தமிழீழ விடுதலையை நேசிக்கும் எம் இன மக்களை ஒருங்கிணைத்து, அவர்களது கலை பண்பாட்டுக் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாத்து, எம் புலம் பெயர் சமூகத்தினை ஒன்றிணைக்கும் பணியைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்கள் பல்தேசம் எங்கிலும் செய்து வருகின்றது.
இந்த வகையிலேயே பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் செயற்பட்டு வருகின்றது. இதன் முதன்மைச் செயற்பாடட்டாளராகத், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளராகத் திரு.பரிதி அவர்கள் பணியாற்றி வந்தார்.
பல இன்னல்களுக்கும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் அயராது மக்கள் பணிக்காகத் தம்மைத் திரு.பரிதி அவர்கள் அர்ப்ணித்திருந்தார். ஏற்கனவே படுகொலை முயற்சிக்கு ஆளாகியும் அதிலிருந்து தப்பித் தனது பணியை மேற்கொண்டு வந்துள்ளார்.
தமிழின அழிப்பு சக்திகளால் 08.11.2012 அன்று திரு.பரிதி அவர்கள் பரிசில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஊடக இல்லம் திரு பரிதி அவர்களின் பணிக்குத் தலை வணங்குவதுடன் இப்படுகொலைக்கான விசாரணையை மேற்கொள்ளுமாறு பிரான்ஸ் காவற்துறையினரையும் கேட்டுக் கொள்கின்றோம்.
திரு.பரிதி அவர்களை இழந்து நிற்கும் அவர் குடும்பத்தினர்க்கு பிரான்ஸ் ஊடகஇல்லம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது.
ஊடகஇல்லம்
22, rue Perdonnet
75010 Paris, France

எமக்காய் வாழ்ந்தீர் எமக்காய் உம் இன்னுயிரை இழந்தீர். கயவர் உமை எம்மிடமிருந்து பிரித்தாலும் உம் நினைவுகள் எம்முடனே. வீர வணக்கம் என் மண்ணின் மைந்தனே.
ReplyDelete