யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட சாவகச்சேரி மாணவனது கொலையுடன் தொடர்புபட்ட ஜீவன் என்பவர் ஈ.பீ.டீ.பி உறுப்பினரே என யாழ்மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி ஹத்துரசிங்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனை யாழ் பிராந்தியத்திற்கு பொறுப்பான காவற்துறை அதிகாரி நெவில் பத்ம தேவவும் உறுதிப்படுத்தி உள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் தான் வவுனியா, ஊர்காவற்துறை, யாழ்பப்பாணம் என முன்னுக்கு பின் முரணாக தகவல்களைக் கூறுவதாக தெரிவித்துள்ள படைத்தரப்பினர் இவருக்கு 4 மனைவிகள் இருப்பதாகவும் கூறுகின்றனர். போலி அதிஸ்டலாபச் சீட்டுக்களை விற்றுக் கொண்டிருந்த சமயம் கைது செய்யப்பட்ட இவரிடம் கடத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஜீவன் என்ற இந்த நபர் ஈ.பீ.டீ.பீ.யின் அடையாள அட்டையை வைத்திருப்பதுடன், ஆவணங்கள் சிலவற்றையும் வைத்திருப்பதாக படைத்தரப்பினரது விசாரணைமுலம் தெரிவித்துள்ளனர். ஆனால் ஈ.பீ.டீ.பீ. அவர் தமது உறுப்பினர் அல்லர் என தெரிவித்துவருகிறது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.