தோல்விகண்ட சிறீலங்கா அரசுவினை நிராகரித்து இலங்கைத் தீவின் மக்கள் சமூகங்களிற்கான இறைமை � சனநாயக உரிமைகள் - மேம்பாட்டிற்கான வழிகளை ஆதரியுங்கள்..1948 பெப். 04 அன்று இலங்கைத்தீவின் வடக்குக்கிழக்கினை தாயகமாகக் கொண்ட தமிழர் தேசத்தினை தீவின் பிறபகுதியினை தேசமாகக் கொண்ட சிங்களத்தலைமைகளிடம் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள்; சட்டவிரோதமாகக் கையளிக்கப்பட்ட நிகழ்வே இந்த சுதந்திரதினமாகும். காலனித்துவத்திற்கு முன்னர் ஆட்சிஉரிமைகளுடன் இயங்கிய தமிழ்மக்களின் இறைமையும் அரசாட்சி உரிமையும் அந்த மக்களின் சம்மதமின்றி சிங்களதரப்பிடம் கையளிக்கப்பட்டமையால்தான் இந்த கையளிப்பினை சட்டவிரோதம் எனத் தமிழர் தேசம் கருதுகின்றது.
சிங்கள தேசியவாத சிந்தனைகளாலும் கடும்தேசியவாத வரலாற்றுப் படிமங்களாலும் கட்டமைக்கப்பட்ட சிங்கள அரசு கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக தமிழர் தேசத்தினை இராணுவ அரசியல் பொருளாதார�� பண்பாட்டு மற்றும் சமூகத்தளங்களில் ஒடுக்கி சிங்கள அரசு ஒன்றினை சிறீலங்கா என்ற பெயரில் கட்டமைத்து வந்துள்ளது.
இந்த கடும் சிங்கள தேசியவாத ஒடுக்குமுறைகளிற்கு எதிரான தமிழர்களின் அகிம்சை வழிப் போராட்டமும் ஆயதம் ஏந்திய போராட்டமும் பல்வேறு அகப்புறக் காரணங்களால் தோல்விகண்டு இன்று எங்கள் உறவுகள் வாழுகின்ற தமிழர் தேசம் இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளும் சிங்களமயப்படல் எனும் ஆபத்தான அரசு வடிவங்களுக்குள்ளும் நசியுண்டு வருகின்றது. குறிப்பாக 2009 மே � 19ற்குப் பிற்பாடு தமிழர் தேசம் முற்றிலும் சிங்கள தேசியவாத அரசுவின் கொடும்பிடிக்குள் அகப்பட்டுள்ளது.
சிங்கள மயப்படுத்தல் எதிர்ப்புணர்வுகளை நசுக்கும் இராணுவ பயங்கரவாதம் என்பன உச்சவடிவம் எடுத்துள்ளது. சிறீலங்காவின் தேசியகீதத்தின் தமிழ் வடிவத்தினை நிராகரித்து சிங்கள மொழியில் மட்டுமே தேசியகீதம் பாடப்படல் வேண்டும் என்ற சிங்கள அரசுவின் அண்மைய உத்தரவு இந்த கூர்மையடையும் சிங்கள இனஒழிப்பு கோட்பாடுகளின் வெளிப்பாடாகும்.
மோசமான மனிதஉரிமை மீறல்கள் சர்வதேச மனிதாபிமானச்சட்ட மீறல்கள் என்பனவற்றுடன் இன்று சிறீலங்கா இனங்காணப்பட்ட மோசமான அரசாக ஐநா உட்பட பலதரப்புக்களாலும் இனங்காணப்பட்டுள்ளது. குறிப்பாக 2009 சனவரி முதல் மே வரை சிறீலங்கா அரசு தமிழர் தாயகப்பகுதியில் புரிந்த மாபெரும் இனப்படுகொலை நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தினால் போர்க்குற்றங்கள் என்ற அளவில் கண்டிக்கப்பட்டு�� விவாதிக்கப்பட்டு வருகின்றது.
சிறீலங்கா அரசு சர்வதேச அளவில் சட்டங்களை மதிக்காத அரசுவாகவும்�� உள்நாட்டு அளவில் மனிதஉரிமைகளையும் சனநாயக உரிமைகளை மதிக்காத அரசுவாகவும் இனங்காணப்பட்டுள்ளது. சீனா ஈரான் போன்ற கடும்போக்குவாத அரசுகளின் உதவியுடன் சர்வதேச மற்றும் உள்நாட்டு எதிர்ப்புக்களை நசுக்கும் இராணுவ பொருளாதார உத்திகளை சிறீலங்கா மேற்கொண்டு வருகின்றது.
சிறீலங்கா அரசுவின் இந்த கடும்தேசியவாத ஒடுக்குமுறை நடவடிக்கைகளால் இலங்கைத் தீவு ஆசியக்கண்டத்தின் மையத்தில் உள்ள ஸ்திரத்தன்மையற்ற அரசாக உருவாகிவிட்டது. இந்த ஸ்திரமற்ற நிலைமையினைப் பயன்படுத்தி சீனா உட்பட பலதரப்புக்களும் இலங்கைத் தீவினை சர்வதேச அமைதிக்கும்�� சர்வதேசசட்ட நெறிமுறைக்குள்ளும் இயங்காத மற்றுமொரு மோசமான அரசுவாக உருவாக்கியுள்ளது.
இந்தப் பின்னணியில் சிறீலங்கா ஒரு தோல்வியடைந்த அரசுவாக இயங்குகின்றது. உள்நாட்டு மக்களுக்கும் வெளிஉலக சட்டஒழுங்கு நெறிமுறைகளுக்கும் மாறாக இயங்கும் சிறீலங்கா அரசுவினை சர்வதேச சமூகம் நிராகரித்து புதிய சனநாயகப் பண்புகளையும் சர்வதேச ஒழுங்குநியமங்களையும் பேணுகின்ற இரு அரசுகளைக் கொண்டதொரு அமைப்பாக இலங்கைத் தீவு உருவாகுவதே தென்னாசியாவின் அந்த கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பகுதியின் அமைதிக்கும் உலக அமைதிக்கும் வாய்ப்புக்களை தரும்.
இலங்கைத் தீவில் சிங்கள தமிழர் தேசங்கள் என்ற அரசியல் வரலாற்று உண்மை அங்கீகரிக்கப்பட்டு இரு தேசங்களின் இறையாண்மைகளும் மதிக்கப்படும் அரசு ஒழுங்குமுறைக்காக பிரான்சு உழைக்க வேண்டும் என பிரான்சு வாழ் தமிழ்மக்கள் எதிர்பார்க்கின்றனர். பிரான்சுவும் உலக சமூகமும் முன்னெடுக்க முயலும் உலக ஒழுங்குக்கிற்கு இந்த ஏற்பாடு பயனுள்ளதாக அமையும் என்பதை பிரான்சு தமிழர் நடுவம் கோடிட்டுக்காட்ட விரும்புகின்றது.
நன்றி
தமிழர் நடுவம் - பிரான்சு






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.