Showing posts with label தலைவன் பிரபாகரன். Show all posts
Showing posts with label தலைவன் பிரபாகரன். Show all posts

Tuesday, November 26, 2013

புலம்பெயர் நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 59 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 59 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ளன. 

1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் பிறந்ததார் வேலுப்பிள்ளை பிரபாகரன்

தமிழிழ விடுதலைப் புலிகளின் தயாக நிலப்பரப்பில் பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வுகள் கொண்டாடப்பட்டு வந்தன.

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ் மக்கள் பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

சுவிஸ், பிரான்ஸ், கனடா, பிரிட்டன், நோர்வே, டென்மார்க், ஜேர்மனி என்று ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த தேசங்கள் முழுவதும் தமிழர் ஒருங்கினைப்புக் குழுவால் பிரபாகரனின் 59 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் கொண்டாடப்படுகின்றன.

தமிழர்க்கு பூமிப் பந்தில் முகவரி தேடித் தந்தவர் தேசியத் தலைவர் பிரபாகரன்! - நக்கீரன்

தமிழினத்தின் வரலாற்றில் எத்தனையோ அரசர்களும் பேரரசர்களும் தோன்றி மறைந்துள்ளார்கள். இராசராச சோழனும் அவன் மகன் இராசேந்திர சோழனும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழப் பேரரசை நிறுவிய மன்னர்கள் ஆவர். இலங்கை மீது படையெடுத்து அதனைப் பிடித்து (கிபி 993 - கிபி 1077) ஆட்சி செய்தவர்கள். சோழர்களது ஆட்சி 84 ஆண்டுகள் நீடித்தது. வங்கப் பெருங்கடலில் வலம் வந்த பேரரசர்கள் முதலாவது இராசராச சோழன், முதலாவது இராசேந்திர சோழன் ஆகியோரது கடற்படைக் கப்பல்களில் புலிக்கொடிகள் வானளாவப் பறந்தன.
அந்தப் பொற்காலத்தின் பின்னர் தேசியத் தலைவர் பிரபாகரனின் கடற்படைதான் புலிக் கொடிகளோடு வங்கக் கடலில் வலம் வந்தன.
உலக வரலாற்றில் கிரேக்கத்தின் மகா அலெக்சான்டர், பிரான்சின் சக்கரவர்த்தி நெப்போலியன் மாவீரர்கள் என்று பெயர் எடுத்தவர்கள்.
தமிழினத்தின் வரலாற்றில் மாவீரன் என்ற பட்டத்தைச் சுமந்தவர் தலைவர் பிரபாகரன் ஒருவரேதான்.
தேசியத் தலைவர் பிரபாகரன் ஒருவர்தான் மாவீரன் என்ற சொல்லுக்கு இலக்கணமாகவும் இலக்கியமாகவும் விளங்கியவர்.
தேசியத் தலைவர் என்றாலும் அது பிரபாகரன் ஒருவரையே குறிக்கும். வேறு யாரையும் குறிக்காது.
ஆங்கிலேயர் இந்தியாவைப் பிடித்து ஆண்ட காலத்தில் தமிழர்கள் படைகளில் சேர்க்கப்படவில்லை. காரணம் ஆங்கிலேயர் கணிப்பில் அவர்கள் வீரம் செறிந்த இனமாகக் கருதப்படவில்லை.

அந்த வசை மாவீரன் பிரபாகரன் பிறந்ததால் கழிந்தது.
தமிழினத்துக்கு இந்தப் பூமிப் பந்தின் மூலை முடுக்கெல்லாம் முகவரி தேடித் தந்தவர் தேசியத் தலைவர் பிரபாகரன் ஒருவரேதான்.
தமிழனைத் தெரியாதவர்களும் தலைவர் பிரபாகரனை தெரிந்து வைத்திருந்தார்கள்.
தமிழினம் இழந்த நாட்டை மீண்டும் போராடிப் பெறவேண்டும் அய்யனாவில் தமிழீழக் கொடி பறக்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு 30 ஆண்டு காலம் ஓய்வின்றிப் போராடியவர் தேசியத் தலைவர் பிரபாகரன்.

