இன்று நண்பகல் குறித்த பிரிவினரிடமிருந்து அழைப்பு கிடைத்ததாகவும் அதனை அடுத்து
தான் நாலாம் மாடிக்குச் சென்ற போது சுமார் 4 மணி நேரம் தொடர் விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு உரிய சிறப்பு உரிமையின்
அடிப்படையில் தனக்கு உரிய கொளரவம் அளிக்கப்பட்டதாகவும் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணையின் போது குறித்த செவ்வி தொடர்பாகவும், வெளிநாட்டு விஜயங்கள்,
வெளிநாட்டு தூதுவராலையங்களுடன் உள்ள உறவுகள், புலம்பெயர் நாடுகளில் இடம்பெற்ற
போராட்டங்கள் பற்றிய பல தரப்பட்ட கேள்விகளுடன் கடந்தகாலத்தில் புலிகளுக்கும்
அவருக்கும் ஏதேனும் தொடர்பிருந்ததா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டதாக சிறீதரன்
தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற விசாரனை தொடரும் எனத் தெரிவித்துள்ள புலனாய்வுப் பிரிவினர்
அழைக்கும் போது விசாரனைக்கு சமூகம் அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். |
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.