தள்ளது. சிறிலங்காவை நட்பு நாடாகக் கொண்டிருந்து போதும் மலேசியத் தமிழ்மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டிய ஒரு சூழ்நிலையே மலேசிய அரசு இந்த முடிவு எடுப்பதற்கு முக்கிய காரணம்.
தமிழகத்தில் ஈழம் தொடர்பாக ஈழமக்கள் தொடர்பாக எழுகின்ற போராட்டங்கள் நிலைப்பாடுகள் தமிழகம் மற்றும் இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் ஏற்படுத்தும் தாக்கங்கள் ஊடாக இந்திய அரசின் முடிவுகளில் செல்வாக்கு செலுத்திக் கூடிய ஆற்றல் கொண்டவை. இதில் தமிழக மாணவர்களின் பங்கு முதன்மையானது.
தமிழக மாணவர்கள் தமது சக்தியை நன்கு வெளிப்படுத்தியுள்ளனர்.  மாணர்கள் தமது போராட்டங்களை இந்தியா தமிழீழத்தை அங்கிகரிக்க வேண்டிய ஒரு சூழலை ஏற்படுத்தும்வரை ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொடர்வதனை காலம் வேண்டி நிற்கின்றது.
தமிழகத்தில் என்ன நடக்கின்றது என்பதனை அமெரிக்கா உன்னிப்பாக தொடர்ச்சியாக அவதானித்துககொண்டு இருக்கிறது என்பதையும் நான் இவ்விடத்தில் பதிவு செய்துகொள்ளவிரும்புகிறேன். தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் ஒன்று. தமிழகம் மீதுஅமெரிக்கா கொண்டுள்ள அக்கறையினை அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் Hillary Clinton தமிழகத்துக்கு வருகை தந்தமை ஊடாகவும் நாம் புரிந்து கொள்ளமுடியும். அதனால் தமிழகத்தில் இடம்பெறும் போரட்டங்களுக்கு இந்தியாவில் மட்டுமல்ல ஈழத் தமிழ் மக்கள் விடயத்தில் அனைத்துலக மட்டத்தில் தாக்கம் செலுத்தும் ஆற்றல் உண்டு என்பதனையும் நாம் இங்கு குறித்துக் கொள்ளவேண்டும்.
ஐக்கிய நாடுகள் நிறைவேறியுள்ள தீர்மானம் நமது மக்களுக்கு நீதிதரும் வகையில் அமையவில்லை என்பதால் நாம் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை. சலிப்புக் கொள்ளவும் தேவையிவில்லை. நாம் நமது இலக்கில் முன்னேறிவருகிறோம். நாம் இன்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பாங்-கி மூன் இன் சட்டஆலோசகர்கள் கூறியபடி செயலாளர் நாயகம் ஐக்கிய நாடுகய் சாசனத்தின் 99வது பிரிவின் கீழ் அவருக்குள்ள உள்ளார்ந்த அதிகாரத்தின் அடிப்படையில் சர்வதேச விசாரணைக் குழுவை அமைக்கும்படி கோரி மூன்று மாதகால உலகளாவியரீதியில் கையெழுத்து வேட்கையை மனிதஉரிமை அமைப்புக்களுடனும் ஏனைய தமிழ் அமைப்புக்களுடனும் சேர்ந்து நாம் இன்று ஆரம்பிக்கின்றோம்.
அத்துடன் 2012 நவம்பர் மாத ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் உள்ளார்ந்த அறிக்கையில் கூறப்பட்ட செயலாளர் நாயகத்தின் இன அழிப்பைத் தடுக்கும் பிரிவினால் இலங்கைத் தீவில் உள்ள தமிழர்கள் தொடர்பாக தயாரிக்கப்பட்ட 2007ம் ஆண்டு அறிக்கையையும் தமிழர்கள் தொடர்பான ஏனைய ஆவணங்களையும் வெளியிடுமாறு கோரும் கையெழுத்து வேட்டையினை உலகளாவியரீதியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இன்று ஆரம்பிக்கின்றது. அடிக்குமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும் என்பது நம்மிடையே உள்ள ஒரு பழமொழி. என வி.உருத்திரகுமரன் தன் அறிக்கையில் வெளியிட்டிருந்தார்.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி! இந்திய அரசியற் பிரமுகர்களின் கருத்துக்கள்!


ஜெனீவாவில் அமெரிக்க தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு,  இந்தியா, இத்தாலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 25 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்து தீர்மானத்தை வெற்றிபெறச் செய்தன.

இவ்வாறு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து தமிழக அரசியல்கட்சி பிரமுகர்கள் இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்துக்களை வழங்கியிருக்கின்றனர்.

இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணையில் என்ன இருக்கிறது? பதில் உள்ளே!


இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை கவுன்ஸில் 22வது அமர்வில் அமெரிக்கா முன்வைத்து நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:- 

சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரானவை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அத்துமீறல்கள் குறித்து சுதந்திரமான நம்பகமான சர்வதேச விசாரணை வேண்டுமென்ற உயர் ஆணையரின் கோரிக்கையை இலங்கை மீதான தீர்மானம் கவனத்தில் கொண்டுள்ளதாக அமெரிக்கத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது நாட்டின் ஒட்டுமொத்த மக்கட்தொகையும் அனைத்து மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களையும் முழுமையாக அனுபவிப்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஒவ்வோர் அரசுக்கும் உண்டு என்பதை மறுவுறுதி செய்தல். 
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் தாங்கள் மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையும் சர்வதேசச் சட்டத்துக்கு இயைந்ததாக, குறிப்பாக சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச அகதிகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம், இவற்றில் எது பொருத்தமானதோ அதற்கு இயைந்ததாக இருக்க வேண்டியதை அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் நினைவுகூர்ந்துள்ளது. 
வடக்கு மாகாணத்தில் மாகாண சபைக்கான தேர்தல்களை 2013 செப்டம்பரில் நடத்தப்போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளதை வரவேற்று, உள்கட்டமைப்பை மறுவுருவாக்கம் செய்தல், கண்ணிவெடிகளை அகற்றுதல், உள்நாட்டு அகதிகளில் பெரும்பாலோரை மறுகுடியமர்த்தல் ஆகிய பணிகளில் இலங்கை அரசு பெற்றுள்ள முன்னேற்றத்தை வரவேற்று, அங்கீகரிக்கும் அதே வேளையில், நீதி, நல்லிணக்கம் மற்றும் வாழ்வாதார மீட்பு ஆகிய பரப்புகளில் இன்னும் மிகுதியான பணி காத்திருக்கிறது என்பதைக் கவனத்தில் கொண்டு, இந்த முயற்சிகளில் பொதுச் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினப் பிரதிநிதிகள் உள்ளிட்ட உள்ளூர் மக்கட்தொகையினுடைய முழுமையான பங்கேற்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தல்.
இலங்கை அரசினுடைய படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணையத்தின் அறிக்கை, அதன் விசாரணை முடிவுகள் மற்றும் பரிந்துரைகளைக் கவனத்தில் கொண்டு, இது இலங்கையில் தேசிய நல்லிணக்கத்துக்கான வழிமுறைக்குப் பங்களிக்கும் சாத்தியம் உண்டு என்பதை ஏற்றுக்கொண்டு, படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான இலங்கை அரசின் தேசிய நடவடிக்கைத் திட்டத்தையும், அந்த ஆணையத்தின் விசாரணை முடிவுகள் மற்றும் பரிந்துரைகளுக்கான மறுவினையாக அறிவித்துள்ள பொறுப்புறுதிகளையும் கவனத்தில் கொள்ளல். 
ஆணையத்தின் விசாரணை முடிவுகள் மற்றும் ஆக்கப்பூர்வமான பரிந்துரைகள் அனைத்தையும் இந்த தேசிய நடவடிக்கைத் திட்டம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை என்பதைக் குறித்துக் கொள்ளல். 
சட்டவிரோதமான கொலைகள் மற்றும் கட்டாயத் தலைமறைவுகள் குறித்த பரவலான குற்றச்சாட்டுகளை நம்பகமான முறையில் புலன்விசாரணை செய்தல், இலங்கையின் வடக்குப் பிரதேசத்தை இராணுவ ஆதிக்கத்திலிருந்து விடுவித்தல், நிலத் தகராறுத் தீர்ப்புக்கான பாரபட்சமற்ற அமைப்பு வழிமுறைகளை நடைமுறைப்படுத்தல், காவல்வைப்புக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல், முன்பு சுதந்திரமாகச் செயல்பட்ட பொதுச் சமூக நிறுவனங்களை வலுப்படுத்தல், மாகாணங்களுக்கு அதிகார ஒப்படைப்பு குறித்து ஓர் அரசியல் தீர்வை எட்டுதல், கருத்துச் சுதந்திரத்துக்கு அனைவருக்கும் உள்ள உரிமையைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல், சட்டத்தின் ஆட்சி நிலவத் தேவையான சீர்திருத்தங்களைச் சட்டமாக்கல் ஆகியவற்றுக்கான தேவை உள்ளிட்ட ஆணையத்தின் அறிக்கையில் உள்ள ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை நினைவுகூர்ந்துள்ளது. 
சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரான சட்டமீறல்கள் பற்றிய எளிதில் புறந்தள்ள முடியாத தீவிரமான குற்றச்சாட்டுகளை இந்த ஆணையத்தின் அறிக்கையும் தேசிய நடவடிக்கைத் திட்டமும் போதுமான அளவு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை என்பதைக் கவலையோடு குறித்துக் கொள்ளல். 
கட்டாயத் தலைமறைவுகள், சட்டவிரோதமான கொலைகள், சித்திரவதை, கருத்துச் சுதந்திரம், சங்கம் அமைத்தல் மற்றும் அமைதியாகக் கூட்டம் நடத்துதல் ஆகியவற்றுக்கான உரிமைகள் குலைக்கப்படுதல், மனித உரிமைப் பாதுகாப்பாளர்கள், பொதுச் சமூக உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான மிரட்டல்கள் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள், நீதிமன்றச் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு உள்ள அச்சுறுத்தல்கள், மதம் அல்லது கோட்பாடு அடிப்படையிலான பாகுபாடு ஆகியவை உள்ளிட்ட இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் பற்றித் தொடர்ந்து வெளிவரும் செய்திகள் குறித்துக் கவலை தெரிவித்துக் கொள்ளல்.
நல்லிணக்கத்துக்கும், நாட்டு மக்கட்தொகையின் அனைத்து உறுப்பினர்களும் மனித உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்கும் இன்றியமையாத் தேவையான அரசியல் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட, இலங்கை அரசு வெளிப்படையாக அறிவித்துள்ள பொறுப்புறுதிகளை அந்த அரசுக்கு நினைவுறுத்தல்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தைச் சேர்ந்த தொழில்நுட்பத் தூதுக்குழுவின் பார்வையிடலுக்கு வசதி செய்து கொடுத்த இலங்கை அரசின் முயற்சிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்து, உயர் ஆணையர் அலுவலகத்தோடு உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை அதிகரிக்கும்படி இலங்கை அரசை ஊக்குவித்தல்.
சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரானவை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அத்துமீறல்கள் குறித்து சுதந்திரமான நம்பகமான சர்வதேச விசாரணை வேண்டுமென்ற உயர் ஆணையரின் கோரிக்கையைக் கவனத்தில் இருத்தி, இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பதில் சொல்லும் பொறுப்பை மேம்படுத்த அந்நாட்டு அரசுக்கு ஆலோசனையையும் தொழில்நுட்ப உதவியையும் வழங்குவது குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்தின் அறிக்கையையும், அவ்வறிக்கையில் உள்ள பரிந்துரைகள் மற்றும் முடிவுகளையும், குறிப்பாக இடைக்கால நீதிக்குத் தேவையான இன்னும் அனைத்தளாவியதான, உள்ளிணைத்துக் கொண்டதான ஓர் அணுகுமுறையின் இன்றியமையாத அங்கமாக ஓர் உண்மை தேடும் அமைப்பு வழிமுறையை நிறுவுவது தொடர்பான பரிந்துரையையும் வரவேற்கிறது.
உயர் ஆணையர் அலுவலகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசை ஊக்குவிக்கிறது. மேலும், சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரான அத்துமீறல்கள் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து சுதந்திரமான நம்பகமான விசாரணையை நடத்த வேண்டுமென்று இலங்கை அரசைக் கோருகிறது.
படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை பயன்விளையும் வகையில் நிறைவேற்றும்படியும், தனக்குள்ள பொருத்தப்பாடான சட்டப்பூர்வமான கடமைகளை நிறைவேற்றத் தேவையான கூடுதல் நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ளும்படியும், இலங்கை மக்கள் அனைவருக்கும் நீதி, சமநிலை, பதில் சொல்லும் பொறுப்பு மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்தத் தேவையான சுதந்திரமான நம்பகமான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான பொறுப்புறுதியை நிறைவேற்றும்படியும் இலங்கை அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை மீள வலியுறுத்துகிறது. 
சிறப்பு நடைமுறைகளுக்கான உரிமையாணை பெற்றவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கும்படியும், அவர்களுக்கு அழைப்பு விடுத்தல் மற்றும் அணுகல் உரிமை வழங்குதல் உட்பட நிலுவையில் உள்ள அவர்களின் கோரிக்கைகளுக்கு முறைப்படி மறுவினையாற்றும்படியும் இலங்கை அரசை ஊக்குவிக்கிறது.

