Showing posts with label சிறீலங்காவின் 7வது நாடாளுமன்ற தேர்தல். Show all posts
Showing posts with label சிறீலங்காவின் 7வது நாடாளுமன்ற தேர்தல். Show all posts

Wednesday, April 21, 2010

புதிய நாடாளுமன்றத்துக்கான தேசிய பட்டியல் உறுப்பினர்கள் விபரம் வெளியீடு. மனோ கணேசன் வெளியேற்றம்! கருணாவுக்கு இடம் கிடைத்தது

இலங்கையில் 2010 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தல் நிறைவடைந்துள்ளது. இந்தநிலையில் ஒவ்வொரு கட்சிகளினதும் தேசிய பட்டியல் பெயர் விபரங்கள் இன்றைய தினம் தேர்தல்கள் ஆணையாளருக்கு கையளிக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் இலங்கை தமிழரசுக்கட்சி சட்டத்தரணியான எம் ஏ சுமேந்திரனை தமது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்துள்ளது

தேசிய ஐக்கிய முன்னணியின் சார்பில் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் திரான் அலஸ் ஆகியோர் தேசியப்பட்டியலின் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப்பட்டியலில்

திஸ்ஸ அத்தநாயக்க
ஜோசப் மைக்கல் பெரேரா
எரான் விக்கிரமரத்ன
ஹர்சத டி சில்வா
டி எம் சுவாமிநாதன்
ஆர் யோகராஜன்
அனோமா கமகே
மொஹமட் ஹசன் அலி
மொஹமட் அஸ்லம் மொகமட் சலிம் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை எமது செய்திசேவைக்கு கிடைத்த தகவலின்படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப்பட்டியலில்

டி எம் ஜயரட்ன.
ரட்ணசிறி விக்கிரமநாயக்க
டலஸ் அழகப்பெரும
ஜி எல் பீரிஸ்
டியு குணசேகர
கீதாஞ்சன குணவர்த்தன
கமலா ரணதுங்க
ஏ எச் எம் அஸ்வர்
மாலினி பொன்சேகா
முத்து சிவலிங்கம்
எல்லாவெல மேதாநந்த தேரர்
அத்துல ஜாகொட
விநாயகமூர்த்தி முரளிதரன்
சூரியபெரும ஜானக
பிரியந்த பண்டார
ரஜீவ் விஜேசிங்க
திஸ்ஸ விதாரண ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

Friday, April 09, 2010

யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஐவர் தெரிவு!

நடைபெற்று முடிந்த சிறீலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் .மாவட்டத்தில் இருந்து ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மாவை சேனாதிராசா , சுரேஷ் பிறேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, ஈ.சரவணபவன், சிவஞானம் சிறீதரன் ஆகியோரே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் தெரிவு தொடர்பிலான உத்தியோக பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பு யாழ். தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் யாழ்.மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி ஆணையாளர் கே.கணேஷ் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் ஆணையாளரினால் முடிவுகள் அறிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கிஸ்தர் சுரேஸ் பிறேமச்சந்திரன் பத்திரிகையாளர் மத்தியில் உரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில் தேர்தல் நடவடிக்கைகளில் ஒத்துளைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த சுரேஷ் பிறேமச்சந்திரன் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டினார்

பாதிக்கப்பட்ட மக்களை உள்ளடக்கிய கிளிநொச்சி மாவட்ட மக்கள் தேர்தலில் வாக்களிக்க முழுமையாக அனுமதிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர் இது குறித்து தேர்தல் தெரிவத்தாட்சி ஆணையாளரும் உதவித் தெரிவத்தாட்சி ஆணையாளரும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணத்தில் கூட சட்டவிரோமான செயற்பாடுகள் பலவும் இடம்பெற்றதாகத் தெரிவித்த அவர் தேர்தல் சட்டங்களுக்கு முரணான பல சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் அவற்றைத் தடுக்க காவல்துறையினர் முயற்சிக்கவில்லை. அல்லது முயற்சிக்கப்பட்டு அது கைகூடவில்லை.

