Friday, January 14, 2011

உலகையே நடுநடுங்க செய்து கொண்டிருந்த இயக்கமான எல்.ரீ.ரீ.ஈ யை அடக்கினார் மஹிந்த: தூதுக்குழுவிடம் சர்தாரி பாராட்டு மழை!

பாகிஸ்தானுக்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையிலான பாராளுமன்ற தூதுக்குழு பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியை அவரது மாளிகையில் சந்தித்துள்ளது. இதன் போது 30 ஆண்டு கால கிழர்ச்சியை முடிவுக்கு கொண்டு வந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது அரசாங்கத்தை மனப்பூர்வமாக பாராட்டுவதாகவும் உலகையே நடுநடுங்க செய்து கொண்டிருந்த இயக்கமான எல்.ரீ.ரீ.ஈ யை. முழுமையாக அடக்கியது பெரும் சாதனையென்று பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி பாராட்டுகளை தெரிவித்தார்.

யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்த கால கட்டத்திலும் இலங்கை அரசு சிறப்பாக நாட்டின் தேசிய பொருளாதாரத்தை மீள் எழுப்பி பொருளாதாரத்தை மறுமலர்ச்சியடைய செய்திருப்பது பெரும் சாதனையென்று பாராட்டிய பாகிஸ்தான் ஜனாதிபதி, ஒரு நேர்மையான, நெறியான தேசத்தலைவரின் சிறந்த ஆளுமை மூலமே இதனை சாதிக்க முடியுமென தெரிவித்தார்.

பாகிஸ்தான் விஜயத்தை மேற்கொண்ட இலங்கை தூதுக் குழுவிற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தனது துணைவியார் சந்திரா மாலினியுடன் சென்றிருந்தார். இக்குழுவில் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். அஸ்வர் விஜயகலா மகேஸ்வரன், கமலா ரணதுங்க ஆகியோருடன் பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் தம்மிக்கா கித்துள்கொட ஆகியோரும் சென்றிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.