மேற்கூறப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவியை, இலங்கை அரசோடு கலந்தாலோசித்து அதன் ஒப்புதலோடு வழங்க உயர் ஆணையர் அலுவலகம் மற்றும் சிறப்பு நடைமுறைகளுக்கான உரிமையாணை பெற்றவர்களை ஊக்குவிக்கிறது.
இப்போது முன்வைக்கப்படும் இந்தத் தீர்மானத்தின் செயற்படுத்தல் குறித்து தொடர்புடைய சிறப்பு நடைமுறைகளுக்கான உரிமையாணை பெற்றவர்களிடமிருந்து உள்ளீட்டைப் பெற்று, பொருத்தமான வகையில் நிகழ்நிலை குறித்த வாய்மொழி அறிக்கையை மனித உரிமைகள் குழுவுக்கு அதன் இருபத்து நான்காவது அமர்வில் வழங்கும்படியும், இருபத்து ஐந்தாவது அமர்வில் விவாதத்தைத் தொடர்ந்து ஒரு முழுமையான அறிக்கையை வழங்கும்படியும் உயர் ஆணையர் அலுவலகத்தைக் கேட்டுக் கொள்கிறது.
அமெரிக்கா முதலில் கொண்டுவந்த வரைபு பிரேரணையில் இருந்து நீக்கப்பட்ட வசனங்கள் வருமாறு:
வெளியிலிருந்து வரும் கண்காணிப்பாளர்கள் மற்றும் வல்லுனர்களுக்கு எந்தவகையான தங்கு தடைகளும் அற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும். எனும் வாக்கிய அமைப்பு முற்றிலும் நீக்கப்பட்டிருக்கிறது.
வெளியக விசாரணை என்பது உள்ளக விசாரணை என மாற்றப்பட்டிருக்கிறது.
பொருத்தமான சர்வதேச விசாரணை எனும் வாக்கியம் முழுமையாக நீக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை அரசை வலியுறுத்துகிறோம் எனும் சொல் ஊக்கப்படுத்துகிறோம் என மாற்றப்பட்டிருக்கிறது. 
தேர்தல்கள் நடத்தப்பட்டது, அடிக்கட்டுமானங்களை நிர்மாணித்திருப்பது இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தியிருப்பது போன்றவற்றை இலங்கை அரசு முன்னெடுத்திருப்பனை நாம் அங்கீகரித்து வரவேற்கிறோம் எனும் பாரா முதல் வரைவில் இல்லை. புதிதாக வெளியான நான்காவது வரைவில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
நன்றி:- எஸ்.வி.உதயகுமார், யமுனா ராஜேந்திரன்  