இவ்வாறான முறைகேடுகள் எதிர்காலத்தில் நடைபெறாது இருக்கவும் மக்கள் ஜனநாயக முறையிலான தேர்தலில் பங்களிக்க எதிர்வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தத் தேர்தல் ஓரளவு சுமுகமாக நடைபெற ஒத்துழைத்த அனைவருக்கும் எமது நன்றிகள் என்றும் சுரேஸ் பிறேமசந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அதன் கொள்கைகளையும் தமிழ் மக்கள் ஆதரித்துள்ளனர்: இரா.சம்பந்தன்

எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் தெரிவித்த கொள்கைகளை ஆதரித்து தமிழ் மக்கள் கூடுதலாக வாக்களித்துள்ளார்கள். வேறு எந்தத்தமிழ்க்கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் சிறிதளவு கூட வாக்களிக்கவில்லை.

தமிழ் மக்கள் மிகவும் கூடுதலான அளவில் ஏகோபித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அதன் கொள்கைகளையும் ஆதரிக்கின்றனர் என்பது இத்தேர்தல் மூலம் வெளிப்படுத்தப்படடுள்ளது.தமிழ் மக்கள் சார்பில் ஆக்கபூர்வமாக நிதானமாக செயல்படக்கூடிய ஒரே கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதை தமிழ் மக்கள் இத்தேர்தல் மூலம் தெளிவாக்கியுள்ளனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கணிசமான அளவு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெறிறியடைந்துள்ளது சில பல காரணங்களின் நிமித்தம் விசேடமாக அரசாங்கத்தின் சில செயல்பாடுகளின் நிமித்தம் எமது வெற்றியின் தரம் ஒரு சிறிய அளவில் குறைவுபட்டிருக்கலாம். ஆனால் அந்த வெறிறியின் பின்னால் உள்ள நியாயத்தை அரசாங்கத்தின் செயல்பாடுகள் மழுங்கடிக்கமுடியாது.

நாம் சற்று மேலதிகமாக ஆசனங்களை எதிர்பார்த்திருந்த போதிலும் கூட தேர்தல் முடிவுகள் எமக்கு திருப்தியளிக்கவில்லை என்று கூறமுடியாது.

பொறுப்பற்ற முறையில் சில கட்சிகள் தேர்தலுக்கு முன்பாக செயல்பட்ட காரணத்தின் நிமித்தமும் பல்வேறு கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும் தேர்தல் களத்தில் இற்க்கப்பட்ட காரணத்தின் நிமித்தமும் தேவையற்ற குழப்பம் எமது மக்களின் சிந்தனையில் ஏற்படுவதற்கு வழிவகுத்தது. இந்தக் குழப்பநிலை ஏற்பட்டிருக்காவிட்டால் மக்களின் வாக்களிப்பு எமது சார்பாக மேலும் அதிகரித்து இருக்கலாம். ஆதன்மூலம் எமது ஆசனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கலாம்.

ஆனால் இக்கட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும் மக்களால் முழுமையாக நிராகரிக்க்பட்டு, இன்றைக்கு எமது மக்கள் மத்தியில் செல்லாக்காசாக தோற்றமளிக்கின்றன. இவ்ரகள் தற்போது உண்மையை உணர்ந்து மக்களின் நலன் கருதி தங்களுடைய செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எமது எதிர்கால செயல்பாடுகள் குறித்து தெளிவாக விளக்கியிருக்கின்றோம். ஒரு அரசியல் தீர்வை நிதானமான முறையில் எட்டுவது எமது முக்கியமான பொறுப்பு என கருதுகின்றோம். இதனையே எமது மக்களும் எதிர்ப்பார்க்கின்றனர் என்பதில் எவ்வித ஐயமும் இருக்கமுடியாது.

எமது லட்சக்கணக்கான மக்களின் உடனடித்தேவைகள் குறித்து திருப்திகரமான செயல்பாட்டை மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர் என்பது நாம் எல்லோரும் அறிந்த விடயம். இவ்விடயங்கள் சம்பந்தமாக திட்டங்கள் தீட்டி ஆக்கபூர்வமான முறையில் நாம் செயல்படுவோம். எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு விரைவில் கூடி இவ்விடயங்கள் சம்பந்தமாக முடிவு எடுக்கும்.

