இஸ்ரேலுக்கு சென்றுள்ள சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா மீது இஸ்ரேலின் புலனாய்வுப்பிரிவினர் கடும் சோதனை நடத்தியதுடன், முக்கிய பிரமுகர்களுக்கான அனுமதியும் அவருக்கு மறுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:
தற்போது இஸ்ரேலில் தங்கியுள்ள சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சாவை இஸ்ரேல் அவமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜோர்டான் வழியாக இஸ்ரேலின் ரெல் அவிவ் விமானநிலையத்தை கோத்தபாயா நேற்று (13) சென்றடைந்தபோது அவரை முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் பதையை பயன்படுத்த இஸ்ரேல் படையினர் அனுமதிக்கவில்லை.
வழமையான பயணிகளின் சோதனை நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்ற இஸ்ரேலின் “சின் பெத்” எனப்படும் புலனாய்வுப்பிரிவினர் கடும் சோதனையையும் மேற்கொண்டுள்ளனர். கோத்தபாயாவுக்கு பாதுகாப்பு வழங்கிச் சென்ற இரு கேணல் தர இராணுவ அதிகாரிகளுக்கும் அதேநிலை தான் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் இஸ்ரேலில் உள்ள சிங்களவர்கள் மகிந்தாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதுடன், இஸ்ரேலில் உள்ள சிறீலங்கா தூதுவர் டொனால்ட் பெராவின் செயற்திறனற்ற தன்மையே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.
இதனிடையே, கோத்தபாயா இஸ்ரேலில் இருந்து அமெரிக்கா சென்றபின்னரே சிறீலங்கா திரும்புவார் என தெரிவிக்கப்படுகின்றது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.