அமெரிக்காவின் பிரேரணை - பார்வைகள் பலவிதம் -ஐ,நா மனித உரிமைச் சபை வளாகத்தில் இருந்து வரும் குரல்கள்!


சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான அனைத்துலக விசாரணையினை உலகத் தமிழர்கள் எதிர்பார்திருந்த நிலையில் இன்று நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் தீர்மானத்தில் அது குறித்தான போதுமான உள்ளடக்கம் 

இல்லாத விவகாரம் குறித்து ஐ.நா மனித உரிமைச் சபையில் இராஜதந்திரச் செயற்பாடுகளில் பங்காற்றி வந்த தமிழர் தரப்பு பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமைச் சபை செயற்பாட்டாளர்களின் நாடுகடந்த தமழீழ அரசாங்கத்தின் நாதம் ஊடகசேவை வழியே வழங்கிய கருத்துக்கள் .

சீமான் - நாம் தமிழர் கட்சி
 .
ஜெறால்ட் பிரான்சிஸ் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

 ஆனந்தசங்கரி - கனேடிய தமிழர் பேரவை 

சுனந்த தேசப்பிரிய - சிங்கள ஊடகவியலாளர் 
நாகலிங்கம் பாலசந்திரன் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 
சுதா - பிரித்தானிய தமிழர் பேரவை 
சிவராஜா - ஊடகவியலாளர் - இலங்கை 
சத்தியா - ஊடகவியலாளர் - இந்தியா 
செந்தில் - மருத்துவர் - இந்தியா சா.வி.கிருபாகரன் - தமிழர் மனித உரிமைகள் மையம் 
ஆர்.அருள் - பசுமைத் தாயகம் - தமிழகம் 
கே.பாலு - சட்டவல்லுனர் - தமிழகம்
சுதர்சன் சிவகுருநாதன் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்




Monday, March 18, 2013

ஐ.நா. மனித உரிமைப் பேரவை நிகழ்வில் கலந்துகொள்ள செந்தமிழன் சீமான் சுவிஸ் வருகை


ஜெனீவா நகரில் தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைப் போரவையின் 22 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கோருவதற்காக நாம் தமிழர் இயக்கக் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் சுவிஸ் சென்றுள்ளார்.
இவருடன் கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி தடா சந்திரசேகர் அவர்களும் சென்றுள்ளார்.
இவர்கள் இருவரும் இன்று பிற்பகல் 2.15 அளவில் ஜெனீவா விமான நிலையத்தில் வந்திறங்கிய பொழுது அங்கு திரண்ட நூற்றுக் கணக்கான ஈழத்தமிழர்கள் உற்சாகமாக மலர்ச்செண்டு, தமிழீழ தேசியக் கொடி போன்றவற்ற வழங்கி வரவேற்றனர்.
மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் அமெரிக்க முன்மொழியும் சிறி லங்கா அரசுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ள இந்தத் தருணத்தில் அவரின் சுவிஸ் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
அதேவேளை, குறித்த தீரமானத்துக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டுமெனக் கோரி தமிழக்கத்தில் மாணவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் இன்றைய தருணத்தில் சீமானின் வருகை இரட்டிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் சீமான் அவர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஜெனீவா நகரில் ஐ.நா. முன்றலில் நடைபெறவுள்ள மாபெரும் கவன ஈர்ப்பு நிகழ்விலும் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தக் கவன ஈர்ப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:30 மணி முதல் 5:30 மணிவரை நடைபெறும்.
முதற்தடவையாக சுவிஸ் நாட்டிற்கு வருகை தந்துள்ள செந்தமிழன் சீமான் அவர்களின் வருகை சுவிஸ் தமிழர் மத்தியிலே புதுவித உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

