சரத் பொன்சேகாவை விடுதலை செய்தால், நிர்க்கதி நிலைமை, வெள்ளம், ஏற்பட்டுள்ள நோய் மற்றும் ஒவ்வாமை என்பன இல்லாமல் போகும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், சரத் பொன்சேகாவை விடுதலை செய்தால் அனர்த்தம் அனைத்தும் உடனே இல்லாமல் போகும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது நிவாரணம் வழங்க நாங்கள் நேற்று நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளோம்.
இந்த தீர்மானத்தின்படி அவசர திட்டத்தை மேற்கொண்டு கட்சி உறுப்பினர்களை அழைத்து நிவாரண பணம் அல்லது பொருட்களை சேகரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளோம். எனினும் மக்கள் நிர்க்கதியாவது சரத் பொன்சேகாவை விடுதலை செய்தால் தனாக நின்றுவிடும். என்றார்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.