புலம்பெயர் தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் வாழுகின்ற தமிழ் மக்களுடைய எதிர்காலத்திற்கு பாரிய பங்களிப்பை செய்யக்கூடியவர்கள் என்பதை உணருகின்றோம்., ஏற்றுக்கொள்ளுகின்றோம். அவர்களுடன் எமக்கு தொடர்பு உண்டு. எமது தொடர்புகள் நீடிக்க வேண்டும், வலுப்பெற வேண்டும். எமது மக்களுடைய எதிர்கால பலத்திற்காக இவை பயன்படுத்தப்பட வேண்டும். அதை அடைவதற்காக நாம் அனைவரும் ஒருமித்து செயற்பட வேண்டும். இந்த நிலைமை தாமதமின்றி ஏற்படுவதை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

எவருடைய சுதந்திரத்தையும் எவராலும் கட்டுப்படுத்த முடியாது என்று நாம் உணருகின்றோம்.

''ஊடகங்களின் பிரசாரப்போக்கு''- டக்ளஸ் சாடல்

நாடாளுமன்றத் தேர்தலில் தமக்கு கிடைத்துள்ள வெற்றி போதுமானதாக இல்லாவிட்டாலும் மக்களின் அரசியல் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காக குரல்கொடுப்பதற்கு மக்கள் கொடுத்துள்ள ஆதரவாகவே இதனைக் கருதுவதாக ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அரச ஆதரவும் பின்புலமும் ஈ.பி.டி.பி வேட்பாளர்களுக்கு இருந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களுடன் யாழ் மாவட்டத்தில் வெற்றி பெற்றுள்ளதே என்று டக்ளஸிடம் கேட்கப்பட்டதற்கு பதிலளித்த அவர், மக்கள் சுதந்திரமாக சிந்திக்கக்கூடிய தருணத்தில் தற்போது உள்ள போதிலும் தமக்கெதிராக ஊடகங்களில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்களே தமது கருத்துக்கள் சென்றடைவதை தடுத்துள்ளதாக கூறினார்.

முன்னர் ஒரு ஆசனத்துடன் இருந்த தாம் தற்போது மூன்று ஆசனங்களுடன் மக்களின் அரசியல் பிரச்சனைகளுக்காக பணியாற்ற முடியும் என்று யாழ் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ள டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைக்கு நடைமுறை சாத்தியமான தீர்வைப் பெற்றுத்தர முயற்சிக்கவுள்ளதாகவும் ஈ.பி.டி.பி தலைவர் BBC தமிழோசையிடம் தெரிவித்தார்.

மக்கள் கொடுக்கும் அங்கீகாரத்துக்கு ஏற்ப ஜனாதிபதியுடன் கலந்துரையாடி மக்களுக்கான அரசியல் உரிமையை மிக விரைவில் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

பாராளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி, புளொட்,ஈரோஸ் உட்பட்ட தமிழ் அரசியல் கட்சிகள் படுதோல்வி!

இடம்பெற்று முடிந்த பாராளுமன்றத்திற்கான தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்(நாபா), ஈரோஸ் உட்பட போட்டியிட்ட சுயேட்சை குழுக்கள் என்பன வடகிழக்கில் படுதோல்வியடைந்துள்ளன.

மூத்த தமிழ்கட்சிகள் என்றும், ஆயுதம் தாங்காத அரசியல் கட்சி என்று பெருமை கூறிவந்த தமிழர் விடுதலை கூட்டணி, ஆயுதபோராட்டத்தில் ஈடுபட்டு ஜனநாயக வழிக்கு திரும்பியதாக கூறும் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் போன்ற கட்சிகளும் சுயேட்சை குழுக்களையும் மக்கள் நிராகரித்துள்ளதை தேர்தல் முடிவுகள் காண்பித்துள்ளன.