கடலிலும் தரையிலும் எத்தனை தாக்குதல்கள். எத்தனை ஊடுருவல்கள், எத்தனைப் போர்க்களங்கள். எத்தனை படையணிகள். உலகையே வியப்பில் ஆழ்தியவர் தேசியத் தலைவர் பிரபாகரன்.
தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த மண்ணையும் அதில் வாழும் மக்களையும் உயிருக்கு மேலாக நேசித்தவர்.
தேசியத் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்கள் கால்களில் பூட்டப்பட்ட அடிமை விலங்குகள் என்றோ ஒரு நாள் உடையும் தமிழீழம் பிறக்கும் என நம்பியவர். அந்த நம்பிக்கை வீண்போகாது.

இன்று தேசியத் தலைவர் பிரபாகரனது 59 ஆவது பிறந்த நாள்.
தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் மட்டுமே தமிழ் கூறும் நல்லுகம் எங்கும் கொண்டாடப்படுகிறது.
இந்தச் சிறப்பு வேறு யாருக்கும் இல்லை.

Saturday, February 25, 2012

விடுதலைப் புலிகள் வீழவில்லை! அவர்கள் இப்போதும் புலம்பெயர் தமிழர்களின் உணர்வில் நெருப்பாக எழுந்து நிற்கிறார்கள்!!

தமிழினம் தங்களது வாழ் நாளிலேயே ஈகத்தின் உன்னதங்களையும், வீரத்தின் விளை நிலத்தையும், இலட்சியங்களின் உறுதியையும், அர்ப்பணிப்புக்களின் அணிவகுப்புக்களையும், கூடவே துரோகங்களின் குழிபறிப்புக்களையும், எதிரிகளின் கொடூரங்களையும் தரிசனம் செய்து வருகின்றது.

எங்கள் ஈழத்தின் கல்லறைகள் யாவும் வரலாற்றின் பதிவுகளாக மட்டும் அல்லாமல், துரோகங்களின் பதிவுகளாகவும் சாட்சி பகர்கின்றன. தமிழீழ விடுதலைப் போரில் ஈகங்கள் மட்டுமல்ல, துரோகங்களும் கல்லறைகளற்ற பல புதை குழிகளையும், அடையாளம் அழிக்கப்பட்ட சாம்பல் மேடுகளையும் உருவாக்கியுள்ளன. வீழ்த்தப்பட்ட புலிகளுக்கும், கொலைக்களத்தில் சாய்ந்து போன மக்களுக்கும் எதிரிகள் மட்டும் காரணம் அல்ல, துரோகிகளும் கூடவே இருந்து குழிபறித்த வரலாறுகளும் உள்ளன. மரணங்களை விடவும், துரோகங்களே அதிக விலிகளை ஏற்படுத்துகின்றன.

முள்ளிவாய்க்கால் பேரழிவும், அதன் பின்னரான புலம்பெயர் களச் சிதைவும் ஒரிரு தினங்களில் உருவான கதைகள் அல்ல. அந்தப் பெருந்துயர் நீண்ட காலத் திட்டமிடலின் இறுதி வடிவம். சமாதான காலம் தமிழீழ மக்களுக்கு வழங்கிய தண்டனை. விடுதலைப் புலிகளது கோட்டையின் இரும்புக் கதவுகள் திறந்து கொண்டதனால், துரோகங்கள் உள்ளே நுழைந்து ஈனத்தனம் செய்து முடித்தது.

உலக நாடுகளின்மீதான விடுதலைப் புலிகளது நம்பிக்கையும், தமிழ் மக்களது எதிர்பார்ப்புக்களும் பொய்த்துப் போனதனால், சிங்களம் நடாத்திய கோர வெறியாட்டத்தில் தமிழினம் கருவறுக்கப்பட்டது. ஒவ்வொரு போர் முனையிலும், ஒவ்வொரு படையணியிலும் எதிலியினால் உள்நுழைக்க வைக்கப்பட்ட இயங்கு தசைகள் வழங்கிய தகவல்களால், ஈழத் தமிழினத்தின் காவல் தெய்வங்கள் கல்லறைகளும் அற்று, கடற்கரை மண்ணில் வீழ்த்தப்பட்டார்கள்.

