தமிழீழத் தேசியத்தலைவரின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் இறுதி வணக்க நிகழ்வுகள் வட்வெட்டித்துறையில் நடைபெற்றது. அவரின் பூதவுடலுக்கு ஆயிரம் வரையிலான மக்கள் இறுதி வணக்ககத்தைச் செலுத்தியுள்ளனர்.
வேலுப்பிள்ளை அவர்களின் இறுதி வணக்க நிகழ்வுகள் வட்வெட்டித்துறையில் அமைந்துள்ள அவரது மகளின் வீட்டில் நடைபெற்றன. காலை 9:30 மணி முதல் இந்து முறைப்படியான இறுதிக் கிரிகைகள் நடைபெற்றன. இங்கு தமிழகத்தில் இருந்த வருகை தந்த திருமாவளவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் செ.கஜேந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், இடதுசாரி முன்னணி சார்பில் கலந்துகொண்ட பிரமுகர் ஒருவரும் வணக்க உரைகளை பேசினர்.
பிற்பகல் 2:30 மணியளவில் வல்வெட்டித்துறை பொது மயானத்தில், வேலுப்பிள்ளையின் சகோதரனின் மகன் கொள்ளி வைக்க, திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் உடலம் தீயில் சங்கமமாகியது.
































0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.