[வியாழக்கிழமை, 4 ஒக்ரொபர் 2007] சிறிலங்கா இராணுவத்தினரால் தமிழர் தாயகப் பகுதியில் கடந்த செப்ரெம்பர் மாதம் மட்டும் 64 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 29 பேர் காணாமல் போயுள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமாதான செயலகம் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த மாதங்களை விட செப்ரெம்பர் மாதம் தமிழ் மக்களினது படுகொலைகளும் காணாமல் போதல்களும் அதிகரித்துள்ளன. மன்னாரில் சிறிலங்காவின் இராணுவ நடவடிக்கையால் இடம்பெயர்ந்த பொதுமக்களின் வாகனம் மீது சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுவும் அணியினர் நடத்திய தாக்குதலில் 13 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் மன்னாரில் அனைத்துலக அகதிகள் சேவை அமைப்பின் மதகுருவும், மூதூர் கிழக்கு பகுதியை அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்த கிராம சேவகரும் படுகொலை செய்யப்பட்டனர். வெருகல் ஆற்றுப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 6 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். செப்ரம்பர் மாதத்தில் பிரதேச வாரியாக படுகொலை செய்யப்பட்டோர்: அம்பாறை - 02 மட்டக்களப்பு - 08 யாழ்ப்பாணம் - 24 மன்னார் - 19 முல்லைத்தீவு - 01 திருகோணமலை - 07 வவுனியா- 3 காணாமல் போனோர்: மட்டக்களப்பு - 01 யாழ்ப்பாணம் -14 மன்னார் - 03 திருகோணமலை- 11 என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thursday, October 04, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.