இலங்கை இராணுவம் மிருகத்தை விட கொடூரமானது என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில மதிமுக சார்பில் மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கடலூர் சாலை சிங்காரவேலர் சிலை அருகில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி நல்ல மனிதர். வரும்வழியில் அவரை சந்தித்து விட்டு தான் வருகிறேன் காங்கிரஸ் கட்சி அழிந்து வருகிறது. ஈழ தமிழர்களை அழித்த காங்கிரஸ் கட்சிக்கு மன்னிப்பு கிடையாது.
காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே வந்த ரங்கசாமியை நான் பாராட்டுகிறேன். அவர் நல்ல முடிவு எடுத்துள்ளார். இலங்கை இராணுவம் மிருகத்தை விட கொடூரமானது. தமிழர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். ராஜபக்ஷ மற்றும் அவரது கூட்டத்தை அழிக்கும் காலம் கட்டாயம் வரும்.
சுமார் 30 வருடமாக இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களை தாக்கி வருகிறது. தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. 500 மீனவர்களை கொன்றுள்ளனர். 1000 பேரை இலங்கை கடற்படை தாக்கியுள்ளது. இந்திய கடற்படை இதனை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறது.
பிரபாகரன் போன்று உலகில் எந்த வீரனும் கிடையாது. தரைப்படை, கடற்படை, வான்படை அமைத்து போர் நடத்தியவர் பிரபாகரன். இலங்கை, இந்திய அரசுகள் விடுதலைபுலிகளை அழித்து விட்டோம் என நினைக்க வேண்டாம் எனவும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.