இறுதி போரின் போது, உலகின் மிகப்பெரிய அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையே தமது தோல்வியை ஒப்புக் கொண்ட நிலையில், அரசாங்கம் ஏன் இன்னும் முரண்டுபிடிக்கிறது என்று, இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹேய்ம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் நிறைடைந்த யுத்த காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாக கட்டமைப்பு முறையாக செயற்படவில்லை என்பதை, அதன் உள்ளக அறிக்கை நிரூபித்துள்ளது. இந்த நிலையில் அதனை ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் ஒப்பு கொண்டுள்ளார்.
ஆனால் இலங்கை அரசாங்கத்தின் மீதான மனித உரிமை மீறல்கள் அனைத்தும் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் ஏன் இன்னும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து வருகின்றனர்? என்று சொல்ஹேய்ம் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு தங்களின் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதன் ஊடாக, சர்வதேச நாடுகளுக்க தாங்கள் நிரபராதிகள் என்று காட்டிவிட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்சியான நிராகரிப்பு, இலங்கையை சர்வதேச விசாரணையை தள்ளும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நவநீதம்பிள்ளை அம்மையாரின் வாய் மூல அறிக்கை சமர்ப்பிக்கபபடுவதற்கு முன்னர் உரையைத் தாங்கிய பிரதிகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. ஐநாவின் மனித உரிமைகள் உதவி ஆணையாளரினால் இலங்கை தொடர்பான அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டது.
இதில் தான் இலங்கை சென்று வந்த நிலையில் தனது விஜயத்தின் போது இலங்கை அரசாங்கம் கையாண்ட முறை மிகவும் வருத்தமளிப்பதாகவும், தாம் சென்றிருந்த வேளை வெளிநாடுகளுக்கு காட்டுவதற்காக இராணுவக் குறைப்பு செய்ததுடன் வட-கிழக்கை விட்டு தாம் அகன்றதும் இராணுவம் மீண்டும் சென்றதை சுட்டிக்காட்டியுள்ளதுடன்,
சர்வதேச சமூகத்திற்கு பிரதான கடமை உண்டு சுயாதீன விசாரணை வேண்டும்.
இலங்கையில் சுயாதீனமான பொலிஸ்துறை இல்லை, தொடர்ந்தும் கட்டுப்பாடுகளுடன் இயங்கும் நிலை
காணாமல் போனவர்கள் வட-கிழக்கில் மட்டும் தான் ஆய்வு வெளி மாவட்டங்களுக்கு இல்லை,
ஐநா காணாமல் போனேர் அமைப்பு இலங்கை செல்ல அனுமதிக்க வேண்டும்,
2008--2012 வரை பாதுகாப்புத் தடைச் சட்டத்தில் 50 போர் வரை கைது,
மீள் குடியேற்றம் திருப்தியில்லை, 2008 க்கு முன்னர் இடம் பெயர்ந்தவர்கள் இன்னமும் அகதிகளாக,
திருமலை மாணவர் படுகொலை மற்றும் பிரான்ஸ் தொண்டு நிறுவன படுகொலைக்கு தீர்வில்லை,
சரணடைந்த விடுதலைப்புலிகள் 11758 நபர்கள் விடுதலையானதாகவும் 234 பேர் புனர்வாழ்வு, 98 பேருக்கு எதிராக வழக்கு,
வெலிகடை, வவுனியா மற்றும் இன்னும் பல படுகொலைகளுக்கு விசாரணை இல்லை, வெளிப்படைத்தன்மை காணப்பட வேண்டும்,
பௌத்த மதம் தவிர்ந்த ஏனைய மதங்கள் மீது அடக்கு முறை,
என இன்னும் பல விடயங்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது
இவைகள் பிரதான விடயமாக பார்க்கப்படுகிறது.
இவ் அறிக்கை வருவதனை அறிந்து கொண்ட இலங்கை அரச தரப்பு பிரதிநிதிகளின் பிரசன்னம் மிக மிக குறைவாக உள்ளமை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க வழமையான பாணியில் நவிபிள்ளையின் அறிக்கையினை நிராகரித்ததுடன், நாட்டில் இராணுவம் எந்தக் குற்றமும் செய்யவில்லை நாம் ஜனநாயகத்தை மதிக்கிறோம் என்பதற்கு வடமாகாண சபை தேர்தல் சிறந்த எடுத்துக்காட்டு எனக் கூறி அறிக்கையின் விடங்களை நியாயப்படுத்தி செல்ல முற்பட்ட வேளை சபைக்கு தலைமை தாங்கியவரால் உரை இடைநிறுத்தப்பட்டது. மேலும் உரையாற்ற முற்பட்ட வேளை அனுமதி மறுக்கப்பட்டது.
நவநீதம்பிள்ளை வெளியிட்ட அறிக்கையிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட சில விபரங்கள்!
போர் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு நம்பகமான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும், அதையும் மார்ச் மாதத்துக்குள் செய்யவேண்டும், அப்படி செய்யாவிட்டால் சர்வதேச சமூகம் தனியாக ஒரு விசாரணையை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று ஐநா மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் நவிபிள்ளை எச்சரித்துள்ளார்
ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் நவிபிள்ளை இலங்கைக்கு ஒரு வாரகால விஜயம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் கண்டதையும், கேட்டதையும், விசாரித்து அறிந்ததையும் அவரின் சார்பில், மனித உரிமைகள் பேரவையின் துணைத் தலைவர் வாயிலாக வாய்வழி அறிக்கையாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
போரின்போது பொதுமக்கள் தரப்புக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள், இராணுவம் விசாரணையின்றி சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டும் சனல் 4 வெளியிட்ட வீடியோ போன்றவை தொடர்பில் மனித உரிமைகள் பேரவை கவலை வெளியிட்டும் இது தொடர்பில் முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக தனக்குத் தெரியவில்லை என்று நவி பிள்ளை கூறியுள்ளார்.
குற்றச்சாட்டுகள் தொடர்பாக இராணுவமும், கடற்படையும் நடத்தும் விசாரணைகள் நம்பிக்கையை அளிப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
போர்க்குற்றங்கள் குறித்த தேசிய விசாரணைகள் நம்பகரமான முறையில் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் சர்வதேச சமூகம் தனியாக விசாரணை நடத்தும் பொறிமுறையை ஏற்படுத்த வேண்டிய கடமை இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்
விடுதலைப் புலிகள் தொடர்புடைய போர் குற்றங்களை முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று தான் தொடர்ந்து வலியுறுத்திவருவதாகவும் இது தொடர்பில் சம்மந்தப்பட்டோர் மீதான வழக்குகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும் ஐநா ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.
திருகோணமலை கொலை விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை
திருகோணமலை கடற்கரையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பில் சட்ட மா அதிபர் தன்னிடம் விளக்கமளித்தார் என்றும் இந்த வழக்கு விசாரணை தொடர்பில் தொழில்நுட்ப உதவிகளை அளிக்கத் தயாராக இருப்பதாக இலங்கை அரசிடம் தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏ.சி.எப் நிறுவனத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்ட வழக்கு உள்ளிட்ட பலவற்றில் முன்னேற்றம் இல்லாத நிலையையும் தாம் அவதானிப்பதாக நவி பிள்ளை தெரிவித்தார்.
இலங்கைக்கு சென்றபோது தான் சென்ற கிராமங்களுக்கு, தான் செல்வதற்கு முன்பும், பின்பும் காவல்துறையும் இராணுவமும் சென்றது என்று குறிப்பட்ட நவி பிள்ளை திருகோணமலையில் தன்னை சந்தித்தவர்கள் தன்னிடம் என்ன கூறினார்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட்டார்கள் என்றும் தெரிவித்தார். இது இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளியுறவுச் செயலரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது என்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்த செய்திகள் மீது ஐநா மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இலங்கையில் சட்டத்தின் ஆட்சியும், ஜனநாயக நிறுவனங்களும் மதிப்பிறக்கம் செய்யப்படுவது மற்றும் அருகிப்போவது குறித்து தான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக கூறிய நவி பிள்ளை, 17 ஆவது சட்ட திருத்தத்தை மீண்டும் கொண்டுவருவது மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நீதிமன்றம் மேலாய்வு செய்ய வழி செய்யப்பட வேண்டும் என்று படிப்பினைகள் ஆணைக்குழு தெரிவித்திருந்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
வட மாகாணத் தேர்தல் நடைபெற்றதை வரவேற்றுள்ள நவி பிள்ளை, 13 ஆவது சட்ட திருத்தம் அமல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று நம்புவதாகத் தெரிவித்தார் நவி பிள்ளை.
ராணுவப் பிரசன்னம் குறித்து கவலை
போர் முடிந்து நான்கு ஆண்டுகளான பிறகும் அங்கு காணப்படும் கணிசமான இராணுவப் பிரசன்னம் குறித்து ஐ நா ஆணையர் கவலை வெளியிட்டார்.