Friday, March 15, 2013

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் த .தே .ம .மு தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 22வது கூட்டத் தொடரின்போது 15-03-2013 அன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

நாம் இந்த அவை ஸ்தாபிக்கப்பட்ட காலத்தில் இருந்தே குறிப்பிட்ட ஒரு காலத்திற்கொரு முறை ஒவ்வொரு நாடு தொடர்பாக நடைபெற்றுவரும் மனித உரிமை மீளாய்வு முறையைத் ((Universal Periodic Review)) தொடர்ந்து அவதானித்து வந்துள்ளோம். இப்பொழுது இரண்டாவது சுழற்சியில் இருக்கும் இச்  செயன்முறையில், சில நாடுகள் முதல் சுழற்சியின்போது இவ் அவையால் செய்யப்பட்ட பரிந்துரைகளை முற்றாக அமுல்ப்படுத்தாது விடுத்திருந்தமையை அவதானிக்கலாம் - குறிப்பாக இலங்கை இதற்கு நல்லதோர் உதாரணமாகின்றது. 

இம் மனித உரிமைகள் மீளாய்வு முறையானது வரலாற்று ரீதியாக சுதந்திரம், இனத்துவம், மொழி, காலசாரம், என்பவற்றின் அடிப்படையில் தம்மை ஓர் தேசமாகக் கருதும் தமிழர்கள் போன்ற ஒரு மக்கள் கூட்டத்திற்கு தமது பிரச்சினைகள் பற்றி எடுத்தியம்புவதற்கான வாய்ப்பை வழங்குவதில்லை என்பதற்கு இலங்கை தொடர்பாக நடத்தப்பட்டு முடிந்த மனித உரிமை மீளாய்வு நல்லதோர் உதாரணம். 

அவர்களுடைய உண்மையான பிரச்சினைகளும் அபிலாசைகளும் ஒரு தேசத்தை அழிக்கும் பிரச்சினையாகப் பார்க்கப்படாமல் வெறுமனே தனிநபர் மனித உரிமைப் பிரச்சினையாகவே பார்க்கப்படுகின்றது. இலங்கை தொடர்பான கடந்த மனித உரிமைகள் மீளாய்வின் போது ஆஸ்த்திரியாவினால் முன்வைக்கப்பட்ட யோசனையில் 'தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்' என்பதில்  மட்டுமே 'தமிழர்கள்' பற்றிய குறிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது, தமிழர்கள் ஒரு பிரத்தியேகமான மக்கள் என்ற வகையிலும் அவர்களுக்கு பிரத்தியேகமான பிரச்சினைகள் இருக்கின்றன என்ற வகையிலும் தமிழர்களது பெயர்தானும் இவ்விவாதத்தில் வேறெங்கும் குறிப்பிடப்படவில்லை என்பது கவலையளிக்கின்றது. 

இந்த மனித உரிமை மீளாய்வானது எந்தளவிற்கு தமிழர்களை நீக்கிக் கொண்டு நடத்தப்படுகின்றது என்றால் 65 வருட கால சிங்கள - தமிழ் இன முரண்பாட்டைப் பற்றிப் பெரிதும் அறியாதவர்கள் 'மீளிணக்கம்' என்பதனுள் எந்தத் தரப்புக்கள் உள்ளடங்குகின்றன என்பதனைக் கூட அறியாதவர்களாகி விடுவார்கள். 
திட்டமிட்ட வகையில் தமிழர்களது தேசிய இருப்பை இல்லாமல் செய்வதற்கான முயற்சியே இலங்கையின் 26 வருடகால யுத்தத்திற்கான காரணகர்த்தாவாகும். 'இலங்கை' என்பது உண்மையில் 'சிங்கள பௌத்த அரசு' என்பதன் ஓர் குறியீட்டுப் பெயராக இருக்க இலங்கை அரசாங்கம் தாம் 'இலங்கையர்' என்ற அடையாளத்தினை முன்னிறுத்தி வேலை செய்வதாகக் கூறும் போது நாம் அச்சமடைகின்றோம். 

