Sunday, January 23, 2011

மகிந்தாவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு பதிவு இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு நடவடிக்கை

தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ள சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவுக்கு எதிராக போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்க மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்படவுள்ளதாக இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு இன்று (23) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

அமெரிக்காவின் ரெக்சஸ் மாநிலத்தில் உள்ள 5 ஆவது சேர்கிற் மாவட்ட நீதிமன்றத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு (25) முன்னர் நீதியாளர் நாயகம் புறூஸ் பெய்ன் என்பவரால் வழக்கு ஒன்று பதிவு செய்யப்படவுள்ளதாக இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் Alien Tort Claims Act (ACTA/TVPA) சட்டத்தின் சரத்திப் பிரகாரம், மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்படவுள்ளது.

2009 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் 40,000 தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தது.

2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமலையில் 5 மாணவர்களை படுகொலை செய்தது.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூதூரில் பிரான்ஸ் நாட்டின் பட்டினிக்கு எதிரான அமைப்பு எனப்படும் உதவி நிறுவத்தின் 17 பணியாளர்களை படுகொலை செய்தது என்பன தொடர்பில் வழக்குகள் பதிவுசெய்யப்படவுள்ளன.

எனவே போர்க்குற்றங்கள் தொடர்பில் மகிந்தா மீதான விசாரணைகளை அமெரிக்கா முன்னெடுக்க வேண்டும் என புலம்பெயர் தமிழ் சமூகம் அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்.

வன்னியில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை, தமிழ் மக்கள் மீதான துன்புறுத்தல்கள், போர்க்குற்றங்கள், துணை இராணுவக்குழுவினர் மேற்கொண்டுவரும் வன்முறைகள், கொலைகள் என்பவற்றிற்கு முப்படைகளின் பிரதான தளபதி என்றவகையில் மகிந்தாவே பொறுப்பானவர்.

அமெரிக்காவின் சட்டத்தின் அடிப்படையில் பின்வரும் சரத்துக்களின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

The post-Samantar legal landscape இன் அடிப்படையில் ஒரு நாட்டின் தலைவர் மீது வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.

செப்ரம்பர் மாதம் 11 ஆம் நாளுக்கு பின்னர் உருவாக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை மூலம் இனப்படுகொலைகள் மீதான விசாரணைகளை மேற்கொள்ளலாம்.

விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களில் காணப்படும் சாட்சியங்களை முன்வைத்தும் விசாரணைகளை ஆரம்பிக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தள்ளார்.

இதனிடையே, போர்க்குற்றவாளியான மகிந்தா அமெரிக்காவுக்குள் நுளைந்தது மிகப்பெரும் அவமானமான செயல் என அனைத்தலக சட்டவியல் நிபுணர் பேராசிரியர் பிரான்சிஸ் பொயில்ட் தெரிவித்துள்ளார். மகிந்தா அரசே போர்க்குற்றங்களை மேற்கொண்டது என்பதை சிறீலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகமே ஏற்றுக்கொண்டிருந்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுளளார்.

மகிந்தா மீதான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை உலகின் முன்னனி மனித உரிமை அமைப்புக்கள், அமெரிக்க காங்கிரஸ் சபை, புலம்பெயர் தமிழ் மக்கள் ஆகியோர் வலியுறுத்தி வருவதுடன், ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.