Saturday, August 11, 2012

ஈழம் மீதான தடையை நீக்கியது இந்திய அரசு

சென்னையில் திமுக நடத்தும் ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டில் ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு இந்திய மத்திய அரசு இன்று அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய மத்திய உள்துறை அமைச்சில் இருந்து திமுக தலைமைக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டில் ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்திக் கொள்வதற்கு இதன் மூலம் அதிகாரபூர்வ அனுமதியை மத்தியஅரசு வழங்கியுள்ளது.

முன்னதாக, ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தடை விதித்து, திமுகவுக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

ஈழம் என்ற சொல்லைப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டது தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகளை உருவாக்கியிருந்த நிலையிலேயே மத்திய உள்துறை அமைச்சு இந்த அனுமதியை திடீரென வழங்கியுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.