விடுதலைப் புலிகளது ஒரு பாதி தமிழீழ மண்ணில் புதையுண்டு போவதற்குப் பல வருடங்கள் முன்பாகவே, விடுதலைப் புலிகளது புலம்பெயர் கட்டமைப்புக்களும் எதிரிகளால் குறி வைக்கப்பட்டது. சமாதான காலத்தின் சாத்தியங்கள் ஊடான விலை பேசுதல்களில் பலர் தலை சாய்ந்தார்கள். விடுதலைப் புலிகளுடன் முரண்பட்டுக்கொண்ட முன்னாள் பொறுப்பாளாகள் சிலர் சிங்கள தேசத்தின் முகவர்களாக மாறிச் செயல்பட்டார்கள். விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்திய தளபதியான கருணாவையே காலில் விழ வைத்த சிங்களம், புலம்பெயர் தேசங்களை நோக்கிச் சதையுடன் எலும்புகளை வீசி எறிந்தது. சில ஈனப் பிறவிகள் அதனைக் கவ்விக்கொண்டன.

ஆனாலும், சிங்கள தேசத்தின் கணக்கு புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் தவறிப் போனது. முற்றுகைக்குள் வைத்து, பொருளாதாரத் தடை விதித்தும் அசராமல் எழுந்தே நின்ற வன்னி மக்களை, முள்ளிவாய்க்கால்வரை நகர்த்தி அழிக்க முடிந்த சிங்களத்தால், புலம்பெயர் தமிழர்களது தேசிய விடுதலை உணர்வைச் சிதைக்க முடியவில்லை. பணத்தாலும், பலத்த கவனிப்புக்களாலும் சிலரை மட்டுமே வீழ்த்த முடிந்த சிங்களத்தால் புலத்தை நிர்மூலமாக்க முடியவில்லை.

ஜனநாயக நாடுகளின் நிழலில் சுதந்திரப் பறவைகளாக நிமிர்ந்து நிற்கும் புலம்பெயர் தமிழர்களை சிங்களத்தின் கோரப் பார்வையும், கொடூர இனவெறியும், கொலைவெறி எண்ணமும் அசைத்துவிடவில்லை. அச்சமற்ற மண்ணில் நின்று, தமது உறவுகளின் விடிவுக்கும், விடுதலைக்குமாகப் போராடும் கடமையிலிருந்து புலம்பெயர் தமிழர்களை சிங்களத்தால் பிரித்துவிட முடியவில்லை.

விடுதலைப் புலிகள் என்ற உன்னதங்களிலிருந்தும், தேசியத் தலைவர் என்ற பேரொளியிலிருந்தும் புலம்பெயர் தமிழர்களைப் பிரித்து எடுக்க முடியாத சிங்களம், துரோகங்கள் ஊடான பிளவுகளுக்கும் முயற்சித்துப் பார்த்தது. அணிகளை உருவாக்கி மோத வைத்தது. ஒரு களத்தில் இணைய விடாமல் தடுத்தும் பார்த்தது. அதன் உச்சக் கட்டமாக, மாவீரர் தினத்தையும் குறி வைத்து அடித்தது. ஆனாலும், தலைவன் காலத்துத் தமிழர்கள் இன்னமும் உரமான உறுதி பெறவே அவை எல்லாம் காரணமாகியது.

உலகில் மனிதாபிமானங்கள் சிங்கள தேசத்தின்மீது கொழுத்திப் போட்ட நெருப்பு, பெருந் தீயாகி ஐ.நா. மன்றத்தையே அசைத்துவிட்டது. சனல் 4 ஈழத் தமிழர்களது அவலங்களை உலகமயப்படுத்தியது. தேசங்கள் எங்கும் ஈழத் தமிழர்களுக்கான நீதி கோரும் குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துவிட்டன. ஐ.நா. மனித உரிமைகள் மையம் சிங்கள தேசத்தின்மீது குற்றப்பத்திரிகை வாசிக்க உள்ளது. இந்த நிலையிலும், தான் தப்பிக்கொள்ள துரோகங்களையே சிங்களம் நம்பிக் களம் இறங்கியுள்ளது.

