[ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2007] சிறிலங்காவிற்கான அபிவிருத்தி உதவிகளை உறைநிலையில் வைப்பதற்கு கனடா, நெதர்லாந்து, ஜேர்மனி போன்ற நாடுகள் முடிவு செய்துள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த மூன்று நாடுகளும் சிறிலங்காவிற்கான உதவிகளை எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து நிறுத்துவதற்கு முடிவெடுத்துள்ளன. சிறிலங்காவில் அபிவிருத்திப் பணிகள் முன்னேற்றம் காணப்படாது விட்டாலும், அதற்கென ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அபிவிருத்தி உதவிகளை மாற்றப்போவதில்லை என உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு இந்த நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த நாடுகளின் முடிவுக்கு அரசினால் சமர்ப்பிக்கப்பட்ட போருக்கான வரவு-செலவுத் திட்டமும் ஒரு காரணம் என அரச சார்பற்ற நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இருந்த போதும் சிறிலங்காவிற்கான உதவிகளை அவை உறைநிலையில் வைப்பதற்கு தீர்மானித்துள்ளதான. இந்த காரணங்களால் உதவி வழங்கும் நாடுகள் அபிவிருத்தி பணிகளுக்காக மேலதிக நிதியை எமக்கு வழங்கப்போவதில்லை. எனினும் 2008 ஆம் ஆண்டுக்கு என முன்னரே ஒதுக்கப்பட்ட தொகையில் மாற்றம் ஏற்படப்போவதில்லை என அவை மேலும் தெரிவித்துள்ளன. தற்போதைய போர் நிலமை தொடர்ந்தால் மேலும் சில உதவி வழங்கும் நாடுகளும் சிறிலங்காவிற்கு உதவி வழங்குவதை நிறுத்தலாம் எனவும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
Sunday, November 11, 2007
சிறிலங்காவிற்கான உதவிகளை நிறுத்த உதவி வழங்கும் நாடுகள் முடிவு.!!
Sunday, November 11, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.