[வெள்ளிக்கிழமை, 09 நவம்பர் 2007]
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகள் மீதான வான் குண்டுத்தாக்குதலில் விழுப்புண் அடைந்திருந்த மற்றொரு போராளி இன்று வெள்ளிக்கிழமை வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
சிறிலங்கா வான் படையினர் கடந்த நவம்பர் 2 ஆம் நாள் நடத்திய தாக்குதலில் விழுப்புண் அடைந்திருந்த மேஜர் செல்லத்தம்பி அல்லது செல்வம் என்று அழைக்கப்படும் சிவலிங்கம் ஆதவன் (சொந்த முகவரி: கண்டாவளை, வெலிக்கண்டல்- தற்போதைய முகவரி: 1 ஆம் யூனிட் தர்மபுரம்) என்ற போராளி இன்று வெள்ளிக்கிழமை வீரச்சாவடைந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இம் மாவீரருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துள்ளனர்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.