Showing posts with label ஐரோப்பிய ஒன்றியம். Show all posts
Showing posts with label ஐரோப்பிய ஒன்றியம். Show all posts

Saturday, March 03, 2012

நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியது பிரான்ஸ், இத்தாலி தேசியச் செயற்பாட்டாளர்கள் விடுதலை.!

கடந்த 2007ம் ஆண்டு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் மனிதநேய செயற்பாட்டாளர்களும் பயங்கவாதத்திற்கும், போராட்டத்திற்கும் உதவினார்கள் என்று சிறைப்பிடிக்கப்பட்டு படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு 2009 இறுதிப் பகுதியில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு நவம்பர் 23ம் திகதி 7 வருடம், 5 வருடம், 4 வருடம் எனவும் சிலர் நிரபராதிகள் என்றும் தீர்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும், அதன் செயற்பாட்டாளர்களும் ஒரு பயங்கரவாதப் போராட்டத்திற்கு உதவவில்லை என்றும் அது மனிதநேயத்துடன் உலக சட்ட விதிகளுக்கு உட்பட்டே பணியாற்றியது என தமிழர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடியதுடன் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாது மேல் முறையீடு செய்திருந்தனர்.

 இதனை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டதோடு பொறுப்பாளராக இருந்த திரு.ந.மதிந்திரன் அவர்களை விடுதலை செய்திருந்தது.

தொடர்ந்தும் பூரண விசாரணையை 2011 டிசெம்பர் 6ம் திகதி எடுத்துக் கொண்டு 3 நாட்கள் விசாரணை செய்து கடந்த 22ம் திகதி மேல்நிதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதில் 7 வருடங்கள் கொடுக்கப்பட்ட தண்டணையை 5 வருடங்களாக்கியதுடன் ஏனையவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனைகள் வழங்கப்பட்டு அனைவரும் வெளியில் விடப்பட்டுள்ளனர்.

இனி எவரும் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டிய நிலையிருக்காது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று இதே காலப்பகுதியில் இத்தாலி நாட்டில் செயற்பட்டுக் கொண்டிருந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும், அதன் செயற்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டதும் பின்னர் அவர்கள் படிப்படியாக மூன்று மாதங்களுக்குள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த 2011ம் ஆண்டு விசாரணைக்கு எடுக்கப்பட்ட இவர்களின் வழக்கு மூன்று மாதங்களுக்கு மேல் நடைபெற்று வழக்கினைத் தள்ளுபடி செய்து அனைவரும் நிரபராதிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

64 பக்கங்கள் கொண்ட இத் தீர்ப்பானது 23ம் திகதி வெளியிடப்பட்டிருந்தது. அதிலே குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் பின்வருமாறு.

"UNO Convention 1999 (New York) art.21 அடிப்படையில் சர்வதேச மட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாதம் என்று கூற முடியாது. ஏனென்றால் அதன் செயல்கள் ஒரு போராட்ட சூழ்நிலையில் ஒரு நாட்டின் இராணுவத்தினராலும், ஒரு இயக்கத்தினராலும் விடுதலைக்காக போராடுகின்ற போராளிகளாலும் நடாத்தப்பட்டதால் அவ்வாறான விடயங்கள் பயங்கரவாதம் என்று கூற முடியாது போர்க்குற்றம் என்று கூறப்பட வேண்டும்.

‘விடுதலைப் புலிகள் வெறும் ஆயுதப் போராட்டம் நடாத்தவில்லை. அரசியல் ரீதியாக ஓர் அரசுக்குரிய கட்டுமானங்களையும் செயற்படுத்தியவர்கள். ‘விடுதலைப் புலிகளை சர்வதேச பயங்கரவாதம் என்று சொல்வதற்கு நாடு கடந்த எந்தவிதமான தாக்குதல்களையும் நடாத்தவில்லை.

ஒரு விடயம் மட்டும் ராஜீவ்காந்தி கொலை. இதை விடுதலைப் புலிகள் தான் செய்தார்கள் என்பதற்கு சரியான ஆதாரம் இன்னும் இல்லை (சீக் இனத்தவர் செய்திருக்கலாம் என்ற குழப்பங்கள்) ‘நிதி சேர்த்ததானது தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்காக இருக்கலாம்.

பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு செய்வதற்கு பயன்பட்டதாகவோ அல்லது அந்த நோக்கத்திற்காகவோ பயன்பட்டதற்கான ஆதாரம் இல்லை. என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, தீர்ப்பு வெளிவந்த நிலையில் தேசியச் செயற்பாட்டாளர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதுபோன்ற பல செய்திகளை, தமிழின விரோத சக்திகள் பரப்பிவந்தன. தமிழ் மக்களைக் குழப்பத்திற்கு உள்ளாக்குவதுடன், ஜெனீவாவில் மார்ச் 5ம் திகதி நடைபெறும் பாரிய எழுச்சியைத் தடுக்கும் வகையிலும் இப் பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டிருந்தன.

எனினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் செல் நகரத்தில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்வொன்றில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளரும், மனிதநேயச் செயற்பாட்டாளராய் செயற்பட்டு சிறைத்தண்டனை பெற்றவருமாகிய திரு.து.மேத்தா அவர்கள் அந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததுடன் உரையாற்றியுமிருந்தது இவர்களின் பொய்ப் பரப்புரைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முடியவில்லை எம் விடுதலை வீச்சு அதுவே எங்களின் மூச்சு - ஜெனீவாவை அண்மிக்க என்னும் 35 கிலோமீற்றர் தூரங்களே உள்ளது.


நிரந்தர விடிவிற்காகவும் நிம்மதியான வாழ்விற்காகவும் ஏங்கித் தவிக்கும் ஈழத்தமிழர்களுக்கு சர்வதேச சமூகம் நீதியான தீர்வு ஒன்றினைப் பெற்றுத்தர வேண்டும் என்று ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைப்பயணம் ஜெனீவாவை அண்மிக்க என்னும் 35 கிலோமீற்றர் தூரங்களே உள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை ஐநா சபை முன்றலில் முடிவடைகின்ற இந்த நீதிக்கான நடைப்பயணத்தில் புலத்தில் வாழ்கின்ற தமிழ் உறவுகள் அனைவரும் ஒன்று கூடி நீதி கேட்பதற்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து தமிழ் மக்களும் கலந்துகொள்வதற்கான பயண ஏற்பாடுகள் அந்தந்த நாட்டில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரால் மேற்கொள்ளப்படுகிறது.

எனவே தமிழினம் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ்வதற்கு சர்வதேசத்தின் சாதகமான பதில் எமக்கு வேண்டும் என்று உரிமையுடன் கேட்பதற்கு அனைவரும் வருகைதரவேண்டும்.

ஈழத்தமிழர்களின் அவலங்களை அகற்றுவதற்கு அகிம்சை முதல் ஆயுதப் போராட்டம் வரை முன்னெடுக்கப்பட்டது. ஆனால் சிங்கள அரசு எம்மினத்தை அழித்து இன்றும் அடக்கு முறைக்குள்ளேயே வைத்துள்ளது. சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ முடியாமல் தமிழினம் தத்தளிக்கிறது.

இந்நிலையில் சர்வதேச சமூகம் தீர்வு ஏதாவது பெற்றுத்தரும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த தமிழ் மக்கள் பலமுறை ஏமாற்றப்பட்டனர். இன்று சிங்கள அரசின் இன அழிப்புக் குறித்த விடயங்கள் அனைத்தும் அம்பலமாகி இருக்கின்ற சூழ்நிலையில் உண்மைகளை சர்வதேச சமூகம் அறிந்திருக்கின்ற இத்தருணத்தில் நாமும் எல்லோரும் ஒன்றுதிரண்டு சர்வதேச சமூகமே உன் மௌனத்தை கலைத்து எம்மினத்திற்கு நியாயமான தீர்வினை பெ,ற்றுத்தருவதற்கு விரைந்து செயற்படு என்று கேட்போம். எதிர்வரும் திங்கட்கிழமை நீங்கள் வருகை தரவேண்டும் என்று வரலாறு வரவழைக்கிறது.

வித்தாகிப் போன எம் மாவீரர்களின் கனவுகளை நனவாக்கவும் எமது விடுதலைப் போராட்டம் முடிந்துவிட்டதாக தம்பட்டம் அடிக்கும் சிங்கள அரசிற்கு சாவு மணியடிக்கவும் வாருங்கள், முடியவில்லை எம் விடுதலை வீச்சு அதுவே எங்களின் மூச்சு என்பதை உலகிற்கு உணர்த்துவோம் ஒன்றாய் வாரீர்.

