[ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2007]
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மறைவையொட்டி தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆறரைக் கோடி தமிழ்மக்களின் உணர்வுகளை இரங்கல் செய்தி மூலம் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி வெளியிட்டமையானது ஆறாத்துயரில் ஆழ்ந்திருந்த எம் எல்லோரையும் ஓரளவேனும் ஆறுதலடையச் செய்துள்ளது என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலிருந்து வெளிவரும் நக்கீரன் வாரமிருமுறை இதழுக்கு (14.11.07) பா. நடேசன் அளித்துள்ள சிறப்பு நேர்காணல்:
விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராக, புலிகளின் காவல்துறைப் பொறுப்பாளரான நடேசனை நியமித்திருக்கிறார் பிரபாகரன்.
புலிகளின் மூத்த தலைவர்களில் நடேசன் மிக முக்கியமானவர். தமிழ்ச்செல்வனின் படுகொலைக்குப் பதிலடி தரும் வகையில் மிகப் பெரிய தாக்குதலை இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக நடத்த புலிகள் தலைமை திட்டமிட்டிருப்பதாக பரவாலக பேச்சுக்கள் எதிரொலிக்கும் நிலையில்... நக்கீரனின் பேட்டிக்காக நடேசனிடம் ஈ-மெயிலில் சில கேள்விகளை முன்வைத்தோம்.
தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வனின் மறைவு எப்படி நிகழ்ந்தது?
அரசியல்துறையின் சமாதான பேச்சுவார்த்தைக்கான தயார்ப்படுத்தல்கள், மக்கள் அமைப்புகளுடனான சந்திப்புகள் என்பன இடம் பெரும் இடத்தில் அவர் தனது சக போராளிகளுடன் தங்கியிருந்த பொழுது சிறிலங்கா அரசின் விமானப் படையின் குண்டு வீச்சுக்கு இலக்காகி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். இச்சம்பவம் இடம்பெற்ற இடம் ஒரு இராணுவ அலுவலகமோ, அல்லது படைத்துறை சார்ந்த அலுவலகமோ அல்ல. முற்று முழுதாக அரசியல் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக மக்கள் அமைப்புக்களை சந்திக்கும் இடமாகும். கிபிர், மிக் போன்ற நவீன போர் விமானங்கள் தொடர்ச்சியாக ஏராளமான குண்டுகளை வீசி இப்பேரவலத்தை விளைவித்தன.
சு.ப.தமிழ்ச்செல்வனின் மறைவு என்பது அமைதி வழிப் பேச்சுக்களுக்கான ஒரு பின்னடைவு என்று கூறப்படுகிறதே?
ஆம். தொடர்ச்சியாக எல்லாப் பேச்சுவார்த்தைகளிலும் கலந்து கொண்டு வருபவர். அரசுத் தலைவர்கள், இராஜதந்திரிகள் என்போருடன் தமிழ் மக்களின் பிரச்சனையை விளக்கமாக எடுத்துக் கூறி வருபவர். பேச்சுவார்த்தையில் அனுபவம் உள்ளவர். இவ்வாறான ஒருவரை குண்டு வீசி அழிப்பதென்பது பேச்சுவார்த்தைக்கு ஒரு பின்னடைவே.
அரசியல்துறையில் சு.ப.தமிழ்ச்செல்வனின் செயற்பாடுகள் குறித்த உங்களின் கருத்துகள் என்ன?
அரசியல்துறையில் மிக ஆற்றலுடனும் மதிநுட்பமாகச் செயல்பட்டவர். கடந்த 14 வருடங்களாக தமிழீழத்தில் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்து செயலாற்றி நிறைய அனுபவங்களைப் பெற்ற பொறுப்பாளராவார். அரச தலைவர்கள், இராஜதந்திரிகள் எனப்பல சர்வதேச பிரமுகர்களுடன் அரசியல் பேச்சுவார்த்தைகளை இராஜதந்திர ரீதியாக எடுத்துச் சென்று விளக்குவதில் வல்லவர். தமிழீழ போராளிகள், பொதுமக்களுடன் மிக அன்பாகவும் பண்பாகவும் புன்சிரிப்புடனும் பழகி அவர்களின் இதயங்களை வென்றவர். தளபதிகள், போராளிகள், பொறுப்பாளர்கள் அனைவரும் அவர்மீது மிகுந்த அன்பையும், பாசத்தையும் வைத்திருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையின் பொறுப்பாளராக இருக்கும் உங்களுக்கு அரசியல்துறை பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டிருக்கிறது. இரண்டு பொறுப்புகளையும் நீங்கள் முன்னெடுத்து செல்ல முடியுமா?
நான் அரசியல்துறைப் பொறுப்பாளராக மட்டுமே செயற்படுவேன். காவல்துறைப் பொறுப்பிற்கு எமது தலைமைப்பீடத்தால் வேறு ஒருவர் வெகுவிரைவில் நியமிக்கப்படுவார்.
இலங்கை அரசுக்கு பல்வேறு நாடுகள் இராணுவ உதவி செய்து வருவதால் தமிழீழ விடுதலைப் புலிகள் பலவீனமடைந்து வருவதாக கூறப்படுகிறதே?