ராகலையில் கலவரம் : வாகனங்கள் எரிப்பு

நுவரெலிய மாவட்டம் ராகலை தேர்தல் தொகுதியில் தற்போது கலவரம் இடம்பெற்று வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ராகலை பிரதேசத்திற்குட்பட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்கள், ஜீப் வண்டிகள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

ராகலை ஆளுங்கட்சி வேட்பாளர் ஒருவரின் தலைமையின் கீழ் மேற்படி வன்முறைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2010 - 7வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி ரீதியான முடிவுகள்

2010 ஆண்டுக்கான 7வது இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு முடிவுகள் வெளியாகிக்கொண்டுள்ளன. தொகுதி ரீதியான முடிவுகள் உடனுக்குடன் கீழே பதிவு செய்யப்படும்

01. கொழும்பு மாவட்டம்
வடகொழும்பு தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.தே.மு - 30825
ஐ.ம.சு.கூ - 15976
ஜ.தே.கூ - 3226
மத்திய கொழும்பு தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.தே.மு - 51421
ஐ.ம.சு.கூ - 21794
ஜ.தே.கூ - 6243
பொரளை தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.தே.மு - 16421
ஐ.ம.சு.கூ - 13662
ஜ.தே.கூ - 3619
கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.தே.மு - 13056
ஐ.ம.சு.கூ - 5169
ஜ.தே.கூ - 1675


02. மாத்தறை மாவட்டம்
வெலிகம தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 29814
ஐ.தே.மு - 12482
ஜ.தே.கூ - 2812
அக்குரஸ்ஸ தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 30816
ஐ.தே.மு - 13196
ஜ.தே.கூ 3075
தெனியாய தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 30270
ஐ.தே.மு - 12737
ஜ.தே.கூ - 1960
ஹக்மன தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 33113
ஐ.தே.மு - 9971
ஜ.தே.கூ - 2212
மாத்தறை தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 24353
ஐ.தே.மு - 19875
ஜ.தே.கூ - 3624
தெவிநுவர தேர்தல் தொகுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 26177
ஐ.தே.மு - 9535
ஜ.தே.கூ - 3084
கம்புறுபிட்டிய தேர்தல் தொகுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 39394
ஐ.தே.மு - 13318
ஜ.தே.கூ - 3696
ஏனையவை - 403
மாத்தறை மாவட்டம்
தபால் மூல தேர்தல் முடிவு - இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 39394
ஐ.தே.மு - 13318
ஜ.தே.கூ - 3696
ஏனையவை - 403


03. கம்பஹா மாவட்டம்
தபால் மூல இறுதித் தேர்தல் முடிவு

ஐ.ம.சு.கூ - 21975
ஐ.தே.மு - 5892
ஜ.தே.கூ 2930
கம்பஹா மாவட்டம்
தொம்பே தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 46356
ஐ.தே.மு - 14185
ஜ.தே.கூ - 3709
அத்தனகல்ல தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 51172
ஐ.தே.மு - 15912
ஜ.தே.கூ - 5626
நீர்கொழும்பு தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 26076
ஐ.தே.மு - 23987
ஜ.தே.கூ - 3463
மினுவான்கொட தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 49033
ஐ.தே.மு - 19295
ஜ.தே.கூ - 5270
மஹார தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 55327
ஐ.தே.மு - 20387
ஜ.தே.கூ - 7027
பியகம தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ 41478
ஐ.தே.மு 20438
ஜ.தே.கூ 5089
களனி தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 30276
ஐ.தே.மு - 16479
ஜ.தே.கூ - 5322


04. காலி மாவட்டம்
ஹக்மீமன தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 31998
ஐ.தே.மு - 13062
ஜ.தே.கூ - 4026
பலபிட்டிய தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 17,374
ஐ.தே.மு - 7,295
ஜ.தே.கூ -1,899
பெத்தேகம தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 35,733
ஐ.தே.மு - 14,119
ஜ.தே.கூ - 2696
ரத்கம தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 28814
ஐ.தே.மு - 9729
ஜ.தே.கூ - 2821
ஹினிதும தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 40083
ஐ.தே.மு - 15616
ஜ.தே.கூ - 2717
கராந்தெனிய தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 27274
ஐ.தே.மு - 8688
ஜ.தே.கூ - 2022
பென்தர-எல்பிட்டிய தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 32926
ஐ.தே.மு - 12592
ஜ.தே.கூ - 2792
காலி தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 20348
ஐ.தே.மு - 14804
ஜ.தே.கூ - 5324
ஹபராதுவ தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 27660
ஐ.தே.மு - 10644
ஜ.தே.கூ - 2809
அம்பலாங்கொடை தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 26210
ஐ.தே.மு - 8926
ஜ.தே.கூ - 4180