பெண்கள், சிறுமிகள் மற்றும் பலவீனமான நிலையில் இருக்கும் பெண்களின் தலைமையிலான வீடுகளில் இருக்கும் பெண்கள் இராணுவத்தால் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்க் ஆளாகக் கூடிய சூழல் குறித்து கவலை வெளியிட்ட நவி பிள்ளை, பாலியல் துஷ்பிரயோகங்களை அரசு கிஞ்சிதமும் சகிக்கக் கூடாது என்று அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
தனியார் நிலங்களை இராணுவத் தேவைகளுக்காக கட்டாயமாக கையகப்படுத்துவது குறித்த ஆவணங்கள் நவி பிள்ளைக்கு அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகணத்தில் சிவில் நிர்வாகத்திலும், பொருளாதார நடவடிக்கைகளிலும், கல்வி , விவசாயம், சுற்றுலா போன்ற துறைகளிலும் இராணுவத்தின் பங்களிப்பு அதிகம் காணப்படுவதாகவும் அவர் அவதானித்துள்ளார். சிவில் நிர்வாகத்துக்குட்பட்ட விடயங்களில் இருந்து இராணுவத்தை ஒரு காலவரைக்குள் விலக்கிக் கொள்ளுமாறு அரசிடம் நவி பிள்ளை தெரிவித்துள்ளார்.
கற்றறிந்த பாடங்கள் ஆணைக்குழு அளித்த பரிந்துரைகளில் கூடுதலாக 53 பரிந்துரைகளை அமல்படுத்த அரசு முன்வந்துள்ளதை பாராட்டியுள்ள மனித உரிமைகள் ஆணையர் அதே நேரம் அரசு இது தொடர்பில் ஒரு பொது விவாதத்தை நடத்தினால் அதனால் கூடுதல் பயன் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
காணாமல் போனோர் நிலை
காணமல் போனோர் நிலையும் இன்று முக்கிய இடத்தை பிடித்தது.
கடந்த 1990 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடையில் வடக்கிலும் கிழக்கிலும் காணாமல் போனோர் குறித்து விசாரிக்க அரசு ஒரு குழுவை அமைத்திருந்தாலும், போருக்குப் பிறகு கொழும்பிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் விசாரணை நடக்காது என்பதால் இந்த ஆணையத்தின் வரம்புகளை விரிவு படுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார். காணமல் போனோர் குறித்து அரசு முன்பு அமைத்த 5 ஆணையங்களால் பயனேதும் ஏற்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
காணமல் போனோர் தொடர்பிலான சர்வதேச ஒப்பந்தத்தை 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கைச்சாத்திடுவதன் மூலம் இது தொடர்பில் அரசுக்குள்ள உறுதிப்பாட்டை காட்ட முடியும் என்றும் காணமல் போனோர் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்த கடத்தி காணமல் போனோர் தொடர்பிலான ஐ நா நிபுணர் குழுவின் சேவைகளை அரசு பயன்படுத்திக் கொள்ளும் என்றும் தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் உள்நாட்டு ஆயுதப் போராட்டம் நிறைவடைந்ததன் பின்னர் நாட்டில் சுமுகமான ஜனநாயக சூழலை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் காணப்பட்ட போதிலும் தற்போது அவ்விடயங்களிலிருந்து தூரச் சென்று சா்வாதிகாரப் பாதையில் பயணிக்கும் வெளிப்பாடுகளும் சமிக்ஞைகளுமே காணப்படுகின்றன. குறிப்பாக இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உள ரீதியான முன்னேற்றங்களை இன்னும் அடையவில்லை என ஐநா சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார்
பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் உள ரீதியான முன்னேற்றம் காணபபடவில்லை.
சர்வதேச குற்றச்சாட்டுகள் குறித்த உள்ளக விசாரணையில் உண்மைத்தன்மை இல்லை.
போர்க்குற்றம் தொடர்பில் சுயாதீன விசாரணை இன்றேல் சர்வதேச விசாரணையைத் தவிர வேறு வழியில்லை.
பள்ளிவாசல், தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளமை குறித்து உரிய விசாரணை அவசியம்.
அரசியல் கைதிகள் தொடர்பில் அரசின் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமையவில்லை.
சா்வதேச குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான ஆக்கபூர்வமான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகவும், நம்பகத்தன்மையுடனும் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளை இராணுவமே விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பது எந்த வகையிலும் நியாயபூர்வமானதாகவோ, ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவோ அமையாது. ஏற்கனவே இலங்கைப் படைகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காணப்படுகையில் எமக்குச் சாட்சியமளித்த வடக்கு, கிழக்கு மக்களை அச்சுறுத்துவது மேலும் நிலைமையை மோசமடையவே செய்யும்.
ஆகவே மனித உரிமைகள் உள்ளிட்ட இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தேசிய ரீதியிலான சுயாதீனமானதும், வெளிப்படையானதுமான விசாரணைகள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் சர்வதேச விசாரணைகளைத் தவிர இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற உண்மைகளைக் கண்டறிய வேறு பொறிமுறைகள் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நாடு திரும்புவதற்கு முன்னர் இலங்கை விஜயம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று சனிக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள ஐநா அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே மனித உரிமைகள் ஆணையாளர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
மனித உரிமைகள் மதிப்பீட்டிற்கான உத்தியோகபூர்வ 7 நாள் விஜயத்தை இலங்கையில் நிறைவு செய்துள்ளேன். இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசின் உயர்மட்ட உறுப்பினர்கள், மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உட்பட சிவில் அமைப்புகள் போன்றவர்களுடன் விசேட சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தேன். அதேபோன்று பாதுகாப்புச் செயலாளர், பிரதம நீதியரசர், ஜனாதிபதியின் செயலாளர்ஹ உள்ளிட்டோரையும் சந்தித்தேன். மேலும் யுத்தம் இடம்பெற்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் விஜயம் செய்து அரச அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினேன். குறிப்பாக இறுதி யுத்தம் இடம்பெற்ற ப’குதிகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள பொதுமக்களையும் சந்தித்தேன்.
இச்சந்தர்ப்பத்தை எமக்கு வழங்கியமைக்காக இலங்கை அரசுக்கு நன்றி கூறுகின்றேன். இவ்வாறான நீண்ட நாள் விஜயமொன்றை எந்தவொரு நாட்டிலும் இதற்கு முன்னர் மேற்கொள்ளவில்லை. இலங்கையின் அனைத்து தரப்புகளிடமும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் உன்னிப்பாகக் கருத்துகளைக் கேட்டறிந்து கொண்டேன். இதன் பிரகாரம் எதிர்வரும் செப்படம்பர் மாதம் இடம்பெறவுள்ஹள ஜெனிவா அமர்வில் இலங்கை விஜயம் தொடர்பிலான அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்க உள்ளதுடன் மார்ச் மாதத்தில் முழுவளவிலான அறிக்கையினைச் சமர்ப்பிப்பேன்.
இலங்கையில் தற்போது கண்டறிந்து கொண்ட மனித உரிமைகள் நிலைவரங்களை இருவிதமாக இனங்கண்டுள்ளேன். கடந்த 27 வருட காலமாக இலங்கையில் காணப்பட்ட அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான ஆயுதப் போராட்டத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள மனித உரிமைகள் தொடர்பிலான சவால்கள் எவ்வாறு நாடளாவிய ரீதியில் எதிர்கொள்ளப்படுகிறது. சில உள்நாட்டு ஊடகங்கள், அமைச்சர்கள் மற்றும் குறிப்பிட்ட சில தரப்புக்கள் ஐநாவில் தமிழ் புலிகள் உள்ளதாக என்னைச் சுட்டிக்காட்டிக் கூறுகின்றன. இது கடந்த வாரத்திலும் எனது விஜயம் பற்றி சுட்டிக்காட்டிக் கூறப்பட்டது. இவ்வாறான பிரசாரத்தில் மூன்று அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர். நான் தென்னாபிரிக்கர் என்ற வகையில் பெருமையடைகின்றேன். அதேபோன்று விடுதலைப்புலிகள் கொலைகார அமைப்பு என்பதை உறுதி செய்து கொள்கிறேன். ஏனெனில் அவர்கள் பல்லாயிரம் உயிர்களை அழித்துள்ளனர். நீலன் திருச்செல்வத்தை1999ம் ஆண்டு யூலை மாதம் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் கொலை செய்தனர். இவ்வாறு இலங்கையர்கள் பலரும் கொல்லப்பட்டனர். இதனையிட்டு நான் கவலையடைவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ்வாறு உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்படவர்களை உள்நாட்டில் மேற்கொண்ட வடக்கு கிழக்கு விஜயத்தின் போது சந்தித்தேன். பலர் காணாமல் போயுள்ளனர். கொல்லப்பட்டும் உள்ளனர். மேலும் பலர் போரினால் கடுமையாக இழப்புக்களையும் சந்தித்துள்ளனர். இவற்றுக்கான சாட்சியங்களாக ஷெல் தாக்கப்பட்ட மரங்கள், அழிவடைந்த வீடுகள் என்பன முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் இன்னும் காணப்படுகின்றன.
உள்நாட்டு யுத்தத்தின் பின்னரான செயற்பாடுகளில் நல்லிணக்கத்துக்கு முன்னுரிமை கொடுத்து செயற்பட வேண்டிய அவசியம் காணப்பட்டது. இந்த நல்லிணக்கச் செயற்பாட்டை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஊடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள பலவேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வெளிப்படையான விசாரணைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக திருகோணமலை மாணவர்களின் கொலை, ஐநா தொண்டு ஊழியர்களின் கொலை போன்ற விடயங்களை வெளிப்படையாக விசாரணை செய்து அறிக்கைகளை சமா்ப்பித்திருக்க வேண்டும். ஆனால் அவை இன்னும் இடம்பெறவில்ல. அதேபோன்று நல்லிணக்க ஆணைக்குழுவில் பரிந்துரைக்ஹகப்பட்ட பல்வேறு முக்கியமான விடயங்கள் தொடர்பிலும் ன்னேற்றங்கள் காணப்படவில்லை.