ஜெனிவா ஐ.நா. மன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் தமிழினத்தைக் கருவறுக்கும் துரோகங்கள் சிங்களத்தால் விதைக்கப்பட்டுள்ளன. மார்ச் 05 இல் ஐ.நா. முற்றத்து முருகதாசன் திடலில் புலம்பெயர் தமிழர்கள் நிகழ்த்தவுள்ள பேரெழுச்சியை முறியடிக்க சிங்களம் பெரும்பாடு படுகின்றது. சிங்கள தேசத்தின் ஆதரவுக் குழு ஒன்று இதற்காகக் கொம்பு சீவி, களம் இறக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் வீழவில்லை! அவர்கள் இப்போதும் புலம்பெயர் தமிழர்களின் உணர்வில் நெருப்பாக எழுந்து நிற்கிறார்கள். தமிழீழம் மலரும்வரை புலிகளின் தாகம் தணியப் போவதில்லை. இப்போதும், அவர்களே தமிழீழ விடுதலைப் போர்க் களத்தின் நாயகர்கள். அவர்களது இலட்சியங்களை நெஞ்சில் நெருப்பாய் சுமந்தபடி, தமிழீழம் நோக்கிப் புலம்பெயர் தமிழர்கள் வருவார்கள். அதை, எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது!

Saturday, November 26, 2011

தமிழீழத் தேசியத் தலைவரது பிறந்தநாள் நிகழ்வினை தன்னெழுச்சியுடன் கொண்டாடிவருகின்றனர் தமிழக மக்கள்.

"தேசத்தின் சொத்து" தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 57வது அகவை நிறைவு நாளும் தமிழினத்தின் விடுதலையினை வென்றெடுக்கும் களத்தில் நடைபோடும் 58வது பிறந்தநாள் துவக்க நாளும் இன்றாகும்.

தம்பி என்று வாஞ்சையோடு அழைக்கப்பட்ட தலைவன் பிரபாகரன் அவர்கள் ஒவ்வொரு தமிழர்களின் நெஞ்சத்திலும் வீற்றிருந்து இரத்த நாளங்களிலும் சுவாசத்திலும் விடுதலை தாகத்தை கடத்திவருவதனால் அவரது பிறந்தநாள் உலகத்தமிழர்களது போற்றுதலுக்கும் கொண்டாட்டத்திற்கும் உரிய நாளாக மாறிவிட்டது. இந்த பேறு பெற்றவர்கள் தமிழுலகில் இன்றளவும் யாரும் இல்லை என்றால் மிகையாகாது.

இவ்வாறு சிறப்புப்பெற்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது பிறந்தநாளாகிய இன்று தாய்த்தமிழக மக்கள் தன்னெழுச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

அதிகாலை முதல் ஆரம்பித்திருக்கும் இக் கொண்டாடத்தில் ஈடுபட்டிருக்கும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகின்றனர். கோவில்களில் சிறப்பு பூசைகளும் அபிசேக ஆராதனைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

தமிழகத்தின் பல இடங்களில் புதிய கடைகள் இல்லங்கள் திறப்புவிழாவினை நடாத்துவதற்கு தமிழீழத் தேசியத் தலைவரது பிறந்தநாளான இன்றைய தினத்தை தெரிவு செய்து நடாத்திவருகின்றனர்.

இவைதவிர அதிகாலை முதல் தமிழக மக்கள் இனிப்புப் பண்டங்களை மக்களிற்கு வழங்கி கொண்டாடிவருகின்றனர். தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருக்கும் நண்பர்கள் உறவினர்களிற்கு கைத்தொலைபேசியில் குறுந்தகவல்களை அனுப்பி பிறந்தநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் எல்லோரும் தத்தமது தரப்பு காரணங்களிற்காக அமைதிகாத்து நிற்கையில் தமிழகத்து மக்கள் தன்னெழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றமை அவர்களது எழுச்சியினை காட்டிநிற்கின்றது.

ஈழதேசம் இணையத்திற்காக தமிழகத்தில் இருந்து புலிமறவன்.

Tuesday, May 24, 2011

தமிழீழத் தேசியத் தலைவர் உயிருடன் உள்ளார்! விரைந்து வெளிப்படுவார்!! மே-30-2009 அன்று சந்தித்தவர் மூலம் உறுதிப்படுத்துகிறார் பழ.நெடுமாறன்.

