Tuesday, April 06, 2010

இன்று மூடப்படும் பாடசாலைகள் 22ஆந் திகதி மீண்டும் ஆரம்பம்

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளினதும் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் முடிவுற்று, இன்று மாலை முதல் விடுமுறைக்காக அனைத்தும் மூடப்படுகின்றன என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தமிழ், சிங்களப் பாடசாலைகள் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திறக்கப்படும்.

முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் மட்டும் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.

அதேவேளை, கடந்த வருட கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் 10 ஆம் திகதி வெளியிடவும் நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவிக்கின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.