மாறாக மேன்மேலும் மனித உரிமைகளுக்கு நெருக்கடியான சூழலே இலங்கையில் காணப்படுகின்றது. குறிப்பாக வடக்கில் இராணுவத்தை ஒரே இரவில் குறைக்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் என்னிடம் குறிப்பிட்டார். இதனைப் பல்வேறு பொறிமுறைகளை கையாண்டு படிப்படியாதகப் படைகளை வடக்கிலிருந்து குறைப்பதற்கான வழிமுறைகளை முன்னெடுக்கலாம். சிவில் நிர்வாகத்தில் இராணுவம் ஆதிக்கம் செலுத்துவது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்லஇ குறிப்பாக இராணுவத்துக்கு எதிராகக் காணப்படுகின்ற பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுக்கள் காணப்படுகையில் அவற்றை உரிய முறையில் விசாரணை செய்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்காதுள்ளமை பாதிக்கப்பட்ட மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளேயே தள்ளிவிடும்.
காணாமல் போனோர் விவகாரங்களில் தீர்வை எட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அண்மையில் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட காணாமல் போனோர் குறித்து ஆராய்வதற்கான குழு சிறந்த முன்னெடுப்பாகும். இருப்பினும் கடந்த காலத்தில் இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் நிலைவரங்கள் எத்தன்மை கொண்டது என்பதனை நாம் அறிவோம். ஆகவே வெறுமனே ஆணைக்குழுக்கள் அமைத்து பயனில்லை. காணாமல் போனோர் குறித்து எனது அறிக்கையில் முக்கிய பரிந்துரைகளை மேற்கொள்ளவுள்ளேன். ஐநா சபையில் காணப்படுகின்ற காணாமல் போனோர் விவகாரங்கள் தொடர்பிலான பிரிவுகளை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துவேன்.
இதனூடாக இலங்கை அரசாங்கம் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விசாரணைகளை மேற்கொள்ள முடிவதுடன் சா்வதேச காணாமல் போனோர் சாசன பொறிமுறைகளையும் கையாளக்கூடிய வகையிலும் அமையும். மேலும் இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை இராணுவமே விசாரணை செய்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அற்றுக்கு தேசிய அல்லது சர்வதேச ரீதியிலான விசாரணைகளே சாத்தியப்படும். அண்மையில் வெலிவேரியவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் அவசியமாகும். அதேபோன்று பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. இது குறித்தும் உரிய விசாரணைகள் மற்றும் பாதுகாப்பு பொறிமுறைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அரசியல் கைதிகள் விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் அமையவில்லை. இதனை நீதி அமைச்சருடனான சந்திப்பின் போதும் வினவினேன். அதற்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் பதிலளிக்கப்படவில்லை. ஆகவே சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உரிய நீதிதுறைசார் பொறிமுறையைக் கையாண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் யுத்தம் முடிந்து 4 வருட காலமாகியும் பயங்கரவாதச் சட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளது. இது ஏற்றுக்கொள்ளக் கூடியதொன்றல்ல.
2005ம் ஆண்டு தொடக்கம் இதுவரையில் சுமார் 30 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும், காணாமல் போயும் உள்ளனர். பல ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டும் உள்ளன. இவற்றிலிருந்து இலங்கையில் கருத்துச் சுதந்திரம் எந்தளவிற்கு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளது என்பது தெளிவுபடுகின்றது. இதனை சர்வதேச மனித உரிமைகள் சாசனங்கள் அனுமதிப்பதும் இல்லை. உள்நாட்டில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் ஜனநாயகம் முடக்கப்பட்டுள்ளது. 18வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் சுயாதீனமாக செயற்படக்கூடிய தேர்தல் மற்றும் மனித உரிமை போன்ற ஆணைக்குழுக்கள் சுயாதீனத் தன்மைகள் இழந்துள்ளன. குறிப்பாக முன்னாள் நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணைச் செயற்பாடுகளின் ஊடாக சுயாதீனமற்ற தன்மை வெளிப்பட்டது.
ஆகவே இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய போக்கு சர்வாதிகாரப் போக்காகவே காணப்படுகின்றது. உரிய வகையிலான பொறுப்புடைமைகளை பாதுகாத்துக் கொள்வதனையே இலங்கையிடம் ஐநா எதிர்பார்க்கின்றது எனக் கூறினார்.
மேலும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகள் சிலவற்றுக்டகுப் பதிலளிக்கையில்,
கேள்வி - விடுதலைப்புலிகள் மேற்கொண்ட வன்முறைகள் மற்றும் கொலைகள் தொடர்பில் வடக்கு கிழக்கில் சாட்சியங்களைப் பெற்றுக் கொண்டீர்களா?
பதில் - ஆம். மனித உரிமைகளை யார் மீறி இருந்தாலும் அதனை அனுமதிக்கும் நிலைப்பாட்டில் மனித உரிமைகள் என்ற வகையிலோ சாதாரண மனிதர் என்ற வகையிலோ அனுமதிக்க இயலாது. விடுதலைப்புலிள் செய்த மிகவும் மோசமான கொலைகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் நீலன் திருச்செல்வம் மீதான தற்கொலைத் தாக்குதலாகும்.
கேள்வி - பதவி நீக்கப்பட்டுள்ள முன்னாள் நீதியரசரை நீங்கள் சந்தித்துள்ளீர்களா?
பதில் - இல்லை. தற்போது பதவியிலுள்ள பிரதம நீதியரசரைச் சந்தித்’துப் பேசினேன்.
கேள்வி - இலங்கையில் போர்க்குற்றங்கள் என எதனை மையப்படுத்திக் கூறுகின்றீர்கள்?
பதில் - இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இறுதிக்காலப் பகுதியில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் குறித்து பல்வேறு சந்தேகங்களய் காணப்படுகின்றன. 2009ம் ஆண்டு யுத்தம் முடிந்தவுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனைச் சந்தித்ததன் பின்னர் நிபுணர் குழு அமைக்கப்பட்டு பல்வேறு விடயங்கள் தொடர்பில் விசாரணைக்கு வலியுறுத்தப்பட்டது.
இதில் சுட்டிக்காட்ப்பட்டுள்ள பல்வேறு விடயங்களில் மனித உரிமை மீறல்களும் போர்க்குற்றங்களும் முக்கியமானதாகும். இதற்குப் பின்னர் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளின் பிரகாரம் இ’துவரையில் கையாளப்பட்ட வழிமுறைகளே இன்னும் தொடர்கின்றன.
கேள்வி - காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் உங்களின் எதிர்காலச் செயற்பாடு என்ன?
பதில் - இலங்கையில் இதுவரையில் காணாமல் போனோர் குறித்து ஆக்கபூர்வமான வெளிப்பாடுகள் காணப்படவில்லை. இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏற்கனவே பல உறுதிமொழிகளையும் வழங்கியிருந்தார். ஆனால் அவை எதுவும் இதுவரையில் வெளிப்படவில்லை. ஆகவே காணாமல் போனோர் தொடர்பில் உரிய விசாரணைகள் தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்படாவிடின் சர்வதேச பொறிமுறை இன்றியமையாததாகும்.
கேள்வி - ஐநா மனித உரிமைகள் பேரவை பக்கச்சார்பாக செயற்படுவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக இலங்கை விடயத்தில் இந்நிலைவரம் மோசமாக உள்ளதாக ஜனாதிபதியும் கூறியுள்ளார். இது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில் - ஐநா சபை பக்கச்சார்பாக செயற்பட வேண்டிய தேவையில்லை. இலங்கைக்கு எதிரான 300 நிபந்தனைகள் பல நாடுகளினாலும் முன்வைக்கப்பட்டன. ஆகவே இலங்கை விடயத்தில் தனிப்பட்ட நோக்கத்துடன் நாம் செயற்படவில்லை என்பது வெளிப்படுகின்றது. அதேபோன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவை ஐநாவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டது.
கேள்வி - தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பில் சர்வதேச விசாரணைகள் தொடர்பில் வலியுறத்தப்படதாகக் கூறப்படுகின்றதே?
பதில் - தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உடனான சந்திப்பில் பல்வேறு விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன. குறிப்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையில் காணப்படுகின்ற 13வது திருத்தச்சட்டம் குறித்துப் பேசினோம். அதேபோன்று வடமாகாண சபைத் தேர்தல் முக்கியமான முன்னெடுப்பாகக் கருதுகின்றேன்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையை முன்னிட்டு வட பகுதியில் இரவோடு இரவாக அகற்றப்பட்ட இராணுவக் காவலரண்கள் மீண்டும் முளை விட ஆரம்பித்துள்ளன. அத்துடன் இராணுவத்தினரும் தமது வழமையான ரோந்து நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் ஆனையிறவுச் சோதனைச் சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவப் பதிவுகளும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வட பகுதிக்கு இரு நாள் பயணமாக வருகை தந்த நவநீதம்பிள்ளை, ஏ-9 பிரதான வீதியூடாக யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு சென்று பின் அங்கிருந்து ஏ-35 வீதியூடாக பரந்தனிலிருந்து முல்லைத்தீவுக்கு சென்றார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், கேப்பாபிலவு ஆகிய பிரதேசங்களுக்கு அவர் வீதியூடாகவே சென்றார்.நவநீதம்பிள்ளையின் இந்தப் பயணத்துக்காக கடந்த திங்கட்கிழமை இரவோடு இரவாக இராணுவ முகாம்கள், மினி முகாம்கள் என்பன அகற்றப்பட்டன. அத்துடன் சில இராணுவக் காவலரண்கள் உருமறைப்புச் செய்யப்பட்டிருந்தன.
