Showing posts with label எட்டப்பன். Show all posts
Showing posts with label எட்டப்பன். Show all posts

Monday, March 25, 2013

2002ல் இருந்தே இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டிருந்தார் கருணா – விக்கி லீக்ஸ் தகவல் !!



482002ம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திட்ட தருணத்தில், இந்த ஒப்பந்தம் மூலமாக நாம் ஒரு தீர்வைப் பெற்றுவிட முடியாது என்று தேசிய தலைவர் கூறியுள்ளார்.

முதலில் கருணா யார் என்பதனை அறிமுகப்படுத்தி விட்டு பின்னர் கிழக்கில் உள்ள போராளிகளுக்காக அவர் வீடியோ ஒன்றைப் பதிவுசெய்துள்ளார். அதில் அவர் மேற்குறிப்பிட்ட விடையங்களை தெளிவாக விளக்கியுள்ளார். நாம் சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் மூலமாக , தமிழீழத்தை அடைந்து விட்டோம் என நீங்கள் நினைக்கவேண்டாம்
என்று அவர் கூறியுள்ளார். நாம் இன்னும் பயணிக்கவேண்டிய தூரம் நிறையவே உள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இலங்கை அரசு அமெரிக்காவை திசை திருப்ப, அந்த வீடியோவை எடுத்து அமெரிக்க தூதரகத்திடம் கொடுத்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு சமாதானத்தில் நம்பிக்கை இலை என்றும், அவர்கள் தலைவரே இதனை எதிர்த்துப் பேசியுள்ளார் என்றும் இலங்கை அரசு அமெரிக்க தூதுவருக்கு தெரிவித்துள்ளது. மிகவும் இரகசியமாக பேணப்பட்ட இந்த வீடியோ 2002ம் ஆண்டே அரசாங்கத்தின் கைகளுக்கு எப்படி கிடைத்தது என்ற சந்தேகங்கள் வலுப்பெற்றுள்ளது.

Saturday, April 17, 2010

தமிழ் மக்களுக்கு அரசியல் தெளிவில்லையாம்!! – இதை சொல்லுகின்றான் எட்டப்பன்

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இன்னமும் அடைய முடியாத இலக்குகளை நோக்கிச் சிந்திப்பதாகவும் அல்லது அரசியலில் இன்னும் தெளிவுறவில்லை என்றும் ஒட்டுக்கட்சித் தலைவர்களின் ஒருவரான பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில். 'ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெரும்பான்மையான வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஆகையால் இந்தமுறை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் உறுதியான அரசாங்கம் அமையப் போகின்றது என்பது உண்மை.

அந்தவகையில் இந்த வெற்றிகளுக்கெல்லாம் பொறுப்பாக இருந்தவர் எமது மதிப்புக்குரிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களே. வடக்கு கிழக்கு மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் வாக்களித்திருக்கிறார்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் வாக்களித்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் நோக்குகின்ற பொழுது தமிழ் மக்கள் இன்னமும் அடையமுடியாத இலக்குகளை நோக்கிச் சிந்திப்பதாகவும் அல்லது அரசியலில் இன்னமும் தெளிவுறவில்லை என்ற ஒரு விடயத்தையும் எங்களால் காணக் கூடியதாக இருக்கின்றது.

ஒருங்கிணைந்த இலங்கைக்குள் பிரச்சினையை முடித்துக்கொள்ளப் போகின்றோம் என்று சொன்னால், நாங்கள் அரசாங்கத்தோடு இணைந்து முரண்பாடில்லாமல் எங்களுடைய பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தமது கட்சி இருக்கிறது' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.