Thursday, January 13, 2011

அதிமுக ஆதரவு பிரச்சாரத்திற்காக அதிரடியாக களம் இறங்கும் விஜய்!! 25 லட்சரூபாய் செலவில் விஜய்க்காக பிரசார வாகனம்!!

எத்தனை ?ஸ்பெக்ட்ரம்? வந்தாலும் சமாளிக்க நம்ம குஷ்பு இருக்கிறார்? என்று குஷியாக இருந்தது தி.மு.க. வட்டாரம். ஆனால், அ.தி.மு.க.விற் காக தேர்தல் பிரசாரம் செய்ய நடிகர் விஜய்க்காக கேரளாவில் சொகுசு வாகனம் தயாராகிறது என்ற செய்தியால் தி.மு.க. தரப்பு ரொம்பவும் ?அப்செட்? ஆகியிருக்கிறதாம்.

வேட்டைக்காரனுக்குப் பிறகு விஜய்யை ஒரு தரப்பினர் துரத்த ?காவலன்? படத்தைத் திரையிட தியேட்டர்கள் மறுக்க விநியோகஸ்தர்கள் நிபந்தனை விதிக்க இப்படி ஏகப்பட்ட சிக்கலில் தவித்த விஜய்க்கு போயஸ்கார்டன் ஆதரவுக்கரம் நீட்டியது.

தி.மு.க. ஆதரவாளரான இயக்குநர் சந்திரசேகர் தன் மகனுக்கு வந்த சோதனையைத் தடுத்து நிறுத்த ஜெயலலிதாவைச் சந்தித்தார். இது தி.மு.க. வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய விஜய் தயாராகி வருவதாகவும், அவருக்காக சொகுசு வாகனம் ஒன்று கேரளவில் தயாராவதாகவும் செய்திகள் வர விசாரணையில் இறங்கினோம்.

?கேரள மாநிலம் எர்ணாவூர் மாவட்டம் கருமானூர் என்ற இடத்தில் ?கலப்புறபரம்பில் ஆட்டோ மொபைல்ஸ்? உள்ளது. திரையுலகினரின் ?கேரவன் ஸ்பெஷலிஸ்ட்? இவர்கள்தான். கடந்த வாரம் தமிழ்நாட்டில் உள்ள யாதவத் தலைவர் ஒருவர் அங்கு சென்றிருக்கிறார். தனது டெம்போ டிராவலர் வண்டியை தேர்தல் பிரசார வண்டி போல் மாற்றித் தரச் சொல்லியிருக்கிறார்.

உடனே ஆட்டோமொபைல்ஸ் மேலாளர் பைஜீ, ?நடிகர் விஜய்யின் பிரசார வண்டி வேலை முடிந்த பிறகுதான் உங்கள் வண்டியைப் பார்க்க முடியும்? என்று சொல்ல, வியந்து போன அந்த யாதவத் தலைவர் விஜய்க்காக உருவாகி வரும் தேர்தல் பிரசார வாகனத்தைப் பார்த்து ஆச்சரியத்தின் எல்லைக்கே போயிருக்கிறார்.

பிரசார வாகனத்தில் ஏ.சி., சமையல் அறை, டி.வி., படுக்கை வசதி, பாத்ரூம், கழிப்பறை போன்ற சகல வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. வண்டியின் டாப் திறந்து வெளியே வருவதற்கு சின்ன ?லிஃப்ட்? வசதியும் செய்யப்பட்டிருக்கிறது.

சுமார் 25 லட்ச ரூபாய் செலவில் விஜய்க்காக பிரமாண்டமாக உருவாகி வருகிறதாம். இதைக் கேள்விப்பட்டதும் ?கலப்புறபரம்பில் ஆட்டோமொபைல்ஸ்? மேலாளர் பைஜீயிடம் பேசினோம்.

?உண்மைதாங்க நடிகர் விஜய்க்காக பிரசார வண்டி வடிவமைக்கப்பட்டு வருகிறது. அதன் வேலை முடிய இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும். நடிகர் விஜய்க்கு மட்டுமல்ல, கேரள நடிகர்கள் நான்கு பேருக்கு ?கேரவன்? வண்டிகளைத் தயார் செய்து வருகிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கும் பிரசார வண்டியை வடிவமைத்துக் கொடுத்தது நாங்கள்தான்?? என்றார் பெருமையுடன். நடிகர் விஜய் தேர்தல் பிரசாரத்திற்கு வருவது உறுதியாகி விட்டது. அவர் யாருக்காக பிரசாரம் செய்யப் போகிறார் அவரது ரசிகர் மன்றத் தலைவர்கள் சிலரிடம் பேசினோம்.