ஐ.நா ஆணையாளர் பயணம் செய்த வேளையில் வீதிகளில் இராணுவத்தினர் கடமையிலிருக்கவில்லை. மாறாகப் பொலிஸாரே கடமையிலிருந்தனர். குறிப்பாக ஏ-35 வீதியில் உடையார்கட்டு காளிகோயிலடிப் பகுதியிலுள்ள காவலரண், வள்ளிபுனம் காவலரண், புதுமாத்தளன், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள காவலரண்கள் என்பன அகற்றப்பட்டுப் பின்னர் இப்போது மீண்டும் அமைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை நவநீதம்பிள்ளையைச் சந்தித்த புதுமாத்தளன் மக்கள், இராணுவம் உங்கள் வருகைக்காக முகாம்களை அகற்றியுள்ளது. அந்த முகாம்களுக்கு தாம் மீண்டும் வருவோம் என்று எம்மிடம் கூறிச் சென்றனர் எனச் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு ஒரு வாரகால உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களையும் எதிர்க்கட்சி தலைவரையும் சந்திததார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அலரி மாளிககையில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
எனினும் அவருடன் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
அதேவேளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் சந்தித்தார்.
போருக்கு பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் தொடர்பாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ மனித உரிமை ஆணையாளருக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.
அத்துடன் சர்வதேச சமூகம், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவியுடன் வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதனிடையே நவநீதம்பிள்ளை, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை கொழும்பு கேம்பிரிஜ் பிளேஸில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவது, நாட்டின் சட்டத்தின் ஆட்சியை கட்டியெழுப்புவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக சந்திப்பிற்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
அத்துடன் தற்போது நாடு எதிர்நோக்கி நெருக்கடியான சூழ்நிலை தொடர்பாகவும் ரணிலுக்கும், நவீபிள்ளைக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடினார்.
காணாமல்போனோர் விவகாரம் உட்பட யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆழமாகக் கவனம் செலுத்தி அவற்றுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க எனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துவேன். பாதிக்கப்பட்ட உங்களது ஆதங்கங்கள் எனக்கு புரிகின்றது என்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் மற்றும் கேப்பாப்பிலவு பகுதிகளுக்கு நேற்று விஜயம் செய்த நவநீதம்பிள்ளை அந்தப் பகுதி மக்களின் குறைபாடுகளை கேட்டறிந்துகொண்டார்.
மக்கள் அழுது புலம்பி, காணாமல் போன உறவுகளை மீட்டுத்தருமாறும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமக்கு அடிப்படை வசதிகளை செய்து தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இதன் போது அந்த மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையிலேயே நவநீதம்பிள்ளை மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் கருத்துத் தெரிவித்த அவர், நான் தூர தேசத்திலிருந்து உங்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகவே வந்துள்ளேன்.
காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் நான் நன்கு அறிந்துள்ளேன். இதேபோல் உங்களது ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும், ஆழமாக கவனம் செலுத்தி தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது.
இதனால் எனக்குள்ள அதிகாரங்கள் அனைத்தையும் பயன்படுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண முயற்சிப்பேன்.
ஐ.நா. நிறுவனங்கள் உதவிகள் வழங்கும் போது வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதலான உதவி கிடைப்பதற்கு நான் பரிந்துரை செய்வேன்.
காணாமல் போனோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில் வெள்ளிக்கிழமை அரசதரப்பினரை சந்திக்கும் போது அவர்களின் பதிலைக் கோருவேன்.
நாடு திரும்பியதும் ஐ.நா. மனித உரிமை பேரவையில் முன்னுரிமை கொடுத்து இந்த விடயங்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்வேன் என்று தெரிவித்தார்.
இதேபோல் கேப்பாப்பிலவு மக்கள் மத்தியில் குறைபாடுகளை கேட்டபின்னர் கருத்துத் தெரிவித்த நவநீதம்பிள்ளை, காணாமல் போனோரது உறவினர்களான நீங்கள் படும் துயரத்தை நான் புரிந்து கொண்டேன்.
ஜ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் மேற்படி இரு மாவட்டங்களிலும் படையினரை எங்கும் காணமுடியாத நிலை இன்று காணப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஏ-35வீதியூடாக அம்மையார் பயணித்திருந்த நிலையில் மேற்படி வீதியில் அமைக்கப்பட்டிருந்த காவலரண்கள் அனைத்தும் இன்று வெறுமையாக காணப்பட்டதுடன் சுதந்திரபுரம் பகுதியில் சூட்டுத் தவிர்ப்பு வலயமாக பிரகடனப்படுத்திவிட்டு படையினர் மக்கள் மீது தாக்குதல் நடத்திய இடத்திலிருந்த பெருமளவு வாகனங்களை முழுமையாக மறைக்கும் வகையில் உயரமான வேலிகள் போடப்பட்டுள்ளன.
இரட்டைவாய்க்கால் பகுதியிலும் இரணைப்பாலை மாத்தளன் செல்லும் வீதியிலும் கிடந்த யுத்த சாட்கிகள் மற்றும் பெருமளவு வாகனங்கள் ஒரு சில தினங்களுக்குள் முழுமையாக அகற்றப்பட்டதுடன் இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலம் என்ன பதாகைகளும் அகற்றப்பட்டு இப்பகுதியில் நிறைந்து கிடக்கும் இராணுவம் முழுமையாக இன்று அகற்றப்பட்டிருந்ததுடன் சில காவலரண்களுக்கு பச்சைஇலை தளைகளை வெட்டி வெளியாலே மூடியிருந்தமையினையும் காணக்கூடியதாக இருந்தது.
மேலும் ஆனையிறவு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வீதி சோதனைச்சாவடி முழுமையாக அகற்றப்பட்டிருந்தது.
எனினும் மக்கள் சந்திப்புக்களில் இராணுவத்தினர் சிவில் உடையில் மக்களோடு மக்களாக நின்று மக்கள் பேசுவதை ஒட்டுக்கேட்டுவந்த நிலையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றபோது இராணுவம் ஒட்டுக்கேட்கும் விடயம் அம்மையாருக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து அவர் மக்களை தனக்கு மிக அருகில் அழைத்து அவர்களுடைய பிரச்சினைகளை காதோடு காது வைத்தாற்போல் கேட்டறிந்ததுடன் அவ்வாறு பேசும்போது புகைப்படம் எடுப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் இராணுவம் அற்ற பிரதேசம் மிக சுதந்திரமான பிரதேசம் போன்று காட்சியளித்தது.
இலட்சக்கணக்கன ஈழத்தமிழர்களை ஈவு இரக்கமின்றிக் கோரமாகப் படுகொலை செய்த
சிங்கள பேரினவாத அரசுக்கு முப்படை ஆயுதங்களையும், வழங்கி, மற்ற அணு ஆயுத
வல்லரசுகளிடம் ஆயுதம் வாங்குவதவதற்கும் சிங்கள அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி
ரூபாய்களைத் தந்து தமிழ் இன அழிப்பு யுத்தத்தை நடத்திய இந்திய அரசு, நடைபெற்ற
தமிழ் இனக்கொலையின் கூட்டுக் குற்றவாளியாகும்.
குழந்தைகள், பெண்கள், வயது
முதிர்ந்தோர், களத்தில் ஆயுதம் ஏந்தாதோர் என அனைத்துத் தமிழர்களையும் சிங்கள அரசு,
உலகில் தடைசெய்யப்பட்ட குண்டுகளை வீசி 2008 ஆம் ஆண்டில் தொடக்கத்திலிருந்தே
தொடர்ந்து படுகொலையை நடத்தியபோது அதைத் தடுப்பதற்கோ வெளி உலகத்திற்கு உண்மை கொண்டு
வருவதற்கோ, ஐக்கிய நாடுகள் மன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிங்கள அரசின்
மிரட்டுலுக்குப் பயந்து ஐ.நா. மன்ற அதிகாரிகள் ஈழத்தமிழர்களைக் காக்கும் கடமையைச்
செய்யாமல் இலங்கையை விட்டு வெளியேறியது மன்னிக்கமுடியாத
குற்றமாகும்.
‘எங்களை இந்த அழிவில் தவிக்க விட்டுப் போய் விடாதீர்கள்’ என்று
தமிழர்கள் காலில் விழுந்து மன்றாடி இருக்கிறார்கள். மனித நேயத்தைக் காற்றில்
பறக்கவிட்டு ஐ.நா. அதிகாரிகள் வெளியேறியது மிகப் பெரிய தவறு என்று அப்போது வெளியேற
மறுத்த ஐ.நா அதிகாரி பென்சமின் டிக்ஸ் கூறியுள்ளார்.
இலங்கைத் தீவில் ஐ.நா.
