Sunday, January 10, 2010

மஹிந்த ராஜபக்சவின் யாழ்ப்பாண விஜயம் மக்களுக்கு திருப்தியை தரவில்லை


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் யாழ்ப்பாணத்துக்கான விஜயம் தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் திருப்தி கொள்ளவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாண மக்களுக்கான பல்வேறு உறுதிமொழிகளை வழங்குவார் என்ற எதிர்பார்ப்புகள் நிலவின.

எனினும் அவரது விஜயத்தின் போது ஆற்றிய உரைகளில் அவ்வாறு எதிர்பார்க்கப்பட்ட எவ்வித உறுதிமொழிகளும் இடம்பெற்றிருக்கவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.

பொதுவாக அரசியல் மேடைகள் பலவற்றில் தமிழ் மொழியில் பேசிய கருத்துக்களை இடத்துக்கு ஏற்ற வகையில் கொஞ்சம் புதுப்பித்து ஜனாதிபதி உரையாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் சென்று பொதுமக்களுக்கு உறுதிமொழிகள் எதனையும் வழங்காது, படையினரை தாம் காட்டிக் கொடுக்கப் போவதில்லை என்ற கருத்தை வெளியிட்டமையில் இருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமிழர்களின் வாக்குகளை காட்டிலும் சிங்களவர்களின் வாக்குகளையே எதிர்ப்பார்த்திருப்பது தெளிவாவதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.



















1 comment:

  1. கடவுள் என்று ஒன்று இருந்தால் இது எப்படி
    சாத்தியப்படும் ,தமிழனுக்கு கடவுளும் கிடையாது .
    கடவுள் பிரபாகரனை தவிர .

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.