மே-30-2009 அன்று சந்தித்து நபர் மூலமாக தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் பாதுகாப்பாக பத்திரமாக நலமுடன் இருப்பதை உறுதிப்படுத்தியதாக உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழீழத் தேசியத்தலைவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதற்கு அறுதியிட்டு இதுவரை எந்த தகவல்களும் வெளிப்படையாக கிடைக்காது இருந்து வருகையில் சில தினங்களிற்கு முன்னர் தமிழக தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் இந்த உறுதிப்பட்ட தகவலை வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் இருந்து நடத்தப்பட்டுவரும் பொலிமர் தொலைக்காட்சிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வழங்கிய நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்கே மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள்.

பல்வேறு கேள்விகளுக்கு மத்தியில் உலகத் தமிழர்களது சார்பில் முன்வைக்கப்பட்ட தமிழீழத் தேசியத் தலைவரது இருப்புத் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போது தமிழீத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் நலமுடனும் பாதுகாப்புடனும் பத்திரமாகவும் உள்ளார். அடுத்தகட்டப் போரை முன்னெடுக்க செய்ய வேண்டிய ஆயத்தப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார் விரைவில் உலகத்தின் முன் தோன்றுவார் என்று தெரிவித்துள்ளார்.

இதனை எவ்வாறு உறுதிபடத் தெரிவிக்கின்றீர்கள் என எதிர் கேள்வியை எழுப்பிய போது மே-30-2009 அன்று தலைவர் பிரபாகரன் கூட இறுதிவரை இருந்தவரை சந்தித்ததன் அடிப்படையில் இதனை தெரிவிப்பதாக உறுதியாக விடையளித்துள்ளார்.

தமிழீழத் தேசியத் தலைமை இல்லை என்ற நினைப்பில் இனத்திற்கு பங்கம் விளைவிக்கும் நோக்கோடு செயற்படுபவர்கள் கவனத்திற்கு. எமது இனத்தின் விடுதலையினை வென்றெடுத்து தமிழர்களுக்கென்று ஒரு அரசை நிறுவுவதே தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது அவதாரத்தின் கடமையாகும். அதனை எத்தனை தடைகள் வந்தாலும் எத்தனை ஆயிரம் பேர் துரோகிகளாக அணை போட்டு நின்றாலும் எத்தனை வல்லரசுகள் சிங்களத்தை காத்து நின்றாலும் நிறைவேற்றுவது திண்ணம்.




ஈழதேசம்.

Saturday, February 12, 2011

தமிழில் இராணுவக் கல்வி… உலகையே அதிசயிக்க வைத்த எங்கள் தலைவன் பிரபாகரன்...

தமிழில் இராணுவக் கல்வி… சாதித்துக் காட்டிய எங்கள் தலைவன் பிரபாகரன்!

ஈழத்து சகோதரர்கள் ஒரு விஷயத்தை அடிக்கடி கூறுவார்கள்…“அவர் பல துறை நிபுணத்துவம் பெற்ற ஒப்பற்ற தலைவர். தமிழ் ஈழத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தால் போதும்… வளங்கள் இல்லாவிட்டாலும், தமிழ் ஈழத்தை இன்னொரு சிங்கப்பூராக உருமாற்றிக் காட்டுவார்…”, என்று.

அவர் யாரென்பது உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. போரியல் கலைகளில் மட்டுமல்ல, ஒரு நாட்டின் அத்தனை வளங்களைக் கட்டியெழுப்பவதிலும் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் யாருமில்லை. தமிழ் மன்னர்கள் ராஜராஜ சோழனின் நிர்வாகத் திறனும், ராஜேந்திர சோழனுக்கு நிகரான படைநடத்தும் திறனும் ஒருங்கே அமையப் பெற்றவர் பிரபாகரன் என்பார்கள் தமிழ் அறிஞர்களும், அவரை நேரில் பார்த்துப் பழகியவர்களும்.

ஆனாலும் இங்குள்ள சில மூடர்கள், பிரபாகரன் என்றதும், தங்களுக்கு அவரைப் பற்றி என்னவெல்லாம் பொய்யாக எடுத்துரைக்கப்பட்டதோ கற்பிக்கப்பட்டதோ அத்தனையையும் எழுதிக் கிழி்த்தார்கள். இப்போது அவர்களே வெட்கித் தலைகுனியும் பல உண்மைகள் வெளிவந்த வண்ணமுள்ளன. குறிப்பாக, தமிழ் ஈழம் என்ற நாட்டின் கட்டமைப்பு வசதிகளை, ஒரு நாட்டின் தேசியத் தலைவர் என்ற பிரதான இடத்தில் அமர்ந்து அவர் செய்துள்ள சாதனைகள் தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் மெய்சிலிர்க்கச் செய்கின்றன.