மன்றத்தின் நடவடிக்கைகளை உள் ஆய்வு செய்த அதிகாரி சார்லஸ் பெட்ரி இறுதியாக
ஐ.நா.வுக்குத் தந்த அறிக்கையில் முக்கியமான 30 பக்கங்கள் நீக்கப்பட்டதாக வந்த
செய்தி அதிர்ச்சி தருகிறது. 2009 மே மாதம் வரையில் ஈழத்தமிழர்களைக் காக்கத் தவறிய
ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான் கீ மூன், 2010 ஜனவரி டப்ளின் தீர்ப்பாய
அறிக்கைக்குப் பின்னரே - மனித உரிமையில் கவலை கொண்டவர்கள் பல நாடுகளில் இருந்து
தங்கள் குமுறலைக் கொட்டிய பிறகே - 2010 ஜூன் 22 ஆம் தேதி இலங்கைத் தீவில்
நடந்தவற்றை அறிய மார்சுகி தருஸ்மான், ஸ்டீவன் ராட்னர், யாஸ்மின் சூக்கா ஆகிய மூவர்
குழுவை நியமித்தார். 2008 செப்டம்பரில் இருந்து 2009 மே 19 வரை நடைபெற்ற சம்பவங்களை
அம்மூவரும் ஆய்வு செய்தனர்.
இந்த அறிவிப்புக்கு சிங்கள அதிபர் ராஜபக்சே, சக
அமைச்சர் ஒருவரின் தலைமையில் பான் கீ மூனை இழிவுபடுத்தி போராட்டம் நடத்தினான்.
ஐ.நா. கொடிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. மார்சுகி தருஸ்மான் தலைமையிலான குழு
நடத்திய ஆய்வும், தந்த அறிக்கையும், உலகெங்கிலும் மனித நேயம் உள்ளோரை மனம் பதறச்
செய்தது. அந்த அறிக்கையிலேயே 1 லட்சத்து 37 ஆயிரம் தமிழர்கள் கோரமாகப் படுகொலை
செய்யப்பட்டனர் என்ற தகவலை ஊன்றி படித்தால் அறியலாம். ஆனால் உண்மையில் 3
இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
இலண்டன் சேனல் 4
வெளியிட்ட இசைப்ரியா கொலை செய்தியும், எட்டு ஈழத்தமிழ் இளைஞர்கள் நிர்வாணமாகக்
கண்களும் கைகளும் கட்டி இழுத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியும்
மூவர் அறிக்கையில் இடம்பெற்றன. ஈழத்தமிழர்களின் படுகொலை குறித்து அனைத்து
உண்மைகளையும் அறிய சுதந்திரமான ஒரு விசாரணை குழு அனைத்து நாடுகள் சார்பில்
அமைக்கப்பட வேண்டுமென்று மார்சுகி தருஸ்மான் மூவர் குழுவே ஐ.நா பொதுச்செயலாளருக்கு
அப்போதே பரிந்துரை செய்தது.
நெஞ்சை நடுங்க வைக்கும் ஈழத்தமிழர்கள் படுகொலை
குறித்த உண்மைகள் ஓரளவு வெளிவந்துள்ளன. 2009 ஆம் ஆண்டு ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை
கவுன்சிலில் சிங்கள அரசைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றிய படுபாதகச் செயலை இந்திய
அரசும், கியூபா அரசும் முன்னின்று நடத்தின. ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்குப்
பொருளாதார தடை விதித்த போது சிங்கள அதிபர் ராஜ பக்சேவை இந்தியாவுக்கு இரு முறை
அழைத்து வந்து வரவேற்பு கொடுத்து உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவ முயன்றது
காங்கிரஸ் தலைமையிலான இந்தியஅரசு.
உண்மைகளை முன்கூட்டி அறிகின்ற மதி
நுட்பத்தோடு தியாக தீபம் முத்துக்குமார் தனது மரணசாசனத்தில் ஈழத்தமிழர் படுகொலைக்கு
உடந்தையாக செயல்பட்ட துரோகிகளை அடையாளம் காட்டியதோடு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ
மூன் மீதும் சரியாக குற்றச்சாட்டை வைத்தார். ஈழத்தமிழரைப் படுகொலை செய்த சிங்கள
அரசுக்கு உடந்தையாக செயல்பட்டோரும், தமிழ்நாட்டுத் தமிழர்களை வஞ்சகமாக
ஏமாற்றியோரும் உள்ளிட்ட துரோகிகள் எல்லாம் ஈழத்தமிழர் உரிமைக்குக் குரல்
கொடுப்பதாகச் சொல்லும் மோசடி நாடகத்தின் முகத்திரையைக் காலம் கிழித்து
எறியும்.
உலகில் ஈழத்தமிழர்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்களே இல்லையா?
அவர்கள் நாதியற்றவர்களா? நானிலத்தில் அவர்களின் அபயக்குரல் எங்கும் கேட்கவில்லையா?
என்ற கேள்விகள் உலகெங்கிலும் மனசாட்சி உள்ள மனிதர்களை உலுக்க ஆரம்பித்து விட்டன.
எனவே சிங்களவர் நடத்திய இனக்கொலையைத் தடுக்கத் தவறிய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ
மூன் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
ஈழத்தமிழருக்கு இழைக்கப்பட்ட கற்பனை செய்ய முடியாத கொடுந்துயரம் குறித்து முழு
உண்மையைக் கண்டறியவும், இனகொலை புரிந்த ராஜ பக்சே கூட்டத்தைச் சர்வதேச குற்றவியல்
நீதிமன்றக் கூண்டில் நிறுத்தவும் ஒரு விசாரணை குழுவை முதலில் அனைத்து நாடுகள்
அமைக்க முன்வர வேண்டும். இந்த நிலையை உருவாக்க உலகெங்கும் உள்ள ஈழத்தமிழ்
சகோதர்களும், தமிழ் இன உணர்வாளர்களும், இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் குரல்
எழுப்ப வேண்டுகிறேன்.
‘தாயகம்’ வைகோ சென்னை - 8 பொதுச்
செயலாளர், 15.11.2012 மறுமலர்ச்சி தி.மு.க
ஐ.நா.சபை சிறீலங்காவில் விட்ட தவறுகளை, எதிர்வரும் காலங்களில்
மீண்டும் விடக்கூடாது என்ற உறுதியை வழங்க வேண்டும். சிறீலங்கா அரசு திட்டமிட்டே
போரை நடத்தியது. இதனால் போர் வலயத்தில் இடம்பெற்ற துன்பியல் சம்பவங்கள் வெளிவராது
போயின என்று சனல் 4 செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அவர்
விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை
சிறீலங்கா அரசு ஆரம்பிக்கும் போது, இந்த செயற்பாடுகளுக்கு சாட்சியங்களை இல்லாது
செய்யும் பணிகளையும் திட்டமிட்டு நடத்தியது. அதன் அடிப்படையிலேயே வடக்கில் இருந்து
ஊடகங்கள் முதற்கட்டமாக வெளியேற்றப்பட்டன.
சர்வதேச ஊடகங்களுக்கு அனுமதி
மறுக்கப்பட்டன. அதன்பின்னர் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும்
வெளியேற்றப்பட்டன.
இந்த நிலையிலேயே ஐக்கிய நாடுகள் சபையும் அங்கிருந்து
விலகிக் கொண்டது. இதன்மூலம் இறுதிப்போரின்போது பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள்
வெளிவராது போயின என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இனிவரும்
காலங்களில் இவ்வாறான தவறுகள் நடைபெறாதிருக்கவும், ஐக்கிய நாடுகள் மீதான நம்பிக்கை
பேணப்படவும், ஐக்கிய நாடுகள் சபை அதற்கு ஈடான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
என்றும் அவர் தனது அறிக்கையில் கேட்டுள்ளார்.
வன்னியில்
இடம்பெற்ற இறுதிப்போரில் 40 ஆயிரம் வரையிலான கொல்லப்பட்டுள்ள பின்புலத்தில் இந்த
உயிரிழப்புக்களைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபை தவறி விட்டது எனக்கூறும் ஐக்கிய
நாடுகள் சபையின் உள்ளக அறிக்கை ஒன்றை பி.பி.சி ஊடகம் பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செய்தி அறிக்கையின் தொகுப்பு இது:
பொதுமக்களின்
உயிரிழப்பைத் தடுக்கத் தவறியது மட்டுமன்றி, பொதுமக்களின் உயிரிழப்பின் எண்ணிக்கையை
சரியாக வெளியிடாமை, வன்னியில் இருந்த தனது பணியாளர்களை மீள அழைத்தமை போன்ற பல்வேறு
குற்றச்சாட்டுக்கள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இது பற்றிக்
குறிப்பிட்டுள்ள பி.பி.சியின் செய்தியாளர் 2009ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற
இறுதிப்போரில், போரில் ஈடுபட்ட இரு தரப்பும் போர்க்குற்றம் புரிந்திருப்பதாகக்
கூறுகின்றார். போரின்போது கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைக் காப்பாற்ற
கொழும்பில் இருந்த ஐ.நா பணியாளர்கள் தவறி இருப்பதாகவும் இந்த வரைபு அறிக்கையில்
இருப்பதாக இந்தச் செய்தியாளர் கூறுகின்றார்.
ஐக்கிய நாடுகள் விட்ட தவறு,
மீண்டும் இழைக்கப்படக் கூடாது என வலியுறுத்தும் இந்த உள்ளக வரைபு அறிக்கை, இறுதிப்
போரின்போது ஐக்கிய நாடுகள் சபை ஒரேயொரு அறிக்கை மட்டுமே வெளியிட்டது எனவும், ஐ.நா
பாதுகாப்புச் சபையில் இலங்கைப் போர் பற்றியோ, பொதுமக்களின் உயிரிழப்பைத் தடுப்பது
தொடர்பாகவோ எந்தவொரு கூட்டமும் நடத்தப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது.