Tuesday, February 28, 2012

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு – ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்கள் முடிவு

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்காலச் சம்பவங்களுக்குப் பொறுப்புக் கூறுதல் தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார பேரவை தீர்மானித்துள்ளது.

நேற்று பிரசெல்சில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரப் பேரவையின் கூட்டதிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் சிறிலங்கா பற்றியதும் ஒன்றாகும்.

போர்க்காலச் சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூறும் விவகாரம் தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதை ஐரோப்பிய ஒன்றியம் ஊக்குவிக்கும் என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கு கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, June 08, 2011

புலிகள் தொடுத்த வழக்கை ஏற்றுக்கொண்டது ஐ.ரோ நீதிமன்றம் !

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று புலிகள் சார்பாக விக்ரர் கொப்பே என்ற சட்டத்தரணி தாக்கல் செய்துள்ள வழக்கை ஐரோப்பிய நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கவுள்ளதாக அந்த நீதிமன்றின் பதிவாளர் அறிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்குப் பிறகு விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தவில்லை என்றும் எதுவித வன்முறையும் அற்ற விதத்தில் தமது உரிமைகளுக்காகப் போராட விரும்புகிறார்கள் என்று விக்ரர் கொப்பே வாதாடுகிறார். இதனை ஏற்று வழக்கை விசாரிக்க ஐரோப்பிய நீதிமன்றம் இனங்கியுள்ளது. இது ஒரு மைல் கல்லாக நோக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் ஆனது, நீதிமன்று, பொது நீதிமன்று மற்றும் உரிமையியல் சேவை நீதிமன்று என்ற மூன்று நீதிமன்றங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு நீதிமன்றுக்கும் ஒரு நீதிபதியும் சட்டத்தரணியும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு சமர்ப்பிக்கப்படும் வழக்குகள் எழுத்துமூலமாகவும் வாய்மொழி மூலமாகவும் இரு நிலைகளில் விசாரிக்கப்படுகிறது. ஐரோப்பிய நீதிமன்றமே ஐரோபிய அரசாங்கங்களுக்கும் ஐரோப்பிய நிறுவனங்களுக்கும் இடையிலான சட்ட முறுகல்களைத் தீர்த்து வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, June 02, 2011

தமிழினப்படுகொலை - ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் விவாதம் தொடர்கின்றது!

ஈழத் தமிழினப் படுகொலைகளைக் கண்டித்து பல புலம்பெயர் நாடுகளில் வாழும் பெரும் எண்ணிக்கையான தமிழ் உணர்வாளர்கள் இன்று பெல்ஜியம் நாட்டின் புறுசெல் நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் உணர்வுபூர்வமாக ஒன்றுகூடியுள்ளனர்.

ஐரோப்பிய பாராளுமன்ற இடதுசாரிக்கட்சிகளும் (GUE/NGL)அனைத்துலக மக்கள் அவைகளின் ஏற்பாட்டில் ஒழுங்குசெய்யப்பட்ட இந்நிகழ்வு பிற்பகல் 2 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் தாயகத்தின் இன்றைய நிலையும் அபிவிருத்தியும் என்ற தலைப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் சின்னத்துரை வரதராஜா உரைநிகழ்த்தினார்.

தொடர்ந்து தாயகத்தின் ஏனைய நிலைமைகள் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்; செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் உரைநிகழ்த்தினார்.

அவர் தனது உரையில், தாயகத்தில் இராணுவ அடக்குமுறையில் மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அங்கு சிங்களமயமாக்கல் என்றுமில்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. மக்கள் தவறான பாதைக்கு வழிநடத்தப்படுகின்றனர். தமிழ் மக்கள் தோல்வியடைந்தவர்கள் என்ற நிலைமையிலேயே சிங்கள அரசு நோக்கிவருகின்றது.

இந்த நிலைமாறவேண்டும். சர்வதேச ரீதியிலான பக்கசார்பற்ற ஓர் விசாரணை நடத்தப்படவேண்டும். நாம் இங்கு வந்த காரணத்தால் குற்றம் சுமத்தப்பட்டு கைதுசெய்யப்படலாம். பழிவாங்கப்படலாம். இந்நிலையில் நாம் எமது மக்களுக்காக இவற்றை சந்திக்கவும் தயாராக உள்ளோம். தற்போதைய நிலையில் எமது தமிழ் மக்கள் ஒன்றுபட்டு செயற்படவேண்டியதே முக்கியமாகக் கருதப்படுகின்றது போன்ற விடயங்களை முன்வைத்து விரிவாக உரை நிகழ்த்தியதைத் தொடர்ந்து முதற்கட்ட அமர்வு நிறைவுபெற்றது.

