Tuesday, January 25, 2011

அரிசிமாவில் பாண் தயாரிக்கும் ஆலை திறப்பு! கோதுமைப் பாணுக்கு பிரியாவிடை

கோதுமை மாவிற்குப் பதில் அதிகளவு அரிசி மாவைப் பயன்படுத்திப் பாண் தயாரிக்கும் தொழில்நுட்பம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் 80 சதவீதம் அரிசி மாவைக் கொண்ட பாணைத் தயாரித்து சந்தைப்படுத்த முடியும் என்று மத்திய பிரதேச அபிவிருத்தித் திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மிகப்பிந்திய நவீனத்துவம் வாய்ந்த அரைக்கும் தொழில் நுட்பம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அரிசிமா ஆலை வெயாங்கொடவில் கடந்த 20ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிமால் கப்ரல் ஆலையைத் திறந்து வைத்தார்.

இந்த ஆலையின் மூலம் 20 சத வீதம் கோதுமை மாவுடன் உயந்த பட்சம் 80 சத வீதம் அரிசி மாவினை கலந்து பாணை தயாரிக்க முடியும். இது மக்களுக்குப் புதிய சுவையை அறிமுகப்படுத்துவதுடன் கோதுமை மாவில் தங்கி இருப்பதையும் வெகுவாகக் கட்டுப்படுத்தும் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.

'வடக்கு-கிழக்கில் வயல் நிலங்கள் முழுவதும் பயிரிடப்பட்டதும் நாட்டின் நெல் உற்பத்தி குறிப்பிடத்தக்களவு அதிரிக்கும். இதனால் மிகையான நெல் உற்பத்தி கிடைக்கும். இதனைக் கட்டுப்பாட்டு விலையில் கொள்வனவு செய்து அந்த அரிசியை மூலப் பொருளாக கொண்டு அரிசி மா பாணைத் தயாரிக்கலாம்.

அத்துடன் கோதுமை மா சார்ந்த உற்பத்திகளைக் காட்டிலும் அரிசிமா சார்ந்த உற்பத்திகள் ஆரோக்கியமானது என்ற வகையில் நாட்டிற்கு பல்வேறு நன்மைகள் இதன் மூலம் கிடைக்கும்' என்று பிரதேச அபிவிருத்தித் திணைக்களத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.