அது மட்டுமன்றி, தொடர்ச்சியாக விடுதலைப் புலிகளை மட்டும் மனித உரிமை மீறல்
விடயத்தில், குற்றச்சாட்டிக் கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபை, சிறீலங்கா
அரசாங்கத்தின் பொறுப்ப பற்றி வாய் திறக்கவில்லை என்று கண்டிக்கின்றது. இந்தச்
செய்தியில் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பது:
இறுதிப் போரின்போது
வன்னியில் இருந்த ஐக்கிய நாடுகள் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாது என
சிறீலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது. இது பற்றி ஐ.நா இதுவரை சிறீலங்கா
அரசாங்கத்திடம் விளக்கம் கேட்கவில்லை. இது ஐ.நா விதிமுறைகளுக்கு மாறானது. அது
மட்டுமன்றி ஐ.நாவின் பொறுப்பு பற்றிய கேள்விகளுக்கும் வழிவகுத்துள்ளது. காணொளி
இணைப்பு:
மெனிக்பாம் முகாம் மூடப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை ஐ.நா பாராட்டி
வெளியிட்ட அறிக்கையை வாபஸ் பெறுவதாக ஐ.நாவின் துணைத் செயலாளர் நாயகம் அஜெய் சிப்பர்
தெரிவித்தார்.வவுனியா மெனிக்பாம் முகாமை அரசு மூடியதற்கு ஐ.நா வரவேற்று
அறிக்கைவிட்டது அறிந்ததே.
ஆனால் மெனிக்பாம் முகாம் மூடப்பட்டு முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களை வைத்து
சீனியாமோட்டை மற்றும் சூரிபுரம் காட்டுப் பகுதியில் புதிய முகாம்கள்
அமைக்கப்பட்டுள்ளன.இதனை ஐ.நா எதிர்க்காதது ஏன் என யாழ்ப்பாண சிவில் பாதுகாப்புக்
குழுவினர் கேள்வி எழுப்பினர்.
அந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள்கூட செய்துகொடுக்கப்படவில்லை எனவும் அவர்கள்
தெரியப்படுத்தினர்.இதனைக் கேட்டறிந்த ஐ.நா. துணைச் செயலர் தாம் இலங்கையரசை பாராட்டி
வெளியிட்ட அறிக்கையை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால்
கொண்டு வரப்பட்ட பிரேரணையின்போது இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்த நாடுகளுள்
நான்கு நாடுகள், மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.
சுழற்சி முறையில் வழங்கப்படுகின்ற இந்த உறுப்புரிமை, குறித்த நாடுகளிடம் இருந்து
மீளப்பெறப்பட்டு மேலும் நான்கு நாடுகளுக்கு வழங்கப்படவுள்ளன.
இதன்படி, இலங்கைக்கு
பெரிதும் ஆதரவை வெளியிட்டு வந்த சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் அடுத்த மாநாட்டில்
வாக்களிக்க முடியாது அதேபோன்று சவுதி அரேபியா மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளும் உறுப்புரிமையை
இழந்துள்ளன.
2 தினங்களுக்கு முன்னர், புதுக்குடியிருப்பில் தாம் வெடிக்காத நிலையில் ஒரு
கிளஸ்டர் குண்டைக் கண்டுபிடித்துள்ளதாக ஐ.நா பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக
அசோசியேட்டட் பிரஸ் செய்திச் சேவை சற்று முன்னர் செய்தி வெளியிட்டுள்ளது.
புதுக்குடியிருப்பில் தாம் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தவேளை,
வெடிக்காத நிலையில் கிளஸ்டர் குண்டு ஒன்றை தான் மீட்டுள்ளதாக ஐ.நா பணியாளர் மேலும்
தெரிவித்துள்ளார். உலக நாடுகளில் கொத்தணிக் குண்டுகள் என்று அழைக்கப்பட்டும்
(கிளஸ்டர்) பாவிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்வகையான குண்டுகளை பாவிப்பது
போர்குற்றமாகும்.
குறிப்பாக இறுதியுத்தத்தின் போது மக்கள் செறிந்து வாழ்ந்த
புதுக்குடியிருப்பு பகுதிமேல் இலங்கை வான்படை இக் குண்டுகளை வீசித் தாக்கியுள்ளது
தற்போது ஐ.நா பணியாளர்கள் ஊடாகவே உறுதிசெய்யப்பட்டுள்ளது. இத் தகவலானது இலங்கை அரசை
மேலும் கிலிகொள்ளவைத்துள்ளது. போர்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் அவசியம்
என்று உலகநாடுகள் பல வலியுறுத்திவருகின்றது. ஆனால் இலங்கை அரசோ இலங்கையில் போர்
குற்றம் எதுவும் நிகழவில்லை எனத் தொடர்ந்து மறுப்புத்தெரிவித்துவருகிறது. இந்
நிலையில் ஐ.நா பணியாளர் வாக்குமூலம் மிக முக்கியமானதொன்றாகக்
கருதப்படுகிறது.
APNews Break: UN finds
cluster bombs in Sri Lanka:
NEW DELHI (AP) -- A report from a U.N.
demining expert says unexploded cluster munitions have been found in northern
Sri Lanka, appearing to confirm, for the first time, that they were used in that
country's long civil war.
The revelation is likely to add momentum to
calls for an international investigation into possible war crimes stemming from
the bloody final months of fighting in the quarter century civil war that ended
in May 2009. The government has repeatedly denied using cluster munitions during
the final months of fighting.
The ordnance, which sprays dozens of small
bomblets, is controversial when used in heavily populated areas like northern
Sri Lanka because it can't be precisely targeted and poses greater risk of
hitting noncombatants. The bomblets that fail to detonate often kill civilians
long after fighting ends.
An email obtained by The Associated Press on
Thursday from a top U.N. demining expert said unexploded cluster bomblets were
discovered in the Puthukudiyiruppu area, where a girl was killed last month and
her sister injured as they tried to pry apart an explosive device they had found
to sell for scrap metal.
The e-mail, which was dated Tuesday, said
photographs showed cluster bomblets in the area where the children had been
collecting scrap and in their house in the Puthukudiyiruppu region.
Tens
of thousands of civilians and Tamil Tiger rebel fighters had been trapped in a
tiny area of Puthukudiyiruppu as government forces attacked the area during the
final weeks of the war.
ஜெனிவாவில் அரசு பிரகடனப்படுத்திய இராஜதந்திரப் போரில் அது தோற்றுவிட்டாலும், அங்கே நடந்த அரசியல், இராஜதந்திர முயற்சிகள் குறித்த தகவல்கள் தொடர்ந்து அம்பலமாகி வருகின்றன.
அப்படி ஜெனிவாவில் நடைபெற்ற மேலும் பல விடயங்களின் தொகுப்பு வருமாறு:
தீர்மான இறுதி வரைபு வெளியாவதற்கு பல நாட்கள் முன்னதாகவே, ஜெனிவாவில் இந்திய அமெரிக்க இராஜதந்திரிகள் இரகசியமான ஆலோசனைகளில் மூழ்கியிருந்தனர். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளுடன் இலங்கை அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தீர்மான வாசகம் திருத்தப்படவேண்டும் என் பதில் இந்தியா ஒற்றைக்காலில் நின்றது.
இந்தப் பேரத்தில் மிகவும் முக்கிய பங்கை ஆற்றியவர், ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கான இந்தியாவின் புதிய தூதர் திலிப் சின்கா ஆவார். ஜெனிவாத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு 5 நாட்கள் முன்னதாகவே அவர் ஞாயிற்றுக்கிழமை புதுடில்லியில் இருந்து ஜெனிவாவுக்கு வந்திருந்தார். அமெரிக்க அதிகாரிகளுடன் உடனடியாகவே அவர் ஆழமான ஆலோசனைகளை நடத்தினார்.
இலங்கைக்கு எதிரான தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு சின்காவுக்கு இரவு விருந்தளித்தார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். ஜெனிவாவில் உள்ள இலங்கைத் தூதரகம் இந்த விருந்தை ஒழுங்கு செய்தது. அதற்குக் காரணம், இந்தியாவை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலையாவது வகித்து ஒதுங்கி நிற்குமாறு வலியுறுத்துவதேயாகும்.
ஜெனிவாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட முன்னர், இந்திய வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலராக இருந்தவர் திலிப் சின்கா. இலங்கைக்கு ஆதரவாக இந்தத் தடவை இந்தியா நடந்துகொள்ளாது என்பதை அந்த இரவு விருந்தின்போதே சின்கா, பிரீஸுக்குத் தெளிவுபடுத்திவிட்டார்.
உள்நாட்டு விவகாரங்களினால் இந்தமுறை இலங்கையைக் காப்பாற்ற முடியாது என்று அவர் கைவிரித்து விட்டார். விருந்து முடித்து வெளியே வந்த இலங்கை அமைச்சர் ஒருவர், தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கப் போகிறது என்பதைப் பகிரங்கமாகக் கூறினார். அதேவேளை, வாக்கெடுப்புக்கு முதல்நாளான புதன்கிழமை இரவு மிகக் கடுமையான இராஜதந்திர பேரம் பேசல்கள் இலங்கை அமெரிக்க இந்தியத் தரப்புகளில் இடம்பெற்றன.