இந்த வேளையில் நாம் சர்வதேச மேற்பார்வையுடன் கூடிய ஓர் நிலைமாற்று கால நிர்வாகத்தை (Transitional Administration) தமிழ் மக்களுக்கு எதிராக அவர்களது தாயகமான வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் பேரழிவில் இருந்து உடனடியாக பாதுகாக்கும் நோக்கில் அமைக்குமாறு கோரி நிற்கின்றோம். 

இறுதியாக இலங்கை அரசாங்கமானது சர்வதேச மனிதாபிமானச் சட்டம் தொடர்பான மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாகச் செய்யப்பட்டுவரும் அனைத்துலக பரிந்துரைகளையும் நிராகரித்து வருவதனால் ஓர் சுயாதீன, சர்வதேச விசாரணையை நாம் கோரி நிற்கின்றோம்.

Tuesday, April 03, 2012

ஜெனிவாவில் இறுதிக் கணங்கள்!- அம்பலத்துக்கு வரும் மேலதிக தகவல்கள்

ஜெனிவாவில் அரசு பிரகடனப்படுத்திய இராஜதந்திரப் போரில் அது தோற்றுவிட்டாலும், அங்கே நடந்த அரசியல், இராஜதந்திர முயற்சிகள் குறித்த தகவல்கள் தொடர்ந்து அம்பலமாகி வருகின்றன.
அப்படி ஜெனிவாவில் நடைபெற்ற மேலும் பல விடயங்களின் தொகுப்பு வருமாறு:

தீர்மான இறுதி வரைபு வெளியாவதற்கு பல நாட்கள் முன்னதாகவே, ஜெனிவாவில் இந்திய அமெரிக்க இராஜதந்திரிகள் இரகசியமான ஆலோசனைகளில் மூழ்கியிருந்தனர். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளுடன் இலங்கை அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தீர்மான வாசகம் திருத்தப்படவேண்டும் என் பதில் இந்தியா ஒற்றைக்காலில் நின்றது.

இந்தப் பேரத்தில் மிகவும் முக்கிய பங்கை ஆற்றியவர், ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கான இந்தியாவின் புதிய தூதர் திலிப் சின்கா ஆவார். ஜெனிவாத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு 5 நாட்கள் முன்னதாகவே அவர் ஞாயிற்றுக்கிழமை புதுடில்லியில் இருந்து ஜெனிவாவுக்கு வந்திருந்தார். அமெரிக்க அதிகாரிகளுடன் உடனடியாகவே அவர் ஆழமான ஆலோசனைகளை நடத்தினார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு சின்காவுக்கு இரவு விருந்தளித்தார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். ஜெனிவாவில் உள்ள இலங்கைத் தூதரகம் இந்த விருந்தை ஒழுங்கு செய்தது. அதற்குக் காரணம், இந்தியாவை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலையாவது வகித்து ஒதுங்கி நிற்குமாறு வலியுறுத்துவதேயாகும்.

ஜெனிவாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட முன்னர், இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலராக இருந்தவர் திலிப் சின்கா. இலங்கைக்கு ஆதரவாக இந்தத் தடவை இந்தியா நடந்துகொள்ளாது என்பதை அந்த இரவு விருந்தின்போதே சின்கா, பிரீஸுக்குத் தெளிவுபடுத்திவிட்டார்.

உள்நாட்டு விவகாரங்களினால் இந்தமுறை இலங்கையைக் காப்பாற்ற முடியாது என்று அவர் கைவிரித்து விட்டார். விருந்து முடித்து வெளியே வந்த இலங்கை அமைச்சர் ஒருவர், தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கப் போகிறது என்பதைப் பகிரங்கமாகக் கூறினார். அதேவேளை, வாக்கெடுப்புக்கு முதல்நாளான புதன்கிழமை இரவு மிகக் கடுமையான இராஜதந்திர பேரம் பேசல்கள் இலங்கை அமெரிக்க இந்தியத் தரப்புகளில் இடம்பெற்றன.

தீர்மானத்தில் திருத்தம் செய்வதற்கு அமெரிக்கப் பிரதிநிதி எலின் டொனஹேயுடன் பேரம் பேசுமாறு திலிப் சின்காவுக்கு புதுடில்லியில் இருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தீர்மானத்தைத் திருத்துவதற்கு அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் விரும்பவில்லை. அப்படிச் செய்வது இலங்கையை வழிப்படுத்துவதாக அமையாது என்று அவை கருதின. ஆனால், திலிப் சின்கா மிகக் கடுமையாக, விடாப்பிடிப் போக்குடன் இருந்தார்.

ஒரு கட்டத்தில் அவர், திருத்தமாட்டேன் என்று அமெரிக்கா பிடிவாதம் பிடித்தால் இந்தியா தீர்மானத்தை எதிர்க்கும் என்று மிரட்டினார். 2009ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா முன்னின்று தோற்கடித்ததையும் அவர் நினைவுபடுத்திச் சுட்டிக்காட்டினார்.