?இதில் என்ன சந்தேகம்? அ.தி.மு.க.விற்காகத்தான் இளைய தளபதி விஜய் தேர்தல் பிரசாரம் செய்வார். விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் கருணாநிதிக்கு நெருக்கமானவர். ஆனால், என்றைக்கு விஜய் டெல்லி சென்று ராகுலைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்தாரோ அன்று முதல் குடைச்சல் ஆரம்பித்துவிட்டது. விஜய் அரசியலில் நுழைந்தால் வாரிசுகள் அவுட்டாகி விடுவார்களோ? என்று பயந்த ஆளும் கட்சி, இளைய தளபதிக்கு ?டார்ச்சர்? கொடுக்க ஆரம்பித்தது. அவருக்கு எதிராக தியேட்டர் அதிபர்களைத் தூண்டி விட்டது.

வில்லு, வேட்டைக்காரன் என விஜய்யின் ஆறு படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்ததால் ஏற்பட்ட நஷ்டத்தை விஜய் தரவேண்டும்? என்று மது ரையில் தியேட்டர் அதிபர்கள் போர்க்கொடி தூக்கினர். இதன் பின்னணியில் ஆளும் கட்சி இருந்தது. தியேட்டர் அதிபர்களின் இந்தக் கோரிக்கையால் கடுப்பான திருச்சி விஜய் ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் ராஜா ஒரு காரியம் செய்தார்.

படம் ஓடவில்லை என்று நஷ்ட ஈடு கேட்பவர்கள், படம் ஓடினால் லாபத்தில் பங்கு தருவார்களா?? என்கிற ரேஞ்சில் சுவரொட்டிகளை ஒட்டவே, சேனல் ஆட்களுக்கு கோபம் தலைக்கு ஏறியது. இதனாலேயே விஜய்யின் ?காவலன்? படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் தடையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தியேட்டர் அதிபர்கள் ஒத்துழைப்பு தராததால் டிசம்பர் மாதம் ரிலீஸாக வேண்டிய ?காவலன்? பொங்கலுக்குத்தான் வருகிறது.

கடந்த நவம்பர் மாதம் விஜய் நற்பணி மன்ற மாவட்ட நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்தார் விஜய். ஜே.எஸ்.திருமண மண்டபத்தில் வைத்து ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் அவரது அப்பா தனித்தனியாக சந்தித்துப் பேசினார்கள்.

நாங்கள் அ.தி.மு.க.விற்கு ஆதரவு நிலை எடுத்திருக்கிறோம். வரும் தேர்தலில் ?விஜய் மக்கள் இயக்கம்? அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபடும். உங்கள் கருத்து எ ன்ன?? என்று கேட்டார்கள். அனைவரும் ?ஓ.கே? சொல்லிவிட்டார்கள். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவே விஜய்யுடன் பேசியிருக்கிறார். அதன்பிறகு தான் ஜெயலலிதாவைச் சென்று சந்தித்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக்கி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கலாம் என்று ஆலோசனைக் கூட்டத்தில் ரசிகர்கள் கருத்துச் சொன் னதை வெகுவாகவே ரசித்திருக்கிறார் விஜய். என்றாலும், முதலில் தேர்தல் பிரசாரம் செய்து ?பல்ஸ்? பார்ப்பது என்ற முடிவில் இருக்கிறார் விஜய்?? என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

இந்நிலையில், பிப்ரவரி முதல் வாரத்தில் திருச்சியில் மாநாடு நடத்தி, அரசியல் பாதையைத் தொடங்குவோம். அ.தி.மு.க.விற்கு ஆதரவாக நாம் எடுக்கும் முடிவை மக்களிடம் விளக்குவோம்? என்று சொல்லியிருக்கிறார் விஜய்? என உற்சாகத்தில் இருக்கிறார்கள் ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகள்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.