Wednesday, April 02, 2008

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட்ட உயர் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை விட்டு விலகியுள்ளனர்.

[ புதன்கிழமை, 02 ஏப்ரல் 2008]


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் செயலர் ஹசன் அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பசீர் சேகு தாவூத் ஆகியோர் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை விட்டு விலகியுள்ளனர்.

இவர்கள் மூவரும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதற்காகவே தமது பதவிகளை விட்டு விலகியுள்ளதாக காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணசபையின் தேர்தல் எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியும் யானைச் சின்னத்தில் இணைந்து போட்டியிட இணங்கியுள்ளன.

இதனடிப்படையில் ரவூப் ஹக்கீம் யானைச் சின்னத்தின் கீழ் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.