முன்னாள் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத்பொன்சேகா தொடர்பில் நியமிக்கப்பட்ட நீதிமன்ற வழக்கு விசாரணைகள் அடுத்த மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்பிலான வழக்கு விசாரணையில், லெப்டினன் ஜெனரல் ஜெகத் ஜயசூரியவின் பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்ட மூவர் அடங்கிய 2ஆவது நீதிமன்ற விசாரணைக் குழுவின் இன்றைய கூட்டத்தின் போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் இராணுவத் தளபதி சட்டவிரோத ஆயுதக்கொள்வனவு தொடர்பில் 109E பிரிவில் கைது செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
அதேவேளை, பொன்சேகா விசாரணை தொடர்பிலான 1ஆவது நீதிமன்ற குழுக்கூட்டமும் இன்றைய தினம் நடை பெற்றமை குறிப்பிடத்தக்கது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.