வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் வேட்பு மனுவினை பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசிய ஆகியன இன்று காலை தாக்கல் செய்துள்ளன.
இன்று காலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிறேமஜெயந் தலைமையில் அமைச்சர் டக்ளஸ் மற்றும் அங்கஜன் ஆகியோர் சகிதம் பல வண்டிகளில் வந்திறங்கிய அரசாங்க ஆதரவாளர்கள் சகிதம் வேட்பு மனுவினை அரசாங்கம் தாக்கல் செய்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம் .சுவாமிநாதன் தலைமையில் முதன்மை வேட்பாளர் துவாரகேஸ்வரன் உள்ளிட்ட பிரமுகர்களும் வேட்பு மனுவினைத் தாக்கல் செய்தனர்.
இதேவேளை ஜே.வி.பி யும் இன்று வேட்பு மனுவினைத் தாக்கல் செய்துள்ளது. ஜே.வி.பி யின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹேந்துநெத்தி தலைமையில் இந்த வேட்பு மனுத்தாக்கல் இடம்பெற்றது.
இதனைத் தவிர மேலும் ஒரு சுயட்சைக்குழுவினரும் தேர்தலுக்கான வேட்பு மனுவினைத் தாக்கல் செய்துள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மன்னாரில் வேட்பு மனுத்தாக்கல்
வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது.
மன்னார் மாவட்ட செயலகத்தில் உள்ள தெரிவத்தாட்சி அதிகாரியின் அலுவலகத்தில் இன்று காலை 10.30 அளவில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்புமனுவை தாக்கல் செய்தது.
ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் ஹசன் அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஹமட் அஸ்லம் ஆகியோர் மனுவை தாக்கல் செய்தனர்.
அரசாங்கத்தின் கூட்டணி கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் தனித்து போட்டியிடுகிறது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.