05. புத்தளம் மாவட்டம்
தபால் மூல வாக்கெடுப்பு முடிவு

ஐ.ம.சு.கூ - 5499
ஐ.தே.மு - 1558
ஜ.தே.கூ - 407


06. இரத்தினபுரி மாவட்டம்
தபால் மூல தேர்தல் முடிவு

ஐ.ம.சு.கூ - 11315
ஐ.தே.மு - 3010
ஜ.தே.கூ - 696
ஏனையவை - 33
இரத்தினபுரி மாவட்டம்
கலவான தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ 26030
ஐ.தே.மு 8187
ஜ.தே.கூ 526
பெல்மதுல்ல தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 28453
ஐ.தே.மு - 14817
ஜ.தே.கூ - 704
கலவான தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 26030
ஐ.தே.மு - 8187
ஜ.தே.கூ - 526
எஹலியகொட தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 37329
ஐ.தே.மு - 14346
ஜ.தே.கூ - 1012


07. மட்டக்களப்பு மாவட்டம்
அஞ்சல் மூல வாக்களிப்பு

இலங்கை தமிழரசு கட்சி - 2576
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 2254
ஐக்கிய தேசிய முன்னணி - 671
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி - 318


08. யாழ்ப்பாண மாவட்டம்
உடுப்பிட்டி தேர்தல் தொகுதி இறுதி முடிவு

இலங்கை தமிழரசு கட்சி - 4630
ஐ.ம.சு.கூட்டமைப்பு - 2533
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 760
ஐ.தே.மு - 717
இடதுசாரி விடுதலை முன்னணி - 314
மானிப்பாய் தேர்தல் தொகுதி இறுதி முடிவு

இலங்கை தமிழரசு கட்சி - 7194
ஐ.ம.சு.கூ - 5643
ஐ.தே.மு - 1424
தமிழர் விடுதலைக் கூட்டணி - 473
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 397
வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி இறுதி முடிவு

இலங்கை தமிழரசு கட்சி - 5341
ஐ.தே.மு - 3438
ஐ.ம.சு.கூ - 3286
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 831
கோப்பாய் தேர்தல் தொகுதி இறுதி முடிவு

இலங்கை தமிழரசு கட்சி - 7467
ஐ.ம.சு.கூ - 4377
ஐ.தே.மு - 1122
சாவகச்சேரி தேர்தல் தொகுதி இறுதி முடிவு

இலங்கை தமிழரசு கட்சி - 7664
ஐ.ம.சு.கூ - 2777
ஐ.தே.மு - 1248
காங்கேசன்துறை தேர்தல் தொகுதி இறுதி முடிவு

இலங்கை தமிழரசுக் கட்சி - 5018
ஐ.ம.சு.கூ - 4518
ஐ.தே.மு - 584
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 337
ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 6441
இலங்கை தமிழரசுக் கட்சி - 1671
ஐ.தே.மு - 392
யாழ்ப்பாண மாவட்டம்
தபால் மூல வாக்கெடுப்பு இறுதி முடிவு

இலங்கை தமிழரசு கட்சி - 3813
ஐ.ம.சு.கூ - 1529
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 474
ஐ.தே.மு - 461


09. வன்னி மாவட்டம்
தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்

ஐ.ம.சு.கூ - 2128
இல.த.க. - 1507
ஐ.தே.க. - 354


10. திருகோணமலை மாவட்டம்
தபால் மூல வாக்கெடுப்பு இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 7487
ஐ.தே.மு - 2074
இலங்கை தமிழரசு கட்சி - 1306