தமிழில் இராணுவக் கல்வி!

தாய்த் தமிழில் மருத்துவக் கல்வி, தொழில் நுட்பக் கல்வி கற்பது இன்னும்கூட தமிழகத்தில் சாத்தியமில்லாத நிலை. ஆனால் பிரபாகரனோ, புலிகளுக்கு சுத்தத் தமிழில் ராணுவக் கல்வியையே போதித்துள்ளார். ராணுவக் கல்வி என்றால், வெறும் வாய்மொழிக் கட்டளைகள்தானே என நினைக்க வேண்டாம். முழுமையான பாடத் திட்டங்களுடன் கூடிய பாரம்பரிய கல்வி அமைப்பையே தமிழ் ஈழத்தில் நடைமுறையில் வைத்துள்ளார் பிரபாகரன். இதனை இப்போது வெளிப்படுத்தியிருக்கும் சிங்கள ராணுவத்தினர், பிரபாகரனின் போர் வியூகங்கள், அதை புலிகளுக்கு கற்றுத்தர வகுத்துக் கொடுத்த முறைகள், பாசறைகள் போன்றவற்றைப் பார்த்து அதிர்ந்து நிற்கிறார்கள்.

இலங்கையில் முறையான, கட்டுக்கோப்பான ராணுவமாக 30 ஆண்டுகாலம் புலிகள் அமைப்பு எப்படி இயங்கியது என்ற ரகசியங்கள் இப்போதுதான் அவர்களுக்கு முழுமையாகத் தெரிய வந்துள்ளது.

ஒரு ராணுவத்திற்கு என்னென்ன தகுதிகள், கட்டுப்பாடுகள், ஒழுங்குகள் இருக்க வேண்டுமோ அத்தனையையும் தனது படைக்குக் கற்றுக் கொடுத்துள்ளார் பிரபாகரன். வெறும் வாய் வழி உத்தரவுகளாக இல்லாமல், ஒவ்வொன்றையும் திட்டமிட்டு, முறைப்படி அனைத்தையும் செய்து தனது போராளிப் படையை ஒரு ராணுவமாக இயங்கச் செய்துள்ளார் பிரபாகரன் என்பது விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த முக்கிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

பிரபாகரன் என்ற ஒரு தனி ஆட்சியாளரின் கீழ் இயங்கி வந்த விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிக்க, 20-க்கும் மேற்பட்ட நாடுகளிடம் கையேந்தி ராணுவப் பிச்சையெடுத்தது இலங்கை. இப்போது புலிகள் பகுதிகளில் தீவிர தேடுதலை நடத்தி அவர்கள் மறைத்து வைத்துள்ள ஆயுதங்கள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி பயன்படுத்த முயற்சித்து வருகிறது. ஆனால் புலிகளோ சுயமாக, யாருடைய உதவியும் இல்லாமல் தங்கள் சொந்த பலம், ஆயுதங்களை மட்டுமே நம்பி கடைசி வரை களத்தில் நின்றார்கள்.

இந்த தேடுதலின் போது, புலிகளின் ராணுவ ஆவணக் காப்பகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் போர் உத்திகள், ராணுவத் திட்டங்கள், தாக்குதல் இலக்குகள் குறித்த தகவல்கள் அடங்கிய மிக முக்கிய ஆவணங்கள் இங்குதான் இருந்ததாக சிங்கள ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

மொத்தம் 272 பைல்களில் இந்த ஆவணங்கள் உள்ளன.

