கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழையினால் கந்தளாய்க்குளம் நிறைந்துள்ளது. இதனால் அதன் 10 வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன. கந்தளாய், திருகோணமலை மாவட்டத்திலுள்ள பெரிய நீர்ப்பாசனக்குளமாகும்.
இது 114 ஆயிரம் ஏக்கர் அடி நீர் கொள்ளளவுள்ளது. நீண்ட காலத்திற்கு பின் தற்போது தான் இக்குளம் நிறைந்துள்ளது. தற்போது இதன் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கந்தளாய், முள்ளிப்பொத்தானை, தம்பலகாமம், சூரங்கல் போன்ற பகுதி விவசாய நிலங்களே கூடுதலாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
கிழக்கு மாகாணத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக 6 இலட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் உறவினர்களின் வீடுகளிலும், முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் மாத்திரம் 4 இலட்சத்து 21 ஆயிரத்து 809 பேர் பாதிப்படைந்துள்ளனர். பாதிப்படைந்தவர்களில் ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 105 பேர் பொது இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதேவேளை கடும் மழையினால் திருகோணமலை மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது. பலர் இடம்பெயர்ந்து பொது இடங்களிலும் உறவினர். நண்பர் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். தொடர்ந்து மழைபெய்து கொண்டிருப்பதால் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மிகவும் மந்த நிலையில் காணப்படுகின்றது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.