Monday, March 15, 2010

இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை 18 மாதங்களுக்கு நிறுத்தப்படலாம்:-மத்திய வங்கி காப்பாளர் அஜித் நிவாட் கப்ரால்.

சிறிலங்காவுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை 18 மாதங்களுக்கு நிறுத்தப்படலாம் எனவும் ஆனால் அதனை எதிர்கொள்வதற்கு அரசு தன்னை தயார்ப்படுத்தியுள்ளதாகவும் சிறீலங்காவின் மத்திய வங்கி காப்பாளர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (12) சுகததாசா விளையாட்டு மைதானத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையின் இழப்பினால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த வரிச்சலுகையை நிறுத்தப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் கடந்த மாதம் அறிவித்திருந்தது. தற்போதைய நிலமைகளை அவதானிக்கும் போது வரிச்சலுகை 18 மாதங்களுக்கு நிறுத்தப்படலாம் என தெரியவருகின்றது. எனவே அதனை சமாளிப்பதற்கு நாம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

போர் நடைபெற்றபோதும் நாம் மிகவும் வலுவான பொருளாதாரத்தை தக்கவைத்திருந்தோம். தற்போது போருக்கு பின்னரான காலப்பகுதியில் அது மேலும் வலுப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனிடையே அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் தலைமையிலான குழுவினர் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்பாக பேச்சுக்களை மேற்கொள்வதற்காக இன்று பிரசல்ஸ் செல்லவுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.