இவற்றை ராணுவத்தினர் கொழும்பு கொண்டு வந்து உயர் அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். இவற்றைப் பார்த்த ராணுவ உயர் அதிகாரிகள் அதிர்ந்து போய் விட்டனராம். காரணம், உலகில் எந்த ஒரு ராணுவத்திடமும் இவ்வளவு முழுமையான திட்டமிடல் இருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு மிக மிக அழகாக திட்டமிட்டு ஒவ்வொன்றையும் புலிகள் செய்து வந்துள்ளனர் என்பதை இந்த ஆவணங்கள் காட்டுகிறதாம்.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புலிகளின் புதையல்களிலேயே மிக மிக முக்கியமானவை இந்த ஆவணங்கள்தான் என்கிறார்கள். பிரபாகரனுக்கு நெருங்கியவர் கொடுத்த தகவல்… இந்த ஆவணங்கள் இருந்த இடம் குறித்த தகவலை, பிரபாகரனிடம் மிக நெருக்கமாக இருந்த ஒருவரிடமிருந்துதான் பெற்றுள்ளதாம் இலங்கை ராணுவம். அந்த முக்கிய நபர் யார் என்பதை இலங்கை ராணுவம் தெரிவிக்கவில்லை. அவரிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் இந்த ஆவணப் புதையலைத் தோண்டி எடுத்துள்ளது ராணுவம்.

புலிகளின் சில முக்கியத் தலைவர்கள் இன்னும் ராணுவத்தின் பிடியில் விசாரணையில் இருப்பது நினைவிருக்கலாம்.

விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்கள், தற்கொலைப் படைத் தாக்குதல், ஆயுதக் கொள்முதல் விவரங்கள், வங்கிப் பரிவர்த்தனை குறித்த தகவல்கள், புலிகள் இயக்கத்தை மறு சீரமைக்க போடப்பட்டிருந்த திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் இந்த ஆவணங்களில் உள்ளது என்று போலீஸ் எஸ்.பி. வாஸ் குணவர்த்தனே தெரிவித்துள்ளார்.

இதைத் தவிர இலங்கையின் மொத்த ராணுவ அமைப்பை அப்படியே படம்பிடித்து வைத்தது போன்ற துல்லியமான விவரங்கள் அந்த ஆவணங்களில் உள்ளனவாம்.

இலங்கை ராணுவத்தின் முப்படைப் பிரிவுகளும் அமைத்துள்ள தளங்கள், அவர்களுடைய படை பலம், அதிகாரிகள் வரிசை, அவர்களிடம் இருந்த ஆயுதங்கள், வாகனங்கள், இதர படை பலங்கள், அவர்கள் தாக்குதல் நடத்த பயன்படுத்தக்கூடிய நில, நீர், வான் பாதைகள், அவர்களுடைய தகவல் தொடர்பு கட்டமைப்பு, அவர்களுடைய ராணுவத் தலைமையகங்கள், பாசறைகளின் எண்ணிக்கை, பாசறைகளின் அமைப்பு, பாசறைகளை அணுகுவதற்கான சாலைகள், பாசறைகளில் தாக்குவதற்கு ஏதுவான வலுக்குறைந்த தற்காப்பு அரண்கள், ராணுவ உத்திகளுக்குப் பயன்படக்கூடிய வரைபடங்கள், ஆயுதங்களைக் கையாள்வதற்கான வழிமுறைகள், தாக்குதலுக்குத் தேவைப்படும் ஆயுதங்கள், சாதனங்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்று எல்லாவற்றையும் தமிழில் எளிமையாகப் புரியும்படி அச்சிட்டு தந்திருக்கிறார் பிரபாகரன். இதைப் பார்த்து ஆடிப் போய்விட்டார்களாம் சிங்களத்து உயர் அதிகாரிகள்.

வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள் தயாரிக்கும் முறை, பாட்டரிகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது, பாட்டரிகளையே தயாரிக்கும் முறை, வெளிநாடுகளில் கிடைக்கும் ஆயுத உதிரி பாகங்களைத் தருவித்து இணைக்கும் முறை, போர் உத்திகள், கண்ணி வெடிகளைப் புதைக்கும் முறை, நாட்டு வெடிகுண்டுகளையும் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் வெடி குண்டுகளையும், வெடி குண்டு என்ற சந்தேகம் வராதபடிக்கு டிபன்பாக்ஸ், டிரான்சிஸ்டர் போன்றவற்றின் வடிவிலான குண்டுகளையும் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் விடுதலைப் புலிகள் நிபுணத்துவம் பெற்றிருந்தது அந்தக் கோப்புகளில் தெரிய வந்துள்ளது.