அது முற்றிலும் தவறான கருத்து. கடந்த 25 வருடங்களிற்கு மேலாக பல்வேறு நாடுகள் இராணுவ உதவிகளைச் செய்து வந்தாலும் சிறிலங்கா அரசால் எம்மை வெல்ல முடியவில்லை. ஆனால் எமது விடுதலை இயக்கம் மக்கள் மயப்பட்டு, மக்கள் விடுதலை இயக்கமாக, தேசிய இயக்கமாக பரிணாமம் பெற்று வளர்ச்சி கண்டுள்ளதால் யார் எந்த உதவியை சிறிலங்கா அரசிற்கு வழங்கினாலும் நாம் பலவீனமடைய மாட்டோம்.
பாலசிங்கம் மற்றும் தமிழ்ச்செல்வன் மறைவுக்குப் பின்னர் புலிகள் தரப்பில் சர்வதேச சமூகத்தில் லொபி செய்வதற்கு ஒரு தலைவர் இல்லை என்கிற கருத்து பற்றி உங்கள் நிலைப்பாடு?
நாம் எல்லோரும் எமது தேசியத் தலைவர் அவர்களின் வழிநடாத்தலின் கீழ் சகல துறைகளையும் பிரச்சனைகளையும் கையாளக் கூடிய முறையில் வழிநடாத்தப்படுகின்றோம். இந்த வகையில் கடந்த காலத்தைப் போலவே எதிர்காலத்திலும் சர்வதேச சமூகத்தின் மத்தியில் எமது அரசியல் வேலைகளை முன்னெடுத்துச் செல்லும் ஆற்றல் எம்மிடமுண்டு.
தமிழ்ச்செல்வனின் மறைவுக்கு பழிவாங்கும் வகையில் பிரபாகரன் மிகப் பெரிய யுத்தம் ஒன்றை நடத்துவார்- அதுவே ஈழ விடுதலைப் போரின் இறுதி யுத்தமாகவும் இருக்கும் என்றும் தமிழகத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அது பற்றி உங்கள் கருத்து?
எமது மக்களும் மண்ணும் விடுதலை பெற்று சுபீட்சமான வாழ்வு அமையுமட்டும் எமது தலைவர் அவர்கள் இந்த விடுதலைப் போரை வேகமாக முன்னெடுத்துச் செல்வார். அவரது வழிநடாத்தலின் ஆற்றலிலும் வேகமும் வரவர அதிகரித்தே செல்லும். அவ்வாறானதொன்றையே இக்கேள்விக்கு என்னால் கூற முடியும்.
2008 தைப்பொங்கல் நாளில் தமிழீழப் பிரகடனத்தை பிரபாகரன் வெளியிடப் போகிறார் என்று இலங்கை அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே அடிக்கடி கூறிவருகிறாரே? அது உண்மையா?
சிறிலங்கா அரச அமைச்சர்களின் இவ்வாறான கருத்துக்கள் அடிக்கடி வெளியிடப்படுவதுண்டு. நாம் எமது விடுதலையை வென்றெடுப்பதற்காக அதற்கான மூலோபாய வேலைத்திட்டம் ஒன்று இருக்கிறது. அதன்படியே எமது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்.
தமிழ்ச்செல்வன் மறைவுக்காக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இரங்கல் தெரிவித்தார். அதுபற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழீழ தேசத்தின் மீதும், தமிழ் மக்களின் மீதும் அளவிலா அன்பும், பாசமும் கொண்டவர். நாம் விடுதலை பெற்று சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதை விரும்புவார். தமிழ் இன உணர்வு மிக்கவர். கவிதை வடிவில் அவர் தெரிவித்த இரங்கல் செய்தி ஆறாத்துயரில் ஆழ்ந்திருந்த எம் எல்லோரையும் ஓரளவேனும் ஆறுதலடையச் செய்துள்ளது. அதற்காக நாம் அவரிற்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்ச்செல்வன் மறைவுக்கு தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இரங்கல் தெரிவித்ததை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எதிர்த்துள்ளார். அத்துடன் கருணாநிதியின் அரசைக் கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
தமிழக முதலமைச்சர் அவர்கள் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் மறைவையொட்டி தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆறரைக்கோடி தமிழ் மக்களின் உணர்வுகளையே தனது இரங்கல் செய்தி மூலம் பிரதிபலித்துள்ளார்.
தமிழகத்துடன் 1990 ஆம் ஆண்டு வரை நீங்கள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவராக நாங்கள் அறிகிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சனையில் எங்கள் மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் தமிழக மக்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?
தமிழக மக்கள் எமது உடன்பிறப்புக்கள், அவர்கள் எப்போதும் எம்முடன் இருப்பவர்கள். எமக்கு ஒன்றென்றால் அவர்கள் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றாகக் கொதித்தெழுவார்கள். அவர்கள் தொடர்ந்தும் எமது போராட்டத்திற்காக, நாம் விடுதலை அடையும் வரை எமக்காகக் குரல் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். தமிழக அரசும், மத்திய அரசும் எமது போராட்டத்தை அங்கீகரித்து எமது மக்களின் விடுதலையை வேகமாக வென்றெடுப்பதற்கு சகல அங்கீகாரங்களையும் எமக்குத் தர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று பா. நடேசன் தெரிவித்துள்ளார்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.