கடைசியாக இந்தியாவின் வழிக்கு வந்தது அமெரிக்கா. தீர்மான வாசகங்கள் திருத்தப்பட்டன. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசின் ஒப்புதலுடன், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் ஆலோச்னை மற்றும் தொழில் நுட்ப உதவிகளை வழங்கலாம் என்ற இந்தியாவின் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அமெரிக்கா கொண்டு வந்த இந்தத் தீர்மானத்துக்கு ஹங்கேரி, ருமேனியா, நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, மொனாக்கோ, ஸ்பெயின், லித்வேனியா, பின்லாந்து, சைப்ரஸ், குரோசியா, பல்கேரியா, ஸ்லோவேனியா, எஸ்தோனியா, செக் குடியரசு, லக்சம்பேர்க், கிறீஸ், இஸ்ரேல், ஸ்லோவாக்கியா, மோல்டா, ஜோர்ஜியா, சுவிற்சர்லாந்து, சோமாலியா, கனடா, கமரூன், லிச்சன் ஸ்டைன், நோர்வே, டென்மார்க், சுவீடன், அயர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், போர்த்துக்கல், ஆஸ்திரியா, போலந்து, பிரித்தானியா, ஜெர்மனி, இத்தாலி, ஐஸ்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய 40 நாடுகள் துணை அனுசரணை வழங்கியிருந்தன.

இவற்றில் 13 நாடுகள் மட்டுமே ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இந்த முறை வாக்களிக்கும் உரிமையைக் கொண்டிருந்தன. 40 நாடுகளின் ஆதரவுடன் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்திருந்தாலும், இந்தியாவின் அழுத்தங்களுக்கு அமெரிக்கா பணிந்து போக வேண்டியிருந்ததால், முன்னைய வரைபின்படி அதிக நெருக்குதல்களைக் கொடுக்கும் வகையிலான தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது போனது என்று அமெரிக்க இராஜதந்திரிகள் கூறுகிறார்கள்.

Thursday, March 22, 2012

இலங்கைக்கு எதிரான பிரேரனைக்கு ஆதரவு மற்றும் எதிர்த்த நாடுகள்

அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தின் மீது ஒட்டுமொத்த 47 நாடுகள் கலந்துகொண்ட இந்த வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 24 நாடுகளும்இ எதிர்ப்பு தெரிவித்து 15 நாடுகளும் வாக்களித்துள்ளன. 8 நாடுகள் புறக்கணித்துள்ளன. இதைத்தொடர்ந்து இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம் ஐநா மனித உரிமை கவுன்சிலில் வெற்றி பெற்றுள்ளது. வாக்களித்த நாடுகளின் பட்டியலை முளுடையாக கீழே பார்வையிடலாம்
ஆதரித்த நாடுகளின் பட்டியல்

நடுநிலை வகித்த நாடுகளின் பட்டியல்


எதிர்த்த நாடுகளின் பட்டியல்

பிரான்சில், அமெரிக்க அரசு தமிழீழ மக்களின் நலனை பாதுகாக்க அதற்குரிய பிரேணையை முன்வைக்க வேண்டும் என்று வலியுறுத்து- பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை

அமெரிக்காவும் சிறி லங்காவும் கற்றுக்கொண்ட பாடங்கள்- நல்லிணக்க ஆணைக்குழு, ஜெனீவா மனிதவுரிமை பேரவையின் அமர்வில் கொண்டுவரப்பட்ட பிரேரணையும்!

இன்று சிறி லங்கா அரசு இந்திய ஆகிய நாடுகள் அமெரிக்க மனிதவுரிமை ஆணைக்குழுவில் முன்வைத்த பிரேரணையை பார்த்து அஞ்சுவது போன்ற பார்வையை எமக்கு அளித்து கொண்டு இருக்கிறார்கள். இந்த பிரேரணை தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சபையில் ஒரு சிறு கதவு திறக்கப்பட்டுள்ளது என்ற பார்வையில் எமக்குள் நாம் ஒரு திருப்தியை ஏற்படுத்தி கொண்டாலும், இதற்காக அமெரிக்காவின் இந்த முயற்சிக்கு நாம் ஆதரவு குரல் கொடுத்தாலும் அமெரிக்க முன்வைத்து இருக்கும் பிரேரணையால் ஈழத் தமிழர்களுக்கு எவ்விதமான நீதியையும் விடுதலையையும் பெற்று கொடுக்காது என்பதை ஈழத் தமிழர்கள் ஆகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும்.http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-frances%20(16).jpg

