Wednesday, November 07, 2007

(2ம் இணைப்பு)கிளாலி-முகமாலை முன்நகர்வு முறியடிப்பு: 20 படையினர் பலி- 100 பேர் காயம்- போர்த்தாங்கி கடும் சேதம்

[புதன்கிழமை, 07 நவம்பர் 2007]

யாழ். கிளாலி முதல் முகமாலை வரையான பகுதியில் சிறிலங்காப் படையினர் இன்று காலை மேற்கொண்ட பாரியளவிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர். ரி-55 ரக போர்த்தாங்கி ஒன்று கடுமையான சேதங்களுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. பெருமளவில் போர்க்கலங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

(2 ஆம் இணைப்பு: கைப்பற்றப்பட்ட ஆயுத விபரங்கள், போராளி வீரச்சாவு)

பாரிய அளவிலான திட்டமிடலுடன் இன்று திங்கட்கிழமை அதிகாலை செறிவான எறிகணைச் சூட்டாதரவுடனும் பீரங்கி உலங்குவானூர்திகளின் தாக்குதல் ஒத்துழைப்புடனும் படையினர் கிளாலி முதல் முகமாலை வரையான முன்னரங்கப் பகுதியில் பலமுனைகளில் இருந்து பாரியளவிலான முன்நகர்வை மேற்கொண்டனர்.

இந்நகர்வில் படையினர் ரி-55 ரக போர்த்தாங்கிகள், கவச ஊர்திகள் ஆகியவற்றையும் பயன்படுத்தினர். அதிகாலை 5:00 மணிமுதல் படையினர் மேற்கொண்ட இம் முன்நகர்வு காலை 8:00 மணிவரை நீடித்தது.

இம் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர்.

இத்தாக்குதலையடுத்து படையினர் காலை 8:00 மணிக்கு பலத்த இழப்புக்களுடன் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.


[Photo: LTTE]

பாரிய திட்டமிடலுடன் சிறிலங்காப் படைக் கொமாண்டோக்கள் இம் முன்நகர்வில் ஈடுபட்டனர். இதில் படைத்தரப்பில் பலத்த இழப்புக்கள், சேதங்கள் ஏற்பட்டன. படையினரின் ரி-55 ரக போர்த்தாங்கி ஒன்று கடுமையாக சேதமாக்கப்பட்டுள்ளது. அந்த போர்த்தாங்கியை படையினர் இழுத்துக்கொண்டு தமது நிலைகளுக்கு தப்பியோடியுள்ளனர்.

படையினரின் பாரியளவிலான இந்நடவடிக்கை விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் கொல்லப்பட்ட படையினரின் எண்ணிக்கை 20-க்கும் மேற்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர்.

படையினரின்

ஜிபிஎஸ் - செய்கோள் புவிநிலை அறி சாதனம் - 01

ரி-56-2 ரக துப்பாக்கிகள் - 06

ரி-56-1 ரக துப்பாக்கி - 01

ரி-56 ரக துப்பாக்கி - 01

ஏகே ரவைகள் - 12,465

ஏகே ரவைக்கூடுகள் - 108

ஏகே எல்எம்ஜி இணைப்பிகளுடன் ரவைகள் - 382

ஏகே எல்எம்ஜி ரவைக்கூடு - 01

பிகே இணைப்பிகள் - 100

பிகே இணைப்பிகளுடன் ரவைகள் - 1,675

பிகே சுடுகுழல் - 01

ஆர்பிஜி எறிகணைகள் - 38

ஆர்பிஜி புறப்பலர்கள் - 32

ஜிபிஎம்ஜி இணைப்பிகளுடன் ரவைகள் - 336

குண்டுகள் - 167

40 மில்லிமீற்றர் எறிகணைகள் - 07

தலைக்கவசங்கள் - 14

ஜக்கற் ரவைக்கூடு தாங்கி அணிகள் - 28

ரவைத்தடுப்பு அணிகள் - 14

டோபிடோக்கள் - 27

மண்வெட்டிகள் - 05

தொடுகம்பி - ஒரு சுற்று

சி-4 ரக வெடிமருந்து - 5 போத்தல்கள்

தண்ணீர் கொள்கலன்கள் - 32


பொருட்பைகள் - 13 ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாகவும், தமது தரப்பில் போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய முறியடிப்புத் தாக்குதலில் கொல்லப்பட்ட படையினரில் 18 பேரின் சடலங்கள் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

காயமடைந்த 86 படையினர் கொழும்புக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 29 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் 48 பேர் ஜயவர்த்தனபுர மருத்துவமனையிலும் 3 பேர் கண்நோய் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.