நான்கு அமர்வுகளாக நடைபெறும் இந்நிகழ்வின் இரண்டாவது அமர்வு தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இந்த நிகழ்வில் ம.தி.மு.க.பொதுச் செயலர் வை.கோ உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆர்வலர்கள் உணர்வு பூர்வமாகக் கலந்துகொண்டுள்ளனர்.

Friday, May 13, 2011

ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா செயலாளர் நாயகம் அமைத்த போர்க்குற்ற ஆலோசனைக்குழுவின் அறிக்கையில் காணப்படும் பரிந்துரைகளை சிறீலங்கா அரசு நிறைவேற்ற வேண்டும் என நேற்று (12) அவசர கூட்டம் ஒன்றை நடத்திய ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக் குழு தனது தீர்மானத்தில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

நேற்று (12) ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சிறீலங்கா தொடர்பான விவாதத்தில் ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் அதில் உள்ள பரிந்துரைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

அங்கு பேசிய பலரும் அறிக்கைக்கு ஆதரவாகவே உரையாற்றியிருந்தனர். இந்த விவாதத்தை தொடர்ந்து, சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழுமையான, சுயாதீனமான, நியாயமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சிறீலங்காவில் போர் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ளன, சிறீலங்கா அரசு தமிழ் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். சிங்கள மக்கள் அனுபவிக்கும் உரிமைகள் அவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

அண்மையில் வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கையில் சிறீலங்காவில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அது தொடர்பில் ஐ.நா அறிக்கையில் காணப்படும் பரிந்துரைகளை சிறீலங்கா அரசு நிறைவேற்ற வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் வெளியிட்டுள்ள அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Monday, May 09, 2011

ஐ.நா அறிக்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அவசரமாக கூடுகின்றது

சிறீலங்காவில் இடம்பெற்ற போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியம் எதிர்வரும் 12 ஆம் நாள் அவசர கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்குபற்றும் இந்த கூட்டத்தில் ஐ.நா அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பில் விவாதிக்கப்படுவதுடன், சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் மேலதிக சுயாதீன விசாரணைகள் அவசியம் என்ற பரிந்துரையையும் ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

கிறீன் கட்சியை சேர்ந்த 50 உறுப்பினர்கள் மேற்கொண்ட வேண்டுகோளைத் தொடர்ந்தே இந்த அவசர கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டம் தொடர்பான தகவல்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சிறீலங்கா தூதுவர் ரவிநாதா ஆரியசிங்காவும் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சகமும் எச்சரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா அறிக்கையை சக்திவாய்ந்த ஐரோப்பிய ஒன்றியம் ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றினால் சுயாதீன விசாரணைக்குழுவை அமைப்பதில் இருந்து சிறீலங்கா தப்பமுடியாது என கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வருடம் மே மாதம் அவசர கூட்டத்தை நடத்திய ஐரோப்பிய ஒன்றியம், சிறீலங்காவுக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை நிறுத்தியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Wednesday, February 23, 2011

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவரவாதப்பட்டியலில் மீண்டும் இணைத்தது EU

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் தமது தீவிரவாத அமைப்புக்களின் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் சேர்த்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளின் 2011ம் ஆண்டு ஜனவரி 31இன் 83/2011 ஆம் இலக்க சட்டத்தின் படி இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத பட்டியலில் 26 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தமது உறுப்பு நாடுகளில் இவ் தீவிரவாத அமைப்புக்களின் நடவடிக்கைகள் முடக்கப்படும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

Monday, July 05, 2010

ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஜப்பானும் இலங்கைக்கு எதிராக குரல்: ராஜபக்ஷ உச்சபட்ச நெருக்கடியில்!: ஜூனியர் விகடன்

இலங்கையில் நடந்த இனப் படுகொலைகளை மறைக்க, ராஜபக்ஷ பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வரும் நிலையில், மனச்சாட்சியுள்ள உலக நாடுகள் அவரை அவ்வளவு எளிதில் விடாதுபோல் இருக்கிறது.
ஏற்கெனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி இருக்கும் ராஜபக்ஷ, தற்போது ஐ.நா. சபை அமைத்திருக்கும் மூவர் விசாரணை கமிஷனால் உச்சபட்ச நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். கூடவே ஜப்பானும், ஐரோப்பியக் கூட்டமைப்பும் இலங்கைக்கு எதிராகக் குரல் உயர்த்தி இருப்பதும் ராஜபக்ஷவின் எதிர் காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளது!

