சென்னை தியாகராய நகரில் உள்ள செ தெய்வ நாயகம் பள்ளியில், ஈழ தமிழர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் தமிழின கூட்டமைப்பு பறையர் பேரவையின் அரங்க கருத்தரங்க கூட்டம் நடை பெற்றது. அதில் சமீபத்தில் இலங்கை சென்று திரும்பி வந்த வழக்கறிஞர் கயல்விழி அவர்கள் அங்கு தமிழ் மக்கள் படும் அவலங்களை பற்றி விளக்கி கூறினார் . முதலில் பேராசிரியர் செ தெய்வ நாயகம் அவர்கள் முத்துகுமரனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதை தொடர்ந்து கயல்விழி அவர்கள் ஒளிசுடரை ஏற்றி வீர வணக்க முழக்கமிட்டார்.
பிறகு உரையாற்றிய கயல்விழி , இலங்கையில் போர் நடந்து முடிந்த கிளிநொச்சி, வவுனியா, புதுக்குடியிருப்பு, முல்லை தீவு, ஆகிய பகுதிகளுக்கு நாங்கள் சென்றிருந்தோம்.அங்கு இடிந்த வீடுகளையும் , பிச்சைகாரர்களை விட மோசமான நிலையில் பெண்களையும் குழந்தைகளையும் மட்டுமே காண முடிந்தது. ஒரு வேலை உணவுக்கு கூட அவர்கள் சிங்கள ராணுவத்தையே எதிபார்த்து காத்திருந்தனர்.ஊர் முழுக்க சுற்றியும் ஆண்கள் ஒருவரை கூட காண முடியவில்லை.
அன்று இரவு பேருந்துக்காக நாங்கள் காத்திருந்தோம். அப்பொழுது இரவு 10 மணி இருக்கும். அங்குள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சிங்கள படை வீரர்கள் சென்ற வண்ணம் இருந்தனர்.நான் அழுது கொண்டே என்ன அண்ணா இது சிறிய வயது பெண் குழந்தைகள் கூட இருக்கின்றனர் அண்ணா என்றேன். அவர் பேசாதே அமைதியாக இரு என்றார்.
இது தான் அங்குள்ள பெண்களின் இன்றைய நிலை . பெண்களின் நிலையே இப்படி என்றால் அங்கு இருக்கும் சிறு வயது பெண் குழந்தைகளின் நிலை என்ன என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். அங்குள்ள ராணுவத்திடம் அந்த பெண் குழந்தைகள் படும் பாலியல் கொடுமையை தடுக்க போவது யார் ? நாம் என்ன செய்ய போகிறோம் என்பதுதான் நம் முன்னே உள்ள வினா ? இது அங்கிருக்கும் ,கிராமங்களில் மட்டுமல்ல.மீள் குடியேற்றம் என்று கூறப்படும் ஒவ்வொரு முகாமிலும் இதே நிலைதான். சிங்கள ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு அங்கெல்லாம் இந்த பாலியல் வன்முறை நடை பெற்று கொண்டிருக்கிறது.
என்னை விசாரணைக்கு அழைத்து சென்ற ராணுவத்தினர் நான் இருக்கும் அறையின் பக்கத்து அறையிலேயே நீல படம் பார்த்து கொண்டிருந்தார்கள். எனது பாதுகாப்பிற்காக ஒரே ஒரு பெண் காவலர் மட்டுமே என்னுடன் இருந்தார். இந்தியாவிலிருந்து சென்ற எனக்கே இந்த நிலை என்றால் அங்குள்ள பெண்களின் நிலையை என்ன என்பதை சற்றே சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார் அவர்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.