Tuesday, April 06, 2010

லாகூர் - புதுடில்லி பஸ்ஸில் கோடி ரூபா மதிப்புள்ள ஹெரோயின் பறிமுதல்

லாகூரிலிருந்து புதுடில்லி வந்த பஸ்ஸில் 160 கிராம் எடையுள்ள ஹெரோயின் பக்கெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை ஒரு கோடி ரூபா பெறுமதி வாய்ந்தவை என மதிப்பிடப்படுகிறது.

ஹெரோயின் போதை பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கதுறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்ததையடுத்து மேற்படி பஸ் சோதனையிடப்பட்டது. அதன்போது, சிறிய பாக்கெட்டுக்களில் ஹெரோயின் போதை பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. 160 கிராம் எடையுள்ள ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடி.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து வரும் அனைத்து பஸ்களையும் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.