Monday, March 15, 2010

தனிநாட்டுக் கோரிக்கையை தமிழர்கள் கைவிடவில்லை - கனேடியன் தமிழ் காங்கிரஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டது என கொழும்பிலிருந்து கிளம்பியுள்ள செய்திகளுக்கு உடனடியாகப் பதிலளிக்கும் விதத்தில், கனேடியன் தமிழ்க் காங்கிரஸ் சனிக்கிழமை அறிக்கை விடுத்துள்ளது. "த.தே.கூ இன் அறிக்கை தவறாக விவரிக்கப்பட்டுள்ளது.

 ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகளில் உண்மையில்லை. த.தே.கூ க்கும் எங்களுக்குமிடையில் தொடர்ந்து தொடர்புகள் உள்ளன. அவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடவில்லை" என்று கனேடியன் தமிழ்க் காங்கிரசின் தனலைவர் டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்துள்ளார்.

த.தே.கூ இன் 4 கொள்கைப் பிரகடனங்களில், தமிழர்களுக்கான தனிநாடு, தமிழர்களின் சுய நிர்ணய உரிமை, தமிழர்களுக்கான தனித்துவமான அடையாளத்தைப் பேணுதல் மற்றும் 18 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள தமிழர்களின் குடியுரிமை ஆகியன வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் டேவிட் பூபாலபிள்ளை குறிப்பிட்டார். த.தே.கூ இற்கு பின்னால் 1.3 மில்லியன் புலம்பெயர் தமிழர்க்ள் இருப்பதாகவும், எமக்கு என்ன தேவை என்பதில் நாங்கள் உறுதியாகவே உள்ளோம் என்றும் மேற்கொண்டு அவர் கூறினார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.