Sunday, January 09, 2011

விடுதலைப் புலிகளின் தளபதி ஜான் படையினரிடம் சரணடைந்தார், பின்னர் காணவில்லை: மன்னாரில் மனைவி சாட்சியம்.

போரின் இறுதிக்கட்டத்தில் தனது கணவரான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மன்னார் மாவட்ட தளபதி ஜான் சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்ததார். அதன் பின்னர் அவரது நிலையை அறிய முடியாதுள்ளதாக நல்லிணக்க ஆணைக்குழு முன் மனைவி விரோனியா சாட்சியம் அளித்துள்ளார். மன்னாரில் இன்று நடைபெற்று வரும் நல்லிண்ணக்க ஆணைக்குழுவின் அமர்வில் சாட்சியமளித்த அவர்..

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மன்னார் மாவட்ட தளபதியாக இருந்த ஜான் எனப்படும் அந்தோனி இராயப்பு கடந்த 2009 மே 18ம் திகதி முல்லைத்தீவில் சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்தார்.தற்போது அவர் எங்குள்ளார் என்று தெரியவில்லை.

போரின் இறுதிக்கட்டத்தில் 2009 மே 16ம் திகதி முள்ளிவாய்க்காலில் இருந்து எனது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் முல்லைத்தீவு நோக்கி வந்தபோது, சனநெரிசலில் எனது கணவரை தவற விட்டேன். மறுநாள் அவர் ஒருவாறு எமது இருப்பிடத்தைத் தேடிக் கண்டுபிடித்து வந்து சேர்ந்தார். கடந்த அடுத்தநாள் 18ம் திகதி அவர் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளாருடன் படையினரிடம் சரணடைந்திருந்தார்.

எனது கணவருடன் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களான இளம்பருதி, வேலவன், பாபு, ஈழவன், ரூபன், குமரன் ஆகியோரும் படையினரிடம் சரணடைந்தனர். அவர்கள் சரணடைந்ததையும் பின்னர் பேருந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதையும் நான் கண்டேன். ஆனால் அதன்பின்னர் அவர் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. எனது கணவரை மீட்டுத் தாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.