தீர்மானத்தில் திருத்தம் செய்வதற்கு அமெரிக்கப் பிரதிநிதி எலின் டொனஹேயுடன் பேரம் பேசுமாறு திலிப் சின்காவுக்கு புதுடில்லியில் இருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தீர்மானத்தைத் திருத்துவதற்கு அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் விரும்பவில்லை. அப்படிச் செய்வது இலங்கையை வழிப்படுத்துவதாக அமையாது என்று அவை கருதின. ஆனால், திலிப் சின்கா மிகக் கடுமையாக, விடாப்பிடிப் போக்குடன் இருந்தார்.
ஒரு கட்டத்தில் அவர், திருத்தமாட்டேன் என்று அமெரிக்கா பிடிவாதம் பிடித்தால் இந்தியா தீர்மானத்தை எதிர்க்கும் என்று மிரட்டினார். 2009ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா முன்னின்று தோற்கடித்ததையும் அவர் நினைவுபடுத்திச் சுட்டிக்காட்டினார்.
கடைசியாக இந்தியாவின் வழிக்கு வந்தது அமெரிக்கா. தீர்மான வாசகங்கள் திருத்தப்பட்டன. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசின் ஒப்புதலுடன், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் ஆலோச்னை மற்றும் தொழில் நுட்ப உதவிகளை வழங்கலாம் என்ற இந்தியாவின் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அமெரிக்கா கொண்டு வந்த இந்தத் தீர்மானத்துக்கு ஹங்கேரி, ருமேனியா, நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, மொனாக்கோ, ஸ்பெயின், லித்வேனியா, பின்லாந்து, சைப்ரஸ், குரோசியா, பல்கேரியா, ஸ்லோவேனியா, எஸ்தோனியா, செக் குடியரசு, லக்சம்பேர்க், கிறீஸ், இஸ்ரேல், ஸ்லோவாக்கியா, மோல்டா, ஜோர்ஜியா, சுவிற்சர்லாந்து, சோமாலியா, கனடா, கமரூன், லிச்சன் ஸ்டைன், நோர்வே, டென்மார்க், சுவீடன், அயர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், போர்த்துக்கல், ஆஸ்திரியா, போலந்து, பிரித்தானியா, ஜெர்மனி, இத்தாலி, ஐஸ்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய 40 நாடுகள் துணை அனுசரணை வழங்கியிருந்தன.
இவற்றில் 13 நாடுகள் மட்டுமே ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இந்த முறை வாக்களிக்கும் உரிமையைக் கொண்டிருந்தன. 40 நாடுகளின் ஆதரவுடன் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்திருந்தாலும், இந்தியாவின் அழுத்தங்களுக்கு அமெரிக்கா பணிந்து போக வேண்டியிருந்ததால், முன்னைய வரைபின்படி அதிக நெருக்குதல்களைக் கொடுக்கும் வகையிலான தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது போனது என்று அமெரிக்க இராஜதந்திரிகள் கூறுகிறார்கள்.
ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறீலங்காவிற்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணையை மலேசியா ஆதரவளிக்க வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச் சாட்டு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி குறித்த பேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பிரேரணை தொடர்பாக எதிர்வரும் 22 ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இந்த வாக்கெடுப்பில் மலேசியா குறித்த பிரேரணைக்கு ஆதரவாக செயற்பட வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பிரதிப் பணிப்பாளர் பில் ரொபர்ட்சன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் போலியான வாக்குறுதிகளை நம்பி இலங்கைக்கு மற்றுமொரு சந்தர்ப்பத்தை வழங்கக் கூடாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் போர்க்காலத்தில் நடந்த்தாக கூறப்படும்
போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விஷயங்களில் பொறுப்பு
கூறுவது குறித்த பிரச்சினையில் முன்னேற்றம் காண முடியும் என்று ஐ.நா மன்றத்தின்
மனிதநேய விவகாரங்களுக்கான முன்னாள் துணைத் தலைமைச் செயலர் சர் ஜான் ஹோம்ஸ்
கூறியிருக்கிறார்.
இலங்கையில் நடந்த்தாக்க் கூறப்படும் இந்த மனித உரிமை
மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் விஷயத்தில், சர்வதேச சமூகமும் ஐ.நா மன்றமும்
மேலும் அதிகமாக செய்ய வேண்டியிருக்கிறது என்ற ரீதியில் எழும் கருத்துக்களுக்கு
பதிலளித்த சர் ஜான் ஹோம்ஸ், இதைவிட அதிகமாக என்ன செய்யமுடியும் என்று கூறுவது
தற்போதைக்கு கடினமாக இருக்கிறது, ஐநா மன்றத் தலைமைச்செயலர் நியமித்த வல்லுநர்கள்
குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துவிட்ட்து. அது வெளிப்படையாக பொதுமக்கள் பாவனையில்
இருக்கிறது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், இப்போது மேலதிகமாக ஏதாவது
செய்யவேண்டும் என்றால் அதற்கு இலங்கை அரசின் ஒத்துழைப்பு கிடைக்காது என்பதுதான்
இப்போதுள்ள பிரச்சினை என்றும் அவர் கூறினார்.
“இந்த விசாரணைகள் மூலம்
சர்வதேச நாடுகள் தன்னைக் குறிவைப்பதாக இலங்கை அரசு நம்புகிறது; அவர்களை இதில்
யாரும் குறி வைக்கவில்லை. ஆனால் அவர்களின் கடந்தகால நடவடிக்கைகள்தான் இந்த
விசாரணைகள் கவனம் செலுத்தும் கருப்பொருள். எனவே அவர்கள் இந்த முயற்சிகளுக்கு,
அதாவது ஒரு புதிய விசாரணைக்கு, முழுதாக ஒத்துழைக்கமாட்டார்கள். எனவே நாம் இந்த அரசு
மாறும்வரை பொறுத்திருக்கவேண்டும். அதன் பின்னர் வரும் புதிய அரசில் இருப்பவர்கள்
இதற்கு ஒத்துழைத்தால்தான் நாம் உண்மைகளை வெளிக்கொண்டுவரலாம்”, என்றார் ஜான்
ஹோம்ஸ்.
சர்வதேச சமூகம் அமைதியாக இல்லை
ஆனால்
ஆட்சியில் இருக்கும் அரசு ஒத்துழைக்கவில்லை என்பதற்காக சர்வதேச சமூகம் அமைதியாக
இருந்துவிடமுடியுமா என்று கேட்டதற்கு, சர்வதேச சமூகம் அமைதியாக இருந்துவிடவில்லை
என்றார் ஜான் ஹோம்ஸ். “ஐநா மன்ற வல்லுநர் குழு இது தொடர்பில் தனது அறிக்கையை
சமர்பித்தது. பல தன்னார்வக் குழுக்கள் அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன.
அமெரிக்க
வெளியுறவுத்துறை ஒரு அறிக்கை தந்திருக்கிறது. சேனல் 4 தொலைகாட்சியின் விவரணப்படம்
கூட இதன் ஒரு அங்கம்தான். ஐ.நா மன்ற மனித உரிமைக் கவுன்சில் இதை ஒரு முறை
ஆராய்ந்திருக்கிறது. எனவே சர்வதேச கவனம் இதில் இருக்கிறது. பிரச்சனை என்னவென்றால்
இந்தப் பிரச்சினைகள் நடந்த இடத்தில் இருக்கும் அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. இது
கவலையளிக்கும் ஒரு விஷயம் ஆனால் அதுதான் தற்போதைய யதார்த்தம்” என்றார்
ஹோம்ஸ்
ஆனால் போருக்கு பிந்தைய காலகட்டத்தில் இவர் கூறும்ப் பிரச்சினைகள்
இருக்கலாம். ஆனால் போரின் இறுதிக்கட்டத்தில், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள்
கொல்லப்ட்டபோது, சர்வதேச சமூகம், குறிப்பாக ஐ.நா மன்றம் சரியாகத் தலையிடவில்லை,
நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விமர்சனம் இருக்கிறதே என்று அவரிடம் பிபிசி கேட்டபோது,
ஒரு இறையாண்மை பெற்ற அரசை, ஐநா மன்றம் , அந்த அரசின் விருப்பத்துக்கு எதிராக
நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்த முடியாது என்று விளக்கமளித்தார் ஜான்
ஹோம்ஸ்.
“இலங்கை விவகாரத்தில் ஐ.நா மன்ற பாதுகாப்பு கவுன்சிலில்
கருத்தொற்றுமை இல்லை. ரஷ்யாவும் சீனாவும் இந்த விஷயத்தில் பாதுகாப்பு கவுன்சில்
கூட்டப்படுவதற்கு தயாராக இல்லை. எனவே ஐ.நா மன்றத்தின் உறுப்பு நாடுகளிடையே
கருத்தொற்றுமை இல்லாத நிலையில், ஐ.நாவால் நடவடிக்கை எடுக்க முடியாது” என்றார் ஜான்
ஹோம்ஸ்.
மேலும் ஐ.நா மன்றம் பொதுமக்கள் உயிர்ச்சேதங்களைத் தவிர்க்கும்
நோக்கத்தில், இலங்கை அரசை, அந்த யுத்தப் பகுதியில் கனரக போர் ஆயுதங்களை
பயன்படுத்துவதை தவிர்க்குமாறு வற்புறுத்திக்கொண்டிருந்ததாக கூறிய ஜான் ஹோம்ஸ்,
இலங்கை அரசோ அந்தப்பகுதியில் சாதாரணப் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்றே
கூறிக்கொண்டிருந்ததாகவும், ஆனால் அது உண்மையல்ல என்றும் கூறினார்.