11. மாத்தளை மாவட்டம்
அஞ்சல் மூல வாக்களிப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 9893
ஐக்கிய தேசிய முன்னணி - 2854
ஜனநாயக தேசிய கூட்டமைப்பு - 755
மாத்தளை மாவட்டம்
மாத்தளை தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 23734
ஐ.தே.மு - 14659
ஜ.தே.கூ - 1974
தம்புள்ள தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 42847
ஐ.தே.மு - 15080
ஜ.தே.கூ - 2645
லக்கல தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 27777
ஐ.தே.மு - 8478
ஜ.தே.கூ - 688
ரத்தோட்டை தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 26818
ஐ.தே.மு - 14666
ஜ.தே.கூ - 1574

12. குருணாகல் மாவட்டம்
ஹிரியால தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ -26911
ஐ.தே.மு -13181
ஜ.தே.கூ -1673
மாவத்தகம தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 28106
ஐ.தே.மு - 14569
ஐ.தே.மு - 1945
தொடங்கஸ்லந்தை தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ. - 20217
ஐ.தே.மு. - 12771
ஜ.தே.கூ. - 1245


13. பதுளை மாவட்டம்
வெலிமடை தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 19820
ஐ.தே.மு - 14070
சுயேட்சைக் குழு - 3221
ஹாலி எல தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ 21341
ஐ.தே.மு 11858
ஜ.தே.கூ 1544
பதுளை தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 18670
ஐ.தே.மு - 11314
ஜ.தே.கூ - 1655
பண்டாரவளை தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ 24188
ஐ.தே.மு 14803
ஜ.தே.கூ 2262
மஹியங்கனை தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 29903
ஐ.தே.மு - 14613
ஜ.தே.கூ - 2433
வியலுவ தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 16967
ஐ.தே.மு - 7046
ஜ.தே.கூ - 705
ஹப்புத்தளை தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 17197
ஐ.தே.மு - 11575
மலையக மக்கள் முன்னணி - 3829


14. நுவரெலியா மாவட்டம்
தபால் மூல வாக்கெடுப்பு இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 6672
ஐ.தே.மு - 2080
ஜ.தே.கூ - 394
மலையக மக்கள் முன்னணி - 40


15. ஹம்பாந்தோட்டை மாவட்டம்
தபால் மூல வாக்கெடுப்பு இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ 9280
ஐ.தே.மு 2789
ஜ.தே.கூ 1284
பெலியத்த தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 31330
ஐ.தே.மு - 12192
ஜ.தே.கூ - 3338
தங்கல்ல தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 46289
ஐ.தே.மு - 17174
ஜ.தே.கூ - 5449
திஸ்ஸமஹாரம தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 52058
ஐ.தே.மு - 33172
ஜ.தே.கூ - 5757


16. கண்டி மாவட்டம்
செங்கடல தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 21431
ஐ.தே.மு - 15411
ஜ.தே.கூ - 2965
மஹாநுவர தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.தே.மு - 10226
ஐ.ம.சு.கூ - 9187
ஜ.தே.கூ - 1454
கலகெதர தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 18198
ஐ.தே.மு - 8836
ஜ.தே.கூ - 1209

கண்டி மாவட்டம்
தபால்மூல வாக்களிப்பு இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 20408
ஐ.தே.மு - 6281
ஜ.தே.கூ - 1952

17. மொனராகலை மாவட்டம்
பிபிலே தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 28575
ஐ.தே.மு - 6172
ஜ.தே.கூ - 1610
மொனராகலை தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.தே.மு - 32315
ஐ.ம.சு.கூ - 8500
ஜ.தே.கூ - 2168


18. கேகாலை மாவட்டம்
தபால் மூல தேர்தல் முடிவு

ஐ.ம.சு.கூ - 16542
ஐ.தே.மு - 4400
ஜ.தே.கூ - 1342
கேகாலை மாவட்டம்
மாவனல்ல தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 26467
ஐ.தே.மு - 15476
ஜ.தே.கூ - 1544
கலிகமுவ தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 24552
ஐ.தே.மு - 9423
ஜ.தே.கூ - 1485
ரம்புக்கன தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 23317
ஐ.தே.மு - 9545
ஜ.தே.கூ - 1427
அரநாயக்க தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 19758
ஐ.தே.மு - 7396
ஜ.தே.கூ - 997

