Saturday, July 20, 2013

வவுனியாவில் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட பல்கலை. மாணவன்


வவுனியா- நெடுங்கேணி பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்களினால் விசாரணைகளுக்கென அழைத்துச் செல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவன் கடுமையாக தாக்கப்பட்டு, சித்திரவதைகளுக்குட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒரு மாத காலத்திற்குப் பின்னர் உறவினர்களினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
யாழ்.பல்கலைக்கழக மாணவனும், முன்னாள் போராளியுமான தேவராசா பிரதீபன் (வயது26) என்ற குறித்த இளைஞர் கடந்த மாதம் 15ம் திகதி வீட்டிலிருந்த சமயம் 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் விசாரணைக்கென அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து மூன்று தினங்களின் பின்னர் அதே நபர்களினால் வீட்டில் கொண்டுவந்து விடப்பட்டுள்ளார்.
விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டிருந்த 3 தினங்களில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதுட ன் சூடேற்றிய இரும்பு கம்பிகளால் சூடப்பட்டும், சிகரட்டினால் சுடப்பட்டும் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து உறவினர்கள் மிகுந்த அச்சத்தினால் விடயத்தை அப்படியே மூடிமறைத்துள்ளனர்.
இதேவளை குறித்த இளைஞர் திருமணமாகி ஒரு பிள்ளையின் தந்தை எனவும், முன்னாள் போராளியான இவர் புனர்வாழ்வுக்குட்படுத்தப்படாமல், குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்ந்த நிலையில் கிராமத்தில் அயலவருடன் ஏற்பட்ட தகராறையடுத்தே விசாரணைக்கு இனந்தெரியாத நபர்கள் அழைத்துச் சென்று தாக்கி, சித்திரவதை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.