வெள்ளைக்கொடிகளுடன் வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்களை சுட்டுக் கொல்ல பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயாவால் உத்தரவிடப்பட்டிருந்ததாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கோத்தபாய ராஜபக்ச இந்த உத்தரவை பிறப்பித்ததாக கூறி முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்ததாக கூறப்படும் செய்தி சண்டே லீடர் செய்திதாள் வெளியிட்டு பெரும் பரபரபரப்பை ஏற்ப்படுத்தியிருந்தது.
இந்தநிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையின் போது சிறிலங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ சாட்சியம் வழங்கினார். இதன் போது வெள்ளைக்கொடிகளுடன் வந்ததாக கூறப்படும் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக தாம் எந்த உத்தரவையும்; பிறப்பிக்கவில்லை என்று கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
எந்த இராணுவத்தளபதி கடமையில் இருந்தாலும், யுத்த வெற்றிக்கு தேவையான சுற்றுச்சூழல் ஏற்படும் தருணத்தில், யுத்தத்தை வெற்றிக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளைக்கொடிகளை ஏந்திய நிலையிலோ, இல்லாமலோ, அரசாங்க பாதுகாப்பு தேடி வந்தவர்களுக்கு எந்த பாதிப்பையும் படையினர் ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மொத்தமாக 11 ஆயிரத்து 562 போராளிகள் படையினரிடம் சரணடைந்தனர். அவர்களில் 5 ஆயிரத்து 600 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சண்டே லீடர் பத்திரிகையாளர், பிரதி வாதியான சரத் பொன்சேகாவுடனான நேர்காணலை அடுத்து வெளியிட்ட செய்திகளில் உண்மை இல்லை என கோத்தபாய தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நலின் லத்துவஹெட்டி பாதுகாப்பு செயலாளரிடம் குறுக்கு விசாரணையை மேற்கொண்டார்.
இந்தநிலையில் வெள்ளைக்கொடி வழக்கு தொடர்பாக மேலதிக விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 7 ம் திகதிவரை நீதிபதிகளால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.