கிளிநொச்சி உட்பட்ட வன்னிப் பகுதிகளுக்குக் கடந்த பெப்ரவரி, மார்ச் மாதங்களில் உணவு, மருந்துப் பொருள்களை எடுத்துச் செல்வதற்குப் பாதுகாப்பு அமைச்சு அனுமதி மறுத்துள்ளது.
.
இதனால் அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் பேரவல நிலையை எதிர்கொள்ளும் இக்கட்டுத் தோன்றியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இலங்கையில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள் மற்றும் முக்கிய அரச சார்பற்ற அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் குழு வெளியிட்டுள்ள தனது வாராந்த அறிக் கையிலேயே இதுகுறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட் டிருப்பதாவது:
கிளிநொச்சியில் கடந்த சில வாரங்களாகப் பெய்த மழை காரணமாக 4,025 ஏக்கர் நெல் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன என மாவட்டத்தின் அரச அதிபர் தெரிவிக்கின்றார்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவினது பாதுகாப்பு நிலைமை தொடர்ந்தும் பதற்றமானதாகக் காணப்படுகின்றது. வட, தென் முன்னரங்குகளில் தொடர்ந்தும் துப்பாக்கி மோதல்கள் இடம்பெறுகின்றன.முன்னரங்க நிலைகளிலிருந்து ஆண்டான்குளம், தண்ணீர் முறிப்புக்குளம் மற்றும் நாயாறு பகுதிகளை நோக்கிச் ஷெல் வீச்சும் இடம்பெறுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த ஐந்து வயதிற்கும் குறைவான 500 குழந்தைகள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்பட்டுள்ளமையை மருத்துவமனை பதிவு செய்துள்ளது.
செப்ரெம்பர் 3ஆம் திகதியிலிருந்து உயிலங்குளம் சோதனைச் சாவடி மூடப்பட்டுள்ளது.
மாந்தையில் மக்கள் இடம்பெயர்வு
மாந்தை மேற்குப் பகுதியில் கடந்த ஒரு வார காலப் பகுதியில் பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 1,600 குடும்பங்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களாக பதிவு செய்யப் பட்டுள்ளனர் என அரச அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக இவர்கள் கிராமங்களுக்கு உள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர்.
பெப்ரவரி மாதம் தொடக்கம் ஓமந்தைச் சோதனைச் சாவடியூடாக பொதுமக்களின் பாவனைக்காக உணவுகளை எடுத்துச் செல்வதற்குப் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கவில்லையென மார்ச் 26ஆம் திகதி கிளிநொச்சி அரச அதிபர் தெரிவித்தார்.கிளிநொச்சியில் உணவுப் பற்றாக் குறை காணப்படுவதாக பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் தெரிவிக்கின்றன. மாவட்டத்தின் வடக்குக் கிழக்குப் பகுதியில் உள்ள சில கிராமங்களில் கோதுமை மாவிற்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்துக்கு என வவுனியாவில் சேமித்து வைக்கப்பட்ட 2008இன் முதல் காலாண்டிற்கான மருந்து களை அங்கு கொண்டு செல்வதற்குப் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கவில்லையென மாவட்ட சுகாதார அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.அரச மருத்துவ நிலையங்களில் காணப்படும் மருந்து பற்றாக்குறை இதன் காரணமாக மேலும் மோசமடைந்துள்ளது.
வவுனியாவில் நிலைமை தொடர்ந்தும் பதற்றமானதாகக் காணப்படுகின்றது. மார்ச் 25ஆம் திகதி மன்னாரிலிருந்து உள்நாட்டில் இடம்பெயர்ந்த 15 குடும்பங்கள் வவுனியா வந்தன.விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து சிறிய எண்ணிக்கையான மக்கள் கடல் மூலம் வந்து சேர்ந்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் அமைப்புகளின் புதிய நடைமுறையின்படி மாந்தை மேற்கிலிருந்து இடம்பெயர்ந்த அனைவரும் களி மோட்டைப் பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட முகாமில் இதுவரை 119 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை பூந்தோட்டம், சிதம்பரபுர முகாமில் உள்ள மக்களுக்குக் கடந்த மூன்று மாதகாலமாக உலர் உணவு வழங்கப்படவில்லை. பாதுகாப்பு நிலைவரம் காரணமாக சில இடங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்புகள் பணியை இடைநிறுத்தியுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.