Showing posts with label சுவிஸ். Show all posts
Showing posts with label சுவிஸ். Show all posts

Monday, March 19, 2012

ஐ.நா. தீர்மானம் இந்தியா ஆதரவு - மார்ச் 23 - போராட்டம் நிறுத்திவைக்கப்படுகிறது-பழ. நெடுமாறன் அறிவிப்பு

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கமும் மற்றும் தமிழக அரசியல் கட்சிகளும் இணைந்து ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கை அரசுக்கு எதிரான போர்க் குற்றத் தீர்மானம் முன்மொழியப்படும் மார்ச் 23ஆம் தேதியன்று தமிழகம் தழுவிய அளவில் வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

ஆனால் இந்திய அரசு இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. அதை நாங்கள் வரவேற்று நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

அதே வேளையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவில் இன அழிப்புப் போர்க் குற்றத்திற்காக இராசபக்சே அரசாங்கத்தின் மீது சர்வதேச விசாரணைக் குழுவின் நேரடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றத் திருத்தத்துடன் இந்தியா இத்தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என தமிழக மக்கள் சார்பில் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

23ஆம் தேதியன்று நடத்தப்படவிருந்த போராட்டம் நிறுத்திவைக்கப்படுகிறது. இப்போராட்டத்திற்கு ஆதரவுதர முன்வந்த அனைத்துக்கட்சிகள், அனைத்துத் தமிழ் அமைப்புகள், வணிகர் சங்க பேரவை மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகிய அனைத்திற்கும் பொது மக்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

( பழ. நெடுமாறன் )
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

Friday, April 22, 2011

சுவிஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் விடுதலை

சுவிட்சர்லாந்து பொலிஸாரால் கடந்த ஜனவரி 11ஆம் திகதி கைது செய்யப்பட்ட சுவிஸ் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களான குலம் என்று அழைக்கப்படும் செல்லையா குலசேகரம், அப்துல்லா என்று அழைக்கப்படும் செல்லையா ஜெயபாலன் உட்பட கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் சுவிஸ் செயற்பாட்டாளர்களாக இருந்த 10 பேர் சுவிஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் தற்போதைய விடுதலைப் புலிகள் அமைப்பின் சுவிஸ் பொறுப்பாளரான ரகுபதி என்று அழைக்கப்படும் விஜயரத்தினம் சிவநேசன் உட்பட ஏனையோர் விசாரணையின் பின்னர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

அப்துல்லா மற்றும் குலம் ஆகியோர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவர்களும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Wednesday, February 16, 2011

தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளையின் செயற்பாட்டாளர்கள் 8பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் -சுவிஸ் பொலிஸ்

இலங்கை அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகவும், அவர்களோடு சேர்ந்து இயங்கும் சில குழுக்களும் சுவிஸில் உள்ள சில பொது மக்களைத் தூண்டி, தமிழீழ செயல்பாட்டாளர்கள் மீது வழக்குகளைப் போடவைத்தது. இதன் காரணமாக கடந்த ஜனவரி மாதம் சுவிஸில் சுமார் 10 செயல்பாட்டாளர்களை சுவிஸ் பொலிசார் கைதுசெய்தனர். புலிகளுக்கு காசு சேர்த்ததாக அவர்கள் மீது வழக்கும் தொடுத்து இருந்தனர். ஆனால் அவர்களில் கணிசமானவர்கள் இம் மாத ஆரம்பப் பகுதியில் விடுவிக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாது நேற்றைய தினம் மேலும் ஒரு நபர் விடுவிக்கப்படுள்ளார்.

இதனை அடுத்து சுவிஸ் பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட 10பேரில் 8பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. போலியான புகார்களின் பேரில் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக தற்போது பொலிசார் ஒப்புக்கொள்கின்றனர். அத்தோடு அவர்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு போதிய சாட்சிகள் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசோ சுவிஸில் கைதுசெய்யப்பட்ட 10 செயல்பாட்டாளர்களால் புலிகளின் சர்வதேச வலையமைப்புக்கு நல்ல அடி விழுந்துள்ளதாகத் தெரிவித்து ஆனந்தக் கூத்தாடியது..

ஆனால் தற்போது கிடைக்கும் செய்திகள் இலங்கை அரசுக்கு மீண்டும் முகத்தில் கரிபூசும் செயலாகவே அமைந்துள்ளது. அத்தோடு புலம்பெயர் மக்கள் மனதில் ஒரு உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி, தமிழீழ செயல்பாட்டாளர்களை முடக்கவும் இலங்கை அரசு பகீரத பிரயத்தனம் மேற்கொண்டிருந்தது. ஆனால் அவையாவும் பலன் அளிக்காமல் போயுள்ளது, குறிப்பிடத்தக்க விடையமாகும். சுவிஸ் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு தற்போது விடுதலைசெய்யப்பட்டுள்ளவர்களைப் பார்க்கும்போது தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் உச்சாகம் ஏற்பட்டுள்ளதை அறியமுடிவதாக சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Friday, January 14, 2011

சுவிஷ் செயற்பாட்டாளர்களின் விடுதலைக்காய் விரைந்து செயற்படுவோம்…

நீங்கள் ஸ்ரீலங்கா போனால் பிரச்சனை வரும் என்று அஞ்ச வேண்டாம். மனம் திறந்து உண்மையை கூறுங்கள்.சுவிஷ் செயற்பாட்டாளர்களின் விடுதலைக்காய் விரைந்து செயற்படுவோம்…

(13.01.2011) சுவிஸ் அரச குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருடன் தொடர்புகொண்டு பேசியதன் அடிப்படையில். இப்போது நடைபெற்று வரும் வழக்கு சுவிஸ் நாட்டின் சட்டத்தை மீறிய குற்றங்களின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. எனவே சாட்சியம் அளிக்க விரும்புவோர் எந்த வித அச்சமும் இன்றி தாராளமாக முன்வந்து உண்மையான விபரங்களை கூறலாம். நீங்கள் ஸ்ரீலங்கா போனால் பிரச்சனை வரும் என்று அஞ்ச வேண்டாம். இது எந்த வித அரசியல் பின்னணியுமற்ற விசாரணை. எனவே நீங்கள் கூறும் தகவல்கள் எதுவும் ஸ்ரீலங்கா அரசுக்கு எக்காலத்திலும் தெரியப்படுத்தப்பட மாட்டாது. நீங்கள் எதற்கும் அஞ்சாமல் மனம் திறந்து உண்மையை கூறுங்கள்.

செயற்பாட்டாளர்களின் விடுதலைக்காய் விரைந்து செயற்படுவோம்…

சுவிசில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த விசாரணைக்கு பொது மக்கள் தமது தரப்பு வாதங்களை தெரிவிக்கும் வகையில் 0800 10 20 60 என்ற இலவச தொலைபேசி இலக்கம் ஒன்றினை சுவிஸ் பாராளுமன்ற வழக்கறிஞர் சபையினர் வெளியிட்டுள்ளனர்.

எனவே தமிழ் மக்களாகிய நாம் 0800 10 20 60 இந்த இலக்கத்துக்கு தொடர்புகொண்டு நாம் எந்த காலகட்டத்திலும் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் மிரட்டப்படவோ, கட்டாயப்படுத்தப்படவோ இல்லை என்பதையும், நாம் எமது சுய விருப்பத்தின் பேரிலேயே பணம் வழங்கினோம் என்ற உண்மையை தெரியப்படுத்துவோம்.

http://www.eeladhesam.com/