ராஜபக்ஷவுக்கு எதிராக முதல் குரலைப் பதிவு செய்தவர் சிங்கப்பூரைச் செதுக்கிய சிந்தனைச் சிற்பி லீ குவான் யூ, ''ஈழத் தமிழர்கள் மீதான கொடுமைகளை மூடி மறைத்ததாக ராஜபக்ஷ நினைத்தால், அது முற்றிலும் தவறு. நியாயத்துக்காகப் போராடி மீண்டும் ஈழத் தமிழர்கள் போர்க்கொடி தூக்குவார்கள்!'' எனத் தமிழர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார்.

இதைத் தொடர்ந்து இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை ஆராய்ந்து வந்த ஐ.நா. சபையின் மனித வள ஆணையம், இப்போது கடைசிக் கட்டப் போரில் திரைக்குப் பின் நடந்த கொடூரங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட முனைந்துள்ளது.

ஐ.நா-வின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அமைத்துள்ள மூவர் குழுவின் தலைவர், இந்தோனேசியாவின் முன்னாள் தலைமை நீதிபதி மர்ஸுகி தருஸ்மான். இவர், பெனாசிர் பூட்டோ கொலை வழக்கை ஆராய்ந்து பல்வேறு உண்மைகளை வெளியே கொண்டுவந்தவர். மற்ற இருவர், தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த யாஸ்மின் சூகா, அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ரட்னர்.

ஐ.நா-வின் நடவடிக்கைகளால் கடும் கலக்கத்துக்கும் எரிச்சலுக்கும் ஆளாகி இருக்கும் ராஜபக்ஷ, ''இலங்கையின் மதிப்பைக் குலைக்கும் நோக்கிலேயே ஆதாரமற்ற வீடியோக்களை வெளியிடுகிறார்கள். எங்களால் முடிந்தவரை, போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளைச் செய்து வருகிறோம். இந்த விசாரணைக் குழு தேவையற்றது...'' என்று சொல்லி இருக்கிறார்.

இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இன்னும் ஒருபடி மேலே போய், ''ஐ.நா-வின் விசாரணை கமிட்டி இலங்கையில் காலடி எடுத்துவைக்க முடியாது. அவர்கள் யாருக்கும் விசா கிடையாது!'' என்று மிரட்டல் தொனியில் பேசியிருக்கிறார்.

இவை எல்லாம், நியாயத்தை எதிர்நோக்கும் உலக நாடுகளுக்கு இலங்கை மீதான எரிச்சலை அதிகப்படுத்தி உள்ளது.

ஐ.நா-வின் விசாரணை கமிஷனுக்கு ஜப்பான் ஆதரவு தெரிவித்துள்ளது.

சமீபத்தில்தான் ஜப்பான், நிவாரண நிதியாக அமெரிக்க டொலர் மதிப்பில் 426.4 மில்லியன் டொலர் நிதியை இலங்கைக்கு அளித்திருந்தது. இதுபற்றி இலங்கையின் ஜப்பான் தூதரான யாசுஷி அகாஷி, ''எப்போது நிவாரண நிதி தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கை எங்களிடம் கையெழுத்திட்டதோ... அப்போதே எங்களுக்கும் ஈழத் தமிழர் பிரச்சினையில் கேள்வி கேட்கும் உரிமை உண்டு என்பதை இலங்கை அரசு புரிந்துகொள்ள வேண்டும். 'ஐ.நா-வின் விசாரணை கமிஷனுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்' என்று ராஜபக்ஷவிடம் தெரிவித்திருந்தேன். ஆனால், அவர் அதைக் காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. இது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது!'' என்கிறார்.

ஜப்பான் இப்படி என்றால், ஐரோப்பியக் கூட்டமைப்பு மொத்த இலங்கையையும் பதறச்செய்யும் அளவுக்கு ஓர் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை, தனது பெரும்பாலான இறக்குமதித் தேவைகளை ஐரோப்பிய நாடுகளில் இருந்துதான் மேற்கொள்கிறது. ஐரோப்பாவைச் சார்ந்து இலங்கையின் பொருளாதாரம் அமைந்திருக்கும் நிலையில், 'மனிதநேயத்துக்கு ஒவ்வாத செயல்களில் ஈடுபடவில்லை என்று எழுத்துபூர்வமாக இலங்கை கையெழுத்துப் போடாத வரையில், எங்கள் நாடுகளில் இலங்கைக்கான ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்படும்.' என்று அறிவித்துள்ளது.

