புகலிடம் கோரி வந்த தமிழ் மக்கள் சிலரை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பது அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் செயல் என்று தமிழ் குழுக்கள் தெரிவித்துள்ள தாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அண்மையில் மூன்று தமிழர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு அனுப்பி வைத்தது.
உள்நாட்டு யுத்தம் கடந்த வருடம் முடிவடைந்துள்ளதால் நிலைமை சீரடைந்துள்ளதாகக் கூறும் அவுஸ்திரேலிய அரசாங்கம் மேலும் 38 பேரை விரைவில் அனுப்பி வைக்க உத்தேசம் கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் அகதிகள் தொடர்பான புதிய வழிறைகள் அறிவிக்கப்படவிருப்பதைத் தொடர்ந்தே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வழிறைகள் இலங்கையின் முன்னேற்றங்களைப் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், அவுஸ்திரேலிய தமிழ் சங்கங்களின் சம்மேளனத்தைச் சேர்ந்த டாக்டர் விக்டர் ராஜகுலேந்திரன் கூறுகையில், அவர்கள் இலங்கையை அடைந்ததும் கைது செய்யப்படலாம் என அச்சம் தெரிவித்துள்ளார்.
“எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா கூட கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் சகல விடயங்களுமே அங்கு இடம்பெறுகின்றன. சக்தி வாய்ந்த அந்த மக்களுக்கே அது போன்ற சம்ப வங்கள் நடக்கிறதென்றால் சாதாரண தமிழ் மக்களுக்கு என்ன நடக்கும்? அதுவும் சந்தேகத்திற்குரிய முன்னாள் விடுதலை புலிகள் என்று கருதப்படுவோர் நிலைமை எவ்வாறிருக்கும்?
அவர்களின் உயிருக்கே ஆபத்து” எனவும் கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐ. நா. வழிமுறைகள் வெளியிடப்படும் வரை தாமதிக்க மறுத்து அவுஸ்திரேலிய அரசாங்கம் மக்கள் உயிர்களை ஆபத்தில் சிக்க வைக்கிறது.
இலங்கை வெளிநாட்டமைச்சர்,எங்களுக்கு சொந்த ஆலோசனை உண்டு, எமது உயர் ஸ்தானிகர் அங்கு இருக்கிறார். அவர் எல்லா தகவல்களையும் பெறுகிறார். அந்த தகவல்களின்அடிப்படையிலேயே நாம் மதிப்பீடு களை செய்கிறோம்” என்று எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கூறுவார். அவை சரியானவை தானா?
நாம் உறவினர்கள் மற்றும் ஏனைய மக்களிடம் பெறும் எல்லாத் தகவல்களையும் அவர்கள் சுதந்திரமாக எல்லா இடங்களுக்கும் சென்று பெறமுடியுமா?
அவர்கள் எங்களை அழைக்கவேண்டும். எங்களிடம் உரையாடவேண்டும். ஆனால் ஒருபோதும் அவர்கள் அதனை செய்வதில்லை என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.