இலங்கை ராணுவத்தின் நடமாட்டங்கள், அவர்களின் உத்திகள், அவர்களுடைய படை பலத்தில் ஏற்படும் மாற்றங்கள், அவர்களுடைய தகவல் தொடர்பு அமைப்புகள் போன்றவற்றை விடுதலைப்புலிகள் தொடர்ந்து கண்காணித்து, தகவல்களைத் தொகுத்து அவற்றை பிரபாகரனுக்கு அனுப்பிக் கொண்டே இருந்துள்ளனர்.

பிரபாகரன் அவற்றைக் கொண்டுதான் எதிர் உத்திகளை வகுத்து தனது படைப்பிரிவினருக்குக் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டே இருந்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பிரபாகரனுடன் இயக்க வீரர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் ஏராளமாய் உள்ளன. அனுராதபுரம் விமான நிலையத்தைத் தாக்கிய விடுதலைப் புலிகளின் வான்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிரபாகரனுடன் பெருமிதத்துடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதும் இவற்றில் உள்ளன.

வெளிநாடுகளில் வாங்கிய ஆயுதங்கள் பற்றிய தகவல்களும் அவை வாங்கப்பட்ட நாடுகளின் பட்டியலும், அவை ஈழத்திற்குக் கொண்டுவரப் பயன்படுத்தப்பட்ட வழிகளும், நேரமும், அதற்குண்டான வாகனங்கள் பற்றிய தகவல்களும்கூட கோர்வையாக எழுதப்பட்டிருந்தன.

இலங்கை விமானப்படையிடம் இருந்த விமானங்களின் ரகம், அவற்றின் பயன்பாடு, அவற்றின் திறம், அவற்றின் நடமாட்டம் போன்ற பலவற்றைத் தொடர்ந்து கண்காணித்து அதைத் தனி ஆவணங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.

விமானங்களைச் சுட்டு வீழ்த்தக் கூடிய பீரங்கிக்கான உதிரி பாகங்கள், 120 மி.மீ., 130 மி.மீ., 152 மி.மீ. குறுக்களவு கொண்ட பீரங்கிகளின் உதிரி பாகங்களையும் விடுதலைப் புலிகள் வாங்கி வைத்திருந்தனர்.

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய சீருடை, தற்கொலைப்படை வீரராகச் செயல்பட்ட புலிகளின் சொந்தப் பொருள்கள், கரும் புலிகள் என்று அழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவினர் நடத்திய தாக்குதல்கள் பற்றிய விவரங்கள் விரிவாக தொகுக்கப்பட்டுள்ளன.

ஆயுதங்கள் தயாரிப்பு:

தமிழீழத்தின் அனைத்து ஆயுதத் தேவைகளுக்கும் வெளிநாடுகளை மட்டுமே நம்பி இருக்காமல், சொந்தமாக ஆயுதங்கள் தயாரிப்பதிலும் கவனம் செலுத்தியுள்ளனர் புலிகள்.

இதற்காக புலிகள் பல ஆயுத தயாரிப்புக் கூடங்களை நிறுவியுள்ளனர். இன்னொரு பக்கம் கடல்புலிகள் கலக்கியுள்ளனர். மோட்டார் படகுகள், நீர்மூழ்கிகள் போன்றவற்றை அவர்களே கட்டியுள்ளனர். சிறு விசைப்படகு மோட்டார்களையும் புலிகளே தயாரித்துள்ளனர். இந்த திறன் இலங்கை ராணுவத்துக்குக் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகள் விமானங்களைத் தயாரிக்க ஆரம்பித்தது எப்படி என்று ஏற்கெனவே பல தகவல்கள் வெளிவந்துவிட்டன. விமானங்களின் உதிரி பாகங்களை மட்டும் வாங்கிக் கொண்டு, மற்ற அனைத்தும் தங்கள் சொந்த முயற்சியிலேயே புலிகள் செய்துமுடித்துள்ளனர்.

நிர்வாகத்துறையில் புலிகளின் திறமைக்கும் நேர்மைக்கும் இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதி டி சில்வா கொடுத்த சான்று ஒன்றே போதும். அத்தனை நேர்த்தி… நேர்மை… உறுதியான நிலைப்பாடு மிக்க ஒரு அரசை நிறுவி நடத்தி வந்திருக்கிறார் பிரபாகரன்.
அவரது அந்த திறமையும் உறுதியும்தான் இந்த உலகையே அசைத்துப் பார்த்துவிட்டது… அவருக்கு எதிராக அணி திரளச் செய்திருக்கிறது.