13வது அரசியலமைப்பு திருத்தத் சட்டத்தில் அதிகாரப் பகிர்வு, அதற்கு ஒத்ததான பட்டியலில் உள்ளவற்றை நடைமுறைபடுத்துதல் உள்ளிட்ட சிக்கல் நிலைமைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையொன்றை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அமைச்சர் கூறுகையில்,
இதற்கு முன்னர் தமிழ்க் கட்சிகளுடன் அரசாங்கம் மேற்கொண்ட முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக் குடியமர்த்துவது மற்றும் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் இடம்பெறவுள்ள இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகளானது அதிகாரப் பகிர்வு மூலம் அரசியல் தீர்வு சம்பந்தப்பட்ட விடயங்களை ஆராய்வதற்கே ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது உள்ளுராட்சிமன்றங்களுக்கு அதிகாரத்தை வழங்குவது தொடர்பாக விசேடமாக கவனம் செலுத்துவது குறித்தே பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் மிகவும் பலனளித்துள்ளதாகவும் அமைச்சர் இராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.