அதேசமயம்,
ஐநா மன்றாம் விடுதலைப்புலிகளிடமும், சாதாரணப் பொதுமக்களை விடுவியுங்கள் என்று
கூறிக்கொண்டிருந்ததாவும் தெரிவித்தார். “ஏனென்றால் அதுவும் ஒரு அடிப்படையான
பிரச்சினை.
சாதாரண மக்கள் அவர்களின் விருப்பத்துக்கு எதிராக அங்கே பிடித்து
வைக்கப்படிருந்தார்கள். ஐ.நா மன்றம் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச்
செய்துகொண்டிருந்தது. ஆனால் ஐ.நாவிடம் ஒரு அதிசயத் தீர்வு இருந்தது என்ற கருத்து
உண்மையான கருத்தல்ல” என்றார் ஜான் ஹோம்ஸ்.
இது ஒரு புறமிருக்க, போர்
முடிந்து இரண்டாண்டுகளுக்கு மேலாகியும், அங்கே போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்
மக்களுக்கு மனித நேய உதவிகள் கூட சரியாகத் தரப்படவில்லை.
இந்த சிறிய விஷயத்தில் கூட
ஐ.நா மன்றமோ சர்வதேச சமூகமோ தமிழ் மக்களுக்கு உதவ முடியவில்லை என்ற கருத்து பற்றி
என்ன நினைக்கிறீர்கள் என்று பிபிசி கேட்டதற்கு பதிலளித்த ஜான் ஹோம்ஸ், “ஐ.நா மன்றம்
தமிழ் மக்களுக்கு பெரிய அளவில் உதவியிருக்கிறது, ஐநா மன்றம்தான் அரசிடம் பேசி, போர்
நடந்த பகுதிகளிலிருந்து வெளியேறும் மக்களுக்கு நிவாரண முகாம்களை அமைக்குமாறு
வலியுறுத்தியது.
அங்கே அவர்கள் சுந்தந்திரமாக நடமாட முடியவில்லை என்பது போன்ற
பிரச்சினைகள் இருக்கத்தான் செய்தன. அந்தப் பிரச்சனைகளுக்கு ஒரு சில மாதங்களில்
தீர்வு காணப்பட்டது. அவர்களில் பெரும்பாலோனோர் தங்கள் வீடுகளுக்கு இப்போது
திரும்பிவிட்டார்கள்”, என்று தெரிவித்தார்.(பி.பி.ஸி)
இலங்கையின் போர் குற்றங்கள் குறித்து போர் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப், ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரிக்கை விடுத்திருப்பது இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறிய செயல் என்பதால், அவரை உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
ஆயர் ராயப்பு ஜோசப் கடந்த 30 வருடங்களாக புலிகளின் பிரிவினைவாதத்திற்கு ஆதரவாகவே குரல் கொடுத்து வந்துள்ளார். அவர் நாட்டின் ஐக்கியத்தை ஏற்றுக்கொள்ளாத அரசியல் நிலைப்பாட்டிற்கு குரல் கொடுத்து வருபவர். இதனால் புலிகளுக்கு ஆதரவான இவ்வாறான கோரிக்கைகளை விடுக்கும் இவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்க கூடாது என ஆயர்கள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் போது, மன்னார் ஆயர் அதற்கு முரணாக கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் ஆயர்கள் சபையின் நிலைப்பாடு என்ன என்பதை பேராயர் மெல்கம் ரஞ்சித் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுத்துள்ளது.
ஐநா சபையிடம் ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்பதற்காக நீதிக்கான நடைப்பயணம் மேற்கொண்ட மூவரும் இன்று முற்பகல் 11 மணியளவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களை சந்தித்த அவர்கள் தாம் நடந்து வந்த நோக்கத்தை கூறி, ஐந்து அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினைக் கையளித்தனர்.
இன்று பிற்பகல் 01:50 மணியளவில் ஜெனிவாவின் தொடரூந்து நிலையத்தில் இருந்து எழுச்சிப் பேரணி சிங்கள அரசின் இன அழிப்புக்குறித்த புகைப்படங்கள் மற்றும் வாசகங்கள் அடங்கிய பாதாகைகள், தமீழிழத் தேசியக் கொடி, தமிழீழத் தேசியத் தலைவரின் படங்களை தாங்கிய வண்ணமும் எங்கள் தலைவன் பிரபாகரன், எங்களுடைய நாடு தமிழீழம் என்ற கோசங்கள் எழுப்பியவாறு ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகள் ஐநா முன்றலை நோக்கி நகர்கின்றனர்.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பில்
இந்தியாவின் மௌனமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்ளாமையும் பயங்கரமான
சதித்திட்டத்தின் வகிபாகமாகும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர்
கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்து
அரசாங்கமே தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர்
சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக கலாநிதி குணதாச அமரசேகர மேலும்
தெரிவிக்கையில்,
பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக
இந்தியாவின் தேவைக்காகவே அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை
ஆணைக்குழுவில் பிரேரணையை கொண்டு வருகிறது.
எனவே தான் இந்தியா மௌனத்தை
கடைப்பிடிப்பதோடு பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்தினால் மனித உரிமை
தொடர்பில் இலங்கைக்கு எதிரான பிரேரணை கைவிடுவதற்கான நடவடிக்கைகள்
எடுக்கப்படுமென்றும் இந்தியா எம்மை அச்சுறுத்துகிறது.
அத்தோடு
கூட்டமைப்பினரை ஜெனீவா கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாமென்று இந்தியாவே
தடுத்துள்ளது. இதன் பின்னணியில் எமது நாட்டுக்கு எதிரான பயங்கரமான சதித்திட்டம்
மறைந்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை
நிறைவேற்ற இலங்கைக்கு 6 மாத கால அவகாசத்தை ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு வழங்கலாம்.
அக்காலஅவகாசத்திற்குள் 13ஆவது திருத்தத்தை நிறைவேற்றுமாறு இந்தியாவும்
அமெரிக்காவும் எம் மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்கும்.
அத்தோடு
சர்வதேச அழுத்தங்களுக்கு அரசாங்கம் அடிபணிந்து நல்லிணக்க ஆணைக்குழு
நியமிக்கப்பட்டது. இது இன்று ""தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்ட'' நிலைமையை
அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது என்றார்.
பூனையின் கழுத்தில் யார் மனியைக் கட்டுவது என்று திண்டாடுவதுபோல, இலங்கைக்கு எதிராக
ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் பிரேரணை ஒன்று வர உள்ளது எனப் பல செய்திகள்
அடிபட்டது. அதனை அமெரிக்கா கொண்டுவரும் இல்லையேல், பிரித்தானியா கொண்டுவரலாம் என்ற
பேச்சுக்களும் பலமாக அடிபட்டது. இதைத் தரவி இது எப்போது கொண்டுவரப்படும் என்பதும்
பெரும் கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் இன்றுடன் இதன் மர்மங்கள் கலைந்துபோனது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிவிலியன்கள் பாதுகாப்பு, ஜனநாயகம்
மற்றும் மனிதஉரிமைகளுக்கான பிரதிச் செயலாளரான மரியா ஒற்றேரோ, நாளை மறுதினம் ஜெனிவா
கூட்டத்தொடரில் உரை நிகழ்த்த உள்ளார் என்ற செய்தியும், அவரே இலங்கைக்கு எதிரான
பிரேரணையை முன்வைப்பார் என்ற செய்திகளும் சற்று முன்னர் கசிந்துள்ளது. சிறிலங்கா
அதிபர் நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த
வேண்டும் என்ற பிரேரணையை, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் முன்வைக்கவுள்ள அமெரிக்கா,
அந்தத் தீர்மானத்தை வலுப்படுத்தும் வகையில் இராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட
அதிகாரியான மரியா ஒற்றேரோவின் உரை அமையும் எனவும்
தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிராக கொண்டுவர இருக்கும் இப் பிரேரணைக்கு
சுமார் 25 நாடுகள் ஆதரவு தெரிவிக்க உள்ளதாக அறியப்படுகிறது. இதில் நல்லிணக்க
ஆணைக்குழு பரிந்துரைத்த அம்சங்கள் நிறைவேற்றப்படவேண்டும் எனக் கோரிக்கை
முன்வைப்பதோடு மட்டுமல்லாது, தவறும் பட்சத்தில் கடுமையான பின்விளைவுகளை இலங்கை
சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை செய்யப்படவும் உள்ளது. இது நடைபெறுமேயானால்
இலங்கை அரசு சர்வதேசத்திடம் அடைந்த முதல் பாரிய தோல்வியாக இது
கருதப்படும்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமை பிரதிச்
செயலாளர், மரியா ஒற்றேரோ சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் செய்தார் என்பது
குறிப்பிடத்தக்க விடையம். அவர் அதிபர் மகிந்த ராஜபக்ஷ, மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ
ஆகியோரைச் சந்தித்திருந்தார். இலங்கை அரசானது அவரை திருப்த்திப்படுத்த பலவழிகளைக்
கையாண்டது. இருப்பினும் அவர் அழுத்தம் திருத்தமாக தம் நிலைப்பாட்டை
வெளிப்படுத்திவிட்டு இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.