19. களுத்துறை மாவட்டம்
தபால் மூல இறுதி தேர்தல் முடிவு

ஐ.ம.சு.கூ - 14963
ஐ.தே.மு - 3935
ஜ.தே.கூ - 1783
களுத்துறை மாவட்டம்
புலத்சிங்கள தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 29522
ஐ.தே.மு - 11737
ஜ.தே.கூ - 1577
ஹொரணை தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 44136
ஐ.தே.மு - 16613
ஜ.தே.கூ - 4020

20. அனுராதபுர மாவட்டம்
தபால் மூல வாக்களிப்பு இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 28002
ஐ.தே.மு - 7224
ஜ.தே.கூ - 2133
அனுராதபுரம் மாவட்டம்
அனுராதபுரம் கிழக்கு தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 30497
ஐ.தே.மு - 11019
ஜ.தே.கூ - 4541

21. பொலனறுவை மாவட்டம்
மின்னேரிய தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 29597
ஐ.தே.மு - 8890
ஜ.தே.கூ - 2166
மெதிரிகிரிய தேர்தல் தொகுதி இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 26794
ஐ.தே.மு - 12572
ஜ.தே.கூ - 1199
பொலனறுவை மாவட்டம்
தபால் மூல வாக்கெடுப்பு முடிவு

ஐ.ம.சு.கூ10இ305
ஐ.தே.மு2இ691
ஜ.தே.கூ639
22. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டம்
தபால் மூல வாக்கெடுப்பு இறுதி முடிவு

ஐ.ம.சு.கூ - 11132
ஐ.தே.மு - 3115
இலங்கை தமிழரசுக் கட்சி - 713

திருகோணமலை தேர்தல் தொகுதி முடிவு வெளியடப்படுவது ஒத்திவைப்பு

திருகோணமலைக்கு வடக்கே உள்ள தமிழ்க்கிராமமான கும்புறுபிட்டியில் உள்ள வாக்களிப்பு நிலையம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த வாக்குபெட்டியிலிருந்து வாக்குச்சீட்டுக்களை ஒரு ஆயுதம் தாங்கிய கோஷ்டி வியாழன் மாலை களவாடிச்சென்ற சம்பவத்தை அடுத்து அங்கு இடம்பெற்ற வாக்களிப்பு ரத்துச்செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையாளர் முடிவு வரும் வரை திருகோணமலைத் தேர்தல் தொகுதியின் முடிவை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டது.

மற்ற இரண்டு தேர்தல் தொகுதிகளான மூதூர் மற்றும் சேருவில ஆகிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Thursday, April 08, 2010

2010 - 7வது நாடாளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு

2010 - 7வது நாடாளுமன்ற தேர்தலுக்கான மாவட்ட அஞ்சல் மூல வாக்களிப்பு பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.


புத்தளம் அஞ்சல் மூல வாக்களிப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 5 ஆயிரத்து 499 வாக்குகளை பெற்றுள்ளது..

ஐக்கிய தேசிய முன்னணி ஆயிரத்து 558 வாக்குகளை பெற்றுள்ளது.

ஜனநாயக தேசிய கூட்டமைப்பு 407 வாக்குகளைப் பெற்றுள்ளது.


மாத்தறை அஞ்சல் மூல வாக்களிப்பு

ஐ.ம.சு.கூ 39394

ஐ.தே.மு13318

ஜ.தே.கூ 3696

ஏனையவை 403
மட்டக்களப்பு அஞ்சல் மூல வாக்களிப்பு

இலங்கை தமிழரசு கட்சி 2 ஆயிரத்து 576 வாக்குகளை பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்ரிர கூட்டமைப்பு 2 ஆயிரத்து 254 வாக்குகளை பெற்றுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணி 671 வாக்குகளை பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 318 வாக்குகளை பெற்;றுள்ளது.

மாத்தளை அஞ்சல் மூல வாக்களிப்பு

இதன் படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 9 ஆயிரத்து 893 வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணி 2 ஆயிரத்து 854 வாக்குகளை பெற்றுள்ளது.

ஜனநாயக தேசிய கூட்டமைப்பு 755 வாக்குகளை பெற்றுள்ளது.

நுவரெலியா அஞ்சல் மூல வாக்களிப்பு

நுவரெலியா மாவட்ட தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1802 வாக்குகளினால் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்தத் தகவல்கள் இதுவரையில் உறுதிப்படுத்தப்பட்டவில்லை.

விரைவில் உத்தியோகபூர்வ தகவல்களை எதிர்பாருங்கள்........

இரத்தினபுரியில் மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டம்

இரத்தினபுரி மாவட்டத்தின் தபால்மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியதையடுத்து இரத்தினபுரி, இறக்குவானை, பலாங்கொடை உள்ளிட்ட நகரங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் தற்போது பட்டாசு கொளுத்தி கொண்டாடுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இரத்தினபுரி மாவட்ட தபால்மூல வாக்கெடுப்பு முடிவுகள்

ஐ.ம.சு.மு – 11,315 வாக்குகள்


ஐ.தே.க – 3,010 வாக்குகள்


ஜ.தே.கூ - 696 வாக்குகள்

யாழ்ப்பாண தொகுதிகளில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் தற்போதைய உத்தியோகபற்றற்ற நிலவரம்.

யாழ்ப்பாண மாவட்டம் மானிப்பாய் தேர்தல் தொகுதி பெறுபேறுகளின் படி தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 2272 ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 1587 வாக்குகளை பெற்றுள்ளதுடன் ஐக்கிய தேசிய முன்னணி 606 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

கோப்பாய் தேர்தல் தொகுதி தமிழ் தேசிய கூட்டமைப்பு 2619 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 1724 வாக்குகள்

வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 2100 வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 1996 வாக்குகளை பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 2053 வாக்குகளை பெற்றுள்ள அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 1035 வாக்குகளை பெற்றுள்ளது.

சாவகச்சேரி தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 2724 வாக்குகளை பெற்றுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 860 வாக்குகளை பெற்றுள்ளது.

கோண்டாவில் தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 2829 வாக்குகளை பெற்றுள்ளது.

இதனிடையே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 1554 வாக்குகளை பெற்றுள்ளது.

பல்வேறு தேர்தல் வன்முறைகளுடன் சிறீலங்காவின் 7வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது

பல்வேறு தேர்தல் வன்முறைகளுடன் சிறீலங்காவின் ஏழாவது நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றுள்ளது.

225 உறுப்பினர்களை கொண்ட சிறீலங்காவின் நாடாளுமன்றத்தில் 196 நாடாளுமன்ற உறுப்பினர்களை வாக்கு மூலமும் 29 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலமும் தெரிவு செய்வதற்காக ஒரு கோடியே நாற்பது இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இன்று வாக்களித்துள்ளார்கள்.

இன்நிலையில் பல்வேறுபட்ட தேர்தல் வன்முறைகளுடன் இன்றைய நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் ஓட்டுக்குழுவினரின் வன்முறைகளும் அடக்குமுறைகளுக்குள்ளும் மக்கள் வாக்களித்துள்ளார்கள்.

வடக்கின் யாழ்ப்பாணத்தில் சிறீலங்காப்படையினரின் ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகளுக்கு மத்தியில் மந்தகதியில் மக்கள் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்கான வசதிகள் எவையும் செய்துகொடுக்கப்படாமல் உரியவாக்களிப்பு நிலையத்திற்கு அழைத்துசெல்லப்படாமல் பல்வேறு மேசடிநிறைந்த வாக்களிப்பு நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக பன்னாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இவ்வாறு பல்வேறு கொலை துப்பாக்கிசூட்டு நிகழ்வுகள் வாக்கு மேசாடிகளுடன் சிறீலங்காவின் ஏழாவது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது இதன் பெறுபேறுகள் இன்று நள்ளிரவுடன் வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.