அதோடு, ஐ.நா. தரப்பு, ''இறுதிப் போரின் சில நாட்களில் மட்டும் சுமார் 7,000 தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக எங்களுக்கு ஆதாரங்களுடன் செய்தி கிடைத்துள்ளது. 2006-ம் ஆண்டு மூன்றில் ஒரு பங்கு வாழ்ந்த ஓர் இனம்... இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குத்தான் இருக்கிறது என்றால் அது இனப் படுகொலை இல்லாமல் வேறென்ன?

ப்ரஸ்ஸல்ஸ் (Brussels) நாட்டின் International Crisis Group, எங்களுக்கு அளித்த தகவல்படி, இலங்கை இராணுவம், தமிழர்களை 'No fire zone' இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களின் கையைக் கட்டிப்போட்டுச் சுட்டுக் கொன்றது உறுதியாகி உள்ளது.

ரஷ்யாவும், சீனாவும் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கிவரும் நிலையில், தேவைப்பட்டால் அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும்...'' என்கிறது.

சிங்களப் படையினர் மனிதநேயமற்ற எவ்வித செயல்களிலும் ஈடுபடவில்லை என்றும், தங்களது ஒவ்வொரு முடிவும் தமிழர்களின் அக்கறையை மனதில்கொண்டுதான் எடுக்கப்பட்டது என்றும் ராஜபக்ஷ கூறி வருகிறார். ஆனால், சிங்களப் படையினர் அப்பாவித் தமிழர்களின் உடம்பைத் தோட்டாக்களால் துளைத்தும், தமிழ்த் தாய்மார்களிடம் அத்துமீறி நடந்துகொண்டதும் வீடியோ வடிவில் பல இணைய தளங்களில் உலவுவது ராஜபக்ஷவுக்கு எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றியது போல் இருக்கிறது!

ஆனால், எப்போதும் தன்னை உத்தமராகவே காட்டிக்கொள்ளும் ராஜபக்ஷ கடந்த வாரம் விடுத்த அறிக்கையில், 'நான் எனது படை வீரர்களுக்கு ஒரு கையில் துப்பாக்கியையும், இன்னொரு கையில் மனித உரிமை ஆணையத்தின் ஆவணங்களையும் எடுத்துச் செல்லுமாறுதான் கூறுவேன். அப்படிப்பட்டவர்கள் அத்துமீறி ஓர் அப்பாவித் தமிழனின் உயிரையும் பறித்திருக்க மாட்டார்கள்!' என்று கூசாமல் சொல்லி இருக்கிறார்.

ஜூலை முதல் தேதியில் இருந்து தொடங்கும் ஐ.நா. சபையின் விசாரணை, சரியாக நான்கு மாதங்களில் முடிந்துவிடும் என்று உத்தரவாதம் அளித்துள்ளார் குழுவின் தலைவர் மர்ஸுகி தருஸ்மான். அதில், ராஜபக்ஷவின் போர்க் குற்றங்கள் நிரூபணமானால், அவருக்குத் தண்டனை... கிடைக்க வேண்டும்... கிடைக்குமா?

- சிங்கப்பூரிலிருந்து ஏ.ஆதித்யன்

Saturday, April 24, 2010

ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வது இலங்கையின் கைகளிலேயே தங்கியுள்ளது – ஐரோப்பிய ஒன்றியம்

ஜீ.எஸ்.பி வரிச் சலுகைத் திட்டத்தை மீண்டும் நீட்டிப்பது இலங்கையின் கைகளிலேயே தங்கியிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டி மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாற்றிய போது, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைப் பிரதிநிதி பேர்னாட் செவாஜ் இதனைக் குறிப்பிட்டுள்ளர்ர்.

யுத்தம் காரணமாக வடக்கில் பாதிப்புக்களை எதிர்நோக்கி வரும் மக்களுக்கான உதவிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் முக்கிய மனித உரிமைப் பிரகடனங்களை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்யத் தவறியுள்ளதெனக் குறிப்பிடப்படுகிறது.