எமது போராட்டம் 64 வருடங்களாக வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றும் தமிழர்க்கு தேசிய வளங்கள் இருக்கிறது என்றும் சிறி லங்கா என்ற நாட்டிற்குள் சுதந்திரமாக வாழ முடியாத கட்டத்தில் அவர்கள் தமிழீழ மக்கள் அதற்குரிய அங்கீகாரத்தை கொடுக்கும் பட்சத்தில் தனியாக பிரிந்து சென்று தம்மை தாமே ஆளும் தன்னாட்சி உரிமை உள்ளது என்ற மனிதவுரிமை கோட்பாட்டுக்கு அமைய உருவான போராட்டத்தை எந்தவித உரிமைகளும் அற்ற வடக்கு கிழக்கு என்ற பிரிந்த மாகாணசபை கோட்பாட்டை தமிழர்கள் மேல் திணிக்கும் பிரேரணையாகவே நாம் பார்க்கவேண்டும்.http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-frances%20(17).jpg

கற்றுக்கொண்ட பாடங்கள் - நல்லிணக்க ஆணைகுழு முன்வைத்த சில நல்ல கூற்றுக்கலாக பார்க்கப்படும் வட மாகாணத்தில் இருந்து ராணுவத்தை வெளியேற்ற வேண்டும், ஆயுதக் குழுக்களிடம் இருந்து ஆயுதங்களை அகற்றுவது போன்ற சில அறிவுரைகளை சிறி லங்கா அரசு நடைமுறை படுத்த வேண்டும் என்றும் இந்த பிரேரணையில் உள்ளது, தமிழர்கள் வாழும் பிரதேசங்கள் ஆகிய வடக்கு கிழக்கு மாகாணங்களில் ராணுவ மயப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் வட மாகாணத்தை மாத்திரம் முன்னிலை படுத்துவது என்பது வடக்கு மற்று கிழக்கு மாகாண தமிழர்களை பிரித்து பார்ப்பது போல்தான் உள்ளது.http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-frances%20(22).jpg

இந்த நிலையில் பிரான்சில் இன்று அமெரிக்க மற்றும் பிரித்தானிய அரசுகளை இந்த நாடுகளின் தூதரகதிட்கு அண்மையில் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஒழுங்கு அமைக்கப்பட்டது. பல நூறு தமிழ் மக்கள் கலந்து கொண்ட இந்த கவனயீர்ப்பு போராட்டம் உணர்வு பூர்வமாக மகிந்த- கோத்தபயாவின் கொண்டும்பாவிகள் முன்வைக்கப்பட்டு சிறி லங்கா அரசு செய்த மனிதவுரிமை எதிராக செய்த கொடுமைகளை பதாதைகள் மூலம் காட்சியாக பார்வைக்கு முன்வைக்கப்பட்டு சிறி லங்கா அரசு தமிழர்களுக்கு செய்த கொடுமைகள் துண்டு பிரசுரங்கள் மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-frances%20(18).jpg

அத்துடன் அமெரிக்க தூதுவருக்கும் அமெரிக்க வெளிவிவகார துறை , வெளிநாட்டு அமைச்சர் திருமதி ஹிலாரி கிளிண்டன் அவர்களுக்கு அமெரிக்க அரசின் இந்த முயற்சியை வரவேற்றும் அதேநேரத்தில் ஈழத் தமிழர்கள் எந்த கண்ணோட்டத்தில் கற்று கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவை பார்கின்றது என்றும் அதனால் தமிழர்களுக்கு கிடைக்க கூடிய நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன வென்று சுற்றி காட்டி, சிறி லங்கா அரசுக்கு இந்த நடைமுறை படுத்த கொடுக்கப்படும் இந்த ஒரு வருட கால அவகாசம் சிறி லங்கா அரசு தான் ஆரம்பித்த சிங்கள காலனித்துவத்தை வேகப்படுத்த உதவும் என்றும் அமெரிக்க அரசிடம் தமிழர்கள் எதை எதிர் பார்கிறார்கள் என்பதை வலியுறுத்தி மனுவொன்று கையளிக்கப்பட்டது.

அத்துடன் ஈழத் தமிழர்கள் விழிப்பாக இருந்து எமது போராட்டத்தை வலுவுடன் நடாத்த வேண்டும் இல்லையேல் சர்வதேசம் தனது நோக்கத்தை எமது மக்களின் மேல் திணித்து விடும் என்றும் உலக நாடுகள் அரசுகளின் நலனை பாதுகாப்பதை நிறுத்தி ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்ட முக்கிய நோக்கமாகிய மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று கூறி இந்த கவனயிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.
http://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-frances%20(7).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-frances%20(19).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-frances%20(21).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-frances%20(20).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-frances%20(11).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-frances%20(15).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-frances%20(14).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-frances%20(13).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-frances%20(12).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-frances%20(10).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-frances%20(9).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-frances%20(8).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-frances%20(6).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-frances%20(5).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-frances%20(3).jpghttp://www.eeladhesam.com/images/stories/new/news/01.04.2011news/y-frances%20(4).jpg

செய்தி- பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை